நிகமத்தில்
இப்பத்தைக் கற்றவர் ஸ்வரூபத்துக்கு தகுதியான
கைங்கர்யத்தைச் செய்யப் பெறுவர்
——————————————————————————————————————————————–
நேர்பட்ட நிறை மூவுலகுக்கும்
நாயகன் தன்னடிமை
நேர்பட்ட தொண்டர் தொண்டர் தொண்டர்
தொண்டன் சடகோபன் சொல்
நேர்பட்ட தமிழ் மாலை
ஆயிரத்துள் இவை பத்தும்
நேர்பட்டார் அவர் நேர்பட்டார்
நெடுமாற்கு அடிமை செய்யவே
———————————————————————————————————————————————
நேர்பட்ட நிறை மூவுலகுக்கும் நாயகன் தன் –
குறைவு அற்ற மூன்று உலகங்கட்கும் நேர்பட்ட நாயகன்
எந்த நாதனால் மூன்று உலகங்களும் நல்ல நாதனை
உடையவன ஆகுமோ -என்கிறபடியே
பாது காக்கப் படுகின்ற பொருள்களின் அளவு அன்றிக்கே
இருக்கிற
பாது காக்கின்ற தன்மையின் துடிப்பு
இதனால் நாயகன் படி சொல்லிற்று –
அந்த இராமன் தகுந்த நாதன் என்னுமா போலே
அடிமை நேர்பட்ட தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் –
இதனால் இவர் படி சொல்கிறது –
அவன் இறைவனாம் தன்மைக்கு எல்லை ஆனால் போன்று
இவர் அடிமை யாம் தன்மைக்கு எல்லை யாம்படி –
சொல் நேர்பட்ட தமிழ் மாலை ஆயிரத்துள் இவை பத்தும் நேர்பட்டார் –
அந்த தகுதியான நாயகனுக்கு
தகுதியான சொற்கள் வாய்ந்த
தமிழ் தொடை ஆயிரத்திலும்
இத் திருவாய்மொழி நேர் பட்டவர்கள் –
அவர் நேர்பட்டார் நெடுமாற்கு அடிமை செய்யவே –
நெடுமாற்கு அடிமை செய்ய நேர் பட்டார் –
இவர் பாசுரத்தை சொன்னவர்
இவர் செய்ய விரும்பிய கைங்கர்யத்திலே சேரப் பெறுவர் –
நேர் படுகை -சொல்லப் படுகை -சொல்லப் பட்டார் -என்றபடி –
ஆக
இப்பாட்டால்
சர்வேஸ்வரனுடைய ஸ்வரூபத்தையும்
ஆத்ம ஸ்வரூபத்தையும்
இவற்றைச் சொல்லுகிற பிரபந்தத்தின் சிறப்பினையும்
இதனைக் கற்றவர்கள் பெரும் பேற்றின் சிறப்பினையும்
சொல்லிற்று ஆயிற்று —
நிகமத்தில்
ஸ்வரூப அனுரூபமான கைங்கர்யம் செய்யப் பெறுவார்
நேர்பட்ட -அனைத்துக்கும் நாயகன்
தொண்டர்க்கு -தொண்டர் -தாச தாச -சரமாவதி
கட்டளைப் பட்ட 1000 பாடல்கள்
அடிமை செய்ய நேர்பட்டவர்கள் அவர்
நாயகன் இவன் -ரஷ்யகத்தின் துடிப்பு -நாயகன் படி
ஆழ்வார் படி மேல் சொல்கிறது –
சேஷித்வம் எல்லை -அவன் -சேஷத்வம் எல்லை இவர்
பாகவத சேஷத்வம் சினை ஆறு பட்டுபோசிந்து
பட்டர் -திரு நறையூர் 100 பாசுரம் வரும் முன்
திரு நறையூர் தேனே -முன்னம் சொல்லி
அனுபவம் சினை ஆறு படுகிறது கிடாய்
பொசிந்து காட்டுமே வெள்ளம் வரும்முன்
சொல் நேர் பட்ட தமிழ் மாலை –
அவன் பெருமைக்கு தகுதியான இனிமையான மாலை
இவர் போலே கைங்கர்யம்
சர்வேஸ்வரன் ஸ்வரூபம்
ஸ்வ ஸ்வரூபம்
பிரபந்த வை லஷண்யம்
அப்யசிதார் பிராப்யம்
சொல்லி தலைக் கட்டுகிறார்
—————————————————————————————————————————————————-
கருமால் திறத்தில் ஒரு கன்னிகையாம் மாறன்
ஒரு மா கலவி யுரைப்பால் -திறமாக
அந்நியருக்காகாது அவன் தனக்கே யாகுமியிர்
அந்நிலையை யோரு நெடிதா
சாரம்
கருமால் திறத்து
ஒரு கன்னிகையாம் மாறன்
ஒரு மா கலவி உரைப்பாள்
ஒருவிதமாக தெரிவிக்க நினைக்கும் தோழி
அன்னியருக்கு ஆகாது ஆத்மா
இந்நிலையை தெளிவாக
அருளிச் செய்த மாறன் –
—————————————————————————————————————————————————————
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply