திரு மாலை-41–வானுளார் அறியலாகா –பெரியவாச்சான் பிள்ளை அருளிய -வியாக்யானம் –

இவர்களுக்கு ஜன்ம வ்ருத்தங்களால் வரும்
இல்லாமையே அன்று
தங்களோடு சம்பந்தித்த சம்சாரிகளுக்கும்
தங்கள் அங்கீ காரத்தால் பரிசுத்தராம்படியான
உத்கர்ஷத்தை உடையவர்கள் என்கிறார்-

———————————————————————————————————————————————————–

வானுளார் அறியலாகா வானவா என்பாராகில்
தேனுளாம் துளப மாலைச் சென்னியா என்பாராகில்
ஊனமாயினகள் செய்யும் ஊனகாரகர்கள்  ஏனும்
போனகம் செய்த சேடம் தருவரேல் புனிதம் அன்றே –

——————————————————————————————————————————————————————

வானுளார் அறியலாகா –
பிரஹ்மாதிகளால் துர்ஜ்ஞேயமான பரமபதத்தில்
நித்ய வாசம் பண்ணுபவனே –

ஆகா -என்கிறது
சண்டாளன் அக்னி ஹோத்தரத்திலே ஆகாது என்னுமா போலே
நிஷேதத்தை சொல்லிற்று ஆகவுமாம்-
பரணிலே உயர இருந்தால் பரமபத நிலையனை அறியலாமோ –
மனுஷ்யர்களில் காட்டில் வ்யாவ்ர்த்தி உண்டே -அது கொண்டு அங்கே செல்லலாமா –
அகிஞ்சன
அநந்ய கதி –
என்று இருப்பார் அறியும் அத்தை
ஈச்வரோஹம் –
என்று இருப்பார்க்கு அறியலாமோ –
ஆசற்றார் தங்கட்கு அல்லால் அறியல் ஆவனும் அல்லன் -என்னக் கடவது இறே
நீஞ்ச வல்லவனோடு நீந்த மாட்டாதவனோடு வாசி அர கடலை நீந்த ஒண்ணாதாப் போலே
சக்தனோடு அசக்தனோடு வாசி இன்றிக்கே அசாத்தியம் ஆய்த்து பகவத் வைபவம் இருப்பது –
அநந்ய சாத்யே -என்னக் கடவது இ றே –
அச்ப்ர்ஷ்ட சம்சார கந்தனாய் -சுத்த சத்வமயமான விக்ரகத்தை உடையவனாய் இருக்கிரவனுடைய
பெருமையைப் பார்த்தாலும் அவனே உபாயம் ஆக வேண்டும்
குணத்ரய வச்யனான இவன் சிறுமையைப் பார்த்தாலும்
அவனே உபாயம் ஆகவேணும் –
ஸ்வ ரஷணத்தில் பிராப்தி இல்லாத ஸ்வரூபத்தை அனுசந்தித்தாலும் அவனே உபாயமாக வேணும் –

என்பாராகில் –
மநோ பூர்வோ வாக் உத்தர – என்க்ஜிரபடியே
உள் வாயில் அனுசந்தானம் வலிந்து
சொல்லும் சொல்லை உடையவராகை –
இத்தால் –
பிரார்த்தனா மதி சரணாகதி -என்கிறபடியே
உபாய பிரார்த்தனையைச் சொல்லுகிறது –

ஆகில் –
ஸ்வ சாமர்த்தியத்தை விடுகையால் உள்ள அருமையை சொல்லுகிறது –

ஊனமாயினகள் செய்யும் –
வயிறு வளர்க்கைக்காக பர ஹிம்சை பண்ணுமவர்கள்
மத்திய ராத்ரத்திலே மாம்சார்த்திகளாய் வருவார் உண்டாகில்
ஹிம்ச்ய பதார்த்தை பிராணன் போகாமல்
பந்தித்து மாம்சத்தை அறுத்து கொடுக்குமவர்கள்
ஆன்ர்சமச்ய பிரதானர் பிறர்க்காக தங்கள் உடைய மாம்சத்தை அறுத்துக் கொடுப்பார்கள் –
அதற்கு எதிர் தட்டு இது –

ஊனகாரகர்கள் –
தாங்கள் கொள்ளும் அளவன்றிக்கே
பிறரை இடுவித்து கொல்லு விக்குமவர்கள் –
ஜ்ஞானம் பிறப்பதற்கு முன்புத்தை வ்ர்த்தம் சொல்லுகிறது –

ஏலும் –
முன்பு செய்யிலும் இந்த ஜ்ஞானம் பிறந்த பின்பு சம்பவியாது –
பிறர் உடைய ஆர்த்தி காணில் மோஹிக்கில் மோஹிக்கும் இத்தனை –
சர்பாச்யத்திலே அகப்பட்ட மன்டூகத்தின் உடைய ஆர்த்தியைக் கேட்டு
இது ஆர் அறிந்து விடுவிக்கக் கூப்பிடுகிறது -என்று
ஆழ்வான் மோஹித்தான் –

இப்படிப் பட்ட இவன் பர ஹிம்சையில் இழிந்தான் ஆகில்
ஈஸ்வரன் பண்ணுகிற ஹிம்சையோபாதி
ஹித ரூபமாய்த்தே இருப்பது –

போனகம் –
பகவத் விஷயத்திலே சொல்லுமோபாதி யாகிலும் சொல்ல வேணுமே

செய்த சேடம் –
த்வதீய புக்தோ ஜ்ஜித சேஷ போஜினா -என்றும்
கலத்ததுண்டு -என்றும்
சொல்லுகிறபடி அமுது செய்து கை வாங்கின கலசத்தில் பிரசாதம் –

தருவரேல் –
பகவத் பிரசாதம் போலே
பிரயோஜனாந்த பரர்க்கும் பொதுவாய் இருக்குமது அன்றோ இது –
அலாப்ய லாபம் கிட்டிற்று ஆகில் –
ஒரு நாள் பட்டர் பிரசன்னராய் ஜீயருக்கு இட்ட பிரசாதத்தை நினைப்பது –

புனிதம் அன்றே –
தேசாந்தர
காலாந்தர
தேகாந்தரே அன்றியே
ஸ்பர்ச வேதியாய்
இரும்பு பொன்னாப் போலே அப்போதே பரி சுத்தம் –
தத் உச்சிஷ்டம் ஸூ பாவனம் –
பகவத் பிரசாதம் -பாவனம்
இது ஸூ பாவனம்

——————————————————————————————————————————————————————–

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரியப்ராடியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: