திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -8-10-2-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

மேலே கூறிய செல்வத்தோடு
ஆத்ம அனுபவத்தைச் சேர்த்துத் தந்தாலும்
பாகவதர்களுக்கு அடிமைப் பட்டு இருத்தல் ஆகிற
பேற்றுக்கு ஒவ்வாது –
என்கிறார்

———————————————————————————————————————————————-

வியன் மூ வுலகு பெறினும் போய்த்
தானே தானே ஆனாலும்
புயல் மேகம் போல் திருமேனி
அம்மான் புனை பூம் கழல் அடிக் கீழ்
சயமே அடிமை தலை நின்றார்
திருத்தாள் வணங்கி இம்மையே
பயனே இன்பம் யான் பெற்றது
உறுமோ பாவியேனுக்கே

———————————————————————————————————————————————

வியன் மூ வுலகு பெறினும் –
பரந்து இருக்கின்ற மூன்று உலகங்களின் செல்வத்தையும்
என் ஒருவனுக்கே ஆக்கினாலும் –

போய்த் தானே தானே ஆனாலும் –
சம்சார சம்பந்தம் அற்றுப் போய்
கேவல ஆத்துமா அனுபவம் பண்ணப் பெற்றாலும் –
தானே தானே -என்ற அடுக்குத் தொடரால்
சம்சாரத்தில் புத்திரர் பௌத்திரர் முதலானவர்களும் தானுமாய்
வாழ்கின்ற வாழ்க்கையைத் தவிர்ந்து –
பரம பதத்தே போய் -நான் பரமாத்வாவுக்கு இன்யன் நான் பரமாத்மாவுக்கு இனியன்
என்று கழிக்கும் அத்தனையும் விட்டு
அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம்
அஹம் அந்நாத அஹம் அந்நாத அஹம் அந்நாத -தைத்ரியம் –
கேவலம் தானேயாகைத் தெரிவித்த படி –

புயல் மேகம் போல் திருமேனி அம்மான் புனை பூம் கழல் அடிக் கீழ் –
மழை மேகம் போலே இருக்கிற திருமேனியைக் காட்டி
எல்லா உலகங்களையும் எழுதிக் கொண்டு இருக்கிறவனுடைய
சாத்தப் பட்ட பூக்களையும் வீரக் கழலையும் உடைய
திருவடிகளின் கீழே –
அழகு இல்லாதாவனாயினும் விட ஒண்ணாத சம்பந்தத்தை உடையவன்
ஆதலின் -அம்மான் -என்கிறது –

சயமே அடிமை தலை நின்றார் –
அடிமை செய்தலே பிரயோஜனமாக
எல்லா அடிமைகளும் செய்யுமவர்கள் –
அன்றிக்கே
அவனுடைய அழகிலே தோற்று எல்லா அடிமைகளையும் செய்யுமவர்கள் –
சாயம் -ஸ்வயம் அல்லது ஐயம் –

திருத்தாள் வணங்கி-
சரீரத்துக்கு வேறு பட்டதாய் –
நித்தியமான ஆத்துமாவை அடைவதில் காட்டிலும்
அவன் வடிவு அழகிலே தோற்று இருக்குமவர்கள்
வடிவில் ஒரு உறுப்பு அமையும் -என்கிறார் –

இம்மையே பயனே இன்பம் –
சரீரத்தை விட்டுச் சென்று அனுபவிக்கும் அது அன்றிக்கே
இந்த உலகத்தில் பிரயோஜன ரூபமான
சுகமாயிற்று நான் பெற்றது
ஒரு சாதனத்தைச் செய்ய
அச் சாதனத்தாலே கை புகுரும் -என்று நினைத்து இருத்தல் இல்லை
என்பார் -பெற்றது -என்கிறார் –

உறுமோ-
இதனோடு ஒக்குமோ –

பாவியேனுக்கே –
நிலை நின்ற புருஷார்த்தின் எல்லைக்கும்
புருஷார்த்தம் அல்லாத்தற்கும்
வாசி சொல்லும்படியான பாபத்தைச் செய்தவன்
பாபத்தைச் செய்தவன்-

பகவத் விஷயம் அனுபவம் அல்லாமையாலே
ஆத்துமா அனுபவம் புருஷார்த்தம் ஆக மாட்டாது
செல்வம் போலே நிலை அற்றது அல்லாமையாலே
நிலை நின்ற புருஷார்த்தம் ஆகும் என்றபடி

ஆத்ம அனுபவம் ஐஸ்வர் யதுடன் சேர்த்து கொடுத்தாலும்
இதுக்கு ஒவ்வாது என்கிறார் –
தானே தானாய் ஆனாலும் –
அடிமை தலை நின்றார் திருத் தாள் வணங்கி இம்மையே பயனே யான் பெற்றது
சுயமே அடிமை -சுயம் பிரயோஜனமாக செய்வார்
த்ரை லோகய ஐஸ்வர் யம் எனக்கே ஆக்கினாலும்
தானே தானே –
குழந்தை சம்சாரம் விட்டு
அஹம் அன்னம் அஹன் அன்னம் இல்லாமல்
புயல் மேகம் போலே திருமேனி
வீரக் கழல் திருவடி
விட ஒண்ணாத சம்பந்தம் பிராப்தன்
சுயமே -சுயம் பிரயோஜனமாக எல்லா அடிமை களும் செய்பவர்
ஜெயம் -சௌந்தர்யத்தில் தோற்று அடிமை செய்பவர்
பாகவதர் முழுக்க வேண்டாம்
அடியில் ஏக தேசம் போதும்
இம்மையே சரீரம் விட்டு அனுபவிக்க
தேகாந்தரே தேசாந்தரே இல்லை
சாதனம் செய்து காத்து இருக்க வேண்டாமல் –
இங்கேயே இப்பொழுதே நான் பெற்றது உறுமோ
இதுக்கும் அதுக்கும் வாசி சொல்ல வேண்டிய பாவம் –
பகவத் விஷயம் இல்லை அபிராப்தம்
சம்சாரம் விட நித்யம் -அஸ்திரம் இல்லை
இருந்தாலும் இதற்க்கு ஒவ்வாதே-

————————————————————————————————————————————————————————

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: