திரு மாலை-36-மழைக்கன்று வரை முன் ஏந்தும்-பெரியவாச்சான் பிள்ளை அருளிய -வியாக்யானம் –

அயோக்யன் என்று அகலாதபடி தன நீர்மையைக் காட்டி சேர விட்டுக் கொண்டான்
என்றார் கீழில் பாட்டில் –
இதில் –
தம்முடைய அயோக்யதை கழிந்தவாறே
ப்ராப்யத்தில் த்வரை மிக்கு
யோக்யரைக் கொண்டு போய் அடிமை கொள்ளும் தேசத்து ஏறக் கொடு போக வேண்டி இருந்தார்
அது செய்யக் கண்டிலர்
அதுக்கடி இவரை அகலாமே சேர விடுக்கைக்கு தான் பட்ட பாடு அறியுமவன் ஆகையாலே
ஆமம் அற்றுப் பசி மிக வேணும் என்று பேசாது இருந்தான் –
விஷயங்கள் நடமாடும் தேசத்தில் இருந்து கிலேசப்பட்டே போம் இத்தனை ஆகாதே -என்று
பிராப்யத்தில் த்வரையாலும்
விரோதியில் அருசியாலுமாக
பெரிய பெருமாள் கண் வளர்ந்து அருள அரிதாம்படியாகவும்
கேட்டார் எல்லாரும் நீராம்படியாகவும்
பெரும் மிடறு செய்து கூப்பிடுகிறார் –

————————————————————————————————————————————————————

மழைக்கன்று வரை முன் ஏந்தும் மைந்தனே மதுரவாறே
உழைக்கன்றே போல நோக்கம் உடையவர் வலையில் பட்டு
உழைக்கின்றேற்கு என்னை நோக்காது ஒழிவதே யுன்னை என்னே
அழைக்கின்றேன் ஆதி மூர்த்தி அரங்க மா நகர் உளானே –

——————————————————————————————————————————————————————

மழைக்கு
மழை என்றாலும்
ஆனை என்றாலும்
வ்யவஸ்திதமாய் யாய்த்து இவர்கள் கோஷ்டி இருப்பது –
இப்போது கோவர்த்தன உத்தரணத்தைச் சொல்லுவான் என் என்னில் –
அவனைப் பற்றி தம் துக்க நிவ்ருத்தியை பண்ணிக் கொள்ள நினைத்தவர் ஆகையாலே –
அவனுடைய ஆபத் சகத்வத்தை அருளிச் செய்கிறார் –
பசித்தவர்கள் -சீமானே என் பசியைப் போக்க வேணும் -என்னுமா போலே
ஆபத்சகனே என் துக்க நிவ்ருத்தியைப் பண்ணித் தா -என்கிறார் –

அன்று –
கோ கோபி ஜன சங்குலம் அதீவர்த்தம் -என்கிறபடியே
கன்றுகளும் பசுக்களும் இடையரும் -நடுங்கின அன்று –
அன்றும் இன்றும் ஆய்த்து ஆபத்து –
அன்று கல் வர்ஷத்தில் அகப்பட்டாரை ரஷித்தால் போலே –
இன்று துக்க வர்ஷத்தில் அகப்பட்ட என்னை ரஷிக்க வேணும்-
கல் வர்ஷத்தில் நோவு பட வேணுமோ ரஷிக்கும் போது – –
துக்க வர்ஷத்தில் நோவு பட்டாரை ரஷிக்கல் ஆகாதோ –
ஒரு ஊராக நோவு பட்டிலோ ரஷிக்கலாவது –
அவ் ஊராக பட்ட நோவை ஒருவன் பட்டால் ரஷிக்கல் ஆகாதோ –
வரை –
இந்த்ரன் ஏவ
சம்வர்த்தக மேக கணம் வர்ஷிக்க உத்யோகித்த வாறே
திரு ஆழியை நியமிக்க அவசரம் இல்லாமையாலே
கைக்கு எட்டிற்று ஒரு மலையை எடுத்து ரஷித்தான் ஆய்த்து
இத்தால் ‘
இன்னதை பரிகரமாகக் கொண்டு இன்னதை ரஷிக்க வேணும் -என்னும் நியதி இல்லை -என்கை –
என்னுடைய ரஷணத்துக்கு பரிகரம் உதவப் பார்த்து இருக்க வேணும் என்னும் குறை இல்லை -என்கை

முன்-
மழையில் பசுக்கள் நோவு படுவதற்கு முன்பே –
ஏற்கவே ரஷித்த படி
பகுதா சந்தத துக்க வர்ஷினி -என்கிறபடியே
துக்க வர்ஷத்தில் நோவு பட்டு
கூப்பிடவும்
பேசாது இருப்பதே –

ஏந்தும்-
ஏழு திரு நஷத்த்ரத்திலே மலையை எடுத்த இடத்தில்
ஒரு பூம்பந்தை எடுத்தால் போலே வருத்தம் அற்று இருந்தபடி –
ரஷண தர்மத்தில் உனக்கு வருத்தம் உண்டாய்த் தான் இழக்கிறேனோ –
சேஷ பூதர் -சூட்டு நன் மாலைகள் -ஏந்தினால் போலே ஆய்த்து –
சேஷி மலை ஏந்தின படி –

மைந்தனே –
மலையை அனாயாசேன எடுக்கைக்கு உடலான பெரு மிடுக்கை உடையவனே
மைந்தன் -என்று பாலனாய்
இத்தை ரஷிக்கப் பெற்ற பிரியத்தாலே இளகிப் பதித்தபடி -என்றுமாம் –
தாம்தாம் ஜீவனம் பெற்றவாறே இளகிப் பாதிக்கும் அத்தனை இ றே –
ஸ்வரூப அனுரூபமாக இ றே ஜீவனம் இருப்பது –
உன் பேற்றுக்கு நான் கூப்பிட வேண்டுவதே -என்கிறார் –

மதுரவாறே –
ரஷகன் அன்றியே பஷகன் ஆனாலும் விடலாயோ உன் வடிவு இருப்பது –

மதுரவாறே –
சமுத்ரம்- என்னாதே -ஆறு -என்பான் என் என்னில்
கடல் ஆனால் விநியோக யோக்கியம் அன்றிக்கே இருக்கும் –
இது விடாய்த்தார்க்கு
-குளித்தல்
முகத்திலே இட்டுக் கொள்ளுதல்
பானம் பண்ணுதல்
செய்யலாய் இருக்கும் –
விடாய் இல்லாத போது அழுக்கை கழற்றிக் கொள்ளலாய் இருக்கும் –

கடலானால் இவன் இருந்த இடத்திலே ஓடாது –
இது இவன் இருந்த இடத்தே வருகையாகலும்
கிண்ணகம் எடுத்தால் நடுவுள்ள அணைகளை முறித்துக் கொண்டு வரும் யாய்த்து –
நின்றார் நின்ற இடங்களிலே உஜ்ஜீவிக்கலாம் படி இ றே இருப்பது –
பரம பதத்தில் நின்று போந்து
இடைச் சேரியில் வந்து பிறந்தபடியை
நினைக்கிறார் –

இந்த்ரன் அடியாக மழையால் வந்த ஆபத்தைப் போக்கினாய் அன்று –
இன்று உமக்கு ஆபத்துக்கு அடி என் என்ன –
உழைக்கன்றே போல நோக்கம் உடையவர் வலையில் பட்டு உழைக்கின்றேற்கு –
ஸ்திரீகள் உடைய நோக்காகிற வலையுள்ளே அகப்பட்டு நோவு படுகின்ற்றவன் அன்றோ நான் –
முக்தமான மானின் உடைய விழி போலே
அகவாயில் ஒன்றும் இன்றிக்கே இருக்க
அஹ்ர்த்யமாக
அநந்ய பிரயோஜனைகளைப் போலே
தங்கள் செல்லாமை தோற்ற நோக்குகிறவர்கள் உடைய
வலையிலே அகப்பட்டு துடிக்கிற என்னை –
உழை -மான்
வலை யாகிறது -அகப்படுத்திக் கொள்ள வற்றாய்
கால் வங்கிப் போக ஒண்ணாத படி பண்ணுமதாய் –
அது தன்னில் பிரயோஜனம் அன்றிக்கே இருக்கும் -அது இ றே
பகவத் விஷயத்தில் போகாமே
துவக்குகைக்கு வேண்டுவது உண்டாய்
அது தன்னிலே அந்வயம் இன்றிக்கே இருக்கை –
என்னை –
பசுக்களைப் போல் அன்றிக்கே
நோவுபடுவதும் செய்து
நோவு பட்டேன் -என்று அறிவதும் செய்து
ரஷக அபேஷை உடையவனாய்
ரஷகன் நீயே -என்று இருக்கிற
என்னை –

நோக்காது ஒழிவதே –
கல்லால் வந்த ஆபத்துக்கு கல்லாலே நோக்கினாய்
கண்ணால் வந்த ஆபத்துக்கு கண்ணாலே நோக்க வேண்டாவோ
என்னை ரஷிக்கைக்கு மலையை எடுக்க வேணுமோ –
குளிர நோக்கும் அத்தனை அன்றோ செய்ய வேண்டுவது –
நோக்க வேணும் -என்னாதே -நோக்காது ஒழிவதே -என்றது –
கிலாய்க்கிறார் -சம்பந்தத்தாலே –நீர்மையாலே -சீலத்தாலே –

இவர் இப்படி கிலாய்த்துச் சொன்ன பின்பும்
இவர் நாம் கிட்ட கொள்ள அயோக்யன் யென்ட்ருய் அகலக் கூடும் –
ஆமம் அறும் கிடீர் என்று பேசாதே கிடக்கிறார் –
வியாதி க்ரச்தமான பிரஜைகள் -வியாதி தலை சாய்ந்து
சோறு சோறு என்று
கூப்பிடப் புக்கால் த்வனி தானே தாய்க்கு உகக்குமா போலே
இவர் கூப்பீடு தன்னையே கேட்டுக் கொண்டு கிடந்தான் –
யுன்னை என்னே அழைக்கின்றேன் –
வேறு ஒரு கா புருஷன் வாசலிலா நான் கூப்பிடுகிறது –
ரஷ்யம் தேட்டமாய் இருக்கிற தேவரீரை
ரஷக அபேஷை உடையனாய்க் கொண்டு
கூப்பிடா நிற்க செவிப்படாது ஒழிகைக்கு
புறம்பு அந்ய பரதை என்ற ஜகத் வியாபாரமும் மதர்த்தம் அன்றோ –

நீர் அழைக்கும் காட்டில் அப்போதே உம்முடைய கார்யம் செய்ய வேண்டுகிற தேவை என் -என்ன
ஆதி மூர்த்தி-
உரு மாய்ந்து கிடந்த காலத்திலேயே அபெஷா நிரபேஷமாக
பகுச்யாம் -என்கிற சங்கல்ப்பத்தாலே இவற்றை உண்டாக்கின உனக்கு
இதனுடைய ரஷணம் பண்ணுகை பரம் அன்றோ –
பெற்றோருக்கு ரஷிக்கையும் பரம் அன்றோ –
எங்கேனும் இடறிலும் -அம்மே -என்ன பிராப்தி இல்லையோ –
என்னுடைய ரஷணத்துக்கு ஜகத் ஸ்ருஷ்டியாதிகள் தேடி
பலம் கிணறு கண் வாருகிறது என் –

அரங்க மா நகர் உளானே –
பரம பதத்தை விட்டு கோயிலிலே கண் வளர்ந்து அருளுகிறது
என்னுடைய ரஷணம் பண்ண அல்லவாகில் -இக்கிடைக்கு வேறு ஒரு பிரயோஜனம் உண்டோ –

அரங்க மா நக்சர் உளானே -உன்னை என்னே அழைக்கின்றேன் –
நான் ஏதேனும் பரம பதத்துக்கு வந்து கூப்பிட்டேனோ
ருசி பிறப்பிக்க வந்து கிடக்கிற இடத்தில்
ருசி பிறந்தார் இழந்து போகவோ –
இவர் இப்படிக் கூப்பிட பெரிய பெருமாள் ஆறி இருப்பான் என் என்னில்
பரம பதத்தில் உள்ளார் போகத்தாலே கூப்பிட கேட்டு அறிவர்
சம்சாரிகள் விஷய லாபத்தாலே கூப்பிட கேட்டு அறிவர்
தாமுடைய கர்ஷி பலமான கூப்பீடு கேட்டு அறியாமையாலே
பேசாதே கிடந்தார்

———————————————————————————————————————————————————————

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரியப்ராடியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: