ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு உகப்பான கைங்கர்யம் கிடைக்குமாகில்
அவர்கள் சஞ்சரிப்பதனால் கொண்டாடத் தக்க தான இந்த உலகத்தில் இருப்பதே புருஷார்த்தம் -என்கிறார் –
அன்றிக்கே
மேல் பாசுரத்தில் சிறு மா மனிசர் -என்றீர்
இங்கே -என்றீர்
இது இருள் தரும் மா ஞாலம் அன்றோ
பகவத் கைங்கர்யத்தை வளர்க்கக் கூடியதான பகவானுடைய அனுபவம்
முற்றும் கிடைப்பது பரம பதத்தில் அன்றோ -என்னில்
அந்த அனுபவம் அவன் திருவருளால் கிடைக்குமாகில்
இங்கேயே வசித்தால் குற்றம் என் என்கிறது –
அங்குத்தை அனுபவத்துக்கும் அவன் திருவருள் அன்றோ காரணம் –
அது இங்கே கிட்டுமாகில் இங்கேயே வசிப்பதனால் குற்றம் என் என்கிறார் -என்றபடி-
——————————————————————————————————————————————————————————————-
இங்கே திரிந்தேற்கு இழுக்கு உற்று என்
இரு மா நிலம் முன் உண்டு உமிழ்ந்த
செங்கோ லத்த பவள வாய்ச்
செந்தாமரைக் கண் என் அம்மான்
பொங்கு ஏழ் புகழ்கள் வாய ஆய்
புலன் கொள் வடிவு என் மனத்தது ஆய்
அங்கு ஏய் மலர்கள் கைய ஆய்
வழி பட்டு ஓட அருளிலே
———————————————————————————————————————————————————————————
இங்கே திரிந்தேற்கு இழுக்கு உற்று என் –
தண்மை -என் –
இரு மா நிலம் முன் உண்டு உமிழ்ந்த –
மிக்க பரப்பை உடைத்தான பூமியை
பிரளய காலத்திலே வயிற்றிலே வைத்து நோக்கி
படைப்பு காலம் வந்த வாறே உமிழ்ந்த –
செங்கோ லத்த பவள வாய்ச் –
பிரளயத்திலே தள்ளினாலும் விட ஒண்ணாத திரு அதரத்தை உடையவன் –
சிவந்து அழகியதான பவளம் போலே இருக்கிற திரு அதரம் –
செந்தாமரைக் கண் என் அம்மான் –
என்னை நோக்காலே -உனக்கு ஜிதம் -எண்ணப் பண்ணினவன்
மேலே கூறிய குணத்தாலும் அழகாலும் என்னை எழுதிக் கொண்டவன் –
பொங்கு ஏழ் புகழ்கள் வாய ஆய் –
பொங்கி எழா நின்றுள்ள கல்யாண குணங்கள்
வாயிலே உழவே –
ஆற்றுப் பெருக்கு போலே கிளர்த்தி உடைத்தாய்
புக்காரைக் கொண்டு கிளர வற்றான குணங்கள் ஆதலின்
பொங்கு ஏ ழ் -என்கிறது –
ஏ ழ் -எழுதல் -மேலே கிளர்தல் –
அன்றிக்கே –
பொங்கி கே ழ் என்று பிரித்து
பரந்து அழகான குணங்கள் -என்று பொருள் கூறலுமாம்
பொங்கி -பரந்து கே ழ் -அழகு –
புலன் கொள் வடிவு என் மனத்தது ஆய்
-எல்லா இந்திரியங்களையும் கொள்ளை கொள்ளத் தக்கதான
வடிவு என்மனத்திலே இருப்பதாய் –
அங்கு ஏய் மலர்கள் கைய ஆய் –
அந்த வடிவுக்கு தக்கதான மலர்கள் கையிலே உளவாய் –
வழி பட்டு ஓட அருளிலே –
நெறி பட்டு செல்லும் படி அருளப் பெறில்-என்றது
மனம் வாக்கு காயம் என்ன இம் மூன்றும் அவன் திருவடிகளிலே
எப்பொழுதும் அடிமை செய்யும்படி அவன் திரு வருளைப் பெற்றால் -என்றபடி –
இங்கே திரிந்தேற்கு இழுக்கு உற்று என் –
பாகவதர்கள் உடைய ப்ரீத்தியின் உருவமான
பகவத் கைங்கர்யத்தை
அவன் திருவருளாலே இங்கே செய்யப் பெறில்
எனக்கு அதுவே பேறு -என்கிறார் –
திரிதந்தாகிலும் தேவபிரானுடை
கரிய கோலத் திரு உரு காண்பன் நான் –
ஆசார்ய ஹிருதயம் -அழும் தொழும் ஸ்நேக பாஷ்ய அஞ்சலியோடு –புலன் கொள் நித்தியா சத்ரு விசிதனம் –
என்ற ஸ்ரீ சூக்தி இங்கே அனுசந்தேயம்
ஜகத்தில் இருப்பே புருஷார்த்தம்
பாகவதர்கள் இங்கே இருக்க –
இங்கே இருந்தால் என்ன இழப்பு வரும்
மா நிலம் உண்டு உமிழ்ந்த –புகழை வாயாலே சொல்லி
கையில் புஷ்பத்துடன் -நெஞ்சால் நினைக்கும் படி
இருள் தருமா ஞாலம் அன்றோ
பாகவதர்கள் சந்தோஷிக்க பகவத் கைங்கர்யம்
அங்குத்தை அனுபவத்துக்கும் அவன் அனுக்ரகம் வேண்டும்
பிரளயத்தில் தள்ளினாலும் விட ஒண்ணாத அழகு
ஜிதம்
அழகாலும் குணத்தாலும் எழுதிக் கொண்டவன்
பொங்கு -குணம் முழுக்க வைக்கும்
அபஹாரம் கொள்ளும் வடிவு
வாக்கு நெஞ்சு கை முக் காரணங்களால் அடிமை செய்ய வாய்க்குமால்
பாகவத ப்ரீதி ரூபமான இந்த பகவத் கைங்கர்யம் பெறில் வேறு ஒன்றும் வேண்டாம்
இங்குத்தை இருப்பே அமையும் என்கிறார்
நேராகா பாகவதர்களை சொல்லா விடிலும்
இப்படி வியாக்யானம் கொண்டு அறிய முடிகிறதே
——————————————————————————————————————————————————————————-
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply