திரு மாலை-21-பணிவினால் மனமது ஒன்றி-பெரியவாச்சான் பிள்ளை அருளிய -வியாக்யானம் –

அகலப் போகாதாகில்
பரிச்சேதித்து அனுபவிக்கப் போகலாகாதோ -என்கிற
திரு உள்ளத்தைக் குறித்து –
இவ் விஷயத்திலே துணிவு இல்லாமையாலே அநாதி காலம் இழந்த
அறிவு கேடு போலே இருப்பது ஓன்று காண்-இப்போது
பரிச்சேதித்து அனுபவிக்கலாம் என்று கணிசிக்கிற இதுவும் –
என்கிறார் –

—————————————————————————————————————————————————–

பணிவினால் மனமது ஒன்றிப் பவளவாய் அரங்கனார்க்குத்
துணிவினால் வாழ மாட்டாத் தொல்லை நெஞ்சே நீ சொல்லாய்
அணியினார் செம் பொன்னாய வருவரை யனைய கோயில்
மணியினார் கிடந்த வாற்றை மனத்தினால் நினைக்கலாமே

——————————————————————————————————————————————————-

பணிவினால் மனமது ஒன்றிப் –
பணிவதாக வந்து ஒருப்பட்டு
இதர விஷயங்களில் நின்றும் இவ் விஷயத்திலே மனஸை பணிவதாக ஒன்றி –
ஒன்றுகை -ஒருப்படுகை –
இதர விஷயங்களில் போகிற நெஞ்சை அவற்றின் நின்றும் மீட்டு
ப்ராப்த விஷயத்தில் பிரவணம் ஆக்குவோம் என்னும் உத்யோக மாத்ரமே யாய்த்து இவ் விஷயத்துக்கு வேண்டுவது –
இங்கு மனஸ் -என்கிறது மன வ்ர்த்தியை –
பகவத் வ்யதிரிக்த விஷயங்களில் பணிவு தான் உண்டாகிலும் இரங்குகை பாஷிகம் –
இரக்கம் உண்டானாகிலும் பலிப்பது இல்லை –
பகவத் விஷயத்தில் ந நமேயம் -என்கிற பிரதிஞ்ஞை குலையும் மாத்ரமே அமையும் –
சேதனன் உடைய ஆபிமுக்யத்துக்காக ஸ்ர்ஷ்டி அவதாரங்களைப் பண்ணிப் போந்த ஈஸ்வரனுக்கு
விஷயீ ஸூ சக மாத்ரமே அமையும் –
பிரணாமம் தன்னைப் பண்ணினாலும் அது வன்றே பல ப்ரதம் -ஈஸ்வரன் உடைய இரக்கம் இ றே –
இவன் பண்ணுகிற வியாபாரங்கள் அங்கு பலிப்பது ஓன்று இன்றியே இருக்க
அவனுடைய இரக்கத்துக்கு ஹேதுவான படி என் என்னில்
ஒருத்தனை ஒருவன் கை ஓங்குவது எதிரி ஸ்பர்சிப்பது ஓன்று இன்றியே
இருக்க உள்ளதனையும் என்னைப் பரிபவிக்க வந்தான் என்று இருக்கைக்கு ஹேதுவாகா நின்றது இ றே –
இவ்வோபாதி -அஞ்சலியும் எல்லா வற்றையும் கொடுத்து பின்னையும் –
நஜாதுஹேயதே-என்னும் படி பிரிய விஷயமாய் இ றே இருப்பது –
ஏகோபி க்ர்ஷ்னே ஸூ க்ர்த ப்ரணாம –
அஞ்சலி பரமா முத்ரா ஷிப்ரம் தேவ பிரசாதி நீ –

பவளவாய் அரங்கனார்க்குத் –
இவ்வளவு அனுகூல்யம் உடையாரை
முன்புத்தை இழவுக்கு சாந்த்வனம் பண்ணும்
திரு அதரத்தை உடையார்க்கு –
அரங்கனார்க்கு –
எப்போதோ நம்மைக் கிட்டுவது என்று
நித்ய சந்நிஹிதராய் இருக்கிறவருக்கு
துணிவினால் வாழ மாட்டாத் –
வடிவு அழகு தான் பணிவையும் உண்டாக்கி
துணிவையும் உண்டாக்கி
பின்னை அனுபவத்தில் மூட்டி விடும் -ஆய்த்து-

பவளவாய் அரங்கனார்க்கு –பணிவினால் மனமது ஒன்றி –துணிவினால் வாழ மாட்டா –
இவ் விஷயத்தை அனுபவிப்பிக்கைக்கு வ்யவசயாமே யாய்த்து வேண்டுவது –
வ்யவசாயா த்ர்தே ப்ரஹ்மன் நாசாத யுதிதத் பரம் – என்று
பிராப்திக்கு கண் அழிவு அற்ற சாதனம் வ்யவசாயம் காண் என்று உபதேசித்தான் ஆய்த்து –
தன ஆச்சார்யனான வேத வ்யாசனில் காட்டில்
புருஷார்த்த சாதனத்தில் தெளிவுடைய ஜனகன் —

தொல்லை நெஞ்சே-
ஓர் அத்யவசாய மாத்ரத்திலே இவ் விஷயத்தை அனுபவிக்க விடாத இவ் இழவு
நெஞ்சே உனக்கு அநாதி இ றே –

நீ சொல்லாய்-
இவ் விஷயத்தை பரிச்சேதித்து அனுபவிக்கலாம் என்று
நீ தான் சொல்லிக் காணாய் –

அணியினார் செம் பொன்னாய வருவரை யனைய கோயில்
அழகு மிக்கு இருந்ததாய்
செம்பொன்னான அருவரை உண்டு -மகா மேரு
அத்தோடு ஒத்து இருந்துள்ள சம்சாரத்துக்கு
ஆபரணமாய் தர்தச நீயமாய்
ஸ்திரமாய் சர்வ ஆதாரமாய் இருக்காய் –

மணியினார் கிடந்த வாற்றை –
அம மேருவை புடை படத் துளைத்து
அது விம்மும்படி ஒரு நீல ரத்னத்தை
அழுத்தினால் போல் ஆய்த்து கோயில் ஆழ்வாருக்கு உள்ளே
பெரிய பெருமாள் கண் வளர்ந்து அருளுகிறபடி –

கிடந்தவாற்றை -மனத்தினால் நினைக்கலாமே
கண் வளர்ந்து அருளுகிற அழகை கண்டு நெஞ்சாலே பரிச்சேதிக்கலாம் படி இருந்ததோ

ஸ்வரூபத்தை பரிச்சேதிக்கிலும்
தத் ஆஸ்ரயமான கல்யாண குணங்களை பரிச்சேதிக்கிலும்
வடிவு அழகை பரிச்சேதிக்க ஒண்ணாது -என்கை –
நினைவுக்கு பரிகரம் ஆனது ஒழிய
வேறே ஒரு கரணத்தாலே நினைக்கும் இத்தனை காண் –

———————————————————————————————————————————————————–

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரியப்ராடியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: