திரு மாலை-28-உம்பரால் அறியலாகா –பெரியவாச்சான் பிள்ளை அருளிய -வியாக்யானம் –

அணில்கள் திர்யகாக வைத்து நமக்கு கிஞ்சித் கரிக்க உத்யோகித்த பாவ சுத்தி
உமக்கு இல்லை யாகில்
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் பொய்கையிலே புக்கு இடர் பட்டு நாம் சென்று தனக்கு உதவ கடவதாக
நினைத்ததொரு நினைவு உண்டு
அது தானும் உமக்கு உண்டோ -வென்ன
அதுவும் இல்லை -என்கிறார் – –

—————————————————————————————————————————————————————————

உம்பரால் அறியலாகா யொளி உளார் ஆனைக்காகிச்
செம் புலால் உண்டு வாழும் முதலை மேல் சீறி வந்தார்
நம்பர மாயதுண்டே நாய்களோம் சிறுமை யோரா
எம்பிராற்கு ஆட் செய்யாதே என் செய்வான் தோன்றினேனே

————————————————————————————————————————————————————————-

ப்ரஹ்மாதிகளால் அறிய ஒண்ணாத ஒளி உண்டு -ஸ்ரீ வை குண்டம்
அத்தை வாசஸ் ஸ்தானமாக வுடையவர் –
அதயதத பரோதிவோ ஜ்யோதிர்த் தீப்யதே -என்றும்
அத்யர்க்கா நலதீப்தம் தத் ஸ்தானம் விஷ்ணோர் மகாத்மான -என்றும் -சொல்லக் கடவது இ றே
ஜ்ஞானாதிகர் ஆனாலும்-ஈச்வரோஹம் -என்று இருப்பார்க்கு பரம பதம் நிலம் அன்றே
பிராபிக்கை முடியாமையே யன்று
அறியவும் முடியாது என்கை –
யன் ந தேவா ந முனயோ ந சாஹம் ந ச சங்கர ஜா நந்தி பரமே சச்யே தத் விஷ்ணோ பரமம் பதம் –
கலங்கா பெரு நகரத்திலே நித்ய சூரிகளை அனுபவித்து இருக்கிறவர் கிடீர்
சம்சாரத்தில் ஆர்த்த ரஷணத்துக்காக வந்தார் –

ஆனைக்காகி –
இப்படி கரை புரண்ட மேன்மை உடையவன்
தான் பதறி வந்து கார்யம் செய்தது
ஒரு பிராட்டி திரு வனந்த ஆழ்வான் போல்வாருக்கோ என்னில்
ஒரு திர்யக்குக்காக கிடீர்
இடர்பட்ட அதின் அளவேது -உதவினவன் அளவேது என்கிறார்
ஆஸ்ரிதர் ஒரு தலை யானால் -தன மேன்மை பார்த்தல் -அவர்கள் உடைய சிறுமை பார்த்தல்
செய்யுமவன் அன்றிக்கே –
அவர்கள் பக்கல் பார்ப்பது அத்தலையில் ஆபத்தும் தன தலையில் சம்பந்தமுமே யாய்த்து
ஆஸ்ரிதர் சிறுமை பார்த்து ஒழிந்தால் தன சீற்றத்துக்கு நேர் நிற்க வல்லது ஓன்று உண்டோ –

சீறி வந்தது யார் மேலே என்னில் –
செம் புலால் உண்டு வாழும் முதலை மேல்
தன்னிலும் ஷூத்ரமாய் இருப்பதொரு நீர் புழுவை பஷ்யமாகக் கொண்டு –
அத்தாலே -வீற்று இருந்து ஏழு உலகும் தனிக்கோல் செல்ல இருப்பாரைப் போலே
பூர்ணம் மன்யமானமாய் இருப்பதொரு நீர்ப் புழுவை இலக்காகக் கொண்டு கிடீர் வந்தது –
பராவரேசம் சரணம் வர்ஜத்வ ம சூரார்த்தனம் -என்கிறபடியே
ப்ரஹ்மாதிகள் போக்கற்று சரணம் புக
ஹிரண்ய ராவணாதிகளை அழியச் செய்தவர் கிடீர்
ஒரு சூத்திர பதார்த்தத்தை இலக்காக அரை குலைய தலை குலைய வந்தார் –
குரோதமாஹா யந்தீவ்ரம் -என்றும்
அதாரமோ மகா தேஜோ -இத்யாதிப் படியே
ஆஸ்ரயத்தில் இல்லாத ஒன்றை ஏறிட்டுக் கொண்டு யாய்த்து வந்தது –
தம்மளவில் -நித்ய பிரசன்னாத்மாவாய் இருப்பவர் –
ஆஸ்ரித பரிபவத்தில் வந்தால் –
கோபச்ய வசமே பிவான் -என்கிறபடி
குரோதம் இட்ட வழக்கே இருப்பார்
கொடியவை விலங்கின் உயிர் மலங்கக் கொண்ட சீற்றம் ஓன்று உண்டு -என்று
ஆஸ்ரிதர் தங்களுக்கு தஞ்சமாக நினைத்து இருப்பது இது ஓன்று இ றே -இது

வந்தார் –
இருந்த இடத்திலே இருந்து சங்கல்ப்பத்தாலே செய்யலாவது இருக்க
மடுவின் கரையிலே அரை குலையத் தலை குலைய வந்தார் ஆய்த்து –
ஜகத் உபசம்ஹாரம் ஆகில் இ றே சங்கல்ப்பத்தால் செய்யலாவது –
ஆஸ்ரிதர் விரோதிகளை அழியச் செய்யும் இடத்து கை தொடாராய்ச் செய்யாத வன்று சீற்றம் மாற மாட்டாது
அற்றை வரவு தமக்கு உதவினால் போலே இருக்கிறது யாய்த்து இவர்க்கு
முதலையின் வாயில் அகப்பட்டார் தாம் ஒன்றே என்று தோற்றும்படியாக
கொடியவாய் விலங்கு -என்றார் இ றே ஒருவர் –
ஆஸ்ரிதர் ஒருவருக்கு உதவினது தம் தாமுக்கு என்று இராத அன்று
நமக்கு பகவத் சம்பந்தம் இல்லை என்று இருக்கவாய்த்து அடுப்பது –

நம்பர மாயதுண்டே-
இப்படி ஆஸ்ரித விஷயத்தில் பஷபாதியாய் –
ரஷிக்குமவன் ஆனபின்பு
நம்முடைய ரஷணத்தில் நமக்கு ஒரு பரம் உண்டோ –
தன் மேன்மை பார்த்தல் -நம்முடைய சிறுமை பார்த்தல்
நம்முடைய பாபத்தின் கனத்தாலே சீறி
சில நாள் அனுபவித்தால் -பின் செய்கிறோம் என்று ஆரி இருக்குமவன் ஆதலாய்
நம் கார்யத்துக்கு நாம் கடவோம் ஆகிறோமோ –

நாய்களோம் –
அவ்வானை சனகாதிகள் உடைய ஸ்தானத்திலே யாம்படி இ றே -நம்முடைய தன்மை –
திறந்த வாசல் எல்லாம் நுழைந்தாலும் நம்மைக் கொள்வார் இல்லாத புகல் அறுதியை உடையோமாய்
வளர்தவனுக்கு தொட்டால் குளிக்க வேண்டும்படியான தண்மையை உடைய பதார்த்தம் –

சிறுமை யோரா எம்பிராற்கு –
எத்தைனையேனும் தண்ணியோம் ஆனாலும்
தண்மை பார்க்க கண் இல்லாதவர்க்கு –
தோஷ தர்சனத்தில் அவிஞ்ஞாதாவாய்
குண தர்சனத்தில் -சஹாஸ்ராம்ச பரராய் இருப்பார் –
யஸ் சர்வஞ்ஞஸ் சர்வ வித் -என்று
ஓதப்படுகின்றவனுக்கு அவிஞ்ஞார்த்தம் ஆவது
இத்தலையில் தோஷம் கண்டு பொறுத்து அபகரித்தானாய் இராது ஒழிகை-
எம்பிராற்கு -ஆட் செய்யாதே
தோஷம் பாராதே ஆபத்தே ஹேதுவாக ரஷிக்கிறது
வகுத்த விஷயம் ஆகையாலே -வகுத்த சேஷியுமாய்-உபகாரனுமாய்
இருக்குமவனுக்கு அடிமை செய்கை இ றே பிராப்தம் –
அது செய்யாதே
எங்கள் கார்யம் தமக்கே பரமாக ஏறிட்டுக் கொண்டால்
நம்முடைய கரணங்களுக்கு ஸ்வரூப அனுரூபமான வ்ர்த்தியிலே அன்வயிக்கை இ றே பிராப்தம் –

என் செய்வான் தோன்றினேனே –
வ்யர்த்த ஜன்மா வானேன் –
ஸ்ரஷ்டஸ்த்வம் வன வாஸாய – என்கிறபடியே
ஜன்மா பிரயோஜனம் அடிமை யானால்
அதுக்கு அசலான என் ஜன்மம் வ்யர்த்தம் இ றே
பிறந்தேன் -என்னாதே
தோன்றினேன் -என்றது –
அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்ற இளையபெருமாள் பிறவி போலே
ஆகில் இ றே பிறந்தேன் -என்னாலாவது –
அது இல்லாமையால் தோன்றினேன் -என்கிறார் –

——————————————————————————————————————————————————————-

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரியப்ராடியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: