ஸ்ரீ திருப்பாவை -குத்து விளக்கு எரிய -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் வியாக்யானம் –

அவதாரிகை –

இவள் திறக்கப் புக
நம்முடையாருக்கு இவள் திறக்க முற்பட்டாளாக ஒண்ணாது என்று இவளைத்
திறக்க ஒட்டாதே கட்டிக் கொடு கிடக்கிற
கிருஷ்ணனை எழுப்பி –

அங்கு மறுமாற்றம் கொள்ளாமையாலே மீளவும்-
அவளை உணர்த்துகைக்காக
அவளை எழுப்பு கிறார்கள் –

இத்தால்
ஆஸ்ரிதர்க்கு மாறி மாறி பரிகைக்கு-
என் அடியார் அது செய்யார் -என்னுமவனும்
ந கச்சின் ந அபராதி -என்னுமவலும்
இருவரும் உண்டு என்கை-

குத்து விளக்கு எரிய கோட்டுக் கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறிக்
கொத்தலர் பூம் குழல் நப்பின்னை கொங்கை மேல்
வைத்துக் கிடந்த மலர் மார்பா வாய் திறவாய்
மைத் தடங்கண்ணினாய் நீ யுன் மணாளனை
எத்தனை போதும் துயில் எழ ஒட்டாய் காண்
எத்தனை ஏலும் பிரிவாற்ற கில்லாயால்
தத்துவமன்று தகவேலோ ரெம்பாவாய்

பதவுரை

குத்து விளக்கு–நிலை விளக்குளானவை
எரிய–(நாற்புரமும்) எரியா நிற்க,
கோடு கால் கட்டில் மேல்–யானைத் தந்தங்களினாற் செய்த கால்களை யுடைய கட்டிலிலே
மெத்தென்ற–மெத்தென்றிருக்குமதாயும்
பஞ்ச சயனத்தின் மேல் ஏறி–(அழகு, குளிர்த்தி மென்மை, பரிமளம், வெண்மை என்னும்)
ஐந்து குணங்களையுடைய துமான படுக்கையின் மீதேறி
கொத்து அலர் பூ குழல்–கொத்துக் கொத்தாக அலர்கின்ற பூக்களை யணிந்த கூந்தலை யுடையளான
நப்பின்னை–நப்பின்னைப் பிராட்டியினுடைய
கொங்கை–திருமுலைத் தடங்களை
மேல் வைத்து–தன் மேல் வைத்துக் கொண்டு
கிடந்த–பள்ளி கொள்கின்ற
மலர் மார்பா–அகன்ற திருமார்பை யுடைய பிரானே!
வாய் திறவாய்–வாய் திறந்து ஒரு வார்த்தை அருளிச் செய்ய வேணும்
மை தட கண்ணினாய்–மையிட்டு அலங்கரிக்கப் பெற்றதும் விசாலமுமான கண்ணை யுடைய நப்பினாய்!
நீ–நீ
உன் மணாளனை–உனக்குக் கணவனான கண்ண பிரானை
எத்தனை போதும்–ஒரு நொடிப் பொழுதும்
துயில் எழ ஒட்டாய்–படுக்கையை விட்டு எழுந்திருக்க ஒட்டுகிறாயில்லை;’
எத்தனையேலும்–க்ஷண காலமும்
பிரிவு ஆற்ற கில்லாய்–(அவளைப்) பிரிந்து தரித்திருக்க மாட்டுகிறாயில்லை;’
ஆல்–ஆ! ஆ!!.
தகவு அன்று–நீ இப்படி இருப்பது உனக்குத்) தகுதியானது’
தத்துவம்–(இஃது) உண்மை’
ஏல் ஓர் எம் பாவாய்

குத்து விளக்கு எரிய கோட்டுக் கால் கட்டில் மேல்
அர்த்திகள் வாசலிலே நிற்க ஒரு அனுபவம் உண்டோ -என்கிறார்கள் –
எங்களைப் போலே ஊர் இசைவும் வேண்டாதே
கீழ் வானம் வெள்ளென்றது என்ற பயமும் இன்றிக்கே
நள்ளிருட்கண் என்னை உய்த்திடுமின் -என்று இருட்டு தேடவும் வேண்டாதே
பகலை இரவாக்கிக் கொண்டு
விளக்கிலே கிருஷ்ணன் முகத்தைப் பார்த்துக்கொண்டு
படுக்கையிலே கிடக்கப் பெறுவதே
இது என்ன ஐஸ்வர்யம் -என்கிறார்கள் –
இவள் அவனுக்கும் பிரகாசமான விளக்காய் இருக்க-ஓர் நிலை விளக்கு உண்டாவதே –

கோட்டுக் கால் கட்டின் மேல் –
குவலையா பீடத்தின் கொம்பைப் பறித்து கொண்டு வந்து செய்த கட்டில் இறே –
வீர பத்னி ஆகையாலே-இவளுக்கு இது அல்லது கண் உறங்காது –
எங்களைப் போலே ஸ்ரீ கிருஷ்ணனைத் தேடித் போக வேண்டாதே
உள்ளத்துக்குள் கூசாமல் கிடக்கப் பெறுவதே -இது என்ன பாக்கியம் –

மெத்தென்ற –
மதத்தை ஆகிலும்-கட்டில் -ஜாதி பேச்சு-
கிருஷ்ணனுக்காக ஆராதைகளாக வந்து
படுக்கையின் உள்மானம் புறமானம் கொண்டாடிக் கொண்டு படுக்கை பொருந்துவதே –
கண் உறங்குவதே

பஞ்ச சயனத்தின் மேல் ஏறிக்
பஞ்ச விதமான படுக்கையின் மேல் ஏறி -அதாவது
அழகு -குளிர்ச்சி -மார்த்த்வம் -பரிமளம் -தாவள்யம் -ஆக இவை
இவர்களுக்கு மென் மலர்ப் பள்ளி வெம் பள்ளி யாய் இறே இருப்பது –
அஞ்சு உருவிட்டுச் செய்த படுக்கை -என்றுமாம் –
பஞ்சாலே செய்த படுக்கை என்னுமாம் –

மேலேறி -நாங்கள் மிதித்து ஏறினால் அன்றோ-நீ படுக்கையிலே ஏறுவது என்கை –

கொத்தலர் பூம் குழல் நப்பின்னை –
திருக் குழலில் ஸ்பர்சத்தாலே கொத்துக் கொத்தாக-அலரா நின்றுள்ள பூவை உடைத்தான குழல்-
காலம் அலர்த்துமா போலே-அவனோட்டை பிரணய கலகத்தால் அலருகை -வாசம் செய் பூம் குழலாள் இறே –

கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர் மார்பா –
கொங்கையைத் தன் மேலே வைத்துக் கிடக்கை –
கொங்கை மேல் தன்னை வைத்து கிடந்த என்னவுமாம் –
பிரணயம் இருக்குமாறு –
மலையை அண்டை கொண்டு ஜீவிப்பாரைப் போலே –
மலராள் தனத் துள்ளான் -என்னக் கடவது இறே —

மலர்மார்பா –
திரு முலைத் தடங்கள் உறுத்துகையாலே
அகன்று இருந்துள்ள மார்பு இவ் விக்ருதியால்
சதைக ரூப ரூபாயா -என்றதோடு விரோதியாதோ
என்னில் விரோதியாது
அது ஹேய குணங்கள் இல்லை என்கிறது
ஆஸ்ரித சம்ஸ்லேஷத்தில் அவிகாரித்வம் அவத்யம் இத்தனை இறே –

வாய் திறவாய் –
உன் கம்பீரமான மிடற்று ஓசையாலே
ஒரு வார்த்தை சொல்லாய்
தன்னால் அல்லது செல்லாதே
உன் புறப்பாடு பார்த்து இருக்கிற எங்களுக்கு
ஒரு வார்த்தையும் அரிதோ –
அவள் புறப்பட ஒட்டாள் ஆகில் -கிடந்த இடத்தே கிடந்தது
மாசுச என்ற உக்தி நேருகையும் அரிதோ –

மைத் தடங்கண்ணினாய் –
இவன் மறுமாற்றம் சொல்லப் புக –
நம்மை ஒழிய தாங்களே எழுப்புவதே என்று
கண்ணாலே வாய் வாய் என்று வாயை நெரித்தாள் –
அழகாலும் பரப்பாலும் கண்ணிலே அகப்பட்டவன்
அக்கடலை கரை கண்டால் இறே நம்மைப் பார்ப்பது-

மை இட்டு எழுதோம் -என்று இருக்கிற எங்களையும்
மை இடப் பண்ணினால் அன்றோ நீ கண்ணுக்கு மை இடுவது –
உன்னுடைய கண்ணில் அழகும் பெருமையும்
எங்கள் பேற்றுக்கு உடல் என்று இருந்தோம் –
அது இழவுக்கு உடலாவதே –

நீ –
அவனைப் பெறுகைக்கு அடியான நீ-அவனை விலக்கக் கடவையோ –

உன் மணாளனை –
சர்வ ஸ்வாமி-என்கிற பொதுவே ஒழிய-உனக்கே ஸ்வம்மாய்
நீ புருவம் நெறித்த இடத்திலே கார்யம் செய்யும்படி பவ்யனாய் இருக்கும் இருப்பு
எங்களுக்கு உடல் என்று இருந்தோம்
அங்கன் இன்றிக்கே
இது உனக்கே சேஷம் என்று இருக்கிறோம் -என்கிறார்கள் –

எத்தனை போதும் பிரிவாற்றாயாகில் –
அது உன் குறையோ -அவனை ஷண காலமும் பிரிய மாட்டாத
உன்னுடைய பல ஹானியின் குறை அன்றோ –
அகலகில்லேன் இறையும் என்று ஷண கால விஸ்லேஷமும்
பொறுக்க மாட்டாமையாலே
அவனோட்டை நித்ய சம்யோகம் எங்களுடைய லாபத்துக்கு
உடலாகை ஒழிகை விபரீத பலம் ஆவதே –

தத்வம் அன்று தகவு –
தத்வம் -சத்யம்
தகவன்று -தர்மம் அன்று
எங்கள் அறியாமையில் சொல்லுகிறோம் அல்லோம் –
மெய்யே தர்மம் அன்று –

தகவு -தத்துவம் அன்று –
உனக்கு அவனில் வாசி இல்லை என்று இருக்கிறோம்

அதவா
தத்வமன்று
தத்வம் -ஸ்வரூபம் –
உன் ஸ்வரூபத்துக்கும் போராது –

தகவன்று –
உன்னுடைய ஸ்வ பாவத்துக்கும் போராது
உன்னுடைய புருஷகார பாவத்துக்கும் போராது
கிருபைக்கும் போராது –

—————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: