திரு மாலை-35–தாவி அன்று உலகம் எல்லாம்-பெரியவாச்சான் பிள்ளை அருளிய -வியாக்யானம் –

இப்படி இவை கை வாங்கின வாறே
பெரிய பெருமாள் -இவரை இழந்தோம் ஆகாதே -என்று நொந்து
ஆழ்வீர்-நீர் அகல நினைத்ததற்கு ஹேது என் என்று கேட்டு அருள –
சர்வஞ்ஞரான தேவரீர் திரு முன்பே க்ர்த்ரிமங்களை சொல்ல உம்மைக் கிட்டி
அவத்யாவஹன் ஆகும் காட்டில்

என் சுவடு அறியாத சம்சாரிகளும் நானுமாய் இருக்கப் பார்த்தேன் -என்ன
நீர் கிட்டின பிரயோஜனம் அழகிது –
நாம் தோஷத்தில் அவிஞ்ஞாதா –
அவர்கள் குணங்களில் அவிஞ்ஞாதா –
அவர்கள் தோஷத்தில் சர்வஞ்ஞர் –
நாம் குணசர்வஞ்ஞர்
ஆகையால் நம் வாசல் சர்வாதிகாரம் -காணும் -என்ன
இது உக்தி மாத்ரமேயோ –
அனுஷ்டானமும் உண்டோ வென்ன –
பண்டே அடிபட்டுக் கிடக்கிறது காணும் என்று
த்ரிவிக்ரம அபதானத்தைக் காட்டிக் கொடுத்தான் –
த்ரிவிக்ரம அபதானம் கேட்டு அறியீரோ –
வசிஷ்ட சண்டாள விபாகம் அற
எல்லார் தலையிலும் நம் கால் பொருந்தின படி அறியீரோ -வென்று –
சீல ஆதிக்யத்தையும்
தன் செல்லாமையையும்
காட்டி -சமாதானம் பண்ண
சமாஹிதர் ஆகிறார் –

————————————————————————————————————————————————————-

தாவி அன்று உலகம் எல்லாம் தலை விளாக் கொண்ட வெந்தாய்
சேவியேன் உன்னை அல்லால் சிக்கென செங்கண்மாலே
ஆவியே அமுதே என் தன் ஆர் உயிர் அனைய எந்தாய்
பாவியேன் உன்னை அல்லால் பாவியேன் பாவியேனே –

————————————————————————————————————————————————————-

தாவி –
உங்கள் தலையில் நான் கால் வைக்க புகா நின்றோம் என்னில் –
வாசனையாலே சம்வதியாதே ஆணை இடுவர்கள் இ றே –
திரு வாணை-நின் ஆணை -என்று சாத்விகர் திருவடிகளை லபிக்கைக்கு
மறுக்க ஒண்ணாத படி இடும் ஆணையை -திருவடிகளைக் கிட்டாமைக்கு இடுவர்கள் ஆய்த்து – இவர்கள் அறியாதபடி அநாயாசேன திருவடிகள் எல்லார் தலையிலும் படும்படி நடந்தான் –
தாவுதல்-கடத்தல்

அன்று –
மகாபலியால் அபஹ்ர்த்யமாய்
தம்முடைய சேஷித்வமும்-சம்சாரிகள் உடைய சேஷத்வமும்
அழிந்து கிடந்த அன்று –

உலகம் எல்லாம் –
மகா பலியாலே அபஹ்ர்த்யமான அளவு அன்றிக்கே
ப்ரஹ்ம லோக பர்யந்தமாக
சகல லோகங்களையும்
வசிஷ்ட சண்டாள விபாகம் அற எல்லார் தலையிலும்
திருவடிகள் வளர்ந்த படி
தலை விளாக் கொண்ட-
ரஷ்யத்தின் உடைய அளவு அல்ல வாய்த்து ரஷ்கனுடைய பாரிப்பு
அத்ய திஷ்டத்த சாங்குலம் -எண்ணக் கடவது இ றே –

வெந்தாய் –
அமரர் சென்னிப் பூவினை -என்று நித்ய சூரிகள் சிரஸா வஹிக்கும் திருவடிகளை
விமுகரான சம்சாரிகள் தலையில் வைகைக்கு ஹேது என் என்னில்
அவர்ஜநீய சம்பந்தம் -என்கிறார் –
தம் தலையிலும் திருவடிகளை வைக்கையாலே -எந்தாய் -என்கிறார் –
உறங்குகிற பிரஜையைக் கட்டிக் கொண்டு கிடக்கும் தாயைப் போலே அன்று தம் பேறாக வி றே ரஷித்தது –
அன்று அறியாத குறை தீர
அறிந்த இன்று -உபகார ச்ம்ர்தியாலே
எந்தாய் -என்கிறார்
சம்சாரிகள் அன்றும் அறிந்திலர் இன்றும் அறிந்திலர்
அவர்களுக்குமாக தாம் உகக்கிறார் இ றே –

சேவியேன் உன்னை அல்லால்-
‘இப்படிப் பட்ட நம்மை விட்டு புறம்பே போக நினைப்பான் என் என்ன
உம்முடைய நீர்மை அறியாதே நினைத்தேன் இத்தனை –
உன்னை விட்டு புறம்பே போகேன் -என்கிறார் –
உன்னை இழந்தால் நானும் பிறரும் இ றே உள்ளது –
இரண்டிலும் அன்வயிக்கப் பார்த்திலேன்
அவை இரண்டும் இ றே பிரணவத்திலும்
மத்திய பதத்திலும் சொல்லுகிறது –
சேஷத்வ வாசனையாலே புறம்பு போனாலும் சேவிக்கும் அத்தனை யாய்த்து இவர் –

இவை எத்தனை குளிக்கு நிற்கும் என்ன –
சிக்கென –
இது எல்லா குளிக்கும் நிற்கும்
யாவதாத்மாபவி
சர்வேச்வறனைக் குறித்து -மாசுச -என்கிறார் இவர்

செங்கண்மாலே
இது ஸ்வ பாவ கதனம் அன்று
தாத் காலின விசேஷணம்-இவர் சிக்கென -என்றவாறே

திரு உள்ளம் இவர் பக்கலிலே பிரசன்னமாய்
இவர் பக்கல் வ்யாமோஹம் உள் அடங்காமையாலே
கண் வழியே புறப்பட்டு பிரகாசிக்கிறபடி –

செங்கண் மாலே –
வ்யாமோஹத்தாலே குதறிச் சிவந்த கண்களை உடையவனே –
ஸ்ரீ விபீஷண ஆழ்வானைக் குறித்து மகா ராஜர் -வத்யதாம் –
என்ற போது பெருமாள் திரு உள்ளம் அழிந்தால் போலே ஆய்த்து-
பின்பு திருவடி -அத ராம பிரசன்னாத்மா -என்று பெருமாள் உளரானால் போலே ஆய்த்து –
திருவடி -அவதாரத்தில் -மாசுச -என்றான்
இவர் -அர்ச்சாவதாரத்தில் -மாசுச -என்கிறார் –

செங்கண் மாலே –
ஏன் ஸ்வரூப லாபத்துக்கு முகம் வரும்படி வ்யாமுக்தரான
தேவரீரை ஒழிய புறம்பு எங்கே போவேன் –

அவ்வளவேயோ –
ஆவியே –
என் பிராணனை விட்டு புறம்பே போகவோ –
இவருக்கு ஒரு வாயு விசேஷம் அன்று பிராணன் –
என் திருமேகள் சேர் மார்வனே என்னும் என்னுடைய ஆவியே என்னும் -என்கிறபடியே
ஒரு மிதுனம் காணும் இவருக்கு பிராணன் –

அமுதே –
தாரகம் மாத்ரமேயாய் இருக்கை அன்றிக்கே நிரதிசய போக்யமுமாய்
சாகாமல் காக்கும் மருந்தாய் இருக்குமவன் அல்லையோ –

அவ்வளவேயோ
என் தன ஆர் உயிர் அனைய –
என் ஆத்மா அன்றோ –
ஆத்மாவை விட்டு சரீரத்துக்கு புறம்பு ஒரு போக்கு உண்டோ –
எந்தாய் –
அயோக்யன் என்று அகலப் புக்க
என்னை நசியாதபடி மீட்ட என் சுவாமி அல்லையோ –

வத்சலனை விட்டு புறம்பே போகவோ –
பிராணனை விட்டு புறம்பே போகவோ –
போகய வஸ்துவை விட்டு புறம்பே போகவோ –
என்னை நல் வழி போக்கு வித்த என் சுவாமியை விட்டு புறம்பே போகவோ –
என்கிறார் –

வார்த்தைகள் அழகியதாய் இருந்தது
கீழே –
ஐயனே அரங்கனே -என்றும்
என்னை ஆளுடைய கோவே -என்றும்
அபுத்த்யா சொன்னவை போல் அன்றிறே-என்ன
பாவியேன் உன்னை அல்லால் –
உன்னை ஒழிய புறம்பு ஒருவரை நெஞ்சாலும் நினையேன் –

பாவியேன் -பாவியேனே –
பாப பிரசுரமான சம்சாரிகளை விட மாட்டாதே
எல்லார் தலைகளிலும் திருவடிகளை வைத்த உனக்கு
அயோக்யன் என்று அகல நினைத்ததுக்கு ஹேது என் பாபமே இறே –

பாவியேன் –
குற்றம் காண மாட்டாத அளவேயோ
உபேஷித்த சம்சாரிகளையும் உபேஷிக்க மாட்டாத உன்னை
அகல நினைத்ததற்கு ஹேது
என் பாப ப்ராசுர்யமே அன்றோ –
என்னைக் கொண்டு அகன்று என் சத்தையை அழிக்கப் புக்க அளவேயோ –
எல்லார்க்கும் சத்தா ஹேதுவான உன்னையும்
உன்னை ஒழிந்த எல்லாருடைய சத்தையையும்
நசிப்பிக்கைக்கு கிடீர் நான் நினைத்தேன் –
என்கிறார் –

—————————————————————————————————————————————————————-

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரியப்ராடியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: