திரு மாலை-39 –அடிமையில் குடிமை யில்லா–பெரியவாச்சான் பிள்ளை அருளிய -வியாக்யானம் –

மேல் ஆறு பாட்டும்
இந்த ஜ்ஞானம் உடையார் உடைய
ராஜகுலம் சொல்லுகிறது –
இவருடைய
பயிலும் சுடர் ஒளி
நெடுமாற்கு அடிமை —
இருக்கிறபடி –
ஜன்ம வ்ருத்த ஸ்வ பாவங்களால்
குறைய நின்றார்களே யாகிலும்
இவர்கள் இந்த ஜ்ஞானம் உடையவர்கள் ஆகில்
உத்தேச்யர் -என்கிறார் –
இப்பாட்டால் –
எத்தனையேனும் தண்ணிய ஜன்மங்களில் பிறந்தார்களே ஆகிலும்
இந்த ஜ்ஞானத்தில் நிஷ்டை உடையவர்கள் ஆகில்
திருத் துழாயோ பாதி ஈஸ்வரனுக்கு சிரஸா
வஹிக்கப் படுவர்
என்கிறார்

——————————————————————————————————————————————————–

அடிமையில் குடிமை யில்லா அயல் சதுப பேதிமாரில்
குடிமையில் கடமை பட்ட குக்கரில் பிறப்பரேலும்
முடியினில் துளபம் வைத்தாய் மொய் கழற்கு அன்பு செய்யும்
அடியரை உகத்தி போலும் அரங்க மா நகர் உளானே

————————————————————————————————————————————————–

அடிமையில் குடிமை யில்லா –
கைங்கர்யம் நமக்கு கர்த்தவ்யம் என்று இருக்கும்
அவர்கள் அன்றிக்கே இருக்கை –
கைங்கர்யம் ஆகிறது -சஹஜம் –
அது ஒழியச் செல்லாது இருக்கை யாவது -பிராப்தம் –
அது இன்றிக்கே இருக்குமவர்கள் –

அயல் சதுப பேதிமாரில்
அடிமைக்கு அசலான
சதுர வேதிகளாய் இருப்பாரில் காட்டில் –
வேதத்யயனம் -பண்ணுகிறதுக்கு பிரயோஜனம்
ஈஸ்வரனை உள்ளபடி அறிகையும்
தன்னை உள்ளபடி அறிகையும் –
கைங்கர்யம் ஸ்வரூப அனுரூபமான புருஷார்த்தம் என்று அறிகையும் -ஆய்த்து –
அசல் ஆகையாவது –
இந்த ஜ்ஞானத்துக்கு உடலாக வேத அத்யயனம் பண்ணுகிறோம் என்று அறியாது இருக்கை –
அத்யயன பலம் அர்த்த ஜ்ஞானம் என்று அறியாதவர்கள்
சதுர வேதிகள் ஆனாலும் நிஷ் பிரயோஜனம் -என்கை –

விஷ்ணு பக்தி விஹீ நோயஸ் சர்வ சாஸ்த்ரார்த்த வேத்யபி
ப்ராஹ்மண்யம் தன் நபவேத் தச்யோத்பத்திர் நிரூப்யதாம் –
என்னக் கடவது இ றே –
சர்வத்ர கலு த்ர்ச்யதே -இத்யாதி –

இனி இவர்களில் காட்டில் ஈஸ்வரனுக்கு உத்க்ர்ஷ்டரைச் சொல்லுகிறது மேல் –
குடிமையில் கடமை பட்ட குக்கரில் பிறப்பரேலும் –
வேத விஹிதங்களை அனுஷ்டியாதும்
நிஷித்தங்களை அனுஷ்டித்தும்
போருகையாலே நிஹீன ஜன்மங்களில் பிறந்தவர்களே யாகிலும்
குக்கர் ஆகிறார்
சண்டாளரிலும் தண்ணியர் சிலர் –
பிறப்பரேலும் என்கிறது –
பகவத் ஞானத்துக்கு ஜன்மங்கள் உடைய உத்கர்ஷ அபகர்ஷங்களில் நியதி இல்லை –
சர்வத்ர கலு த்ர்ச்யதே -என்கிறபடியே
இந்த ஜன்மம் எல்லா ஜன்மங்களிலும் சம்பவிக்கும் -என்கை
வேத உப ப்ரஹ்மண அர்த்தமாக அவதரித்த
ஸ்ரீ ராமாயணத்திலே காட்டிலே திரிவார் சில வேடரையும்
வேடுவிச்சிகளையும்
குரங்குகளையும் ராஷசரையும்
மகா பாரதத்திலே விதுர தர்ம வ்யாதாதிகளையும்
பிசாசங்களையும்
இடையரும் இடைச்சிகளையும் கண்டோம் இ றே
பாம்பணை மேல் பள்ளி கொண்டு அருளும்
சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியரே – என்கிறபடியே–

நித்ய சூரிகளில் காட்டில் இங்கே வந்து ஈஸ்வரன்
ஆர்ஜித்தவர்கள் ஆகையாலே இவர் சீரியர் என்கை –
அல்லாத பொன்னில் காட்டில் வேதகப் பொன்னுக்கு ஏற்றம் உண்டு இ றே –

முடியினில் துளபம் வைத்தாய் –
திருத் துழாயோ பாதி சிரஸா வஹிக்கும் அவர்கள் என்கை –
திருத் துழாய் மாலை சர்வேஸ்வரத்துக்கு ஸூ சகம் ஆனாப் போலே
இவர்களால் உன்னுடைய ஈச்வரத்வம் நிறம் பெறும் என்னவுமாம் –

மொய் கழற்கு அன்பு செய்யும் –
ஐம்புலன் அகத்தடக்கி -என்கிறபடியே –

உன் உகப்புக்கு புறம்பானவற்றைப் பொகட்டு
உன் சேவடி செவ்வி திருக் காப்பு -என்று
திருவடிகளுக்கு பரியும் அதுவே யாத்ரையாய்
அத்தையே போக்யமாக நினைத்து இருக்குமவர்கள் –

அடியரை –
கீழ் -உபேயத்தை சொல்லிற்றாய்
இது -உபாயத்தைச் சொல்லுகிறது –
சோம்பர் -என்கிற படியே
ஸ்வரூபத்தை உள்ளபடி உணர்ந்து
ஸ்வ ரஷணத்தில் அந்வயம் இன்றிக்கே இருக்குமவர்கள் –

அடியர் –
அடியில் உள்ளாருக்கும் திருவடிகளேயாய்
தாரகமும் திருவடிகளேயாய் இருக்கை –
நிழலும் அடி தாறும் ஆம் – என்னக் கடவது இ றே –

உகத்தி போலும் –
இப்படி இருக்கும் அவர்களை உகத்தி
இதுக்குப் புறம்பான சதுர வேதிகளைக் காட்டில்
இவர்களை இ றே தேவரீர் உகந்து இருப்பது –

போலும் –
திருத் துழாய் போலும்
முடியினில் துளவம் போல் அடியரை உகப்புதி –

அரங்க மா நகர் உளானே –
நிஹீன ஜன்மாக்களாய்
உனக்கு நல்லராய் இருப்பார்க்கு
முகம் கொடுக்கைக்கு அன்றோ இங்கு வந்து கண் வளர்ந்து அருளுகிறது –
உத்க்ருஷ்டருக்கு முகம் கொடுக்கும் இடத்தில்
பரம பதத்திலே இருக்க அமையாதோ –

——————————————————————————————————————————————————————

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரியப்ராடியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: