திரு மாலை-சங்கதி –பெரியவாச்சான் பிள்ளை அருளிய -வியாக்யானம் –

ஸ்ரீயபதி கிருபையால்
-யதார்ச்சிகமாக -திரு நாம சந்கீர்த்தனத்தாலே -யமாதிகள் தலையிலே காலை வைத்தேன் -என்றார் முதல் பாட்டில் –

அதனுடைய இனிமையால் பரமபதம் வேண்டாம் என்கிறார் -இரண்டாம் பாட்டில் –

அத்தோடு விரோதிக்கும் சம்சாரமும் வேண்டாம் என்கிறார் -மூன்றாம் பாட்டில் –

பாப பிரசுரர்க்கும் திரு நாமம் சொல்ல அதிகாரம் உண்டாய் இருக்க இவ்விஷயத்தை இழப்பதே என்றார் -நான்காம் பாட்டில்

அஸ்த்ரத்வாதி தோஷ துஷ்டங்களான ப்ராக்ருதங்களைப் பற்றுவார் அவிசெஷஞ்ஞர் என்கிறார் -ஐந்தாம் பாட்டில்

போக்தாவின் நிலை இல்லாமையைச் சொன்னார் ஆறாம் பாட்டில் –

முமுஷூகளாக பிரமித்து இருக்கிற பாஹ்யரைக் குறித்து
ஆஸ்ரயணீய வஸ்துவை உபதேசித்தார் ஏழாம் பாட்டில்

இது கேட்டால் பொறாதவர்கள் என்கிறார் எட்டாம் பாட்டில்

இசைந்தவர்களைக் குறித்து சுலபனான கிருஷ்ணனை ஆஸ்ரயிங்கோள் -என்றார் ஒன்பதாம் பாட்டில்

பிற்பாடர்க்கு உதவும்படி கோயிலிலே சந்நிஹிதர் என்றார் -பத்தாம் பாட்டில்

உறவு அறிந்தார்க்கு அகல ஒண்ணாது -என்றார் இருபதாம் பாட்டிஅதுக்கு கண் அழிவு உடையார் கர்ப்ப நிர்பாக்யர் -என்றார் பதினோராம் பாட்டில்

தாம் பெற்றாலும் பிறர் அநர்த்தம் பொறுக்க மாட்டேன் -என்றார் பன்னிரண்டாம் பாட்டில்

எல்லாரும் திருநாமத்தைச் சொல்லி பிழைப்பது காண் -என்று மனோரதித்தார் –பதிமூன்றாம் பாட்டில்

அவர்களோட்டை சம்சர்க்கத்தால் வந்த விடாய் தீர திரு நாமத்தைச் சொன்னார் -பதினான்காம் பாட்டில் –

சம்பந்த ஜ்ஞானம் பிறப்பித்தபடி சொன்னார் -பதினைந்தாம் பாட்டில்

விஷய அனுரூபமாக பக்தி பெருகின படியைச் சொன்னார் -பதினாறாம் பாட்டில்

கண் களித்த படியைச் சொன்னார் பதினேழாம் பாட்டில்

அது புற வெள்ளம் இட்ட படியைச் சொன்னார் -பதினெட்டாம் பாட்டில்

உடல் உருகின படி சொன்னார் -பத்தொன்பதாம் பாட்டில்

மனசால் பரிச்செதிக்க ஒண்ணாது -என்றார் இருபத்தொராம் பாட்டில்

பாசுரம் இட்டுப் பேச ஒண்ணாது -என்றார் இருபத்திரண்டாம் பாட்டில்

மறக்க ஒண்ணாது என்றார் -இருபத்து மூன்றாம் பாட்டில்

பிறந்த பக்தி விஷய வை லஷண்யத்துக்கு அனுரூபமாய் இராமையாலே அது க்ர்த்ரிமம் -என்றார் இருபத்து நான்காம் பாட்டில்

சாஸ்த்ரியமான பக்த்யாதிகள் இல்லை -என்றார் -இருபத்து ஐந்தாம் பாட்டில்

ஸ்திரீ ஸூ த்ராதிகளுக்கு உள்ள நன்மையையும் இல்லை என்றார் -இருபத்து ஆறாம் பாட்டில்

திர்யக் க்குகளுக்கு உள்ள நன்மையையும் இல்லை -என்றார் இருபத்து ஏழாம் பாட்டில் –

ஆனை தன் இடரிலே நினைத்த நினைவும் இல்லை -என்றார்இருபத்து எட்டாம் பாட்டில்

விலஷண தேச வாஸம் இல்லை -என்றார் இருபத்து ஒன்பதாம் பாட்டில்

இவை இல்லாமை அன்றிக்கே -பிறர்க்கு அநர்த்தன் ஆனேன் -என்றார் முப்பதாம் பாட்டில்

நீச விஷயங்களுக்கும் ஆகாதான் ஒருவன் -என்றார் முப்பத்தோராம் பாட்டில்

இப்படி இருக்க வந்து கொடு நின்ற மூர்க்கன் -என்றார் முப்பது இரண்டாம் பாட்டில்

அதுக்கடியான நிர்லஜ்ஜையை உடையேன் -என்றார் முப்பது மூன்றாம் பாட்டில்

இப்படிப் பட்ட நான் கிட்டி அவத்யத்தை விளைப்பேன் அல்லேன் -என்றார் முப்பத்து நான்காம் பாட்டில்
நீர்மையால் சேர்த்துக் கொண்டான் -என்றார் -முப்பத்து ஐந்தாம் பாட்டில்

விசேஷ கடாஷம் பண்ண வேண்டும் என்று கதறினார் முப்பத்து ஆறாம் பாட்டில்

அது பெறாமே கிலாய்த்தார் -முப்பத்து ஏழாம் பாட்டில்

இப்படி த்வரை உடைய பிரபன்னரை உகத்தி -என்றார் முப்பத்தி எட்டாம் பாட்டில்

அவர்களுக்கு ஜன்மத்தில் தாழ்வால் வரும் குறை இல்லை -என்றார் முப்பத்து ஒன்பதாம் பாட்டில்

அவர்களுக்கு ஹிம்சாதி வ்ருத்தத்தால் உண்டான பலம் அனுபவிக்க வேண்டாம் என்றார் -நாற்பதாம் பாட்டில்

தங்களோடு சம்பந்தித்தாரையும் பரிசுத்தர் ஆக்குமவர் -என்றார் நாற்பத்து ஒன்றாம் பாட்டில்

இவர்கள் நம்பெருமானோபாதி பூஜ்யர் -என்றார் நாற்பத்து இரண்டாம் பாட்டில்

இவர்களை ஜன்ம வ்ருத்தாதிகளாலே குறைய நினைத்தவர்கள் சண்டாளர் -என்றார் நாற்பத்து மூன்றாம் பாட்டில்

ப்ரஹ்மாதிகளுக்கும் துர்லபமான பேற்றை ஒரு திர்யக்குக் கொடுத்தபடி சொன்னார் -நாற்பத்து நான்காம் பாட்டில்

இப்பிரபந்தம் கற்றார்க்கு பலம் அருளிச் செய்தார் நாற்பத்து ஐந்தாம் பாட்டில்

————————————————————————————————————————————————————————-

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரியப்ராடியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: