திரு மாலை-30 -மனத்திலோர் தூய்மை இல்லை–பெரியவாச்சான் பிள்ளை அருளிய -வியாக்யானம் –

பிரசித்தமான கர்மாத்யுபாயங்கள் இல்லை
ஸ்திரீ சூத்திர அதிகாரமான த்யான சங்கீர்த்த நாதிகளும் இல்லை –
அணில்களுக்கும் உண்டான பாவ சுத்தியும் இல்லை –
ஆனை இடர்பட்ட போது நினைத்த நினைவும் இல்லை –
புண்ய தேச வாசத்தால் வரும் நன்மையையும் இல்லை –
என்றார் -கீழ் அஞ்சு பாட்டாலே –
இந் நன்மைகள் ஒன்றும் இல்லை யாகிலும் உம்முடைய பக்கல் தீமைகள் இல்லை யாகில்
உம்மால் வரும் இழவு இல்லாமையாலே உம்மை அங்கீ கரித்து உம்முடைய கார்யங்களும் செய்கிறோம்
அது இருந்த படி என் என்று பெரிய பெருமாள் கேட்டு அருள –
நன்மைகள் ஒன்றும் இல்லாதோபாதி
தீமைகள் எனக்கு இல்லாதது இல்லை -என்கிறார் மேல் அஞ்சு பாட்டாலே –
அதில் -இப்பாட்டில் –
ஆனுகூல்யா பாவத்தை அனுபாஷித்துக் கொண்டு
தம்முடைய பரச்ம்ர்த்த்ய சஹத்வம் ஆகிற
அநாத்ம குணத்தைப் பேசுகிறார் –

—————————————————————————————————————————————————————–

மனத்திலோர் தூய்மை இல்லை வாயிலோர் இன் சொல் இல்லை
சினத்தினால் செற்றம் நோக்கித் தீ விளி விளிவன் வாளா
புனத் துழாய் மாலையானே பொன்னி சூழ் திருவரங்கா
எனக்கு இனிக் கதி என் சொல்லாய் என்னை ஆளுடைய கோவே

———————————————————————————————————————————————————————

மனத்திலோர் தூய்மை இல்லை-
மனஸா து விசுத்தேன-என்றும்
யேது ஜ்ஞான விசுத்த சேதச -என்றும்
மன சுத்தியைப் பேற்றுக்கு பரிகாரமாக சொல்லக் கடவது இ றே
அந்த சுத்தி எனக்கு இல்லை -என்கிறார் –
ஓர் தூய்மை என்றது -காம குரோத லோப த்வேஷாதிகளிலே ஓன்று குறைந்து அதில் சுத்தனாகப் பெற்றிலேன் –
ஷம்காதாசித்மாக இல்லையாகவும் பெற்றிலேன் –

வாயிலோர் இன் சொல் இல்லை-
மனஸ் சுத்தி இல்லையானாலும் வாயில் பிரிய வசனங்கள் தான் உண்டோ -எண்ணில்
அதுவும் இல்லை -என்கிறார் –
ஓர் இன் சொல் ஆவது –
இதற்கு முன்பு ஒருவரை குளிர -என் -என்று அறியேன் –
குளிர என்றார் திறத்திலும் அனுகூலமாக ஒரு மாற்றமும்
சொல்லியும் அறியேன் –
நெடுஞ்சொல்லால் மறுத்த நீசனேன் -என்கிறபடியே
அபிமத விஷயங்களை
உகக்கும் போது ச்ரவணமாய்த்து இருப்பது –
ஆக
இவ்விரண்டு பதத்தாலும்
கீழ் அஞ்சு பாட்டாலும் சொன்னவற்றை அனுபாஷித்தார் யாய்த்து –
சினத்தினால் செற்றம் நோக்கித் –
இவை இல்லாமையே அன்றிக்கே
பர ச்ம்ர்த்தி கண்ட நிர்நிபந்தனமாக
இவர்களுக்கு அனர்த்தங்களையே தேடா நிற்பன் –
நெஞ்சில் கோபத்தால் தோற்றப் பாரா நிற்பன்
செற்றம் என்றும்
சினம் என்றும்
கோபம்
மிக்க கோபத்தாலே ஓர் ஆளும் ஓர் நோக்கும் நேராக வைத்துப் பார்ப்பது –

தீ விளி விளிவன் –
நோக்கேறியே வாய் விட்டால் கெட்டார்க்கு நெருப்பை வழி
யட்டினாப் போலேயாய்
குடிபறியுமாக வாய்த்து வாய் விடுவது –

வாளா-
இது எல்லாம் செய்கிறது தான் ஒரு காலைக்கு வெற்றி பெறப் பார்க்கவோ எண்ணில்
இது தானே பிரயோஜனமாக இருப்பன் –
பிரயோஜனத்துக்கு பிரயோஜனம் வேண்டா வி றே –
சாத்விகர் பர பிரயோஜனத்தை பிரயோஜனமாக நினைத்து இருக்குமா போலே
பர அனர்த்தத்தையே பிரயோஜனமாக நினைத்து இருப்பன் –

உம்முடைய படி இதுவாகில் நம்மை நிர்பந்திக்கிறது என் என்ன –
புனத் துழாய் மாலையானே-
நம் தண்மை பார்த்து அகல ஒண்ணாத படி
அபேஷா மாத்ரமே ஹேதுவாக நடக்கக் கடவோம் என்று
ரஷண தர்மத்திலே தீஷித்து தனி மாலை இட்டு அன்றோ
தேவரீர் இருக்கிற பிராப்தியாலும் -போக்யதையாலும்
என்னால் உன்னை விடப் போமோ –
தன்னிலத்திலே போலே திரு மார்பிலே செவ்வி பெறும்படியான திருத் துழாய் மாலையை உடையவனே –

பொன்னி சூழ் திருவரங்கா-
ரஷகனாய்

தூர இராதே சந்நிஹிதனாயும்பெற்றேன்
எத்தனையேனும் தண்ணியருக்கும் ஆஸ்ரயிக்கும் படி அன்றோ தேவரீர்
கோயிலில் வந்து கண் வளர்ந்து அருளுகிறது –
திருத் துழாய் மாலைக்கு புற மாலை போலே யாய்த்து
திருப் பொன்னி யோட்டை சேர்ந்து இருக்கிறபடி –

எனக்கு –
கீழ் தண்மையை உபபாதித்தார் இ றே –
இப்படி தோஷ பிரசுரனான எனக்கு –

இனிக் –
என் தோஷத்தை அனுசந்தித்து
நான் எனக்கு ரஷகனாகை தவிர்ந்து
தேவரீர் பக்கலிலே நயச்த பரனான பின்பு

கதி என் சொல்லாய் –
போக்கடி சொல்லாய் –
போக்கடிக்க சூழ்ந்து கொண்டு வைத்து -அவனைச் சொல்லாய் -என்னும்படி இ றே
பிராப்தியிலும் இருப்பது –

நீர் போக்கடி சொல் என்ற போதாக
நமக்குச் சொல்ல வேண்டுகிறது என் என்ன –
என்னை ஆளுடைய கோவே-
இத்தலையில் சேஷத்வமும்
அத்தலையில் சேஷித்வமும்
வ்யவஸ்திதமாய் அன்றோ இருப்பது –
வேறு இதுக்குக் கடவார் ஆர் –
இது யாருடைய வஸ்துவாய் நோவு படுகிறது –

—————————————————————————————————————————————————————

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரியப்ராடியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: