மூன்றாம் பத்து திருவாய்மொழி யில் -வியாக்கியானத்தில் வந்துள்ள உவமைகள்

கற்பகத்தரு பல கிளைகளாகப் பணைத்துப் பூத்தாற்போன்று

 

    நீரிலே நின்றாற்போன்று

 

    கடலுக்குள் பட்டதொரு துரும்பு ஒரு திரை ஒரு திரையிலே தள்ளக் கிடந்து அலையுமாறு போன்று

 

    நீரிலே நீர் கலந்தது போன்று

 

    கட்டில் கத்துகிறது என்பது போன்று

 

    இரத்தினத்தை அறியாதான் ஒருவன் ‘குருவிந்தக்கல்லோடு ஒக்கும் இது’ என்றால், அவ்வளவேயன்றோ அவனுக்கு அதனிடத்தில் மதிப்பு? அவ்வழியாலே அதற்குத் தாழ்வேயாம்; அது போன்று

 

    உனக்கு மகன் பிறந்தான் என்னுமாறு போன்று

 

    கடலிலே ஒரு மழைத்துளி விழுந்தாள் கடலை எங்கும் வியாபிக்கமாட்டாதே? அதைப் போன்று

 

    முசு வால் எடுத்தாற்போன்று

 

    படப்படச் சாணையில் இட்டாற்போன்று

 

    சதுர்த்தந்தி என்னுமாறு போன்று

 

    மஹாபலி போல்வார் பருந்து இறாஞ்சினாற்போன்று அபகரிக்க

 

    ஒருவன் ஒரு குழமணனைச் செய்து, அதன் கழுத்திலே காக்கைப் பொன்னைத் தொற்றி, அதன் தலையிலே காலை வைத்து, ‘இது என்னை வணங்கிற்று’ என்று இறுமாந்திருக்குமாறு போன்று

 

    அரசன் இல்லாத தேசத்திலே அரசபுத்திரன் தலையிலே முடியை வைத்து விலங்கு வட்டி விடுமாறு போன்று

பெருவிடாய்ப்பட்டவன், சேர்ந்த குளிர்ந்த தண்ணீர் அண்மையிலிருக்க, வியாதியினாலே வாய் மூடப்பட்டால், அதனைக் குடிக்க முடியாது துடிக்குமாறு போன்று

 

    பசியில்லாத காலத்தில் பாதகமான சோறுதானே, அது கழித்தவாறே தாரகமாக நின்றதைப் போன்று

 

    ஒருவன் சாதநாநுஷ்டானங்களைச் செய்து மழையைப் பெய்விக்க, உலகம் வாழ்ந்து போமாறு போன்று

 

    ஒவ்வொரு கால விசேடங்களிலே சிறை வெட்டி விடுமாறு போன்று

 

    பிராட்டி இலங்கையில் இருந்தாற்போன்று

 

    பறக்கின்றது ஒன்றிலே பாரம் வைத்தாற்போன்று

 

    சிறையிலே கிடப்பாரைப் போன்று

 

    ஒருவனைப் பிடிக்க நினைத்து ஊரை வளைவாரைப் போன்று

 

    யானைக்குத் தோன்றியது போலேயும் பிரஹ்லாதனுக்குத் தோன்றியது போலேயும்

 

    முள்ளிப் பூவில் ரசம்போலே

 

    எள்ளில் எண்ணெய் போலவும் மரத்தில் நெருப்புப்போலவும்

 

    ஒரு சானத்தைச் செய்து பலம் கைப்புகுராதார் கூப்பிடுமாறு போன்று

 

    அரச குமாரனையும் வேடுவனையும் ஒருங்கு பிணைத்தாற் போன்று

 

    பசியும் இருந்து கையிலே சோறும் உண்டாயிருக்குமவன், நீரும் நிழலும் கண்டால் உண்ணப் பாரிக்குமாறு போன்று

 

    உணவையே முக்கியமாகக் கொண்ட ஒருவன் ஊண் அத்தியாயம் படிக்குமாறு போன்று

 

    புண்ணியமானது சாலில் எடுத்த நீர் போலே குறைந்தவாறே

 

    போருக்குப்போவாரைப் போன்று

கைங்கரிய ருசியுடையார் அடிமை செய்ய வாருங்கோள்’ என்றாற்போலே

    ஆத்தும சொரூபத்தை நிரூபிக்கப் புக்கால் அத்தலையே பிடித்து இவ்வளவும் வர நிரூபிக்குமாறு போலே

 

    பிராதம்யத்துக்கும் பழிக்கும் செங்கல் சீரைக்கும் ஜீவனம் வைப்பாரைப் போன்று

 

    எல்லாவற்றுக்கும் மேல்படி அமிழ்ந்தது என்றால் கீழ்ப்படி அமிழ்ந்தது சொல்ல வேண்டாதது போன்று

 

    இரண்டு சொற்களைச் சேர்த்துச்சொல்ல, அது விஷத்தைப் போக்குதற்குக் காரணமாகாநின்றதே, சொற்களின் சத்தியாலே; அதைப்போன்று

 

    திரு  உலகு அளந்தருளின திருவடிகளுக்கு அணுக்கன் இட்டாற்போன்று

 

    மாணிக்கத்தையும் வயிரத்தையும் முத்தையும் ஓர் ஆரத்திலே சேர்த்து அனுபவிப்பாரைப்போலே

 

    குணங்களுக்குப் பிரித்து ஸ்திதியாதல், தோன்றுதலாதல் இல்லையாமாறு போன்று

 

    தோளில் கிடக்கிற தோள் மாலையைப்போன்று

 

    மஹா வாதத்திலே பலோபதானம் பண்ணுவாரைப்போன்று

 

    நஞ்சு உண்டாற்போன்று

 

    கலநெல்லை வித்தி நூறாயிரக்கலமாக விளைத்துக்கொள்ளுவாரைப் போன்று

    இறுக்குவாதம் பற்றினாற்போலே

 

    மஹிஷி ஸ்வேதம் பிறரதானதைப் போன்று

 

    வீரராயிருப்பார் வினை முடுகினால் எதிரியுடைய ஆயுதந் தன்னைக் கொண்டு அவரை வெல்லுதலைப் போன்று

 

    யானையையும் சமுசாரிகளையும் காத்ததுதான் நித்தியசூரிகளைக் காத்தது போன்று

(

    மோம்பழம் பெற்றாற்போலே

 நிலா தென்றல் சந்தனம் தண்ணீர் போலே

 

    பிராட்டி பெருமாளை அணைத்தது போன்று

 

    இக்ஷ்வாகு வமிசத்திலே யுவநாஸ்வான் என்பான் ஒருவன் மந்திரத்தாலே சுத்தம் செய்யப்பட்ட தண்ணீரைக் குடிக்க, அவன் வயிற்றிலே கர்ப்பமுண்டாயிற்றேயன்றோ ஒரு சத்தி விசேஷத்தாலே? அங்கு ஆணும் பெண்ணும் கலந்து பிறந்தமை இல்லையே? அது போன்று

 

    பூர்ண சந்திரன் நக்ஷத்திரங்களுக்குத் தலைவனாக இருத்தலைப் போன்று

    விளக்கை அவித்தாற்போன்று

 

    ‘பேயரே எனக்கு யாவரும் யானுமோர் பேயனே எவர்க்கும்’ என்று சொல்லுகிறபடியே, அவர்கள் செயல் இவர்கட்கு அடைவு கேடாய்த் தோன்றுமாறு போன்று

 

    கருமங்களைச் செய்தாலும் அவற்றிற்கு ஒருவன் பலன் கொடுக்காத போது அவை பழுதையைப் போன்று கிடக்கும்

 

    காந்தி மிக்கிருந்துள்ள நீலமணி போலே சிரமத்தைப் போக்குகிற வடிவு

    தாமே விழுவாரைத் தடிகொண்டு அடித்தலைப் போன்றது

 

    பிராட்டி ஹிதம் அருளிச்செய்தாற்போன்று

 

    மிகச்சிறிய முயலைப் போலே

 

    உபாயங்களில் பிரபத்தி மார்க்கம் போன்றது, சௌலப்யங்களில் அர்ச்சாவதார சௌலப்யம்

 

    வேறு பலன்களைக் கருதும் தன்மையும் நெஞ்சிலே கிடக்கச் செய்தே வேறு பலனைக் கருதாதவர்களைப்போல வந்து

 

    மயில் தோகை விரித்தாற்போலே

 

    அஞ்சனம் இட்டாற்போலே குளிர்ந்திருத்தல்

 

    இரணியன் துவேஷத்திற்கு விஷயமானாற்போலே

(ப. 209)சிம்ஹம் யானைமேலே சீறினாலும் குட்டிக்கு முலை உண்ணலாம்படி இருக்குமாறு போன்று

 

    நித்தியசூரிகளுக்கு எல்லா விதமான போக்கியங்களும் தானேயாய் இருக்குமாறு போன்று

 

    வழி பறிக்கும் நிலத்திற்போவார் சீரிய தனங்களை விழுங்கி, பின்னை அமர்ந்த நிலத்திலே புக்கால் புறப்படவிட்டுப் பார்க்குமாறு போலே

 

    தகட்டில் அழுத்தின மாணிக்கம் போலே

 

    முக்கோட்டை போலேகாணும் சோலை இருப்பது

 

    வண்டுகளின் நினைவின்றியே அவற்றின் மிடற்றோசை பண்ணானாற்போன்று

    ‘இங்கே நிதியுண்டு’ என்ன, அவ்விடத்தைத் தோண்டுவார்களேயன்றோ? அதைப் போன்று

 

    அப்படைவீட்டில் அல்லாதார் எல்லாம் பாவம் கலந்த ஜீவனம் போலேகாணும்

 

    ஒரு குற்றுடைவாள், நிழல் உள்ளிட்டவையைப்போன்று

 

    ஒருவன் சோற்றைப் பகுந்து உண்ணுமாறு போன்று

 

    பிராமணசாதி ஒன்றாயிருக்கவும் குலம் சரணம் கோத்திரம் முதலியவைகளால் பிரித்துச் சம்பந்திக்குமாறுபோன்று

 

    முத்தன் சமுசார யாத்திரையை மறக்குமாறு போன்று

 

    தோளும் தோள் மாலையுமான அழகைக்கண்டால் திருத்திரை நீக்கின பின்னர்ப் போலே

 

    காளமேகத்தில் மின்னியது போன்றிருக்கின்ற பூணுநூல்

 

    சிறு குழந்தைகள் நொந்தால் தாயானவள் குளிர்ந்த உபசாரம் பண்ணுமாறு போன்று

(சண்டாளர் என்றால் நாம் நோக்காமல் போமாறு போன்று

 

    ஐஸ்வரியத்தை ஆசைப்பட்டவர்கள் தம்மோடு சஜாதீயரில் ஏற்றத்தை ஆசைப்பட்டு, க்ஷத்திரியர்க்கு மேலே ஆசைப்பட்டு, இந்திரபதத்தை ஆசைப்பட்டு, பிரஹ்மாவின் அளவில் ஆசைப்படுமாறு போன்று

 

    இருக்கு வேதம் போலவும் ஸ்ரீ இராமாயணம் போலவும்

 

    பல குழந்தைகளைப் பெற்றான் ஒருவன், க்ஷாமகாலத்தில் தன் பசிக்கு ஆற்றமாட்டாமல் அவற்றின் வாயிற்சோற்றைத் தான் பறித்து ஜீவிப்பது, தன்வாயிற்சோற்றை அவைபறித்து ஜீவிப்பதாய், ‘என்பசிக்கு என்செய்வேன்? என் குழந்தைகளின் பசிக்கு என் செய்வேன்?’ என்னுமாறு போன்று

 

    சிலர் பட்டினி கிடக்கச் சிலர் ஜீவிக்குமாறு போன்று

 

    அறிவில்லாதவர்களுக்குச் சிற்றின்பங்களில் இடையீடில்லாத பிரீதி இருப்பதைப்போன்று

 

    பாம்பு கண்ணாலே காண்பதும் செய்து கேட்பதும் செய்யாநின்றதைப் போன்று

 

    ஆறு கிண்ணகம் எடுத்தால் பல வாய்த்தலைகளாலும் போகச் செய்தேயும் கடலில் புகும்பகுதி குறைவற்றுப் போமாறு போன்று

 

    ஸ்ரீ பரதாழ்வானைப் போன்று

 

    ‘கல்லுங் கனைகடலும் வைகுந்தவானாடும் புல்லென்று ஒழிந்தனகொல்? ஏ பாவம்!’ என்னுமாறு போன்று

 

    கலியர் ‘சோறு சோறு’ என்னுமாறு போன்று

 

    ‘தாவி வையம் கொண்ட தடந்தாமரை’ என்னுமாறு போன்று

 

    ஒரு மேருவைக் கினிய காளமேகம் படிந்தாற்போலே

 

    ‘பசியர் வயிறார உண்ண’ என்னுமாறு போன்று

 

    காமிநியாய் முலை எழுந்து வைத்துக் காந்தனுடைய கைகளால் தீண்டப் பெறாததைப் போன்று

வாய்க்கு ஏத்துதல் போன்று

 

    நித்யாக்நிஹோத்ராதிகளைப்போன்று

 

    ஸ்ரீ பரதாழ்வான் பெருமாள் பின்னே போன இளைய பெருமாளை ‘அவரும் ஒருவரே’ என்று கொண்டாடி, அவர் போய்ச் செய்த அடிமையையும் தான் செய்ய ஆசைப்பட்டாற்போலே

 

    முடி சூடின பின்பும் கருந்தரையில் பேர் சொல்லும் அந்தரங்கரைப்போலே

    செருக்கராயிருக்கும் ராஜபுத்திரர்கள் நல்ல பழங்களைத் தேனிலே தோய்த்து உண்ணுமாறு போன்று

 

    ‘புண்ணியம் செய்யாத என்னைக் கைப்பிடிக்கையால் அன்றோ ஸ்ரீ ‘வசுதேவர் இழந்தது!’ என்று தேவகி கூறியது போன்று

 

    பதினான்கு வருஷங்களும் முடிவுற்ற பின்னர்ப் பஞ்சமி திதியில் என்றாற்போன்று

 

    மலையாளர் வளைப்புப்போலே ‘கொண்டு அல்லது போகேன்’ என்றானாயிற்று

 

    பகவத் நிஷ்டர்கள் இருப்பது போன்று

 

    வாள்வல்லாய், தோள்வல்லாய், என்பனபோன்று

 

    பிராட்டி அசோகவனத்திலே பிரிந்திருந்தாற்போலே

 

    பத்தரும் முத்தரும் நித்தியரும் என்கிற பிரிவைப் போன்றதேயன்றோ?

 

    ஒரு மலை எடுத்தாற்போலே ஆயிற்று

 

    அவர்கள் பேற்றுக்குக் கூட்டு இல்லாததைப் போன்று

 

    வாளேறுபடத் தேளேறு மாயுமாறு போன்று

 

    ‘இருமருங்குந்துய்யான்’ என்னுமாறு போன்று

 

    வழி பறிக்குமிடத்துத் தன் கையிற்பொருள்கொண்டு தப்பிப் போனார் மகிழுமாறு போன்று

‘இராஜதாரப் பிராவண்யம் விலக்கத்தக்கது,’ என்பது போன்று

 

    நீங்கள் உங்களுக்கு விருப்பமானவற்றினின்றும் மீளமாட்டாதது போன்று

 

    பால் குடிக்கக் கால் பிடிப்பாரைப் போன்று

 

    கோதானத்திலே பிதா புத்திரன் கையில் நீர் வார்த்துக் கொடுத்து, மீளவும் அவன் கொடுக்க, அவன் கையிலே தான் பெற்றானாயிருக்குமாறு போன்று

 

    வண்டுகள் மதுவைக் குடித்த மயக்கத்தாலே பிரீதிக்குப் போக்குவிட்டு முரன்றது இசையாய் விழுந்தாற்போலே

 

    வேதத்தைக் காட்டிலும் ஸ்ரீ ராமாயணத்துக்கு உண்டான ஏற்றம் போலே

 

    ‘தென்னா தென்னா’ என்று ஆளத்தி வைப்பாரைப்போலே

 

    தன்னைக் கிட்டாத அன்று சமுசாரி சேதனருடைய சத்தை இல்லாதது போன்று

 

    ஓர் ஊசி நிற்கிறதாகவும், அதன்மேலே ஒரு மேரு நிற்கிறதாகவும் நினைக்குமாறு போன்று

 

    இராஜபுத்திரன் தலையில் முடியை வைத்துப் பின்னை விலங்கு வெட்டிவிடுமாறுபோன்றும், ஸ்ரீ விபீஷணாழ்வானை முடி சூட்டிப் பின்பு இராவணனை வதைத்தாற்போலவும்

 

    ஞானமாகில் அவனையே நோக்குமாறு போன்று

 

    தாய் முலைக்கீழே போய் ஒதுங்கும் இளங்குழவியைப்போன்று

அன்று ஈன்ற கன்றின் பக்கல் வாத்சல்யத்தாலே முன் ஈன்ற கன்றைக் காற்கடைக்கொள்ளும் பசுவின் தன்மையைப் போன்று

 

    கூற்றம் கண்டாற்போன்று அச்சத்திற்குக் காரணம்

 

    கிருஷிகன் ஒருகால் பயிர் செய்து பதர்த்தால், பின்பும் பயிர் தன்னையே செய்யுமாறு போன்று

 

    ஒரு கற்பகத்தரு பணைத்துக் கணுத்தோறும் அரும்பினாற் போலே

 

    யசோதைப்பிராட்டி கிருஷ்ணனைத் தன் மடியிலே வளர்த்தி உவக்குமாறு போன்று

 

    நாக்கு உலர்ந்தால் கர்ப்பூரத்திரள் வாயிலே இடுவாரைப் போலே

 

    தேர் முதலிய பொருள்களை நடத்துமாறு போன்று

 

    வீட்டிற்குள்ளே இருந்து தத்தம் வீரத்தைப் பேசுவாரைப் போலே

 

    கடல் கடைகிற காலத்தில் எட்டு வடிவுகொண்டு நின்று கடைந்தது போன்று

 

    மலரில் வாசனை வடிவு கொண்டிருப்பது போன்று

 

    ஈர்க்கில் அத்திக்காய் கோத்தது போன்று

 

    உழக்காலே கடலை முகக்க ஒண்ணாதது போன்று

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: