திரு மாலை-29 -ஊரிலேன் காணி இல்லை -பெரியவாச்சான் பிள்ளை அருளிய -வியாக்யானம் –

ஆனை இடர் பட்ட போது அது தனக்கு உதவுகைக்காக நினைத்த நினைவு
உமக்கு இல்லையாகில்
ஸ்ரீ சாளக்ராமம் ஸ்ரீ அயோதியை கோயில் முதலாக
நாம் உகந்த நிலங்களிலே ஒருவனுக்கு ஜன்மாதிகள் உண்டானால்
அவனை நமக்கு ரஷித்தே தீர வேணும்
அங்கனே இருப்பன சில உண்டோ -வென்ன –
அவையும் எனக்கு இல்லை -என்கிறார்-

—————————————————————————————————————————————————————-

ஊரிலேன் காணி இல்லை உறவு மற்று ஒருவர் இல்லை
பாரில் நின் பாத மூலம் பற்றிலேன் பரம மூர்த்தி
கார் ஒளி வண்ணனே கண்ணனே கதறுகின்றேன்
ஆருளர் களைகண் அம்மா அரங்க மா நகர் உளானே –

—————————————————————————————————————————————————————-

ஊரிலேன்-
இங்கு ஊர் -என்று இவர் நினைக்கிறது
சதா பகவத் சந்நிதி உண்டான
ஸ்ரீ சாளக்ராமம் -என்ன
அவதார ஸ்தலமான திரு அயோத்யாதிகள் -என்ன
கோயில் முதலான திருப்பதிகள் என்ன –
இவற்றை யாய்த்து –
ஊர் -என்கிற சாமான்ய வாசி சப்தம் இவ் விசேஷங்களைக் காட்டுமோ -வென்னில் –
சேதனரில் ஒரு குறிச்சியில் பிறவாதார் இல்லை இ றே-

அவை தான் அத்ர்ஷ்ட ஹேதுவுக்கு ஹேது என்கைக்கு ஒரு பிரமாணமும் இல்லையே
இங்கு உபாய சூன்யத்தை சொல்லிப் போகிற பிரகரணத்தோடு சேர வேண்டுகையாலே
இச் சப்தம் இவ் விசெஷங்களையே சொல்லிற்றாகக் கடவது –
நாம் அபிமானித்து இருந்த எல்லைக்குள்ளே பிறந்தான் என்று தேவரீருக்கு
பற்றாசு பிடிக்கலாவதொரு தேசத்திலே பிறக்கப் பெற்றிலேன் –
தேச வாச மாத்திரமே ஆத்ம உத்தாரகம் என்கைக்கு பிரமாணம் எது என்னில்
தேசோயம் சர்வ காமதுக் -என்றும்
பவத் விஷய வாசின -என்றும் –
திர்யயோ நிகதாச்சாபி சர்வே ராம மனுவ்ரதா -என்றும் சொல்லக் கடவது இறே-

காணி இல்லை –
அப்படி அத்தேசங்களில் ஜன்மம் இல்லை யாகில்
ஏதேனும் ஒரு உபாதியாலே அவ்வவோ இடங்களிலே ஷேத்திர ஸ்பர்சம் உண்டாகக் கூடும்
அது உண்டோ என்னில் -அதுவும் இல்லை -என்கிறார் –
அதாவது
தேஹ யாத்ரா செஷமாக திருப் பல்லாண்டு பாடுதல் முதலான நிமித்தங்களிலே அன்வயித்தல்
திரு நந்தவனம் -என்றால் போலே சில உண்டாதல்
தானத்தாலும் விலையாலும் உண்டாய் அவ் ஊரில் சென்று
காணி யாள வேண்டும்படி யான ஸ்பர்சம் உண்டாய் இருக்கை –

அவை ஒன்றும் இல்லையாகில்
இவ் ஊரில் உள்ளாரோடு ஒரு கொள் கொடையாய் வரும் சம்பந்தம் ஆதல்
மந்திர சம்பந்தம் ஆதல் உண்டோ என்னில் –
உறவு இல்லை -மற்று ஒருவர் இல்லை –
இவை இன்றிக்கே ஒழிந்தால் கண் பழகி இருப்பார் ஒரு பந்துக்கள் உண்டோ -வென்னில்
அதுவும் இல்லை என்கிறார் –
ஆனால் உமக்கு வாஸம் எங்கே -என்ன
பாரில் –
ஒரு பற்றாசு பெறா விடில் தரிக்க ஒண்ணாத படி
அநந்த கிலேச பாஜனமான -பூமியிலே வாஸம் –

கலங்கா பெரு நகரில் இருக்கிறேனோ -நிர்ப்பரனாய் இருக்கைக்கு
ஒருவர் கூறை ஒருவர் உடுக்கிற பய ஸ்தானத்திலே அன்றோ
எனக்கு வாஸம் -ஆகையால்
நின் பாத மூலம் பற்றிலேன் –
சர்வ பிரகாரத்தாலும் புகல் அற்றார்க்கு புகலான உன் திருவடிகளில்

எனக்கு ஓர் அந்வயம் இல்லை .
தமேவம் சரணம் கத -என்று ப்ரஹ்மாஸ்த்ரத்துக்கு இலக்கான காகத்துக்கு கூட
புகலிடமாக இ றே தேவரீர் திருவடிகள் இருப்பது –

ஆக
பின்னை ஒரு வழியாலும் உமக்கு ஒரு நன்மை இல்லை யாகில்
பின்னை இழக்கும் அத்தனை அன்றோ என்ன –
பரம மூர்த்தி –
ஸ்வகதமாக ஒரு உஜ்ஜீவன உபாயம் இல்லை என்றேன் அத்தனை போக்கி -உன்பக்கலிலும் இல்லையோ –
சர்வாதிகனாய் பரம சேஷியாய் இருக்குமவன் அல்லையோ –
சேஷத்வ பிரதி சம்பந்தியாய் இ றே சேஷித்வம் இருப்பது –
இவன் ஸ்வத் த்ரோஹம் -என்று பிரமித்த அன்றும்
இவன் பிரதிபத்தி ஒழிய ஸ்வரூபத்தை மாறாட ஒண்ணாதே –

ஸ்வரூபத்தை அழிக்க ஒண்ணாது ஆகில்
ஸ்வரூப அனுரூபமான சித்திக்கு வழி என் என்ன –
கார் ஒளி வண்ணனே –
முதல் அடியிலே ருசி ஜனகமாய்
ருசி பிறந்தார்க்கு உபாயமுமாய் அன்றோ உன் வடிவு அழகு இருப்பது –

கண்ணனே
வடிவு அழகு உண்டாலும் உத்துங்க தத்வம் அன்றோ
என்ன ஒண்ணாத படி -சௌலப்யாதி குண யுக்தன் அல்லையோ –

பரம சேஷியாய் –
விலஷண விக்ரஹோபேதனாய்
சௌலப்யாதி குண யுக்தனாய்
இருக்கிற நீ இருக்க -எனக்கு இழக்க வேணுமோ
வகுத்த சேஷியாவது-சேஷித்வ சம்பந்தம் இல்லை யாகிலும்
விட ஒண்ணாத வடிவு அழகை உடையவனாவது –
இவை இரண்டும் இல்லை யாகிலும் விட ஒண்ணாத நீர்மையை உடையனாவது
இப்படிப் பட்ட தேவரீர் உள்ளீராய் இருக்க -எனக்கு ஓர் இழவு உண்டோ

கதறுகின்றேன் –
தேவரீர் உடைய இந்த வை லஷண்யங்களை அனுசந்தித்து
சாதநானுஷ்டானம் பண்ணி பலம் தாழ்த்தாரைப் போலே
கூப்பிடா நின்றேன் –

ஆர் உளர் களை கண் –
நான் இப்படி கூப்பிடா நிற்க -தேவரீர் ஆறி இருக்கிறது
தேவரீரை ஒழிய வேறு யார் ரஷகராக –
நான் எனக்கு ரஷகன் ஆகவோ –
என் அளவும் புகுர நில்லாத பிறர் எனக்கு ரஷகர் ஆகவோ –

அம்மா –
உடைமை நசித்தால் இழவு உடையவனது அன்றோ –

அரங்க மா நகர் உளானே –
உடையவன் ஆனாலும் சந்நிஹிதன் அல்லன் என்று தான் ஆறி இருக்கிறேனோ
சம்சாரத்தில் நன்மை பெற வேணும் என்று கூப்பிடுவாரும் உண்டாக கூடுமோ
என்னும் நப்பாசையாலே அன்றோ
கோயிலிலே வந்து கண் வளர்ந்து அருளுகிறது –

—————————————————————————————————————————————————————–

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரியப்ராடியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: