செல்வம் என்ன
கைவல்யம் என்ன
இவற்றைக் காட்டிலும் வேறுபட்டதாய்
உயர்ந்ததாய்
பகவல் லாபம் உண்டானாலும்
இங்கே இருந்து ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு அடிமை செய்கைக்கு அது ஒவ்வாது -என்கிறார்
உலகம் அளந்த பொன்னடிக்கு நல்ல ஸ்ரீ வைஷ்ணவர்கள் இங்கே இருந்து
என்னை அடிமை கொள்ளில் –
அதற்கு –
உலகம் அளந்தவன் திருவடிகளில் அடிமை தான்
உறாது -என்கிறார்-
—————————————————————————————————————————————————————————-
உறுமோ பாவியேனுக்கு
இவ்வுலக மூன்றுமுடன் நிறைய
சிறுமா மேனி நிமிர்ந்த
எம் செந்தாமரைக் கண் திருக் குறளன்
நறு மா விரை நாள் மலரடிக் கீழ்
புகுதல் அன்றி அவன் அடியார்
சிறுமா மனிசராய் என்னை யாண்டார்
இங்கே திரியவே-
————————————————————————————————————————————————————————————–
உறுமோ பாவியேனுக்கு-
ஆத்தும அனுபவத்தையும் செல்வத்தையும் குறித்துச் சொன்ன வார்த்தையை
பகவத் விஷயத்திலும் சொல்லுகிறார் –
மேலே கூறியவை போன்று கழிக்க ஒண்ணாது –
புருஷார்த்ததின் எல்லை அல்லாமையாலே கழிக்க வேண்டும் -என்றது –
தள்ளவும் கொள்ளவும் ஒண்ணாத படியான பாவத்தைச் செய்தேன் -என்றபடி –
பாவியேன் –
முதல் நிலத்துக்கும்
முடிந்த நிலத்துக்கும்
வாசி சொல்ல வேண்டும்படியான பாபத்தைச் செய்தவன் –
இவ்வுலக மூன்றுமுடன் நிறைய –
சில ஏரிகள் வற்றிப் பாழாய்க் கிடக்க
நினைவு இன்றிக்கே மழை பெய்ய
நிறைந்து இருக்குமாறு போலே
தன வாசி அறியாதே மூன்று உலகங்களும்
ஒருக்காலே நிறையும் படி –
சிறுமா மேனி நிமிர்ந்த –
கண்களாலே முகந்து அனுபவிக்கா லாம்படி சிறுத்து
அழகுக்கு எல்லை இன்றிக்கே இருக்கிற
திரு மேனியை நிமிர்த்த –
எம் –
உன்னைப் பிரமாணித்தார் பெற்ற பேறு -இரண்டாம் திருவந்தாதி -61- என்றபடியே
அடியார்கட்காக செய்த செயல் அன்றோ –
செந்தாமரைக் கண் திருக் குறளன் நறு மா விரை நாள் மலரடிக் கீழ் புகுதல் –
மலர்த்து -செவ்வி -குளிர்த்திகளுக்கு
தாமரையை ஒப்பாக சொல்லலாம் படி இருக்கிற
கண் அழகை உடைய ஸ்ரீ வாமனனுடைய
அழகிய மிக்க வாசனையை உடைத்தான
நாட்ப்பூ போலே இருக்கிற திருவடிகளின் கீழே புகுதல் –
நறு மா விரை –
நன்றாய் மிக்க வாசனை –
நறு மா விரை நாண் மலரடி காணும்
இவருக்கு வேப்பங்குடி நீராய்
உறுமோ என்று கழிக்கிறது-என்றது
பகவத் விஷயத்திலே -வெளிறு கழிந்த பாகமான இது ஆயிற்று –
பரத்வம் முதலானவைகளை விட அதி சுலபமானது என்பதால் –
இவருக்கு பாகவத புருஷார்தத்தைப் பற்றிக் கழிக்க
வேண்டியது ஆகிறது –
அன்றி –
அவர்களைத் தவிர்ந்து –
அவன் அடியார் –
ஸ்ரீ வாமனனின் அழகிலே தோற்று இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் –
அவர்கள் ஆகிறார்
முன்னம் குறள் உருவாய் மூ அடி மண் கொண்டு அளந்த
மன்னன் சரிதைக்கே மாலாகிப் பொன் பயந்தேன் -பெரிய திருமொழி -9-4-2-
என்று இருக்குமவர்கள் –
சிறுமா மனிசராய் –
வடிவு சிறுத்து பிரபாவம் பெருத்து இருக்குமவர்கள்
சிறுமை பெருமை யாகிற மாறுபட்ட இரண்டு தர்மங்கள்
ஒரு பொருளில் சேர்ந்து இருத்தல் எப்படி -என்று
பட்டர் இளமைப் பருவத்தில் ஆழ்வானைக் கேட்க
நம்மோடு ஒக்க -அன்னம் பானம் முதலானவைகள் தாரகம் -என்னலாய்
பகவத் விஷயத்தில் மூழ்கி இருக்கும் தன்மையைப் பார்த்தால்
நித்ய சூரிகளோடு ஒப்பார்கள் என்னலாய் இருக்கிற
முதலி ஆண்டான்
அருளாள பெருமாள் எம்பெருமானார் ஜீயர்
ஸ்ரீ கோவிந்த பெருமாள் -எம்பார்
இவர்கள் காண்-சிறு மா மனிசர்கள் -ஆகிறார் என்று பணித்தார் –
என்னை யாண்டார் –
என்னை அடிமை கொண்டவர்கள் –
இங்கே திரியவே –
என் கண் வட்டத்திலே சஞ்சரியா நிற்க
அன்றி -நறு மா விரை நாண் மலரடிக் கீழ் புகுதல் -பாவியேனுக்கு உறுமோ –
இவருடைய கண்ணி நுண் சிறு தாம்பு இருக்கிறபடி
ஸ்ரீ மதுர கவிகட்கும் அடி இது அன்றோ –
பொய் நின்ற ஞானம் தொடங்கி-முனியே நான்முகனே -என்ற திருவாய் மொழி முடிய
இவரைத் தொடர்ந்து பின் பற்றிய இடத்து
ஆழ்வார் தமக்கு பிரயோஜனமாக சொன்ன
பயிலும் சுடர் ஒளி –
நெடுமாற்கு அடிமை
என்னும் திருவாய் மொழி களையே தமக்கு தஞ்சமாக பற்றினார்-
எவை எங்களுடைய நல் ஒழுக்கம் களோ அவை கொள்ளத் தக்கவை -என்று
ஆச்சார்யன் சிஷ்யனுக்கு உபதேசிக்கிறார் -என்னக் கடவது அன்றோ –
யாநி அஸ்மாகம் ஸூ சரிதானி
தாநி த்வயா உபாச்யானி நோ இதராணி -தைத்ரியம் -போலே –
பகவல் லாபம் உண்டானாலும்
இங்கே இருந்து ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு செய்யும் அடிமைக்கு ஒவ்வாதே
உலகு அளந்த பொன்னடி –
சிறு மா மனிசரே என்னை ஆண்டார்
இங்கே திரியவே
குறளன் -அடியில் புகுதல் இன்றி –
கழிக்க இதுவும் ஒண்ணாதே
த்யாஜ்யம் இது இல்லை இருந்தாலும்
பிரதம அவதிக்கும் சரம அவதிக்கும்
உலக,ம் மூம்ன்றும் -வியாபித்து
ஏரிகள் வற்றி -மழையால் நிறையுமா போலே
மூன்று உலகும் வியாபித்து
சிரித்து வை லஷண்யம் உள்ள சிறு மா மேனி
என்னுடைய திருக் குறளன்
அடியாருக்கு உத்தேச்யம்
செந்தாமரை
விகாசம் போலே
நாள் பூ போலே திருவடி
நன்றாய் உள்ள பரிமளம் இவருக்கு வேப்பங்குடி
அசாரம் கழித்து-
அது இத்துடன் ஒவ்வாது
பகவத் விஷயம் கோது கழித்து
முன்னம் குறள் உருவாய்
வடிவு சிறுத்து கீர்த்தி மிக்கு
சிறு மா மனிசரே -பட்டர் கூரத் ஆழ்வான் -பால்யத்திலே
வ்ருத்த விசேஷணம்
அன்னம் தாரகாதி
ஆண்டான் அருளாள பெருமாள் எம்பெருமானார் எம்பார்
வடிவிலே சிறுத்து ஞானத்திலே பெருத்து உள்ளார்
அடிமை கொண்டார் இங்கே திரிய
இவருடைய கண்ணி நுண் திரு தாம்பு
மதுர கவிக்கு அடி இதுவே
பயிலும் சுடர் ஒளி நெடுமாற்கு அடிமை தஞ்சமாக பற்றினார்
ஞானி செய்வதை பண்ணு -அவர்கள் உத்தேச்யமாக கொண்டதை
வேதத்தின் உட் பொருள் இந்த இரண்டும்
பொருள் மற்ற திருவாய்மொழி
———————————————————————————————————————————————————————-
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply