திரு மாலை-33–மெய் எல்லாம் போகவிட்டு–பெரியவாச்சான் பிள்ளை அருளிய -வியாக்யானம் –

இப்படி-
நன்மைகளும் இல்லை
தீமைகளாலும் குறைவில்லை
நான் இங்குத்தைக்கு ஆகாத ஒருவன் -என்கிறார்
அநந்தரம் –
மேல் பாட்டுக்கும் இப்பாட்டுக்கும் சங்கதி என் என்னில்
மூர்கனேன் வந்து நின்றேன் -என்று
அந்த மௌர்க்யம் ஹ்ருதயத்தில் பட்டுச் சொல்லுகிறீரோ -என்னில் –
அதுவும் -பொய் -என்கிறார் –
ஆனால்
நம்மைக் கிட்டுகைக்கு ஒரு உபாயம் இல்லை யாகில்
மேல் போக்கு என்ன -என்று கேட்க
தேவரீர் திருவடிகளோட்டை சம்பந்தமும்
கிருபையும் ஒழிய
வேறு உண்டோ -என்று
சரம உபாயமான கிருபையை
வெளியிடுகிறார் –

————————————————————————————————————————————————————-

மெய் எல்லாம் போகவிட்டு விரி குழலாரில் பட்டு
பொய் எல்லாம் பொதிந்து கொண்ட போழ்கனேன் வந்து நின்றேன்
ஐயனே அரங்கனே உன் அருள் என்னும் ஆசை தன்னால்
பொய்யனேன் வந்து நின்றேன் பொய்யனேன் பொய்யனேனே –

——————————————————————————————————————————————————————

மெய் எல்லாம் –
மெய் –
மெய் ஆகிறது –
பூத ஹிதமாய் -யதார்த்தமாய் –
இருக்கும் அர்த்தம் ஆய்த்து –
கீழ் சொன்ன நன்மைகள் எல்லாவற்றுக்கும் பிரதம சிலையாய் யாய்த்து சத்யம் தான் இருப்பது –
சத்யம் மூலம் இதம் சர்வம் -என்னக் கடவது இ றே –
ஜன்ம வ்ருத்தத்தால் குறைய நின்ற கைசிகன் –
பகவத் விஷயத்தில் அவகாஹித்தாரில் பொய் சொல்லக் கடவார் இல்லை காண் -என்று
தன்னை பஷிக்க நினைத்த ப்ரஹ்ம ராஷசனைக் குறித்து சொன்னான் இ றே –
பகவத் விஷயத்திலே நாலடி வர நிற்கையாலே –

எல்லாம் -போகவிட்டு-
இவை தான் பல வகையாய்த்து இருப்பது –
மனசால் நினைப்பதும் மெய்யாய்
அத்தோடு சேரச் சொல்லுவதும் மெய்யாய் –
செய்வதும் மெய்யாய் இருக்கை –
பந்துவாய் இருப்பான் ஒருவனுக்கு மெய்யைச் சொல்லி
புறம்பு உள்ளார்க்கு அசத்யனாயும் இருக்கக் கூடும் இ றே –
அதுவும் இல்லை –
இவை எல்லாம் நான் இருக்கிற நாட்டிலே நடை யாடாத படி
வாசனையோடு போக விட்டேன் -என்கிறார் –
தன்னோடு பரிமாறினார் பக்கலிலே மெய் இருக்குமாகில்
தன பக்கலிலே வந்து பொசிந்து விடக் கூடும் என்று
அவர்கள் பக்கலிலும் மெய் நடமாடாதபடி பண்ணினேன் -என்கிறார் –
சம்சாரிகள் அஞ்ஞர் ஆகையாலே பொய்யோடும் செல்லும்
மெய் கொண்டே நடக்க வேண்டும் தேவரீர் திருவடிகளில் இ றே அசத்தின் ஆய்த்து

நீர் இப்படி மெய்யை நேராக பொகடுகைக்கு வாசனை பண்ணிற்று எங்கே -என்ன –
விரி குழலாரில் பட்டு
உன் கோஷ்டிக்கு பொய் ஆகாதே போலே
இவர்கள் கோஷ்டிக்கு மெய் ஆகாதபடி –
சத்யனாய் இருக்கும் அவனுக்கு ஸ்திரீகளோடே

ஒரு ஷண காலமும் சம்சர்க்கம் அரிதாய்த்து இருப்பது –
விரி குழலாரில்
மயிர் முடித்து இருக்கில் -இது ஒரு மயிர் முடியே -மாலை சுற்றின விரகே -என்று அதிலே வித்தனாய் இருக்கும் –
விரித்து இருக்கில் -ஒசழக்காக மயிரை விரித்து பொகட்ட படியே -என்று அதிலே வித்தனாய் இருக்கும் –
என்னை உன் செய்கை நைவிக்கும் -என்று பகவத் விஷயத்தில் சாத்விகர் படும் எல்லாம் படும் ஆய்த்து –

பட்டு –
வலையிலே அகப்பட்ட சில பதார்த்தங்களைப் போலே தன்னாலே மீள ஒண்ணாத படி அகப்படுகை –
ஆச்சார்ய உபதேசத்தாலே வகுத்த விஷயத்திலே
பனியிரும் குழல்களை கண்ணாலே காணா நிற்க
நெஞ்சு ஸ்திரீகள் பக்கலிலே யாம்படி இ ரே அதில் அகப்பாடு இருப்பது –

பொய்யெல்லாம் பொதிந்து கொண்ட –
மெய்யைக் குட நீர் வழித்தால் போலே பொய்யைக் கூடு பூரித்தேன் –
பகவத் விஷய சம்சர்க்கம் பொய்யரை மெய்யர் ஆக்குமா போலே
இவ்விஷயம் சத்யரை அசத்யர் ஆக்கும்படி –

எல்லாம் –
மெய்யுக்குச் சொன்ன வைகல் எல்லாம் இதுக்கும் உண்டு இறே-
பொய் -என்று பேர் பெற்றவை எல்லாவற்றையும் தம்மோடு சேர்த்துக் கொண்டார் யாய்த்து –

பொதிந்து கொண்ட –
அவற்றில் ஒன்றும் சேராதபடி பொதிந்து கொண்டேன்
நாட்டார் தாம்தாம் அபிமத விஷயங்களுக்கு கார்த்திகைக்கு பொய் சொல்ல வேண்டினால்
அவர்களும் ஏன் பக்கலிலே வந்து கேட்டுப் போம் படி பொதிந்து கொண்டேன் –
எட்டுப் புரியும் கட்டினார் யாய்த்து –

போழ்கனேன் வந்து நின்றேன் –
என்னை சந்தித்தால் பொய்யன் அன்றோ –
அங்குத்தைக்கு ஆகாதவன் என்று மீள வி றே அடுப்பது –
தண்ணறையன் ஆகையாலே நிர்லஜ்ஜனனாய் வந்து கொடு நின்றேன் –

நின்றேன் –
சாதனா அனுஷ்டானம் பண்ணி பலத்துக்கு அவசர ப்ரதீஷராய் நிர்ப்பாரைப் போலே
வந்து நின்றேன் –
போழ்கனேனே –
போழ்க்கமை -பண்னறை-கதி சூன்யதை-

இப்படிப் பட்ட நீர் சமதமாத்யுபேதர் சேரும் நம் பக்கலிலே வருவான் -என்
விரி குழலார் பக்கல் போகீர் -என்ன –
ஐயனே –
என்னால் அழித்துக் கொள்ள ஒண்ணாத நிருபாதிக சம்பந்தம் அடியாக வந்தேன்
எத்தனையேனும் அநீதியில் கை வளர்ந்த பிரஜைகளுக்கும் மாதா பிதாக்கள் இருந்த இடத்தில்
பிறர் காணாதபடி புழக்கடையாலே வந்து புகுரலாம் படி இ றே பிராப்தி இருப்பது –

அரங்கனே –
நம்மை -நிருபாதிக பந்து -என்று அறிந்தது
சாஸ்திர வாசனையாலேயோ
ஆச்சார்ய உபதேசத்தாலேயோ -என்ன
அவைய்ற்றால் அன்று
கோயிலிலே வந்து கண் வளர்ந்து அருளுகிறபடியைக் கண்டு அறிந்தேன் –
நித்ய விபூதியில் இருக்கும் இருப்பை கால் கடைக் கொண்டு
அநபிதமான சம்சாரத்திலே
சம்சாரிகள் உடைய உஜ்ஜீவனமே பிரயோஜனமாக கண் வளர்ந்து அருளுகிற படியால் –

இஜ்ஜகங்களில் தேவரீர் திருவடிகளுக்கு ஆகாதர் இல்லை என்னும் இடத்தையும்
இக்கிடை தானே சூசிப்பிக்கிறது இல்லையோ –

நம் பக்கலிலே வந்து நீர் கொள்ளப் புகுகிற கார்யம் என் என்ன –
உன் அருள் என்னும் ஆசை தன்னால் பொய்யனேன் வந்து நின்றேன்-
தேவரீர் கிருபையின் பக்கல் எனக்கு உண்டான ஆசையால் வந்தேன் –
தம்தாமை முடிய சூழ்த்துக் கொண்டவர்களுக்கும் தேவரீர் கிருபையில் நசை பண்ணலாம்படி இ றே தேவரீர் கிருபை இருப்பது –
ப்ரஹ்மாஸ்த்ரத்தாலே அழிய கொடு தேவரீர் உத்யோகித்த தசையிலும்
காகத்துக்கு திருவடிகளிலே புகுரலாம் படி இ றே தேவரீர் கிருபை இருப்பது –
வதார்ஹமபீ காகுத்ஸ்த கர்பயா பர்யபாலயத் -என்னக் கடவது இ றே –

உம்முடைய பக்கல் நன்மைகளும் இல்லாமையும் அறிந்து –
தீமைகள் உண்டு என்னும் இடமும்
சம்பந்தமும் அறிந்து நம் பக்கல் வந்தீர் அல்லீரோ –
அதிகாரிகளில் இப்படிப் பட்ட உம்மை யன்றோ நாம் தேடி இருக்கிறது –
இது தான் மெய்யோ -என்ன
பொய்யனேன் –
நிரூபித்த இடம் இதுவும் பொய்யாய் இருந்தது என்கிறார் –
ஸ்வதஸ் சர்வஞ்ஞரான தேவரீர் சன்னதியிலே ஓன்று சொல்லலாவது
என் பக்கல் உண்டோ -என்கிறார் –
பொய்யனேன் –
தீமைகள் என்னாலாவது இல்லை என்று சொன்ன இவ் வார்த்தைகள் –
அஹமசம் யப்னா மாலய -என்னும் வார்த்தை –
இவ் வதிகாரிக்கு தேவரீர் சந்நிதியிலே விலைச் செல்லும்
வார்த்தை என்று சொன்னேன் இத்தனை
என் தண்மை என் நெஞ்சில் பட்டு சொன்னேன் அல்லேன் –

பொய்யனேனே –
ஸ்வதஸ் சர்வஞ்ஞரான தேவரீர் இப் பொய் தன்னை மெய் என்று பிரமிக்கும்படி அன்றோ
நான் பொய் சொன்னபடி
கீழ்
ஆதாரம் பெருக வைத்த அழகன் -என்றும்
கண்ணினை களிக்குமாறு -என்றும்
பனியரும்புதிருமாலோ -என்றும்
உடல் எனக்கு உருகுமாலோ -என்றும்
சொன்ன பொய் மாலைகளை அனுசந்தித்து
பொய்யனேன் பொய்யனேனே —
என்கிறார்
மெய் கொண்டு பரிமாற வேண்டும் தேவரீர் திருவடிகளிலே
எத்தனை பொய் சொன்னேன் என்கிறார் –

—————————————————————————————————————————————————————

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரியப்ராடியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: