திரு மாலை-22–பேசிற்றே பேசல் அல்லால்-பெரியவாச்சான் பிள்ளை அருளிய -வியாக்யானம் –

நினைக்க ஒண்ணா தாகில்
வாய் விட்டு பேசினாலோ -என்ன
மநோ பூர்வோ வாக்குத்தர -அன்றோ
மனசால் பரிச்சேதிக்க ஒண்ணாதா விஷயத்தை பாசுரம் இட்டு முடிக்கப் போமோ –
பேசலாம் என்று -அறிவு கேட்ட நெஞ்சே சொல்லாய் –
என்கிறார் –

——————————————————————————————————————————————————–

பேசிற்றே பேசல் அல்லால் பெருமை ஓன்று உணரலாகாது
ஆசற்றார் தங்கட்கு அல்லால் அறியலாவான் அவனும் அல்லன்
மாசற்றார் மனத்து உளானை வணங்கி நாம் இருப்பது அல்லால்
பேசத்தான் ஆவது உண்டோ பேதை நெஞ்சே நீ சொல்லாய்

—————————————————————————————————————————————————————

உக்தி பிராக்ருத விஷயங்களை பேசுகிறது இல்லையோ -என்ன -அவை பரிச்சின்னம் ஆகையாலே –
இதி அபரிச்சின்னம் ஆகையாலே பேச ஒண்ணாது –
ஸா ஜிஹ்வா யா ஹரிம் ஸ்தௌதி -என்கிற விஷயத்தை கை வாங்கி இருக்கும் அத்தனையோ -என்னில் –

பேசிற்றே பேசல் அல்லால்-
முன்பு வேதங்கள் வைதிக புருஷர்கள் பேசிப் போந்தவை
தன்னையே பேசினோம் இத்தனை போக்கி
இவ் விஷயத்துக்கு ச்த்ர்சமாக ஒரு பாசுரம் இட்டு பேசி தலைக் கட்ட ஒண்ணாது –
பேசிப் போந்தவை தான் எங்கனே என்னில் –
நீல தோயாத மத்யஸ்தா வித்யுல்லகேவ-என்றும்
நீலமுண்ட மின்னன்ன மேனி -என்றும்
அதஸீ புஷ்ப சங்காசம் -என்றும்
ஹிரண்மய புருஷோ த்ர்சயே -என்றும்
ருக் மாபம் -என்றும்
சுட்டு உரைத்த நன் பொன் உன் திரு மேனி ஒளி ஒவ்வாது -இத்யாதி –
இந்த பிராக்ருத விஷயங்கள் அப்ராக்ருத வஸ்துவுக்கு வித்ர்சம் இ றே
இது தன்னைக் கொண்டு இழிவான் என் என்னில்
அதீந்த்ரிய விஷயத்தில் இழியும் போது -ஒரு நிதச்னத்தை கொண்டு இலிய
வேண்டுகையாலே சொன்ன இத்தனை ஒழிய உள்ளபடி சொல்லிற்றாய் தலைக் கட்ட ஒண்ணாது –
வேதங்கள் பேசும் படியே பேசும் அத்தனை அல்லது நம்மால் பேசி முடியாது –

அவை பேசினபடி என் -என்னில் –

அப்ராப்ய -என்று பேசின இத்தனை
அப்படியே பேச ஒண்ணாது என்று பேசும் அத்தனை என்றுமாம்
அதுக்கடி என் என்னில் –
பெருமை ஓன்று உணரலாகாது –
இன்னது போலே என்று ஸதர்ச திருஷ்டாந்தம் உண்டாதல் –
ஏவம் பூதம் என்று பரிச்சேதித்தல்-செய்ய ஒண்ணாது –
இதர விஷயங்களில் வந்தால் உபமானத்து அளவும் உபமேயம் வர மாட்டாது –
இவ் விஷயத்தில் உபமேயத்து அளவும் உபமானம் வர மாட்டாது
ஸ்வரூபம் என்ன
குணங்கள் என்ன
விக்ரஹம் என்ன
விபூதி என்ன –
இவற்றில் ஒன்றையும் பரிச்சேதிக்க ஒண்ணாது என்கை

ஆனால் இவ் வஸ்து ஒருவருக்கும் அறிய லாகாதோ -என்ன –
ஆசற்றார் தங்கட்கு அல்லால் அறியலாவான் அவனும் அல்லன் –
ஆசு -குற்றம்
இனி இத்தை விஷய விபாகம் பண்ணிக் கொள்ளும்இத்தனை
அதாகிறது
உபாய விஷயமாக வரும் குற்றம் –
அதாகிறது
பாரதந்த்ர்யத்துக்கு சேராதவை –
அஹங்கார கர்ப்பமான அசேதன கிரியா கலேபங்களை சாதனமாக நினைத்து இருக்கை –
இதர உபாயங்கள் பல பிரதமாம் இடத்தில் அவனுடைய அனுக்ரஹம் பார்த்து இருக்க வேணும் –
தான் உபாயமாம் இடத்தில் சஹாயாந்தர அபேஷை இல்லை –
இதர உபாயங்களை விட்டு தன்னையே உபாயமாகப் பற்றினார்க்கு அல்லது –
தன்னை உள்ளபடி அறியலாய் இருப்பான் ஒருவனும் அல்லன் –

மாசற்றார்-
இதுவும் ஒரு மானஸ தோஷம் ஆயிற்று –
அதுவும் பிராப்ய ஆபாசங்களிலே பிராப்ய புத்தியைப் பண்ணி இருக்கை –
அவன் தன்னையே பற்றி ஐஸ்வர்யாதிகளை லபித்துப் போகா நிற்பர்கள் –
அங்கன் அன்றியே
அவன் தன்னையே பெற வேண்டும் என்று இருக்கை -மாசறுகை யாவது –

மனத்து உளானை –
இப்படி எல்லாவற்றையும் விட்டு சம்சார நிவ்ருத்தி பூர்வகமாக
ஒரு தேச விசேஷத்திலே நித்ய அனுபவம் பண்ண வேணும் என்று
தன பக்கலிலே சர்வ பரந்யாசம் பண்ணி இருக்குமவர்களுடைய
நெஞ்சிலே நித்ய வாசம் பண்ணுமவன் –
இவர்கள் நெஞ்சுக்கு புறம்பு காட்டு தீயோபாதியாக வாய்த்து நினைத்து இருப்பது –
ஜலசாபதார்த்தங்கள் ஜலத்தை ஒழிய தரிக்க மாட்டாதாப் போலே
இவர்கள் நெஞ்சை ஒழிந்த இடத்தில் தரிக்க மாட்டான் ஆய்த்து –
திருப்பதிகளிலே நித்ய வாசம் பண்ணுகிறதும் ஒரு சுத்த ஸ்வபாவன் உடைய ஹ்ருதயத்தை கணிசித்து இ றே –
என்னிலாத முன்னெலாம் -என்னக் கடவது இ றே –

வணங்கி நாம் இருப்பது அல்லால் –
ஆஸ்ரிதர் நெஞ்சை விட்டு போகாதவன் ஆனபின்பு
அவன் பக்கல் சர்வ பரந்யாசம் பண்ணின நாம்
அவனை அனுபவித்து தரிக்கும் அது ஒழிய
வேறு ஒரு க்ருத்யம் உண்டோ -என்கிறார்

வணக்கம் -என்று சர்வ பிரகார அனுபவத்துக்கும் உப லஷணம்-

பேசத்தான் ஆவது உண்டோ-
அவன் பெருமையை அனுசந்தித்தால்
பாசுரமிட்டு பேசலாய் இருந்ததோ –

பேதை நெஞ்சே-
சூத்திர விஷயங்களைப் பேசிப் போந்த வாசனையாலே
இவ் விஷயத்தையும் உன் மதி கேட்டாலே பேசலாம் என்று இருக்கிறாய் இ றே –

நீ சொல்லாய்-
என் வார்த்தை ஒழிய இவ் விஷய ஸ்வ பாவம் இருந்தபடியாலே
பரிச்சேதித்து பேசலாய் இருந்ததோ –
சாபலம் பண்ணுகிற நீ தான் சொல்லிக் காண் -என்கிறார் –

——————————————————————————————————————————————————————

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரியப்ராடியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: