திரு மாலை-42 —பழுதிலா வொழுகலாற்று–பெரியவாச்சான் பிள்ளை அருளிய -வியாக்யானம் –

ஜன்ம வ்ர்த்தாதிகளால் குறைய நின்றே
இந்த ஜ்ஞானம் உடையவர்கள்
இந்த ஜ்ஞான விதுரராய்
ஜன்ம வ்ருத்தாதிகளால் உயர்ந்தவர்களுக்கு
சர்வேச்வரனோபாதி பூஜ்யராய்
ஜ்ஞான பிரதான ப்ரதிக்ர ஹவ்யவ ஹாரங்களுக்கும்
அர்ஹர் ஆவார் என்கிறார்

——————————————————————————————————————————————————————–

பழுதிலா வொழுகலாற்றுப் பல சதுப்பேதிமார்கள்
இழி குலத்தவர்கள் ஏலும் எம் அடியார்கள் ஆகில்
தொழுமினீர் கொடுமின் கொண்மின் என்று நின்னோடும் ஒக்க
வழிபட்டு அருளினாய் போல் மதிள் திருவரங்கத்தானே

————————————————————————————————————————————————————————-

பழுதிலா வொழுகலாற்றுப் –
ப்ரஹ்மா தொடங்கித் தங்கள் அளவும் வர நெடுகிப் போகிற
வம்ச பிரவாஹத்திலே ஒரு தோஷம் இன்றிக்கே இருக்குமவர்கள்
அதாகிறது –
உத்பத்திகளிலே யாதல்
ஆசாராதிகளிலேயாதல்
ஒருவகையாலும் ப்ராஹ்மண்ய ப்ரச்யுதி யின்றிக்கே யிருக்கை-

பல சதுப்பேதிமார்கள் –
இவ்வம்சத்தில் சதுர்வேதிகளாய் இருப்பர் அநேகர் -என்கை-
சதுர்வேதா ரிஷயே -என்கிறபடியே
ரிஷி சமராய் இருக்கை –
சதுப்பேதிமார்கள் –என்று சம்போதனை –
ஒழுகல் -நெடுமை
ஆறு -வழி –

இழி குலத்தவர்கள் ஏலும் –
இதில் கீழ்ப் பட்டது இல்லை என்னும் நிஹீன குலத்தில்
பிறந்தார்களே ஆகிலும்

ஏலும் –
பஹூனாம் ஜன்ம நாமந்தே -என்கிறபடியே
அநேக ஜன்ம புண்யங்களின் உடைய அவஸா நத்திலே
ஸ்வரூப ஞானம் பிறக்கும் என்று சொல்லுகையாலே
ஜ்ஞானாதிகராய் இருப்பார்க்கு நிஹீன ஜன்மம் கூடாது –
விதுர தர்ம வ்யாயாதிகளைப் போலே கூடிற்றே யாகிலும் –

எம் அடியார்கள் ஆகில் –
என்னோட்டை அசாதாரண பந்தத்தை அறிந்து
ஜ்ஞான அனுகூலமான ஸ்வ ஆசாரத்தை உடையராகில் –
கைங்கர்யமே எல்லா நன்மைகளுமாக நினைத்து இருக்குமவர்களாய்
ஈஸ்வரனும் இவர்கள் திறத்தில் நாமே இவர்களுக்கு உபாய உபேயங்களும் எல்லா உறவும் என்றும்
நினைத்து இருக்கப் பெறுமவர்கள் –

தொழுமினீர் –
தொழுமின் -நீர் –
நீங்கள் தொழும் கோள்
ஏஷ ஏவ சதா தம –என்கிறபடியே
உங்கள் உடைய வித்யா வ்ர்த்தங்களும்
ஜன்ம உத்கர்ஷங்களும்
மத ஹேதுவாகை யன்றிக்கே -தம ஹேது என்று இருக்கும்
நீங்கள் அவர்கள் காலிலே விழுங்கோள்-
காலேஷ்வபி ச சர்வேஷூ -இத்யாதிகளில் சொல்லுகிறபடியே
பகவத் பிரசாதம் ஒழிந்த சாதனாந்தரங்கள்
பய ஸ்தானம் என்று இருக்கும் நீங்கள் அவர்களை ஆராதியுங்கோள
பரஸ்பர நீச பாவை -என்கிறபடியே ஸ்வரூப ப்ராப்தமான நீச பாவமானது அவர்களுக்கு ஸ்வரூப சித்தம் –
உங்களுக்கு துர்மாநத்தாலே துஷ்கரம் –
அவர்களைத் தொழவே உங்கள் சம்சார பீஜமான துர்மானம் போம் –
எங்கே கண்டோம் என்னில்
கைசிக சம்பந்தம் ப்ராஹ்மன்ய பிரச்யுதியாலே வந்த ப்ரஹ்ம
ராஷசத்வத்தை பிராமணனுக்கு போக்கிக் கொடுக்கக் கண்டோம் இ றே-

கொடுமின் கொண்மின்-
அவர்கள் உங்கள் பக்கல் ஒரு ஜ்ஞான அபேஷை பண்ணில் நீங்கள் ஆதரித்து சொல்லுங்கோள் –
அவர்கள் பகவத் ஜ்ஞானத்தை உங்களுக்கு பிரசாதிக்கில் கேட்டு க்ர்தார்த்தர் ஆகுங்கோள் –
ஜாதி நிபந்தனமான சம்பந்தம் போலே யாதல்
குண நிபந்தனமான சம்பந்தம் போலே யாதல்
நீர் மேல் எழுத்தான சம்பந்தம் அன்று இ றே இவர்களோடு பண்ணும் சம்பந்தம் –
இது யாவதாத்மபாவியான சம்பந்தம் இ றே –

என்று நின்னோடும் ஒக்க வழி பட அருளினாய் போல் –
இப்பாசுரம் பல பிரதரான தேவரீரே அருளிச் செய்த பின்பு இதில் ஒரு சம்சயம் உண்டோ –

நின்னோடும் ஒக்க வழி பட-
எனக்கு மேல் பூஜ்யர் இல்லாமையாலே என் மாத்ரமே யாகிலும்
அவர்களை ஆராதித்து நல் வழி போங்கோள் –

அருளினாய் –
பக்தி ரஷ்டவிதாஹ் ஏஷா யாஸ்மின் ம்லேச்சேபி வர்த்ததே
சவிப்ரேந்த்ரோ முனிச் ஸ்ரீ மான் சயதிச்சை பண்டித
தஸ்மை தேயம் ததோராஹ்யம் –
என்கிறபடியே –

அருளினாய் –
இந்தாஹாச்யம் தேவரீர் கிருபையால் அருளிச் செய்த இத்தனை இ றே –

பூசித்து நல்கி உரைப்பர் தம் தம் தேவியர்க்கே -என்று
பகவத் சம்பந்த யுகதர் உடைய பாவநத்வம்
நித்ய சூரிகளும் தம்தாமுடைய அபிமத விஷயங்களுக்கு சர்வ ஸ்வ தானம் பண்ணினார்களாய் உபதேசிக்கும் அத்தனை இ றே –
மதிள் திருவரங்கத்தானே –
உபதேச மாத்ரமாய்ப் போகாதே கோயிலிலே வந்து
லோக சாரங்க மகா முனிகள் தலையிலே திருப் பாண் ஆழ்வாரை அழைத்து
இவ்வர்த்தத்தை வ்யாபரித்து காட்டிற்று இலீரோ –

மதிள் திருவரங்கத்தானே —
கோயிலிலேமதிளைக் கடக்கில் அன்றோ
தேவரீர் காட்டின இம் மரியாதையைக் கடக்கலாவது –

——————————————————————————————————————————————————————–

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரியப்ராடியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: