திரு மாலை-23-கங்கையில் புனிதமாய காவிரி–பெரியவாச்சான் பிள்ளை அருளிய -வியாக்யானம் –

நினைக்கவும் பேசவும் ஒண்ணாது ஆகில்
இவ் விஷயத்தை விஸ்மரித்து தரித்தாலோ -என்ன
பெரிய பெருமாள் உடைய கிடை அழகிலே அதி சபலனான நான்
விஸ்மரித்து எங்கனே தரிப்பேன் –
என்கிறார்

——————————————————————————————————————————————-

கங்கையில் புனிதமாய காவிரி நடுவு பாட்டுப்
பொங்கு நீர் பரந்து பாயும் பூம் பொழில் அரங்கம் தன்னுள்
எங்கள் மால் இறைவன் ஈசன் கிடந்தோர் கிடக்கை கண்டும்
எங்கனம் மறந்து வாழ்கேன் ஏழையேன் ஏழையேனே

————————————————————————————————————————————————

கங்கையில் புனிதமாய காவிரி –
கங்கையைக் காட்டிலும் பாவநமாகிய காவிரி –
தார்ச நீயதையாலும்
போக்யதையாலும்
உண்டான ஏற்றமே ஒழிய வேறு
பாவநத்வத்தாலும் வந்த ஏற்றத்தை உடைத்தாய் யாய்த்து காவிரி இருப்பது –
கங்கா சாம்யம் புராப்ராப்தா தேவ தேவ பிரசாதநாத்
கங்கைக்கு ஒரு நாளிலே திருவடிகளோட்டை ஸ்பர்சத்தாலே
வந்த சுத்தி யோகம் இ றே உள்ளது –

கங்கா அவதாரணா தூர்த்த்வம் ஆகின்யஞ் சாப்யவாபசா –

என்கிறபடியே
தன்னுடைய அசுக்தி போக்குகைக்காக ருத்ரன் சிரசா தரிக்கையாலே ரௌ த்ரம் -என்று சொல்லுவது ஒரு குற்றம் உண்டு –
அவனோட்டை ஸ்பர்சம் உள்ளதொரு பதார்த்தங்கள் நிர்மால்யம் என்று ததீயரான சைவர்க்கும் இ றே அஸ்பர்சமாய் இ றே இருப்பது –
அப்படி அடியுடை ஆளானாலும் தன்னுடைய பாவநத்வத்துக்கு
மயிர்ப்பாடு உண்டாய்த்து –
ஆறு பொதி சடையான் இ றே
ஆகையாலே சிக்கு நாற்றமும் மயிர்ப் பாடும் உண்டே
அது இல்லாத படியாலும்
பெரிய பெருமாள் நடுவே பள்ளி கொள்ளுகையாலும் புனிதம் இ றே
ஆய இருக்கச் செய்தேயும் திருவடிகளோட்டை ஸ்பர்சத்தால்
எங்கேனும் புகுனும் பாவநத்வம்
மேற்பட்டு இருக்கும் யாய்த்து –
உன்தன் அடி சேர்ந்து அருள் பெற்றாள்அன்றே -என்னக் கடவது இ றே –
அப்படிப் பட்ட திருவடிகளை உடையவன் தானே வந்து
படுகாடு கிடக்கிற ஏற்றம் உண்டு இ றே காவிரிக்கு
நடுவு பாட்டு
நடுவிடத்து
யசோதை பிராட்டி மடியிலே சாய்ந்தால் போலே யாய்த்து
காவேரியின் நடுவே கண் வளர்ந்து அருளுகிறபடி-

பொங்கு நீர் பரந்து பாயும் பூம் பொழில் அரங்கம் தன்னுள்
ஜல சமர்த்தியாலே கோயிலைக் கிட்டுகிறோம் என்று
ப்ரீதி பிரகர்ஷத்தாலே
பெரிய கிளர்த்தியோடே வாரா நிற்கும் –

பரந்து பாயும் –
ஒரு மடையால் அன்றியே -தன் நிறம் தேசம் எல்லாம் தோற்ற
எங்கும் ஒக்க பரந்து பாயா நிற்கும் –

பூம் பொழில் அரங்கம் தன்னுள்-
ஜல ச்மர்த்தியாலே பொழில் களும் பூ மாறாதே செல்லும் யாய்த்து
பெரிய பெருமாள் உடைய சௌகுமார்யத்துக்கு அனுகூலமான
ஜல ச்ம்ர்த்தியையும்
நித்ய வசந்தமான பொழிலை யும் உடைய
ஸ்ரமஹரமான தேசம்
இத்தால்
கோயிலினுடைய பாவநத்வமும்
போக்யத்தையும் சொல்லிற்று யாய்த்து –

எங்கள் மால் –
ஆஸ்ரிதர் பக்கல் வ்யாமோஹம் ஒரு வடிவு கொண்டாப் போலே இருக்கை –
எங்கள் -என்று தம்மைப் போலே பெரிய பெருமாள் பக்கல்
ந்யச்த பரராய் இருப்பாரையும் கூட்டிக் கொள்கிறார் –
கோயிலின் பாவநத்வ போக்யத்வங்களைக் கண்டு
சாய்ந்து அருளிற்று என்ற பேராய்
நிரூபித்தால் ஆஸ்ரித வ்யாமோஹ மே ஹேதுவாய்
சம்பந்தம் இன்றிக்கே இருக்கை அன்றியே

இறைவன் –
இவற்றை உடையவனாய் இருக்கை

ஈசன் –
உடையவன் ஆனாலும் நியமிக்க சக்தன் அன்றிக்கே இருக்கை அன்றியே
நல் வழி போக்குகைக்கும் ஷமனாய் இருக்கை

ச்நிக்தனாய் –பிராப்தனாய் –சக்தணாஆய் -இருக்குமவன் -என்கை
குணா த்ரய வச்யத்தை தவிர்த்து –
நித்ய அனுபவம் பண்ணும் தேசத்து ஏறக் கொடு போக நினைத்து
வாத்சல்ய ப்ரேரிதனாய் வந்து
தன உடைமையை தன கருத்திலே நடத்துகைக்காக -கிடக்கிறபடி –

கிடந்ததோர் கிடக்கை –
கீழ்ச் சொன்ன ஆத்ம குணங்களை விஸ்மரித்து கிடை
அழகிலே அகப்பட்ட படி –
நிற்றல் இருத்தல் -செய்தான் ஆகில் மறக்கல் ஆயத்து இ றே –
நாட்டில் அழகியராய் இருப்பாருக்கு -நிற்றல் இருத்தல்
செய்த பொது அழகு தோற்றி –
சாய்ந்தால் தோற்றுவது வைரூப்யமே யாய் இருக்கும் –
இவ் விஷயத்தில் சாய்ந்த போது யாய்த்து அழகு மினுங்கி இருப்பது –
ஸ்ரீ மான் ஸூ க ஸூ ப்த பரந்தப -என்னக் கடவது இ றே

ஓர் கிடக்கை –
ஒருக்கணித்தோ மல்லாந்தோ கண் வளர்ந்து அருளுகிறது என்று தெரியாது இருக்கும்
இவர்கள் தான் நின்றான் ஆகில் -நிலையார நின்றான் -என்பார்கள்
இருக்கக் கண்டால் -பிரான் இருந்தமை காட்டினீர் –என்பார்கள்
சாயக் கண்டால் -கிடந்தோதோர் கிடக்கை -என்பார்கள்     –

கண்டு எங்கனம் மறந்து வாழ்கேன் –
இவ் விஷயத்தை கண்டு அனுபவிப்பதற்கு முன்பாகிலும் மறக்க்கவுமாம் –
கண்டு அனுபவித்த பின்பு இனித் தான் எந்த பிரகாரத்தாலே மறப்பது –

வாழ்கேன் –
இவ் விஷயத்தை விட்டுப் பொய் மணலை முக்கவோ –
அனுபவித்தால் மறக்க ஒண்ணாது
மறந்தால் புறம்பு தரிக்க ஒண்ணாது –

ஏழையேன் ஏழையேனே-
நானோ அத்யந்த சபலனாய்
கிட்டினால் அனுபவிக்க மாட்டேன் –
பிரிந்தால் தரிக்க மாட்டேன் –

ஏழையேன் ஏழையேனே–
முன்பு இதர விஷயங்களிலே அகப்பட்டு சிதிலராய் இருப்பார்
இப்போது பகவத் விஷயத்தில் அகப்பட்டு
புறம்பு கால் வாங்க மாட்டாதே இருப்பார் –
அது கர்மத்தாலே வந்த சைதில்யம்
இது விஷய வை லஷண்யத்தாலே வந்த சைதில்யம்-

—————————————————————————————————————————————————————

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரியப்ராடியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: