நீ சொல்லுகிறவை எல்லாம் கிடக்க
இவளை அவனுக்கு கொடுக்க வேண்டியதற்கு
தக்கபடி சிறந்த காரணங்கள் உண்டாகில்
சொல்லிக் காணாய் –
என்று சொல்லுகிறாள்-
—————————————————————————————————————————————————–
அன்றி மற்றோர் உபாயம் என்
இவள் அம்தண் துழாய் கமழ்தல்
குன்ற மா மணி மாட மாளிகைக்
கோலக் குழாங்கள் மல்கி
தென் திசைத் திலதம் புரை
குட்ட நாட்டுத் திருப் புலியூர்
நின்ற மாயப் பிரான் திருவருளாம்
இவள் நேர் பட்டதே
——————————————————————————————————————————————–
அன்றி மற்றோர் உபாயம் என் இவள் அம்தண் துழாய் கமழ்தல் –
வேறு மற்று ஓர் உபாயம் உண்டோ –
இவள் -அழகியதாய்
குழிந்த திருத் துழாய் நாறுகைக்கு –
இராச புத்திரனை அணையாதார்க்கு கோயில் சாந்து
நாறுகைக்கு விரகு உண்டோ –
என் உடம்பாதல்
உங்கள் உடம்பாதல்
திருத் துழாய் நாறுகின்றதோ –
அம்தண் துழாய் கமழ்தல் –என்கிறதற்கு –
அங்கீ காரத்துக்கு அறிகுறியாய் இருக்கிறது -எனபது
உள்ளுறை பொருள் -ஸ்வாபதேச பொருள்
குன்ற மா மணி மாட மாளிகைக் கோலக் குழாங்கள் மல்கி –
மலை போன்று சலிப்பிக்க ஒண்ணாததாய்
பெரு விலையனான ரத்னங்களால் செய்யப் பட்டு இருந்துள்ள
மாடங்களின் உடையவும் மாளிகைகளின் உடையவும்
காட்சிக்கு இனிய குழாம் களால் மிக்கு –
தென் திசைத் திலதம் புரை குட்ட நாட்டுத் திருப் புலியூர் நின்ற மாயப் பிரான் –
தெற்குத் திக்குக்கு திலகம் போலே இருக்கிற
குட்ட நாட்டுத் திருப் புலியூரில்
நின்று அருளின ஆச்சர்யத்தை உடையவன் -என்றது –
அவனுக்கு இவள் தக்கவள் அல்லள்-என்னும்படி அன்றோ
அவன் குணங்களால் மேம்பட்டு இருப்பது -என்றபடி –
திருவருளாம் இவள் நேர் பட்டதே –
இவள் நேர்பட்டது அவன் திருவருளாம் –
அன்றிக்கே
அன்றி மற்று ஓர் உபாயம் என் இவள் அம் தண் துழாய் கமழ்தல் -என்பதற்கு
அவன் திருவருளேயாம் -என்றாள்-
இதுவேயோ -வேறு அடையாளம் வேண்டோ -என்ன
அம் தண் துழாய் கமழ்தல் ஒழிய வேறு அடையாளம் உண்டோ -என்கிறாள்
என்று பொருள் கூறலுமாம்
அசாதாராண லஷனம் உண்டா
அற்று தீர்ந்தாளா
அங்கம் காட்டிக் கொடுக்குமே
திருத் துழாய் பரிமளம் வீச
ஸ்வாப தேசம் அங்கீகாரம் திருத் துழாய் கமழுதல் –
இவள் இடத்தில் அசாதாராண லஷணம் ஏதேனும் உண்டாகில் சொல் என்கிறாள் இதில் –
சம்பந்தம் உண்டானதுக்கு அடையாளம் உண்டா –
திருத் துழாய் மனம் கமழ்கிறதே-என்கிறாள் இதில் –
அன்றி மற்று ஓர் உபாயம் என்-வேறு யாருக்கும் கொடுக்க முடியாது
மண விலக்கு –
குன்றம் போன்ற மாளிகைகள்
தென் திசைக்கு திலகம் போலே -புரை =போலே
அவன் மாயப்பிரான் -ஆழ்வார் அருளிய திரு நாமமே
அற்புத நாராயணன் திருகடித்தான் –
அழகிய குளிர்ந்த துறுத் துழாய் -நாறுகிறதே
வேறு மற்று உபாயம் உண்டா
ராஜா புத்ரனை அணைத்தல் தான் கோயில் சாந்து மணம் வீசம்
என் உடம்பிளுமுங்கள் உடம்பிலும் மணம் வீச வில்லை
அங்கீகார சூசகம் இது -ஸ்வாபதேசம்
ஆத்ம சம்பந்தம் –
மலை போலே -ரத்னன்களால் செய்யப் பட்ட மாடங்கள் குழாம் மல்கி
குட்ட நாட்டு திருப் புலியூர் தென் திசை திலகம் போலே
அவனுக்கு இவள் போதுமா என்னும்படி இவன் கு ணாதிக்யம்
நின்ற மாயப்பிரான் –
அவன் திருவருளேயாம் –
வேறு மற்று உபாயம் இல்லை –
—————————————————————————————————————————————————————
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply