திரு மாலை-27- குரங்குகள் மலையை நோக்க—பெரியவாச்சான் பிள்ளை அருளிய -வியாக்யானம் –

மனுஷ்யாதி காரமானவை ஒன்றும் இல்லை யாகில்
திருவடி திரு அநந்த ஆழ்வான் முதலானவர்களைக் கொள்ளும் அடிமையை
சாஸ்திர அவஸ்தை இன்றிக்கே இருந்துள்ள
திர்யக்குகளைக் கொள்ளுவதாக நாம் வந்து அவதரித்த காலத்தில்
திர்யக் சாமான்யத்தாலே அணில்கள் சுத்த பாவனை யோடே
பண்ணின சில கிஞ்சித் காரம் உண்டு –
அது தானும் உண்டோ வென்னில்
அதுவும் இல்லை என்கிறார் –

———————————————————————————————————————————————

குரங்குகள் மலையை  நூக்கக் குளித்து தாம் புரண்டிட்டு ஓடித்
தரங்க நீர் அடிக்கல் உற்ற சலமிலா வணிலம் போலேன்
மரங்கள் போல் வலிய நெஞ்சம் வஞ்சனேன் நெஞ்சு தன்னால்
அரங்கனார்கு ஆட்செய்யாதே அளியத்தேன் அயர்க்கின்றேனே –

——————————————————————————————————————————————————–

குரங்குகள் மலையை நூக்கக்-
மலைகளாலே கடலைத் தூர்க்கிற விடத்தில்
மலைகளுக்கு தொகை உண்டாய் –
ஸ்ரீ வானர வீரர்களுக்கு தொகை இல்லாமையாலே
ஒரு மலையை அநேகர் கூடித் தொட்டுக் கொண்டு வருவார்கள் ஆய்த்து –
ஒரு மலை ஒருவற்கு பாத்தம் போராதபடி பெரு மிடுக்கராய் இருக்கச் செய்தேயும்
உபாத்யாயர் ஊசி போலே -மரத்தில் ஊசி குத்தி கொண்டு வந்த சிஷ்யர் கூட்டம் போலே –
எல்லோரும் கிஞ்சித் கரித்து ஸ்வரூபம் நிலை பெற வேணும் என்று இருக்கிறவர்கள் ஆகையால்
இப்படி செய்கிறார்கள் ஆய்த்து –
ஸ்வரூப ஜ்ஞானம் உடையாதரோடு இல்லாதாரோடு வாசி அர
துரும்பு எழுந்து ஆடும் படி இ றே
அடிமை கொள்ளுகிறவர் கையும் வில்லுமாய் நின்ற நிலை தான் –
மலையை நூக்க –
கடலிலே பொகட -என்னாதே -நூக்க -என்றது –
ஒரு திரளுக்கு ஒரு மலை விஷயமாகவும் போராமையாலே
வேறு ஒரு திரளும் வந்து பற்ற
அவர்கள் பக்கலிலே -நூக்க -இப்படி கை மேலே போலே யாய்த்து மலை கடலிலே புகுவது –
அவகாஹ் யார்ணவம் ச்வப்சயே-என்று கொண்டு
பெருமாளுக்கு ஆற்றாமை கரை புரண்டு செல்லா நிற்க
அக்கார்யத்துக்கு
வேண்டுவார் ப்ரவர்தியா நின்றார்கள் ஆறி இருக்க ஒண்ணாது இ றே –
கடல் தூர்ப்புண்டு அக்கரைப் பட்டதாய் விடவற்று என்னும் த்வரையாலே எல்லாரும் ஒக்க ப்ரவர்த்திதார் ஆய்த்து-
குளித்து தாம் புரண்டிட்டு ஓடித்
குளித்து –
ஸ்ரீ வானர வீரர்கள் உடைய த்வரை தான்
அணில்களுக்கு போந்திராமையாலே
பெருமாளுக்கு ஆற்றாமை கரை புரளா நிற்க முதளிகளுக்கு இத்தனை மெத்தனம்
எல்லாம் தான் என் –
இருந்தபடியால் சடக்கெனக் கடல் அடைக்க இவர்களுக்கும் சக்தி இல்லை –
ஆனபின்பு மழையாலே தூர்ப்புண்ட பிரதேசத்துக்கு மணல் சுமக்க பரிகரம் இல்லையே என்று
அணில் நீரிலே புக்குத் தோய்கையும்
கரையிலே ஏறினால் மணல் தொற்றுகையும்
உதறினவாறே விட்டுக் கழிகையும்
இவை முன்பே கை கண்ட படியாலே
இப்பிரகாரத்தாலே கடலைத் தூர்ப்போம் என்று பார்த்து
கடலிலே புக்கு முழுகும் ஆய்த்து –
இம் முழுக்கு தன்னாலே நீர் சுவரும் மணலும் கொண்டு வரலாம் என்று ஆய்த்து நினைவு –

தாம் –
கடலிலே நீர் சுவறுவதும்
மணல் தொற்றுவதும்
தம் உடம்பிலே என்று அறியாது யாய்த்து அடிமையில் த்வரையாலே
தால்வுபட்ட கார்யம் அடங்க தங்களாலே தலைக் கட்டுகிறதாக
அபிமாநித்துத் திரிகிறபடியால் – தாம் -என்னவுமாம் –

புரண்டிட்டு ஓடி –
புக்க மலைகளுக்கு நொய் மணல் புக்குச் சொரிந்து கொண்டு வருகிறபடி போராது என்று பார்த்து
மணலிலே புரண்டோடி நிற்கும் யாய்த்து –
உள்ள மணலும் வழியிலே உதிரும்படியாக ஓட
இடையில் நின்றவர்கள் இவற்றின் த்வரையைக் கண்டு
என் தான் இத்தனை வேகம் என்றால் –
பெருமாளுக்கு பகல் அமுது இலங்கையில் வடக்கு வாசலில் விடுவித்ததாய் இருக்கும்
உங்களுக்கு த்வரை அற்று இருந்ததீ-என்னும் யாய்த்து -ருசியானது தாம்தாம் அளவைப் பார்க்க ஒட்டாது இ றே-


தரங்க நீர் அடிக்கல் உற்ற –
திரையை உடைத்தாய் கிளர்ந்து இருந்துள்ள கடலை அடைக்கையிலே சமைந்த
உற்ற –
கடலை அடைக்கிறவர்கள் தாங்களாய்
முதலிகளும் தங்களுக்கு எடுத்துக் கை நீட்டுபவர் களாய் ஆய்த்து இவற்றின் உடைய அபிமானம் –

சலமிலா வணிலம் போலேன் –
இவற்றின் உடைய வியாபாரம் அன்குத்தைக்கு கிஞ்சித் காரமாய் பலிப்பது ஓன்று இல்லை யாகில்
இது அடிமை யாகிற படி எங்கனே என்னில் –
அடிமை கொள்ளுகிறவனுக்கு இவற்றின் பாவ சுத்தியே அமையும் -என்கை –
சலமிலாமை யாவது -கடல் தூரப்புண்டு பெருமாள் அக்கரை
பட்டார் ஆக வல்லரே -என்கிற பாவத்தில் புரை அற்று இருக்கை –
சலம் -வ்யாஜம்
இலா -இல்லாமை –
நின்ற நிலை பேராதே நிற்கை – –
சாஸ்திர வஸ்யதையும் இன்றிக்கே –
வர்ணாஸ்ரம நியமும் இன்றிக்கே –
ஹஸ்த பாதாதி கரணமும் இன்றியிலே இருக்கிற
திர்யக் சாமான்யமான மாத்ரமான இவை
குளிப்பது ஓடுவது புரளுவது ஆகிற இவற்றின் உடைய பாவமும் எனக்கு இல்லை என்று
குளித்து -மூன்று அனலை –ஒளித்திட்டேன் -என்கிறார் –
அவாப்த சமஸ்த காமனுக்கு எதிர் தலையில் பாவ சுத்தி ஒழிய
அவனுக்கு வேண்டுவது ஓன்று இல்லை –
இவனால் செய்யலாவது ஓன்று இல்லை –
நமக்கு உள்ள ஜ்ஞான சக்திகளைக் கொண்டு பூர்ணனுக்கு நாம் ஓன்று செய்கையாவது
என் என்று கை வாங்குமவர்கள் பாக்ய ஹீனர் –
அந்த பூர்த்தி தான் நாம் இட்டது கொண்டு த்ர்ப்தனாகைக்கு உறுப்பு என்று
சுத்த பாவராய் மேல் விழுகைக்கு உறுப்பாம் பாக்யவான்களுக்கு
இப் பாவ சுத்தி தான் ஒருவருக்கும் கிடையாமையாலே
எல்லார்க்கும் செய்யலாவது ஓன்று என்ன ஒண்ணாது
ஆக
அணில்களுக்கு உள்ள ஆனுகூல்யமும் எனக்கு இல்லை -என்கிறார்
-மரங்கள் போல் வலிய நெஞ்சம் வஞ்சனேன் –
இவ் விஷயத்தில் தமக்கு நெகிழ்ச்சி இல்லாத படிக்கு த்ர்ஷ்டாந்தம் சொல்கிறார் –
இரும்பு போல் வலிய நெஞ்சம் -என்றவாறே
அதுக்கும் அவ்வருகே ஒரு வன்மை சொல்லுகைக்காக
மரங்கள் போல் வலிய நெஞ்சம் -என்கிறார் –
அக்நியிலே இட்டு உருக்கி நினைத்த கார்யம் கொள்ளலாம் இரும்பு
இத்தை நெருப்பில் இட்டால் கரிந்து போய் முன்பு நின்ற நிலையும் கெடும் இத்தனை –

வஞ்சனேன்
இப்படி நெஞ்சு திண்ணியதாய் இருக்கச் செய்தே
இது த்ரவ த்ரவ்யமோ என்று தேவரீரும் பிரமிக்கும்படி பாவித்துக் காட்டா நிற்பன் –
அகவாயில் நினைவு ஒன்றாய் இருக்க
இவன் அத்தனை பகவத் பிரேமம் உடையார் இல்லை -என்று
பிரமிக்கும்படி மறைத்து வர்திப்பன் –
இறை இறையும் வண்ணம் -என்று கீழ் சொன்னதை அனுசயிக்கிறார் –

நெஞ்சு தன்னால் அரங்கனார்கு ஆட்செய்யாதே –
அணில்கள் பக்கலிலும் பாவ சுத்தி இ றே உள்ளது
அந் நெஞ்சை கொண்டு சந்நிஹிதனான உன் பக்கலிலே அல்ப அனுகூல்யம் பண்ணாதே
இவன் பாவ சுத்தி மாத்ரத்தையே பரி பூர்ண சேஷ வ்ருத்தியாகக் கொள்ளும்
பகவத் அபிப்ராயத்தாலே -ஆள் செய்யாதே -என்கிறார்

அளியத்தேன் –
அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்ற
இளைய பெருமாளைப் போலே சர்வ வித கைங்கர்யங்களுக்கும் அற்ஹமான
அருமந்த வஸ்து கிடீர் இது –

அயர்க்கின்றேனே –
விஸ்மரித்து அனர்த்தப் பட்டு போவதே –

இவ்விஷயம் சந்நிஹிதம் இல்லாமையாலே யாதல்
இத்தலையில் யோக்யதை இல்லாமையாலே யாதல் -அன்று இ றே
மறந்தேன் உன்னை முன்னம் -என்கிறபடியே விஸ்மர்த்தியாலே இ றே அனர்த்தப் பட்டது –
சலமிலா மரங்கள் போலே என்னவுமாம்
மரங்கள் போலே சலமிலா என்னவுமாம்
மரத்தை ஓர் ஆயுதத்தால் சலிப்பிக்க வுமாம்
நெஞ்சை ஒன்றாலும் சலிப்பிக்க ஒண்ணாது -என்றபடி-

——————————————————————————————————————————————————————-

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரியப்ராடியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: