திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -8-10-5-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

இப்படிப் பட்ட பகவானுடைய அனுபவமும்
மேல் கூறிய புருஷார்த்தங்களும் எல்லாம் கூடினாலும் –
தொண்டர்க்கு அமுது உண்ண சொன்மாலைகள் சொன்னேன் –
என்கிறபடியே
பாகவதர்களுக்குப் பிரியமாக திருவாய் மொழி பாடி
அடிமை செய்யும் இதனோடு ஒக்குமோ -என்கிறார் –

—————————————————————————————————————————————————————–

வழி பட்டு ஓட அருள் பெற்று
மாயன் கோல மலர் அடிக்கீழ்
சுழி பட்டு ஓடும் சுடர்ச் சோதி
வெள்ளத்து இன்புற்று இருந்தாலும்
இழி பட்டு ஓடும் உடலினில்
பிறந்து தன் சீர் யான் கற்று
மொழி பட்டு ஓடும் கவி அமுதம்
நுகர்ச்சி உறுமோ முழுதுமே

—————————————————————————–

வழி பட்டு ஓட அருள் பெற்று
கைங்கர்யத்திலே நெறி பட்டுச் செல்லும்படி -அவன் பிரசாதத்தைப் பெற்று நித்ய கைங்கர்யம் பண்ணும் படியாக

மாயன்
ஸுந்தர்ய சீலாதிகளாலே ஆச்சர்ய பூதனானவன்
கோல மலர் அடிக்கீழ்
தர்ச நீயமான புஷ்பம் போலே இருந்துள்ள திருவடிகளின் கீழே
சுழி பட்டு ஓடும் சுடர்ச் சோதி வெள்ளத்து –
ஆற்றுப் பெருக்கு போலே சுழித்து செல்லுகிற –
தேஜஸ் -ஒளி -தரங்களை -அலைகளை உடைத்தான பரம பதத்திலே –
அத்யர்க்கா நல தீப்தம் தத் ஸ்தானம் விஷ்ணோ மகாதமன
ஸ்வ யைவ ப்ரபயா ராஜன் துஷ்ப்ரேஷம் தேவதா நவை -பாரதம் -ஆரண்ய பர்வம் –
சூர்யன் அக்னி ஆகியவற்றின் ஒளிகளைக் கடந்துள்ள
ஒளியுடன் விளங்குகிற
மாகாத்மாவின் ஸ்ரீ மன் நாராயணன் உடைய ஸ்ரீ வைகுண்டம் -என்னக் கடவது -அன்றோ –
இன்புற்று இருந்தாலும் –
ஏஷக்யேவ ஆனந்தயாதி -தைத்ரியம்
என்று அவன் ஆனந்திப்பிக்க -ஆனந்த நிர்ப்பரனாய் இருந்தாலும்
முழுதுமே –
கீழ்ச் சொன்ன ஐஸ்வர் யாதிகளும் செல்வம் முதலானைவைகளும்
இதனோடு கூடப் பெற்றாலும்

இழி பட்டு ஓடும் உடலினில் பிறந்து-
தாழ்வுக்கு எல்லையாம் படி கை கழிய போன சரீரத்தோடு பிறந்து –

தன் சீர் –
நித்ய ஸூரிகளும் குமுழி நீர் உண்ணும்
கல்யாண குணங்களை –

யான் கற்று –
நித்ய சம்சாரியாய்
அந்த குணங்களுக்கு அடைவு இல்லாத நான் அறிந்து –

மொழி பட்டு ஓடும் –
அவை உள் அடங்காமையாலே சொல்லாய் ப்ரவஹியா நின்றுள்ள -வெளிப்படுகின்ற

கவி அமுதம் நுகர்ச்சி உறுமோ –
திருவாய் மொழி யாகிற அமுதத்தை
அனுபவிக்கையோடு ஒக்குமோ –
சுடர்ச் சோதி வெள்ளத்து இன்புற்று இருந்தாலும் முழுவதும்
அவன் அடியார் சிறு மனிசராய் என்னை ஆண்டார் இங்கே திரிய
நறு மா விரை நாள் மலர் அடிக்கீழ் புகுதல் உறுமோ -என்றாரே மேல்
அதனை விட்டு
கவி அமுதம் நுகர்ச்சி உறுமோ முழுதும் -என்கிறாரே இங்கு
அதனை விட்டாராய் இருக்கிறதோ -என்னில் -விட்டிலர்
தொண்டர்க்கு அமுது உண்ணச் சொல் மாலைகள் -9-4-9-என்கையாலே
அவர்களுக்கு அடிமை செய்கிற படி –

தொண்டர்க்கு அமுது உண்ண
திருவாய் மொழி பாடி இங்கேயே
இதுவும் பாகவத கைங்கர்யம் தானே
மாயன் கோல மலர் அடி கீழ்
அழகு வெள்ளம் சுழி
ஆசை படாமல்
உடலினில் பிறந்து -தாழ்ந்த சரீரம்
தனது சீர் யான் கற்று
மொழி பட்டோடும் கவி அமுதும்
திருவாய் மொழி இதனால் பெற்றதோ
சௌந்தர்யம் சீலம் ஆச்சர்ய பூதன்
சுடர் ஜோதி வெள்ளம்
ஆற்று பேருக்கு போலே
சூர்யன் விட பிரகாசம்
அழகு வெள்ளம்
இன்புற்று இருந்தாலும்
அவன் ஆனந்திப்பிக்க ஆனந்தம் அடைந்தாலும்
முழுதும்
கீழ் சொப்ன்னவையும் சேர்ந்து
இங்கே பிறந்து
நித்யர் குமிழ் நீர் உண்ணும் சீர் கல்யாண குணங்களை
நான் அறிந்து
மொழி பட்டு ஓடும்
உள்ளடங்கா மல்
சொல்லாக பிரவிக்கிக்க
கவி அமுதம் –
தொண்டர்க்கு அமுது உண்ண –
இதுவும் பாகவதர் உகப்பதால் –
அடிமை பட்டு இருத்தல் ஆவது
அவர் மகிழும் படி திருவாய் மொழி பாடுவது
என்னை ஆண்டார் இங்கே திரிய –
விட்டிட்டு கவி அமுதம் சொல்கிறார் எதனால்
இதுவும் பாகவர் அடிமை என்பதால் தான் –

————————————————————————————-

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: