திரு மாலை-25- -குளித்து மூன்று அனலை ஓம்பும் —பெரியவாச்சான் பிள்ளை அருளிய -வியாக்யானம் –

கீழ்
பகவத் விஷயத்தில் தமக்கு பிறந்த ஆதாரம் விஷய அனுரூபமாகப் போராமையாலும்
அசித் சம்சர்க்க யுக்தனுக்கு பிறந்தது ஆகையாலே பித்தோப ஹதனுக்கு பிறந்த
தெளிவு போலே விஸ்வசிக்க ஒண்ணாமை யாலும்
திரு உள்ளத்தைக் குறித்து அனுதபித்தவராய் நின்றார்
இனி
அசித் சம்சர்க்கம் அற்று ஒரு தேச விசேஷத்திலே நித்ய அனுபவம் பண்ணுகைக்கு
நம் கையில் முதல் காண்கிறிலோம்
நாம் விஷயத்தை இழந்தே போம் இத்தனை -யாகாதே -என்று சோகிக்க
நீர் சோகிக்கிறது என் –
அசித் சம்சர்க்கம் அற்று நம்மைப் பெறுகைக்கு சாஸ்த்ரங்களிலே
த்ரைவர்ணிக அதிகாரமாயும் சர்வாதிகாரமாயும்
உண்டான சாதனங்கள் பிரசித்தம் அன்றோ
அவற்றில் ஒன்றை அனுசந்தித்து நம்மை கிட்ட மாட்டீரோ என்ன –
எனக்கு அவை ஒன்றிலும் யோக்யதையே தொடங்கி இல்லை என்றும்
மேல் பத்துப் பாட்டாலே தம்முடைய உபாய சூன்யதையை அருளிச் செய்கிறார்
ஆனால் பின்னை கீழ் இவருக்கு பிறந்ததாகச் சொன்ன ஜ்ஞான பக்திகள்
என்னவாய்த்து என்னில்
பகவத் பிரசாதத்தாலே பிறந்த போக உபகரணமான ஜ்ஞான பக்திகள் யாய்த்து அங்குச் சொல்லிற்று –
அவை சாதன கோடியிலே அந்தர்பவியாது —
அவ வநுபவம் காதாசித்கம் அன்றிக்கே நித்யமாகைக்கு தம் கையிலே
சாதனம் இல்லை என்கிறார் -இங்கு –

இதில்
முதல் பாட்டில்
பிரசித்தமாய் தரை வர்ணிகர் ஆனவர்களுக்கு அதிகாரமான
ஞான பக்திகள் எனக்கோர் அந்வயம் இல்லை–என்கிறார் –

——————————————————————————————————————————————————————–

குளித்து மூன்று அனலை ஓம்பும் குறிகொள் அந்தண்மை தன்னை
ஒளித்திட்டேன் என் கண் இல்லை நின் கணும் பக்தனும் அல்லேன்
களிப்பது என் கொண்டு நம்பி கடல் வண்ணா கதறுகின்றேன்
அளித்து எனக்கு அருள் செய் கண்டாய் அரங்க மா நகர் உளானே –

———————————————————————————————————————————————————————-

ஜன்ம மாத்ரையே கொண்டு -நீ அவற்றை அனுஷ்டித்து வா என்னில் என்னும் இத்தனை போக்கி
ஜன்ம பிரப்ருதி ப்ராஹ்மண்யத்துக்கு அனுரூபமாய் இருப்பதொரு அனுஷ்டானமும் இல்லை -என்கிறார் –

குளித்து –
நித்ய ஸ்நானம்
நைமித்திக ஸ்நானம்
பிராயச்சித்த ஸ்நானம்
என்று ஸ்நானம் பஹூ முகமாய் இருக்கும் –
நித்ய ஸ்நானம் நைமித்திக ஸ்நானத்து உடல் அன்று –
அந்த நைமித்திக ஸ்நானம் பிராயச்சித்த ஸ்நானத்துக்கு உடல் அன்று –
இவை தனித் தனியே ஸ்வ தந்த்ரங்களாக இ றே இருப்பது –
கர்ம அனுஷ்டானம் தான் ஒழிய யோக்யாபாதகங்கள் பண்ணிப் போரத்தான்
அரிதாய் இ றே இருப்பது-

மூன்று அனலை –
அக்நி -என்னா -அனல் -என்கிறது –
ஆராதியா நின்றால் அப்ராப்தியாய் ஸ்வ பாவமாய் இருக்கும் விஷயம் என்று தோற்றுகைக்காக –

மூன்று அனல்
ஒன்றே துராராதமாய் இருக்க மூன்றை இ றே விதித்தது –

ஓம்பும் –
சவலைப் பிரஜைகளுக்கு சோறும் நீரும் முடித்துக் கொண்டு திரியும் மாதாவைப் போலே
உமியும் இந்தனமும் கொண்டு திரிய வேண்டிய விஷயம் -என்கை –

குறிகொள் –
மந்திர லோபம் க்ரியா லோபம் த்ரவ்ய லோபம்
கால பேதம் தேவதா த்யாகம்
என்கிற இவற்றில் ஓன்று உண்டாமாகில் நிஷ்பலமாய் இருக்கையாலே
கரணம் தப்பில் மரணமாய் இருக்கும் என்கை –
பண்ணின அக்ர்த்யங்களை
ஷாந்திக்கு விஷயமாக்கி
ஓர் அஞ்சலியாலே ஸூபிரசன்னமாம் விஷயம் அன்றே –

அந்தண்மை தன்னை –
இப்படி இருக்கிறது எது என்னில்
ப்ராஹ்மண்யம் –

அது தன்னை
ஒளித்திட்டேன் –
ப்ராஹ்மாண்யம் இல்லாமை என் அளவாய் போக்கை அன்றிக்கே
இவ் வர்ணம் தான் தண்ணிது -என்னும்படி பண்ணினேன் –
விசிஷ்டராய் இருப்பாரைக் கண்டால் இன்னான் அதிகரித்த வர்ணத்திலே சிலர் அன்றோ
என்று கொண்டு அவர்களுக்கும் அவத்யமாம் படி திரிந்தேன் –
இது இ றே நான் கர்ம யோகத்தில் நின்ற நிலை-

ஆனால் ஞான யோகம் இருந்தபடி எங்கனே என்னில் –
என் கண் இல்லை-
என் விஷயமாக எனக்கு ஒன்றும் இல்லை –
ஆத்மவிஷய ஞானம் எனக்கு இல்லை -என்கை
கர்ம யோகம் இல்லை என்றபோதே
தத் சாத்யமான ஜ்ஞான யோகம் இல்லை என்னும் இடம் அர்த்த சித்தம் அன்றோ -என்னில் –
இஜ் ஜன்மத்தில் அனுஷ்டித்த தொரு கர்மம் இல்லை யாகிலும்
பூர்வ ஜன்மத்தில் கர்ம யோகம் பக்வமாய்
அவ்வளவிலே தேக விச்லேஷம் பிறந்து
அனந்தர ஜன்மத்திலே ஜ்ஞானம் நைசர்க்கிகமாய் இருக்கும் இ றே –
அதுவும் இல்லை என்கை –

ஆனால் பக்தி யோகம் இருந்தபடி என் என்னில் –
நின் கணும் பக்தனும் அல்லேன் –
கண்டார்க்கு ச்ப்ர்ஹை பண்ணி யல்லது நிற்க ஒண்ணாத உன் பக்கல்
எனக்கு ச்நேஹமும் இல்லை –
கர்ம ஜ்ஞானங்கள் இரண்டும் இல்லையாய் இருக்க –
உபய சாத்யமான பக்தி இல்லை என்னும் இடம் சொல்ல வேணுமோ -என்னில் –
ஜன்மாந்தர சஹஸ்ரேஷூ தபோ ஜ்ஞான சமாதிபி
நராணாம் ஷீண பாபாநாம் க்ர்ஷ்னே பக்தி பிரஜாயதே-என்கிறபடியே உண்டாகலாம் இ றே –
அதுவும் இல்லை என்கை –
அதவா
கர்ம ஜ்ஞான பக்திகள் மூன்றையும் தனித் தனியே உபாயமாகச் சொல்லுவாரும் உண்டு –
அந்த பிரகாரத்தில் சொல்லிற்றாகவுமாம் –
கர்மனை வஹி சம்சித்தி மாஸ்திதா ஜனகாதய –என்றும்
சர்வம் கர்மாகிலம் பார்த்த ஜ்ஞானே பரி சமாப்யதே -என்றும்
பக்த்யாத் வனன்ய யாசக்ய -என்றும் –
சொல்லக் கடவது இ றே –
இது இ றே கர்ம ஜ்ஞான பக்திகளிலே நான் நின்ற நிலை –
மற்றும் இவ் விஷயத்தில் அறிவுடையார் –
நோற்ற நோன்பு இலேன் -என்றும்
கறைவைகள் பின் சென்று -இன்றும்
ந தர்ம நிஷ்டோச்மி -என்றும்
தம் தாம் வெறுமைகளை பேற்றுக்கு உடலாக முன்னிட்டுக் கொண்டு
போரக் கடவதாய் இ றே இருப்பது –

பெரிய பெருமாளும் தம்முடைய கிருபைக்கு இவர் சொன்ன வெறுமைகளும்
அரிதாய் ஆகையாலே
ஆழ்வீர் நீர் நிரபேஷரே நீர் -என்ன
களிப்பது என் கொண்டு –
கீழ் நின்ற நிலையிலே எனக்கு அனுதாபம் உண்டாயோ –
அது அடியாக -மாசுசா -என்று உண்டாயோ –
எது ஆலம்பனமாகக் களிப்பது
இத்தால் -அகிஞ்சனன் -என்றபடி –
உமக்கு அனுதாபம் இல்லை யாகில் விடும் அத்தனை அன்றோ வென்னில் –
என் பக்கல் கைம்முதல் இல்லை யானால்
உன் பக்கலிலும் இல்லையோ என்கிறார் –
நம்பி –
நான் உபயாந்தரங்களில் வெறுமையில் பூரணன் ஆனவோபாதி
தேவரீர் சீலாதி குண பரிபூர்ணன் அல்லீரோ –
தேவரீர் உடைய பூர்த்தி சஹகார நிரபேஷம் அன்றோ –
அறிவொன்றும் இல்லாத -அநந்தரம்
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா -என்றாள் இ றே –

கடல் வண்ணா –
தேவரீர் உடைய சீலாதி குண பரி பூர்த்தி எல்லாம் வேணுமோ –
வடிவு அழகே அமையாதோ என் பேற்றுக்கு –
ஒரு கடலோடு ச்ப்ர்தை பண்ணி ஒரு கடல் சாய்ந்தால் போலே இ றே பெரிய பெருமாள் கண் வளர்ந்து அருளுகிறது –
ஐயப் பாடு அறுத்துத் தோன்றும் அழகன் –
இவ் வடிவு அழகு இ றே இவர் பற்றாசாகச் சொல்லிப் போந்தது –
இத்தால் -சரண்யன் -என்றபடி-

உம்முடைய வெறுமையையும்
நம்முடைய பௌஷ் கல்யத்தையும் அறிந்தீர் ஆகில்
இதற்கு மேற்பட வேண்டுவது என் என்ன –
கதறுகின்றேன் –
அந் நிலையிலே தான் நிற்கப் பெற்றேனா –
சாதன அனுஷ்டானம் பண்ணி
பலம் தாழ்ந்தால் கூப்பிடுவாரைப் போலே
சரவண கடுகமாக கூப்பிடா நின்றேன் –
ஸ்வ ரஷணத்திலே கை வாங்கி தேவரீர் கண் வளர்ந்து அருளுகிற
அழகுக்கு மங்களா சாசனம் பண்ணுகையே யாத்ரையாய் இருக்கிறேனோ –
இத்தால் -பலித்ததாய் விட்டது –
ஆசாலேசம் உடையாருக்கு முகம் கொடுக்கக் கடவர்
ஓர் ஆஸ்ரிதன் கூப்பிடா நிற்க அநாதாரித்து நிற்பதே –
என்று நாட்டார் சொல்லும்படி தேவரீருக்கு ஓர் அவத்யத்தை தந்தேன் இத்தனை இ றே –

இப்படி உமக்கு ஒரு நன்மைகளும் இல்லை யாகில்
பின்னை நம்மை செய்யச் சொல்லுகிறது என் என்ன –
அளித்து எனக்கு அருள் செய் கண்டாய் –
என்னை தேவரீருக்கு கிருபா விஷயம் ஆக்கி கிருபை பண்ணி யருள வேண்டும் –
அதாவது
அனுதாபத்தையும் பிறப்பிக்க வேணும் -என்கை –

என் தான் -நமக்கு இங்கனே அடியே தொடங்கி செய்து கொண்டு
போர வேண்டுகிற நிர்பந்தம் தான் என் என்னில் –
அரங்க மா நகர் உளானே –
தம்தாமுக்கு என்ன ஒரு முதல் இல்லாதவரை
ரஷிக்கைக்காக வன்றோ இங்கே வந்து சாய்ந்து அருளிற்று
குறைவற்றாரை ரஷிப்பார்க்கு இங்கே வர வேணுமோ –
அங்கே இருக்கை அமையாதோ –
இங்கே வந்தது
கிடை அழகைக் காட்டியும்
அர்ச்சக பராதீனமான சீலத்தைக் காட்டியும்
ருசியே தொடங்கி உண்டாக்கி
ரஷிக்கைக்காக வன்றோ –

———————————————————————————————————————————————————————–

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: