திருக் குறும் தாண்டகம் –10–சித்தமும் செவ்வை நில்லாது–ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம்

அவதாரிகை –

சம்சாரத்தை அஞ்சி
உன் திருவடிகளைப் பற்றின அளவேயோ
திருவடிகளில் பரம பக்தியும் உண்டாயிற்று –
என்கிறார் –

———————————————————

சித்தமும் செவ்வை நில்லாது என் செய்கேன் தீ வினையேன்
பக்திமைக்கு அன்புடையேன் ஆவதே பணியாய் எந்தாய்
முத்தொளி மரகதமே முழங்கொளி முகில் வண்ணா என்
அத்த நின் அடிமை அல்லால் யாதும் ஒன்றும் அறிகிலேனே

———————————————————-

சித்தமும் செவ்வை நில்லாது –
நீஞ்சப் புக்கு வாய்க்கரையிலே தெப்பம் இழப்பாரைப் போலே
அனுசந்திக்கப் புக்கால் -தரித்து நிற்க மாட்டுகிறது இல்லை நெஞ்சு –

என் செய்கேன் தீ வினையேன்-
பக்தி பாரவச்யத்தால் அனுபவிக்கப் போகாதபடி
பாபத்தைப் பண்ணினேன் –
என் செய்கேன் -என்று செயல் மாட்சி –
உத்தேச்ய விரோதி பாபமாம் -அத்தைப் பற்ற -தீ வினையேன் -என்கிறார் –

பக்திமைக்கு அன்புடையேன் ஆவதே பணியாய் எந்தாய்-
என்தன் அளவன்றால் யானுடைய அன்பு -என்னும்படியே
நூல் பிடித்த பக்தியை அளவாக்க வேணும் –
அளவிறந்த பத்தியை மாற்றி நூல் பிடித்த செவ்வே அனுபவிக்கக் கூடிய பக்தியை அளவாக்க -மட்டமாக்க -வேணும்

எந்தாய் –
பக்தியை உண்டாக்கின நீயே அளவு படுத்த வேணும் –

முத்தொளி மரகதமே –
பக்தி ஜனகமான வடிவு
முத்தின் உடைய குளிர்த்தியையும்
மரகதத்தின் உடைய ஸ்யாமத்தையும்
உடைத்தாய் -இருக்கை –

முழங்கொளி முகில் வண்ணா-
மின்னி முழங்கி வில்லிட்டு சஞ்சரிப்ப தொரு மேகம்
போன்ற நிறத்தை உடையவனே –

என் அத்த-
அழகுக்கு தோற்று -என் ஆயன் -என்கிறார் –

நீர் சித்தமும் செவ்வை நில்லாது என்பது-
தீவினையேன் -என்பதே கிடந்தது
என் இயப் படுகிறீர் –
இத்தை விட்டு வேறு ஒன்றோடு போது போக்கினாலோ என்ன –
நின் அடிமை அல்லால் யாதும் ஒன்றும் அறிகிலேனே
உன் திருவடிகளில் கைங்கர்யம் ஒழிய வேறு ஓன்று அறியேன் –
மறந்தேன் உன்னை முன்னம் -என்றது போக்கி
ஏது செய்தல் மறக்கேன் -என்னும்படி
பண்ணி வைத்த பின்பு
வேறு ஒன்றை அறிய விரகு உண்டோ –

————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: