திரு மாலை-34-உள்ளத்தே உறையும் மாலை-பெரியவாச்சான் பிள்ளை அருளிய -வியாக்யானம் –

ஜ்ஞான ப்ரசர த்வாரமான -மனசிலே நித்ய வாஸம் பண்ணுமவனாய்
நம் குற்றங்களை நேராக அறியும் சர்வஞ்ஞனான -இவனை –
பொய்யனான நான் கிட்டி –
அவத்யத்தை விளைத்து
என்ன கார்யம் செய்தேன் -என்று லஜ்ஜித்து –
இதில் காட்டில்
நம் குற்றம் அறிகைக்கு ஜ்ஞானம் இன்றிக்கே இருக்கிற
சம்சாரிகளோடே  முடிந்து போகையே நன்று என்று
பெரிய பெருமாள் திருவடிகளிலே நசை அற்று
அகலுகிறார் –

——————————————————————————————————————————————————————–

உள்ளத்தே உறையும் மாலை யுள்ளுவார் உணர்வு ஓன்று இல்லாக்
கள்ளத்தேன் நான் உன் தொண்டாய்த் தொண்டுக்கே கோலம் பூண்டு
உள்ளுவார் உள்லிற்று எல்லாம் உடன் இருந்து அறுதி என்று
வெள்கிப் போய் என்னுள்ளே நான் விலவறச் சிரித்திட்டேனே

——————————————————————————————————————————————————————–

உள்ளத்தே –
நினைவுக்கு வாய்த்தலையான நெஞ்சிலே இருக்குமவன் ஆய்த்து-
புறம்பு உள்ளான் ஒருவன் ஆகில் இ றே
கண்ணால் கண்டத்துக்கு அவ்வருகு அறியான் என்று இருக்கலாவது –

உறையும் –
சதா சந்நிஹிதனாய் இருக்கை-
போக்குப் பகுதி உண்டாகில் இ றே போன போதாக
மூலை அடியே நடக்கலாவது –

மாலை –
சர்வாதிகனை –
ஆத்மாவும் உள்ளே வர்த்தியா நிற்கச் செய்தே
சர்வத்தையும் அறிய மாட்டான் –
ஆகாசம் வியாபியா நிற்கச் செய்தே வ்யாப்யத்தை குறித்து அதுக்கு நியந்த்ர்தை இல்லை –
இவன் -சர்வஞ்ஞனாய் சர்வ நியந்தாவாய் இருக்கும் –

யுள்ளுவார் உணர்வு-
நம் உள்ளே வர்த்தியா நின்றான் என்று
அனுசந்திக்கைக்கு ஈடான ஜ்ஞானம் இல்லை –

உணர்வு ஓன்று இல்லாக் –
ஆத்மஜ்ஞானம் உண்டாகில் இ றே பகவத் ஜ்ஞானம் உண்டாவது –

அதில் பிரதமத்தில் அறிய வேண்டும் ஆத்மா ஞானம் இல்லை
ஈஸ்வர விஷய ஜ்ஞானமும் இல்லை
தேக ஸ்வ பாவத்திலும் ஜ்ஞானம் இல்லை —

கள்ளத்தேன்-
ஜ்ஞான ஹீநன் என்று நாட்டார் அறியாமல்
பகட்டி மறைத்துப் போந்தேன்
எமக்கு ஒரு ஆத்மகுணம் இல்லை என்று சொல்லும் பொழுது
அவன் அந்தராத்மாவாய் அறிய வில்லை என்பன் –
அத்தாலே அவர்களும் இவனுக்கு ஆத்மா விஷய ஜ்ஞானமும்
பரமாத்மா விஷய ஜ்ஞானமும் உண்டு என்று நினைத்து இருக்கும் படியாக
அவர்களை மறைத்துப் போந்தேன்
அடியில் அநாத்ம குணம் உண்டாய் இருக்க இ றே
இல்லை எனபது
அக் களவுக்கு உன்னையும் பேரு நிலையாக நிறுத்திக்
களவு கண்டு போந்தேன்

-நான் உன் தொண்டாய்த் –
ஒரு நன்மையையும் இன்றிக்கே இருக்கிற நானும்
ஆத்மகுண பேதர் அதிகரிக்கும் உன்னுடைய அடிமையிலே
அந்வயியா நின்றேன் –
ஆர் செய்யக் கடவ அடிமையிலே ஆர் அன்வயிக்கிறார்

தொண்டுக்கே கோலம் பூண்டு
உள்ளுவார் உள்லிற்று எல்லாம் உடன் இருந்து அறுதி என்று
வெள்கிப் போய் என்னுள்ளே நான் விலவறச் சிரித்திட்டேனே

சண்டாளன் வேத அத்யயனத்தில் அதிகரித்தால் நாட்டார் கர்ஹிப்பர்கள் என்றும்
ஸ்வாத்மாப்யானம் விகர்ஹதே -என்றும்
தானும் அருளா நிற்கும் இ றே –
அப்படியே படுகிறார் –

தொண்டுக்கே கோலம் பூண்டு –
உன்னைக் களவு கண்டு விடும் அளவு அன்றிக்கே
சாத்விகர் சிரஸா வஹிக்கும் படி
ரூப நாமங்களைத் தரித்துப் போந்தேன் –
பரப்பு மாறத் திரு நாமத்தை இடுவது –
ஸ்ரீ பஞ்சாயுதங்களைத் தரிப்பது
அஹ்ருதயமாகத் திரு நாமத்தைச் சொல்லுவது –
உன் போக்யதையைச் சொல்லுவது –
யமாதிகள் தலையில் என் கால் என்பதாய்
நானும் ஒருவனாய் பரோபதேசம் பண்ணுவதாய்
எத்தனை செய்தேன் எத்தனை ஜல்ப்பித்தேன் –
என்கிறார் –

உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறுதி என்று –
நினைவுக்கு வாய்த்தலையைப் பற்றி இருக்கையாலே
அனுசந்திப்பார் அனுசந்திக்கும் எல்லாவற்றையும்
கூட இருந்து அறுதி என்று –
ஏகோ ஹமஸ் மீதி சமன்ய சேத்வம் -இத்யாதி
சர்வஞ்ஞனாய் -சர்வ நியந்தாவாய் இருக்கிற நீ உடனே இருக்கவா
நான் இவ்வமணக் கூத்து எல்லாம் ஆடிற்று -என்கிறார் –

வெள்கிப் போய் –
தம்முடைய க்ர்த்ரிமத்தையும்
அவனுடைய சர்வஞ்ஞதையும் -சன்னிதியையும்
அனுசந்தித்து லஜ்ஜா விஷ்டர் ஆனார் –

போய் –
சந்நிதியில் லஜ்ஜித்துக் கவிழ் தலை இட்டு
நிற்க மாட்டாமையாலே கடக்கப் போந்தார் –
அவன் இல்லாத இடம் தேடித் போகிறார் இ றே இவர்
பாஹ்ய விஷயங்களில் லஜ்ஜித்தால் அங்கு நின்றும்
அது இல்லாத இடம் தேடி போருவாறே
அந்த வாசனையாலே போருகிராயாய்த்து இங்கும் –

என் உள்ளே –
இவ்வர்த்தத்தில் சம்சாரிகள் இவருக்கு கூட்டு அல்லர்
பெரிய பெருமாள் பக்கல் நின்று மக்னரராய் நின்றார் –
அவர் சன்னதி உண்டானாலும் அவர் இதுக்கு கூட்டு அல்லர்
இனி இவர் தன்னிலே சிரிக்கும் இத்தனை இ றே –
தம்முடைய அபஹாச்யதைக்கு தாமே சஹகாரியாம் இத்தனை இ றே –

விலவற சிரித்திட்டேனே –
விலாக்கள் ஒடியும்படி சிரித்தார் ஆய்த்து
அபஹாச்யதைக்கு அவதி உண்டானால் இ றே சிரிப்புக்கு அவதி உண்டாவது –
அகல நினைத்தவர் ஆகையாலே
தீப்பாய்வார் -வெற்றிலை தின்று பூ சூடி தீ பாயுமா போலே
சிரிக்கிறார் ஆய்த்து
அர்ஜுனன் இவ் விஷயத்தில் நசை கிடைக்கையாலே
சோகித்துக் கை வாங்கினான்
இவர் நசை அற நீங்குகிறார் ஆகையாலே சிரித்துக் கை வாங்குகிறார் —

—————————————————————————————————————————————————————-

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரியப்ராடியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: