திரு மாலை-38—மேம்பொருள் போக விட்டு –பெரியவாச்சான் பிள்ளை அருளிய -வியாக்யானம் –

ஸ்ரீ மகா பாரதத்துக்கு சரம ஸ்லோகம் போலே யாய்த்து
இப்பிரபந்ததுக்கு இப்பாட்டு
மகா பாரதம் ஆகிறது –
மதிமந்தா நமாவித்ய யேனா சௌ சுருதி சாகராத்
ஜகத்தி தாய ஜனித்த மகா பாரத சந்த்ரமா -என்கிறபடியே –
சுருதி சாகர சந்தரமா வாய்த்து மகா பாரதம் –
சர்வேஸ்வரன் ஷீ ராப்தியைக் கடைந்து தேவர்களுக்கு அம்ர்தத்தைக் கொடுத்தான் –
ஸ்ரீ வேத வியாச பகவான் சுருதியைக் கடைந்து சர்வாஹ்லாத கரமான
மகா பாரதத்தை சம்சாரிகளுக்கு ஆத்மஉஜ்ஜீவன ஹேதுவாக கொடுத்தான் –
தேவர்களுக்கு ஈஸ்வரன் கொடுத்த அமர்த்தம் பந்தகம்
ஸ்ரீ வேத வியாச பகவான் சம்சாரிகளுக்கு கொடுத்த மகா பாரதம் சம்சார விமோசகம் இ றே –
அம மகா பாரதம் தான் கோது என்னும்படி உய்த்து ஸ்ரீ கீதை
அதில் சாரம் யாய்த்து சரம ஸ்லோகம்
இது சொல்லுகைக்காக -கீழ் அடங்கச் சொல்லிற்று –
இதந்தே நாதபஸ்காய -என்று தொடங்கி இந்த சரம ஸ்லோகத்தின் கௌ ரவத்தைச் சொல்லுகிறது மேல் –
அப்படியே
இப்பாட்டு அவதரிக்கைக்காக வாய்த்து இப்பிரபந்தம் அவதரித்தது –
இதுக்கு மேலே -இப்பிரபந்த செஷமும் இப்பாட்டில் சொல்லுகிற அர்த்தத்தில்
நிஷ்டராய் இருப்பார் உடைய ஏற்றம் சொல்லுகிறது –
ஆக
மகா பாரத சாரம் -சரம ஸ்லோகம் -ஆனால் போலே
இப்பிரபந்த சாரம் -இப்பாட்டு –

இது தான் த்வயத்தின் உடைய அர்த்தத்தைச் சொல்லுகிறது –
த்வயத்தில் பிராபகம் முன்னாய்-பிராப்யம் பின்னாய் -இருக்க
இதில் பிராப்யம் முன்னாய் -பிராபகம் பின்னாய் -இருப்பான் என் என்னில்
வ்யுத்பத்தி வேளையிலே பிராப்யம் முன்னாகவும் பிராபகம் பின்னாகவும் இருக்கக் கடவது இ றே
ஸ்வர்க்க காமோ ஜ்யோதிஷ்டோமேன யஜேத -என்று இ றே வ்யுத்பத்தி வேலை இருப்பது –
அனுஷ்டான வேளையிலே
ஜ்யோதிஷ்டமோம் அனுஷ்டான பூர்வகமாக இ றே ஸ்வர்க்க சித்தி
பிராபக நிஷ்டியால் இ றே பிராப்யம் சித்திக்கும்
அப்படியே
இப்பாட்டிட்டிலே வுயுத்பத்தி வேளையாய்
த்வயத்தில் அனுஷ்டான வேளையாய்
இருக்கிறது –
அதில் பூர்வபாகத்தளவிலே அனுசந்தித்தார் நம் ஆழ்வார் –
உத்தர பாகத்தை அனுசந்தித்தாள் ஆண்டாள்
அவ்விரண்டையும் சேர அனுசந்தித்தார் இவ் ஆழ்வாரே யாய்த்து-
இப்பாட்டுக்கு கீழ் பாட்டோடு சங்கதி என் என்னில் –
அளியல் நம் பையல் என்னார் அம்மவோ கொடியவாறே -என்று
கிலாய்த்து வார்த்தை சொன்னவாறே
விஷயாந்தர பிராவண்ய கரமான சம்சாரத்தில்
வகுத்த புருஷார்த்தத்தை அபேஷிக்கையும்-
தத் சித்திக்கு நம் கை பார்த்து இருக்கையும் –
அதுக்கு மேலே விளம்பம் பெறாதே கிலாய்க்கையும்
ஆக
இவ்வளவு புகுர நிற்பாரை பெறுவோமே என்று
பெரிய பெருமாள் திரு உள்ளம் பிரசன்னமாய்
திரு உள்ளத்தில் ஹர்ஷம் அடங்கலும் திரு முகத்தில் தோற்றும் படியாய் இருக்க
தேவரீரைக் கிட்டி தேவரீர் பக்கலிலே ந்யச்த பரராய்
தம்தாமுடைய ஹிதத்தில் கை வாங்கி இருப்பாரைக் கண்டால்
இங்கனேயோ தேவரீர் திரு உள்ளம் இருப்பது என்று
பெரிய பெருமாள் திரு முகத்தைப் பார்த்து விண்ணப்பம் செய்கிறார் –
சரம ஸ்லோகம் பிராப்தியை விதிப்பதாய் இருக்கும் –
அதில் ருசி உடையாருடைய அனுசந்தானமாய் இருக்கும் -த்வயம் –
த்வய நிஷ்டர் பக்கலிலே ஈஸ்வரனுக்கு உண்டான உகப்பை
சொல்லுகிறது -இப்பாட்டு –

————————————————————————————————————————————————————-

மேம்பொருள் போக விட்டு மெய்ம்மையை மிக உணர்ந்து
ஆம்பரி சறிந்து கொண்டு ஐம்புலன் அகத்தடக்கிக்
காம்பறத் தலை சிரைத்து உன் கடைத் தலை இருந்து வாழும்
சோம்பரை உகத்தி போலும் சூழ் புனல் அரங்கத்தானே

—————————————————————————————————————————————————————-

மேம்பொருள் –
இதுக்கு மூன்று படி நிர்வாஹம் –
மேல் எழுந்த பொருள் என்றும்
மேவின பொருள் என்றும்
மேம்பாட்டை விளைக்கும் பொருள் என்றும் –

மேல் எழுகையாவது –
கர்மம் அடியாக வந்தேறி யாய் –
பகவத் ஞானம் வந்தவாறே -மறந்து போமதாய் இருக்கை –
இத்தை போக்யதை என்று பார்த்து இழிந்தவனுக்கும்
ஆபாத ப்ரதீதியில் ஓன்று போல் தோற்றி
நிரூபித்தால் அனுபாவ்யமாய் இருப்பது ஓன்று அன்றிக்கே இருக்கை -என்றுமாம் –

மேவின பொருள் -என்றது –
துரத்யயா -என்கிறபடி சேதனனால் பிரிக்க ஒண்ணாத படியாய் இருக்கை –
தேவோஹம் மனுஷ்யோஹம் -என்று உடம்பை தானாக நினைத்து இருக்கும் படி இ றே
இத்தோட்டை பொருத்தம் இருப்பது –
அத்தைச் சொல்லிற்றாகவுமாம் –

மேம்பாட்டை விளைக்கை யாவது -மெய்ப்பாட்டை –
தன்னைப் பற்றினாரை-சர்வஜஞ் தமராக அபிமானித்து இருக்கும்படி பண்ணவற்றாய் இருக்கை –

பொருள் -என்று பதார்த்தம் -அதாகிறது -தேஹம் –
இது தான் தேக அனுபந்தியான ப்ராக்ருத பதார்த்தங்களுக்கும் உப லஷணம்-

போக விட்டு –
வாசனையோடு விட்டு -என்கை –
சரீரிகளால் அவை துஷ்கரம் ஆகையாலே
பிரகிருதி பிராக்ருதங்கள் அபுருஷார்த்தம் என்கிற ஞானத்தை உடையவனாகை-
அல்லது
புகுர விட்டான் இவன் ஆகில் இ றே இவனால் போக விடலாவது –

மமமாயா துரத்தயயா -என்கிறபடியே
ஈஸ்வரன் பந்தித்த பந்தத்தை இவனால் போக்க ஒண்ணாது இ றே –
அநாந்த்மன் யாத்ம புத்திர்யா – என்கிற ஸ்லோகத்தின் படியே
தேகத்தில் ஆத்ம புத்தியையும்
தேக அனுபந்தியான ப்ராக்ருத பதார்த்தங்களில் மமதா புத்தியையும்
தேஹாதிரிக்தனான ஆத்மாவில் ஸ்வ தந்திர புத்தியையும்
தவிருகை –
அளவுடையரான சனகாதிகளுக்கும் செய்யலாவது இவ்வளவே
இரண்டு மரம் கூட நின்றால் ஒன்றை வெட்ட நினைத்தவன் ஒரு மரத்திலே கொத்தி
பெருங்காயத்தை விட அது பட்டு நிற்குமா போலே யாய்த்து
இப்பிரதி பத்தி மாத்ரத்திலே இதுவும் விடும் –
மெய்ம்மையை மிக உணர்ந்து –ஆம் பரிசு அறிந்து கொண்டு
என்று மேலும் ஞான பிரகரணம் ஆகையாலே
போகவிட்டு -என்று
பிரகரண பலத்தாலே ஜ்ஞானத்தைச் சொல்லிற்றாகக் கடவது —

மெய்ம்மையை மிக உணர்ந்து –
மெய் -என்கிறது ஆத்மாவை –
மெய் -எனபது ஆத்மாவைக் காட்டுமோ -என்னில் –
சத்யஞ்சா ந்ர்தஞ்ச சத்ய மவபவத் -என்கிற
சுருதி சாயையால் அருளிச் செய்கிறார் –
சத்ய சப்தம் அசத்திய வ்யாவர்த்தியை சொல்லுகிறது அன்று
ஆத்ம ஸ்வரூபத்தின் நித்யதையைச் சொல்லுகிறது –
மெய்ம்மை -என்று முழுச் சொல்லாய் -பிரத்யக் விஷயத்தைச் சொல்லுகிறது –
கைம்மை பொய்ம்மை -என்னுமா போலே
ஆக
மெய்ம்மை -என்று -மெய்யான தன்மை -என்றபடி –

மிக உணர்ந்து –
தேகமே ஆத்மா என்று இருக்கும் லோகாயதிகன் அளவன்றிக்கே –
தேகாதிரிக்தமாய் சுயமாய் இருக்கிஉம் ஆத்மா என்னும் மீமாம்சகன் அளவன்றிக்கே
ஜ்ஞானம் ஆகந்துகம் -என்னும் வைசெஷிகன் அளவன்றிக்கே –
ஸுவயம் பிரகாசனாய்
நித்யனாய்
ஜ்ஞான குணகனாய்
அணு வாய்
ஈஸ்வரனுக்கு அனன்யார்ஹ சேஷமாய்
அது தான் ததீய சேஷத்வ பர்யந்தமாக
உணருகை –
அதாவது
ஆத்மாவை உள்ளபடி உணருகை –

ஆம்பரி சறிந்து கொண்டு-
பிரக்ருது ப்ராக்ருதங்கள் த்யாஜ்யம் -என்று அறிந்து
மேலும்
ஆத்மாவை உள்ளபடி உணர்ந்தால் –
பின்மைஉ
ஆம் பரிசு ஆவது –
கைங்கர்யமே யாய்த்து –
ஆம் பரிசு வர்த்திக்கும் படியை அறிந்து –
ஆத்மா அபிமான ரூபமாக வாய்த்து வ்ர்த்தி ஹேதுக்கள் தான் இருப்பது –
தன்னை திர்யக்காக அபிமானித்த போது -தர்ண சமூஹம் ஆய்த்து வ்ர்த்தி ஹேதுவாகக் கடவது –
மனுஷ்டோஹம் -என்று அபிமானித்த -அன்னம் -வ்ர்த்தி ஹேதுவாகக் கடவது –
தேவோஹம் -என்று அபிமானித்த போது -அமர்த்தம் -வ்ர்த்தி ஹேதுவாகக் கடவது –
தாசோஹம் -என்ற போது -கைங்கர்யமே வ்ர்த்தி ஹேதுவாகக் கடவது –
பிரகிருதி பிராக்ருதங்களில் சங்கோசம் போய்
ஸ்வரூபத்தை உள்ளபடி அறிந்தால்
சஹஜ கைன்க்ஜர்யமே இ றே வ்ர்த்தி ஹெதுவாவது –

அறிந்து கொண்டு –
நிதி எடுத்துக் கொண்டு -என்னுமா போலே
பிரகிருதி பிராக்ர்தங்கள் த்யாஜ்யம் என்கிற ஜ்ஞானமும் –
ஆத்மா பகவத் பரதந்த்ரன் என்கிற ஜ்ஞானமும்
பிராப்யம் கைங்கர்யம் என்கிற ஜ்ஞானமும்
இ றே சேதனனுக்கு வேண்டுவது –
விடுவிக்கையும்
பற்றுவிக்கையும்
உபாய பூதனான ஈஸ்வரன் கார்யம் இ றே –
மேம் பொருள்
மெய்ம்மை
ஆம்பரிசு
என்கிற இவை அவ்வவோ பதார்த்தங்களுக்கு வாசகம் அன்றிக்கே இருக்க
தத் தத் ஸ்வ பாவ வாசியான சப்தங்களால் மறைத்து அருளிச் செய்கிறார் –
அர்த்த கௌரவத்தாலே –

ஐம்புலன் அகத்தடக்கிக் –
இந்த்ரியங்களை தன்னுள்ளே யாம்படி பண்ணி –
அதாவது
தன் வசத்தில் ஆம் படி பண்ணுகை –
மேம்பொருள் போக விட்டு -என்று
முதல் வார்த்தையிலே போய் இருக்க
ஐம்புலன் அகத்தடக்கி -என்கிறது -கீழ் சொன்ன கைங்கர்யத்திலே –
மமேதம் -என்கிற புத்தியைத் தவிருகை –
கைங்கர்யத்திலும் நியமிக்க வேண்டுவன சில உண்டு –
அவற்றை யாய்த்து இங்குச் சொல்கிறது –
தனக்கு இனிதாகப் பண்ணும் கைங்கர்யமும் அபுருஷார்த்தம்
தனக்கும் அவனுக்கும் இனிதாகப் பண்ணும் கைங்கர்யமும் அபுருஷார்த்தம் –
அவனுக்கே பிரயொஜனமாகப் பண்ணுவதே புருஷார்த்தம் –
தனக்கேயாக எனைக் கொள்ளும் ஈதே -என்றும் –
ரமமாணவ நேத்ரய -என்றும் சொல்லக் கடவது இ றே –
ஆக
இவ்வளவால்
உத்தர கண்டார்த்தமான பிராப்யம் சொல்லிற்றாய்  விட்டது
மேம்பொருள் போக விட்டு -என்றும்
ஐம்புலன் அகத்தடக்கி -என்றும்
நமஸ் சப்தார்த்தம் சொல்லப் பட்டது
மெய்ம்மையை மிக உணர்ந்து -என்கிற இது -நாராயண பதத்தில் -நார -சப்தார்த்தம் சொல்லிற்றாய்
அந்த சேஷத்வத்துக்கு பிரதி சம்பந்தியை ஒழிய ஸ்திதி இல்லாமையாலே
சேஷித்வம் ஆர்த்தமாய் சொல்லிற்றாய்
ஆக -நாராயண -சப்தார்த்தம் சொல்லிற்றாய் -ஆய்த்து
உணர்ந்து -என்று கொண்டு ஜ்ஞாத்ர்வ பரமாகச் சொல்லுகையாலே
பிரணவார்த்தம் சொல்லிற்றாயிற்று

இப்பாட்டில் குறையும்
பூர்வார்த்தத்தில் சொல்லுகிற பிராபகத்தை சொல்லுகிறது –
காம்பறத் தலை சிரைத்து-
காம்பற –
உபாயாந்தரங்களில் தனக்கு உண்டான தொற்று அற –
தலை சிரைத்து –
தன் தலையில் உண்டான துரிதங்களைப் போக்கி –
தன் தலையில் உண்டான சாதனாந்தரங்களின் தொற்றை அறுத்து -என்றபடி –
தலை மயிர் ஆகிறது தான் அபிமான ஹேது இ றே
கோ முற்றவர் தண்டிக்கும் இடத்தில் தலையைச் சிரைக்கிறது
அபிமானத்தை போக்குகிற படி யாய்த்து
ஏகாந்தி யாகவும் சந்நியாசியையும் லபனம் பண்ணுகிறது
தன் அபிமானத்தை தானே போக்குகிற படி இ றே –
தண்ட முகத்தாலே அபிமானத்தை போக்குவதும் இம் முகத்தாலே-

ஸ்வ அபிமானத்தை போக்குவதும் இம் முகத்தாலே இ றே
ஆக
அஹங்கார கர்ப்பமான உபாயாந்தர பரித்யாகத்தைச் சொன்ன படி –
உபாயாந்தர பரித்யாக பூர்வககமாக இ றே சித்தோ உபாய பரிக்ரஹம் இருப்பது –
காம்பற தலை சிறிது -என்கிற இதுவும் அர்த்த கௌ ரவத்தாலே
மறைத்து அருளிச் செய்கிறார் –
இவரே அன்று
அர்த்த கௌரவத்தாலெ ஸ்ருதியும் -த்வா ஸூபர்ணா-இத்யாதிகளாலே அர்த்தங்களை மறைத்துச் சொல்லும்
அந்த ஸ்ருதி சாயையாலே அருளிச் செய்கிறபடி – –

உன் கடைத் தலை இருந்து –
உன் தலைக்கடை -என்றபடி –
சரனௌ-என்கிற ஸ்தானத்திலே -கடைத்தலை -என்கிறார் –
ஸ்வ நிகர்ஷத்தை அனுசந்தித்து திருவடிகளிலே கிட்டாமையாலும்
சம்சாரத்தின் தண்மையை அனுசந்தித்து புறம்பு போக மாட்டாமையாலும்
திரு வாசலைப் பற்றுகிறார் –
திருக் கண்ண மங்கை யாண்டான் -ஒரு சம்சாரி தன் வாசலைப் பற்றி
கிடந்ததொரு நாயை நலிந்தவனை வெட்டி தானும் குத்திக் கொண்ட படியை கண்டு
ஒரு தேகாத்ம அபிமானி அளவு இது வானால் பரம சேதனன்
யமாதிகள் கையில் நம்மை விட்டுக் கொடான் –
என்று திரு வாசலைப் பற்றிக் கிடந்தான் இ றே

இருந்து –
விஷயாந்தர பிராவண்யத்தால்
பரகு பரகு என்று திரிந்தவன் –
மரக்கலத்துக்கு நங்கூரம் அவிழ்த்து விட்டாப் போலே
அதஸோ பயங்கதோ பவதி -என்று
அபய ஸ்தானத்தைப் பற்றி நிர்ப்பயனாய் இருந்த படி –

வாழும் –
உபாயம் ஈச்வரனே யானால்
போகம் இ றே பின்பு உள்ளது –
இருந்து வாழும் -என்று
அவ்விருப்பு தானே வாழ்ச்சியான இருப்பு -என்றுமாம் –

சோம்பரை உகத்தி போலும் –
உன் பக்கலிலே ந்யச்த பரராய்
ஸ்வ ஹிதத்தில் சோம்பினவர்களைக் கண்டால்
உனக்கு திரு உள்ளம் இங்கனே உகந்தாகாதே இருப்பது –
வாழும் சோம்பர் -என்று
கெடும் சோம்பரை வ்யாவர்த்திக்கிறது -என்றுமாம் –
அதாகிறது
சாஸ்த்ரத்தில் நாஸ்திகராய் கர்த்தவ்யங்களை விடுகை அன்றிக்கே
ஆஸ்திக் யாதிரேகத்தாலே நிரபேஷ உபாயத்தை ஸ்வீகரித்து
பகவத் அனுபவமே யாத்ரையாய் ஸ்வ ஹிதத்தில் சோம்பி இருக்கை போலும்
நித்ய சூரிகளை உகக்குமா போலே சோம்பரை உகப்புதி –

சூழ் புனல் அரங்கத்தானே –
இது நீர் அறிந்தபடி என் என்னில் –
கோயிலிலே வந்து கண் வளர்ந்து அருளுகிறது தானே அறிவிக்கிறது இல்லையோ
நீர் வாய்ப்பையும்
நிழல் வாய்ப்பையும்
பற்றக் கண் வளர்ந்து அருளுகிறார் என்று பேராய்
ஒரு சோம்பரைக் கிடைக்குமோ – என்னும் நசையாலே இ றே
தேவரீர் சோம்பாது கண் வளர்ந்து அருளுகிறது–
காம்பற தலை சிரைத்து -என்ற இடம்
உபாய ஸ்வீகாரத்துக்கு அங்கமான உபாயாந்தர பரித்யாகத்தை
சொல்லுகிறது –
சூழ் புனல் அரங்கத்தானே –உன் கடைத்தலை -என்று
நாராயண சப்தார்த்தமான சீலாதிகளை நினைக்கிறது –

பிராட்டி ஸ்வரூப நிரூபக தர்மம் ஆகையாலும்
நாராயண சப்தத்தில் அந்தர்பூதை யாகையாலும்
உன் -என்கிற இதிலே -லஷ்மீ சம்பந்தம் அனுசந்தேயம் –

கடைத்தலை -என்றது
சரனௌ -என்றபடி –

இருந்து வாழும் -என்ற கிரியா பதத்தில்
உபாயத்வ அத்யாவச்யதையும்
அது தான்
போக ரூபமாயும் இருக்கிற படியும் சொல்லிற்று –

சோம்பரை –
என்றது -பிரபத்யே -என்கிற உத்தமனால் ஆஷிப்தனான
அதிகாரியைச் சொல்லிற்று –

—————————————————————————————————————————————————————–

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரியப்ராடியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: