திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -8-9-7-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

கேவலம் கொடையாளனாக மட்டும் இருந்தால் போராதே-
காதல் குணம் உண்டாக வேணுமே -என்ன
அவ் ஊரில் தாவரங்களும் கூட ஒன்றுக்கு ஓன்று
பற்றுக் கோடாம்படி அன்றோ
அவனுடைய காதல் குணம் இருந்த படி -என்கிறாள் —

——————————————————————————————————————————————————-

மெல்லிலைச் செல்வ வண் கொடிப் புல்க
வீங்கிளந்தான் கமுகின்
மல்லிலை மடல் வாழை
ஈன் கனி சூழ்ந்து மணம் கமழ்ந்து
புல்லிலைத் தெங்கினூடு
காலுலவும் தண் திருப் புலியூர்
மல்லலஞ் செல்வக் கண்ணன் தாள் அடைந்தாள்
இம் மடவரலே

————————————————————————————————————————————————————–

மெல்லிலைச் செல்வ வண் கொடிப் புல்க-
மிருதுவான இலையை உடைத்தாய்
ஆர்வத்தை உடைத்தாய்
இருக்கிற வளவிய கொடிகள் தழுவ –
தன் கணவனான காமுக்கு தன் உடம்பை
முற்றூட்டாக கொடுக்கும் போலே காணும் –

வீங்கிளந்தான் கமுகின் –
கொடி தழுவ தழுவ வளரா நின்று
ஒருகாலைக்கு ஒருகால் இளகா நின்றுள்ள
தாளையை உடைய கமுகு –
அப்ரமேயம் ஹி தத் தேஜ யஸ்ய சா ஜனகாத்மஜா
நத்வம் சமர்த்த தஸ்தாம் ஹர்த்தும் ராம சாபாஸ்ரயம் வனே -ஆரண்ய -37-18-
அந்த ஜனக குலத்தில் பிறந்த பிராட்டி எவருக்கு மனைவியாக
இருக்கிறாளோ அவருடைய பராக்கிரமம் அளவிடற்கு அரியது –
என்னும் நியாயத்தாலே –
ஒரு ஆயர் மடக்கொடியானவள் மது என்கிற அசுரனைக் கொன்ற கிருஷ்ணனுடைய
தொழில் கொடி போன்ற கையைக் கொடுத்தாள் –
பரிவ்ருத்தி ச்ரமேண எகா சலத்வலய சாலிநீ
ததௌ பாஹூ லதாம் ச்கந்தே கோபீ மது நிகாதின -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-13-54-
என்கிறபடியே –
கமுகின் மல்லிலை மடல் வாழை –
கமுகொடே கூடின பெரிய இலையையும்
மடலையும் உடைய வாழை
வெற்றிலைக் கொடிக்கும் கமுகுக்கும் வெய்யில் தட்டாதபடி
நிழல் செய்து நிற்குமாயிற்று வாழை –

ஈன் கனி சூழ்ந்து-
பழத் தாறுகள் தெற்றிக் கிடக்குமாயிற்று –

புல்லிலைத் தெங்கினூடு-
புல்குதல் -தழுவுதல்
ஒன்றுக்கு ஓன்று தழுவப் பட்ட இலையை உடைய தெங்கு -என்னுதல்
வாழை இலையோடு தழுவின தெங்கு -என்னுதல்
சோலை நெருக்கத்தாலே
நேரிதான இலையை உடைய தெங்கு என்னுதல் –

மணம் கமழ்ந்து -காலுலவும் தண் திருப் புலியூர் –
காற்றானது
விளைவது அறியாதே புக்கு
வாசனையில் ஆகையாலே -அங்கே இங்கே சுழித்து
வாசனையை ஏறிட்டுக் கொண்டு
வாழை நெருக்கத்தாலே நெருக்கப் பட்டு
சிறிய வெளியை உடைய தெங்கின் சோலையிலே புறப்பட்டு
சஞ்சரிக்கும் படியான திருப் புலியூர் –

மல்லலஞ் செல்வக் கண்ணன் –
தனக்கு மேல் ஓன்று இல்லாததாய்
அழகிதான செல்வத்தை உடைய
கண்ணன் –

தாள் அடைந்தாள் –
காதல் குணத்துக்கு தோற்று
திருவடிகளைப் பற்றினாள் –

இம் மடவரலே –
முன்பு எனக்கு அடங்கினவளாய் போந்த இவள் கண்டீர்
மீட்க ஒண்ணாதபடி ஆனாள் –

பிரணயிதவம் வேற உண்டே
ஸ்தாவரங்களும் பரஸ்பர சிநேகம் காட்டா நிற்க
வெற்றிலை கொடி பாக்கு மரத்திலே படர்ந்து உள்ளதே
தலைவன் எப்படிய் இருப்பான்
மடவரல்
மல்லல் -செல்வம்
கண்ணன் தாள் அடைந்தாள்
மெல்லிய இலைகள் உள்ள வெற்றிலை கொடி
இளம் தாள் கமுகு
வாழை பழுத்து செறிந்து நிழல் கொடுக்க
தெங்கும் கலந்து பழக –
பர்தாவான கமுகு உடம்பை முற்றூட்டாக கொடுக்க
இளம் கமுகு கொடி ஸ்பர்சத்தால்
பிராட்டி -யஸ்ய ஜனகாத்மஜா ராமன் தேஜஸ் அப்ரமேயம்
இளம் தாள் -இளைமையாக உள்ளதே
போகம் அனுபவித்து தேஜஸ் மிக்கு
பாஹூ-கோபிகள் கொடி போலே -மது நிரசனன்-அணைத்து கொண்டது போலே –
நிழல் செய்து வாழை
ஈன் கனி
காற்று மணம்-ஏறிட்டு கொண்டு –
தென்னஞ்சோலை வழியாக
மல்லல் அம் செல்வம் நிரவதிக அழகிய செல்வம்
முன்பு எனக்கு பவ்யமாக இருக்க
அவன் இடம் சேர்ந்தாள் இன்று

————————————————————————————————————————————————————————–

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: