திரு மாலை-24–வெள்ள நீர் பரந்து பாயும் —பெரியவாச்சான் பிள்ளை அருளிய -வியாக்யானம் –

மனத்தினால் நினைக்கலாமே -என்றும்
பேசத்தான் ஆவதுண்டோ -என்றும்
எங்கனம் மறந்து வாழ்கேன் -என்றும்
இவர் மறக்கப் புக்க வாறே இவரை நினைப்பிக்கைக்காக
இவர் பக்கல் தமக்குண்டான பிரேமத்தைக் காட்ட -கண்டு –
இவ் விஷயத்தில் நமக்கு உண்டான ப்ரேமம் அசத் சமமாய் இருந்ததீ என்றும்
இன்னமும் இவ் விஷயத்தின் உடைய வைலஷண்யத்தை அனுசந்தித்து
தமக்குப் பிறந்த பக்தி விஷய அனுரூபமாகப் போரமையாலும்
அசித் சம்ச்ர்ஷ்டனுக்கு பிறந்த பிரேமம்
பித்தோபஹதனுக்கு பிறந்த தெளிவு போலே விஸ்வசிக்க ஒண்ணாமை யாலும்
அனுதபித்து
திரு உள்ளத்தைக் குறித்து
உனக்கு இதர விஷயத்தோபாதி இவ் விஷயத்திலும்
கர்த்ரிம ச்நேஹமாய் விட்டதாகாதே -என்று
திரு உள்ளத்தை நிந்திக்கிறார் –

——————————————————————————————————————————————————

வெள்ள நீர் பரந்து பாயும் விரி பொழில் அரங்கம் தன்னுள்;
கள்வனார் கிடந்தவாறும் கமல நன்முகமும் கண்டும்
உள்ளமே வலியை போலும் ஒருவன் என்று உணர மாட்டாய்
கள்ளமே காதல் செய்து உன் கள்ளத்தே கழிக்கின்றாயே

———————————————————————————————————————————————————

வெள்ள நீர் பரந்து பாயும்-
காவேரி சஹ்யமே தொடங்கி கோயிலை நோக்கி வருகிறது ஆகையாலே
தன் அபிநிவேசம் எல்லாம் தோற்றும்படி பெரு வெள்ளமாக நீரைக் கொடு வந்து
சிலருக்கு குலை செய்து தகைய ஒண்ணாத படி சர்வோதிக்ககமாகப் பாயா நிற்கும் –
அபிநிவேசம் முடியாமையாலே பாய்ந்து தலைக் கட்டாது –
விரி பொழில் அரங்கம் –
நீர் பாய்ந்த பரப்பு அடங்கலும் –
சோலையும் விரிந்து வாரா நிற்கும் –

அரங்கம் –தன்னுள்;கள்வனார் –
பரம பதத்தில் அக்ர்த்ரிமரான நித்ய சூரிகளோட்டை பரிமாற்றத்துக்கு செவ்வை பரிகாரம் ஆனால் போலே –
க்ர்த்ரிமரான சம்சாரிகளை வசீகரிக்கைக்கு சௌர்யம் பரிகரமாக வாய்த்து கோயிலிலே வந்து கண் வளர்ந்து அருளுகிறது –
நீர் வாய்ப்பும் சோலை வாய்ப்பும் கண்டு சாய்ந்தான் என்கிறது வ்யாஜமாய்
சம்சாரிகள் உடைய வசீகரணத்திலே நினைவாய்த்து இருப்பது –
நிலவரும் சென்று புக்கால் முற்பட சௌர்யகந்தியாய் யாய்த்து திரு முகம் இருப்பது –
அதாகிறது
ஒரு உபாதியாலே தம்மை வந்து கிட்டினார் உடைய ஆத்மவஸ்துவை அபஹரித்து
சட்டைப் புரைக்குள்ளே இட்டுக் கொள்வர் என்று தோற்றி இருக்கும் –
அதாகிறது
தமக்கு அந்தரங்கம் ஆக்கிக் கொள்ளுகை –
இன்னமும் தான் ஆத்மவஸ்துவை தன்னதாக அபிமாநித்துப் போந்தான்
நாம் இவன் அபிமானித்த அத்தை மீட்ப்போம் என்று தம் அழகைக் காட்டி –
ஜிதந்தே -என்னப் பன்னுமவர் யாய்த்து –
அவனைதான வஸ்துவை இவன் நெடுநாள் பட அபஹரித்துப் போந்த படி –
தன்னதை தானே கொள்ளுகை அபஹாரமாம் படி இ றே சேதனர் உடைய
ஆத்ம அபஹாரம் காழ்ப்பு ஏறின படி –
ஆத்ம சமர்ப்பணமும் ஆத்ம அபஹாரம் இ றே என்னும்படி யான இவ்வஸ்து வி றே இப்படி எளிவரவு பட்டது
ஆத்ம சமர்ப்பணம் ஆகிறது தான் மகாபலி தானம் போன்று இருப்பது ஓன்று இ றே –

கிடந்தவாறும் –
வசீகரண பரிகரம் தானும் சீலாதி களான ஆத்ம குணங்களும் அல்ல –
அவயவ சோபையான ரூப குணங்களும் அல்ல –
கிடந்ததோர் கிடக்கை -என்னும் கிடை அழகே யாய்த்து –

கமல நன்முகமும் –
விகாசம் செவ்வி குளிர்த்தி பரிமளம் -என்றாப் போலே சொல்லுகிறவற்றைப் பற்றத் திரு முகத்துக்கு
தாமரையைப் போலியாக சொல்லும் இத்தனை போக்கி
சர்வதா ச்த்ர்சம் அல்லாமையாலே -நன் முகமும் -என்கிறார் –
சுத்த சத்வமாய் ஜ்யோதிர் மயமான முகத்துக்கு பிராக்ருதமான வஸ்து ச்த்ர்சமாக வற்றோ –
ஆஸ்ரித விஷயத்தில் என்றும் ஒக்க குவியாத முகத்துக்கு திருஷ்டாந்தம் உளதோ –
சம்சாரத்துக்கு உள்ளே குளிர்ந்த முகம் இது ஒன்றே என்கிறார் –

கண்டும்-உள்ளமே வலியை போலும் –
கண் வளர்ந்து அருளுகிற அழகைக் கண்டு வைத்தும் –
நெஞ்சே
ஒரு விகாரமும் பிறவாதே திண்ணியதாய் இருந்தாயீ
கீழ் பிறந்த விகாரம் எல்லாம் விஷய வை லஷண்யத்தைப் பற்ற
அசத் சமமாய் இருக்கிறது யாய்த்து இவர்க்கு –

இப்போது எனக்கு வந்த வன்மை என் என்ன
ஒருவன் என்று உணர மாட்டாய்-
அத்விதீயன் என்று உணர மாட்டு கிறிலை
ஒருவன் என்று உணரப் புக்கால் அவனை உள்ளபடி உணர வேணும் –
அப்படி உணர்ந்தால் அத்தலையில் வாத்சல்யத்துக்கு சத்ர்சமாகவும்
விஷய வை லஷண்யத்துக்கு ச்த்ர்சமாகவும் விடாய் பிறக்க வேணும் –
அது பிறவாமையாலே -வலியை -என்கிறார் –
இப்படி கீழே –
கண்ணினை களிக்குமாறே -என்றும்
பனி யரும்புதிமாலோ -என்றும்
உடல் எனக்கு உருகுமாலோ -என்றும்
சொல்லிப் போன்தவை எல்லாம் என்னாய்த்து -என்னில் –
கள்ளமே காதல் செய்து-
உனக்கு ப்ரக்ருதி விஷயத்தில் பண்ணிப் போந்த வாசனை
இங்கும் அனுவர்த்தித்து போந்த இத்தனை ஒழிய
இவ் விஷயத்துக்கு ச்த்ர்சமாய் ச்நேஹித்தாய் அல்லையே –
விஷயாந்தரங்களில் பண்ணிப் போந்ததும் பலபக்தி யாகையாலே
இங்கும் பலபக்தி பண்ணிற்று

உன் கள்ளத்தே கழிக்கின்றாயே-
இந்த கர்த்ரிம பக்தி யானது -பண்டே யுன் பாழி இ றே
இங்கும் அது தன்னையே முடிய நடத்தினாய் இத்தனை இ றே
விஷயாந்தரகளோபாதியாக இது தன்னையும் நினைத்தாய் இத்தனை போக்கி
இவ் விஷயத்துக்கு அனுரூபம் அன்று இ றே உன்னுடைய பிரேமம் -என்கிறார் –

———————————————————————————————————————————————————–

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரியப்ராடியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: