திரு மாலை-31–தவத்துள்ளார் தம்மில் அல்லேன்–பெரியவாச்சான் பிள்ளை அருளிய -வியாக்யானம் –

சாஸ்த்ரீயமாய்-மோஷார்த்தமான விஷயங்களிலே
எனக்கு ஓர் அந்வயம் இல்லை என்றீர்
ஸ்வர்க்க பலார்த்தம் ஆதல்
விப்ரலம்பகத்ர்ஷ்ட பலார்த்தமாக வாதல் –
சத் கர்மாதிகளைப் பண்ணிப் போந்தீர் ஆகில்
அவற்றில் உபாயமாக்கி நன்மையில் மூட்டி விடுகிறோம் –
அவை தான் உண்டோ -என்ன –
அவை ஒன்றும் ஸ்வ பிராப்திக்கு பரிகரமாக தேவரீர் தந்த ஜென்மத்தை
விஷய பிரவணனாய்
ப்ரந்வேஷத் விநாச ஹேதுவாக்கத் தந்தீராகக் கொண்டேன் -என்கிறார் –

ஆனால்
கீழ் பாட்டோடு இதுக்கு சங்கதி என் என்னில்
பர ச்ம்ர்த்த்ய அசஹத்வமே அன்றிக்கே
விஷயாந்தர ப்ராவண்யத்தாலே பந்து ஜனங்களுக்கும்
அசல் ஆனேன் -என்கிறார் –

———————————————————————————————————————————————————

தவத்துள்ளார் தம்மில் அல்லேன் தனம் படைத்தாரில் அல்லேன்
உவர்த்த நீர் போலே என்தன் உற்றவருக்கு ஒன்றும் அல்லேன்
துவர்த்த செவ்வாயினார்க்கே துவக்கறத் துரிசனானேன்
அவத்தமே பிறவி தந்தாய் அரங்க மா நகர் உளானே

———————————————————————————————————————————————————-

தவத்துள்ளார் தம்மில் அல்லேன் –
யஞ்ஞே நதாநேன தபஸா நாசகேன–என்று
தபசி மோஷார்த்தமாக விதித்தது இ றே –
முமுஷூக்களாய்-தபஸை அனுஷ்டித்தாரில் கூட்டாக பெறாமை அன்றிக்கே
ஸ்வர்க்காதி பிரயோஜன பரராய் தன்னையே பேணுவாரும் உண்டு –
அவர்களுக்கும் கூட்டாகப் பெற்றிலேன் –
இவை இத்தனையும் இன்றிலே ஒழிந்தால்
ஒரு தபஸை ஆரம்பித்து
அதிலே வைகல்யத்தாலே பிரசித்திகள் ஆனார் தங்களில் தான் கூடப் பெற்றேனோ –
ஆக
தபஸ் ஸ்பர்சம் உடையார்
ஒருவராலும் கூடப் பெற்றிலேன் -என்கிறார் –

தனம் படைத்தாரில் அல்லேன் –
அர்த்த லாபத்தையும் சாஸ்திர சாதனமாக சொல்லக் கடவது இ றே
விலஷண விஷயத்தில் அந்வயிக்கும் அன்று –
யஞ்ஞே நதா நேன -என்றும்
யஜ்ஞ்ஞோம் தபச்சைவ பாவநானி-என்றும்
தத்தானம் சாத்விகம் ச்ம்ர்த்தம் -என்றும் சொல்லக் கடவது இ றே –
யயாகயாசவி பஹ்வன்னம் ப்ராப்னுயாத் -என்றும்
சத்விஷயத்தில் அந்வயிக்கும் அன்று
த்ரவ்யார்ஜனத்துக்கு பிரகார நியதி இல்லை என்றும் சொல்லிற்று இ றே –
இம்முகத்தாலே த்ரவ்யார்ஜனம் பண்ணுவாரில் கூட்டல்லேன் –
திருமங்கை ஆழ்வார் போல் அனுஷ்டிப்பதும் செய்தார்கள் இ றே –
இவை இன்றிக்கே ஒழிந்தாலும்
யத்து பிரத்யுபா காரர்த்தம் பலமுத்திச் யவா புன -என்கிற ராஜச தானம் ஆதல் –
அசத்க்ர்த்ம வஜ்ஞ்ஞாதம் -என்கிற தாமஸ தானம் ஆதல் –
க்யாத்யர்த்ததான -தேனசாச்ம்யவ மானித -இவை உண்டோ என்னில்
அவை ஒன்றும் இல்லை என்கிறார் –

இவை இரண்டும் இருப்பவர் பந்துக்களுக்கு உறுப்பாய் இருப்பார்கள் இ றே –
அது இருந்தபடி என் என்னில் –
உவர்த்த நீர் போலே என்தன் உற்றவருக்கு ஒன்றும் அல்லேன் –
உவர்ப்பு நீரை முகத்திலே ஏறிட்டுக் கொண்டால் அது கண் விழிக்க ஒண்ணாதபடி கரிக்குமா போலே
என்னை நேர் முகம் பார்க்க ஒண்ணாத படி யாய்த்து
நான் அவர்கள் திறத்தில் அவத்ய பூதனாய் வர்த்தித்த படி —
அவர்கள் என் முகத்தில் விழித்தால் அற்றைக்கு ஜீவிக்க
மாட்டாதபடி யாய்த்து
அவர்களுக்கு அவத்ய பூதனாய் வர்த்தித்த படி –
அவர்களுக்கு அபிரியமே பண்ணுகையாலே பிரயமாகவும் பெற்றிலேன் –
அவர்களுக்கு அஹிதமே பண்ணுகையாலே ஹிதைஷியாகவும் பெற்றிலேன் –
எனக்கும் அனர்த்தங்களை விளைத்துக் கொள்ளுகையாலே
தனக்குத் தான் என்னும் அளவும் பெற்றிலேன் –
அவர்களுக்கு அவத்ய பூதனாயே போனேன்-

பந்துக்களுக்கு ஆகாதவர்களும்
தம்தாமுக்கு அபிமதைகளான -ஸ்த்ரீகளுக்காக இருப்பார்களே –
அது இருந்தபடி என் என்னில் –
துவர்த்த செவ்வாயினார்க்கே துவக்கறத் துரிசனானேன் –
அகவாயில் அனர்த்தங்களை மறைத்து
அதரத்தில் பழுப்பைக் காட்டி அகப்படுத்திக் கொள்ளுமவர்களாய் –
இவனும் உள் வாயின் தண்மை அறியான் –
தன்னோடு அவர்களுக்கு ஒரு பந்தம் இல்லாமை அறியான் -இவனும் அவ் அதரத்தில் பழுப்புக்கு அவ்வருகே போக மாட்டாதே அகப்படுவான் –
அகவாயில் அநாத்ம குணங்களை மறைக்கைக்கும்
புறம்பு உள்ளாரோடு இவனுக்கு உண்டான பற்றுகை அறுகைக்கும்
அதரத்தில் பழுப்பே யாய்த்து இவர்கள் உடைய பரிகரம் –
புறம்பு உள்ள பந்துக்களையும் விட்டு
பற்றினவர்களுக்கும் துர்ப்பரனாய் தலைக் கட்டினேன் –
அதாவது
அவர்கள் பக்கலிலும் அபகாரகனாய் போந்தவன் ஆகையாலே அவர்களுக்கும் இவனோடு சம்பந்தம்
அற வேணும் என்று இருக்கை –
துரிசன் -கள்ளன் –
நீசனான ராவணனுக்கு மாகாதகன் ஒருவன் என்று அவன் சொன்னாப் போலே
தண்மைக்கு எல்லையான ஸ்திரீகளுக்கும் ஆகாதே அவர்களாலே பஹிஷ்கரிக்கப் பட்ட நான் ஒருவன் -என்கிறார்

ஆனபின்பு
அவத்தமே பிறவி தந்தாய் –
தேவரீர் ஜென்மத்தை எனக்கு வ்யர்த்தமே தந்துஅருளி யவராய் பலித்தது –
தம்முடைய கர்மம் அடியாக வந்த அனர்த்
கர்ம ஸ்வரூபத்தை உள்ளபடி அறிந்தவர் ஆகையாலே செய்கிறார்
கர்மம் ஆவது ஈஸ்வர ஹ்ருதயத்திலே நிக்ரக ரூபேண நின்று பலிப்பது
சாகப பிரவ்ருத்தி நிவ்ருத்திகளும் ஈஸ்வர அதீணமாம் படி யாய்த்து ஸ்வ ரூபம் இருப்பது
பொறுத்தோம் என்ன போமது ஓன்று
புத்தியோகம் தம் -என்றபடியே புத்தி பிரதானம் பண்ணி
நல் வழி போக்கும் இடத்தில் நிவாகரர் இல்லை
ஆக இப்படி உணர்ந்தவருக்கு சொல்லலாம் இ றே –
கிணற்றிலே விழுந்த பிரஜையைக் கண்டு தாய் அருகே இருந்தால் -தாய் தள்ளினாள் -யென்னக் கடவது இ றே

அரங்க மா நகர் உளானே –
கர்ம பரதந்த்ரராய்
விஷயாந்தர பிரவணராய் இருப்பாரை
அழகாலும் சீலத்தாலும் மீட்க்கைக்கு அன்றோ
கோயிலிலே வந்து கண் வளர்ந்து அருளுகிறது –

——————————————————————————————————————————————————————

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரியப்ராடியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: