திரு மாலை-26-போது எல்லாம் போது கொண்டு —பெரியவாச்சான் பிள்ளை அருளிய -வியாக்யானம் –

த்ரை வர்ணிக அதிகாரமான
உபாயம் இல்லை யாகில்
சர்வாதிகாரமான -அர்ச்சன ஸ்த்வநாதிகள் தான் உண்டோ வென்னில் –
அதுவும் இல்லை -என்கிறார் –

——————————————————————————————————————————————————–

போது எல்லாம் போது கொண்டு உன் பொன்னடி புனைய மாட்டேன்
தீதிலா மொழிகள் கொண்டு உன் திருக் குணம் செப்ப மாட்டேன்
காதலால் நெஞ்சம் அன்பு கலந்திலேன் அது தன்னாலே
ஏதிலேன் அரங்கற்கு எல்லே என் செய்வான் தோன்றினேனே

——————————————————————————————————————————————————

போது எல்லாம் போது கொண்டு உன் பொன்னடி புனைய மாட்டேன் –
அழகிய செவ்விப் பூக்களைக் கொண்டு
சர்வ காலமும்
உன்னுடைய ஸ்ப்ர்ஹணீயமான திருவடிகளிலே அனைய வி றே அடுப்பது –
அதில் ஸ்ரத்தை இல்லாமை அன்று -சக்தியே இல்லை -என்கிறார்
உன்னை ஒழிந்த விஷயங்களில் செய்ய வென்றால்
ஸ்ரத்தை சக்திகள் இரண்டும் உண்டாய் இருக்கும் —
யௌ தத் பூஜா கரௌ கரௌ -என்கிறபடியே
தேவரீர் திருவடிகளையே ஆராதிக்க கண்ட கைகளைக் கொண்டு
அப்ராப்தமாய் -அனர்த்தாவஹமாய் -இருந்த விஷயங்களை ஆராதித்துப் போந்தேன் –

காலம் எல்லாம் மாட்டேன்
ஒருக்கால் வல்லேன் -என்கிறார் அல்லர்
சர்வ காலமும் மாட்டேன் -என்கிறார் –
ஒரு காலத்தில் சக்தன் ஆகில் அது தானே பேற்றுக்கு போரும்படியாய் இ றே -தேவரீர் -பிரபாபம் -இருப்பது –
ச்க்ர்த்துச்சாரிதம் யேன-என்றும்
சக்ர்த் ஸ்மர்தோபி கோவிந்த -என்றும்
ச்க்ர்தேவ பிரபன்னாய -என்றும்
சொல்லக் கடவது இ றே –

காயிகமான வியாபாரத்தை புறம்பே விநியோகம் கொண்டீரே யாகிலும்
உம்முடைய பேச்சு குற்றம் அற்று இரா நின்றது –
ஆனபின்பு நம்முடைய குணங்களைப் பேச மாட்டீரோ -வென்ன –
தீதிலா மொழிகள் கொண்டு உன் திருக் குணம் செப்ப மாட்டேன்
பேச்சு குற்றம் ஆற்றாலும்
உன்னுடைய கல்யாண குணங்களை பேச வென்றால் ஷமன் ஆகிறிலேன்-
ஹேய குண யுக்தமான சூத்திர விஷயங்களைப் பேச வென்றால்
வாழ்ச்சிஈடனாக -வாழ்ச்சி இட்டு வெட்டினாப் போலே
நறுக்கறப் பேச வல்லேன் –
ஸா ஜிஹ்வா யாஹரிம்ஸ் தௌதி -என்கிற
குணங்களில் வந்தால் நா புரளாது –

அவை இரண்டுக்கும் விஷயம் புறம்பே ஆக்கினீர் ஆகில்
நெஞ்சாலே நம்மை ச்நேஹிக்க வல்லீரே என்ன –
காதலால் நெஞ்சம் அன்பு கலந்திலேன்-
காதல் அடியாக வரும் அன்பு இதற்கு முன்பு நெஞ்சில் ஸ்பர்சித்தது இல்லை –
அதாகிறது -சங்காத் சஜ்ஞாய தே காம -என்கிற ப்ரேமம் –
புறம்பே ஒரு விஷயத்தில் உண்டாகில் இ றே அத்தை
அங்கு நின்றும் மீட்டுப் போந்து
தேவரீர் பக்கலிலே ஆக்க வேண்டுவது –
முன்பு ஸ்திரீ பதார்த்தங்க ளிலே பண்ணிப் போந்த ப்ரேமம்
அவர்கள் பக்கல் அர்த்தாதிகளை அபஹரிக்கைக்காக
வாய்த்தது அல்லது -அவர்களே உத்தேச்யம் என்னும் பிரேமம் இல்லை –
ஸ்மாபாவசோ வஞ்சன பர -என்னக் கடவது இ றே –
பரம ஸூ ஹ்ர்தி பாந்தவே களத்ரே ஸூததனய ப்த்ர் மாத்ர் பர்த்ய வர்க்கே
சடமதி ரூப யாதியோர்த்த த்ர்ஷ்ணாம் தம தமசேஷ்ட மவேஹி நாச்ய பக்தி   -என்னக் கடவது இ றே –

ஏதிலேன் –
ஏதும் இல்லேன் –

அது தன்னாலே ஏதிலேன் –
மநோ வாக் காயங்கள் ஒரு படி பட்டு இருப்பார் பெறும் பேற்றுக்கு
இவற்றில் ஒன்றாகிலும் வேண்டி இருக்க -அதுவும் எனக்கு இன்றிக்கே இருக்கையாலே

அரங்கற்கு-ஏதிலேன் —
ஸூ ஹ்ர்தம் சர்வ பூதாநாம்-என்கிற சௌஹார்தத்தையும் –
ருஜூ -என்கிற படியே
ஆஸ்ரித விஷயத்தில் மநோ வாக் காயங்கள் மூன்றும் செவ்விதாய் இருக்க
ஆர்ஜவ குணத்தையும் கேட்டே போகாமே
அனுஷ்டான சேஷம் ஆக்குகைக்காக கோயிலிலே சந்நிஹிதரான தேவரீருக்கு –
ஒன்றுமாகப் பெற்றிலேன் –
ஒரு கரணத்தாலும் தேவரீரை ஸ்பர்சிக்கப் பெற்றிலேன் –

எல்லே –

என்னே –

அசந்நிஹிதராய் இழந்தேன் அல்லேன் –
பிராப்தி இல்லையால் இழந்தேன் அல்லேன்
செய்த அம்சத்திலே பிழை பிடிக்குமவராய் இழந்தேன் அல்லேன் –
என் இழவுக்கு அடி பாபம் இ றே –
ஸ்ரீ கௌஸ்துபம் போலே உகப்பான வஸ்து கிடீர் இப்படி வ்யர்த்தமாய்ப் போய்த்தது –
அரங்கத்து உறையும் இன் துணைவருக்கு கிடீர் நான் தூரஸ்தன் ஆய்த்து –
கஷாய பாநம் பண்ணுமா போலே ஹித புத்தியாலே சேவிக்க வேண்டும் –
விஷயமாய்த் தான் இழந்தேனோ –
பாலே மருந்து ஆனால் போலே
தார்ச நீயரான தேவரீரே மோஷ ப்ரதராய் இருக்க வன்றோ இழந்தது –

என் செய்வான் தோன்றினேனே
விசித்ரா தேக சம்பத்தி -என்கிறபடியே
தேவரீருக்கு உறுப்பான ஜென்மமாய் இருக்க
நான் ஏதுக்குப் பிறந்தேன் –
என் செய்வான் பிறந்தேன் -என்னாதே
தோன்றினேன் -என்கிறது –
உத்பாதங்கள் போலே அநர்த்த ஹேதுவாகப் பிறந்தேன் -என்கை
உத்பாதங்கள் உடைய தோற்றம் தான் தமக்கும் பிரயோஜனம் இன்றிக்கே
பிறர்க்கும் அனர்த்தமாய் இ றே இருப்பது – –
அது போலே யாய் விட்டதே என் ஜன்மம் -என்கிறார் –

————————————————————————————————————————————————————–

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரியப்ராடியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: