Archive for September, 2013

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -7-7-2-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

September 26, 2013

ஆட்டியும் தூற்றியும் நின்றுஅன்னை
மீர்!என்னை நீர்நலிந்து என்?
மாட்டுயர் கற்பகத் தின்வல்லி
யோகொழுந் தோஅறியேன்
ஈட்டிய வெண்ணெய்உண் டான்திரு
மூக்குஎன தாவியுள்ளே
மாட்டிய வல்விளக் கின்சுட
ராய்நிற்கும் வாலியதே.

பொ – ரை : தாய்மார்களே1 நீங்கள், என்னை வருத்தியும் பழி மொழிகளைக் கூறியும் நின்று நலிவதனால் பயன் யாது? திரட்டிய வெண்ணெய் உண்டவனான கிருஷ்ணனது அழகிய மூக்கானது, பக்கத்தில் உயர்ந்து விளங்குகின்ற கறபகத்தின் கொடியோ? அல்லது, கொழுந்தோ? அறியேன்; அது, என்னுடைய உயிருக்குள்ளே ஏற்றிய வலிய விளக்கினது சுடராய் நிற்கும் பெருமையையுடையது.

வி – கு : ‘திருமூக்கு வல்லியோ, கொழுந்தோ அறியேன்; திருமூக்குச் சுடராய் நிற்கும் வாலியது,’ என்க.

ஈடு : இரண்டாம் பாட்டு. 1‘இரண்டுக்கும் நடுவே நாம் இருக்க, இவை முற்படுகையாவது என்? அத்தனையோ நம் மூக்கு வலி?’ என்று திருமூக்கில் அழகு நலிகிறபடியைச் சொல்லுகிறது.

ஆட்டியும் தூற்றியும் – ஆட்டுகையாவது, தாம் தாம் பழி சொல்லி அலைக்கை. தூற்றுகையாவது, பிறரும் அறியப் பழி சொல்லுகை நின்று – 2‘அச்சம் உறுத்தி மீட்கலாமோ?ய என்று ஒருகால் அலைக்கை இயல்பே அன்றோ? அங்ஙன் அன்றிக்கே, முன்பு செய்ததற்கு ஒரு பிரயோஜனம் காணாதிருக்கச் செய்தேயும் விடாதே நின்று. அன்னைமீர் என்னை நீர் நலிந்து என் – 3ஹிதத்திலே நடக்கும் தமப்பனைப் போலே, என் பிரியத்திலே நடக்கும் நீங்கள் என்னை நலிகிறது என்?4என் உகப்பே பேறாக நினைத்திருக்கக்கூடிய நீங்கள் நலிகிறது என்? 5அந்த உருவு வெளிப்பாட்டைத் தடைசெய்யலாம் என்றோ, என்னை மீட்கலாம் என்றோ? ஒரு பிரயோஜனம் இல்லாததிலேயும் முயற்சி செய்யக் கடவதோ?’ என்பாள், ‘நலிந்து என்’ என்கிறாள். என்றது, 1‘அவனுடைய மூக்கு வலி இருக்கிறபடியையும் அறிந்து நீங்கள் என் செய்யப்படுகிறீர்கோள்?’ என்றபடி.

2‘நாங்கள் சொல்லுகிற ஹித வசனத்துக்கு ஒரு பிரயோஜனம் இல்லையாகில், என் செய்தால் பிரயோஜனம் உண்டு?’ என்ன, மாடு உயர் கற்பகத்தின் வல்லியோ கொழுந்தோ அறியேன் – வல்லீர்கோளாகில் இந்தச் சந்தேகத்தை அறுத்துத் தாருங்கோள். ஒரு கடல் அருகே அக்கடல் ஊற்றே தாரகமாக வளருகிறது ஒரு கொடி போலே ஆயிற்று. திருக்கண்களுக்கு அருகே திருமூக்கு இருக்கிறபடி. மாடு – அருகு. 3‘உந்நஸம் – உயர்ந்த மூக்கையுடைய’ என்கிறபடியே‘உயர்’ என்கிறது. ‘

ஸூசி ஸ்மிதம் கோமள கண்டம் உந்நஸம்   லலாட பர்யந்த விலம்பிதாலகம்’-என்பது, தோத்திரரத்தினம், 32.

4ஒழுகு நீட்சியாலே கொடி என்னவுமாய், ஊக்கம் மாறாமையாலே கொழுந்து என்னவுமாய் இராநின்றதாதலின், ‘வல்லியோ கொழுந்தோ’ என்கிறது. ‘இன்னது’ என்று நிச்சயிக்க அரிதாக இருக்கையாலே‘அறியேன்’ என்கிறது. ‘முற்றுவமை இருக்கிறபடி, எங்களுக்கு அறியப்போமோ? இதிலே உட்புகநின்று அனுபவிக்கிற நீ பின்னைச் சொல்லாய்’ என்ன, சொல்லுகிறாள் மேல்:

ஈட்டிய வெண்ணெய் உண்டான் திருமூக்கு – 5அநுகூலர்களுடைய சம்பந்தமுடைய திரவியத்தால் அல்லது தரிக்க மாட்டதே வெண்ணெய் களவு காணப் புக்குக் கொண்டியிலே பிடி உண்டு, பின்பு அதனை இல்லை செய்கைக்காக முகத்திலே தடவிக்கொள்ளுமே;அவ்வெண்ணெயிலே முடை நாற்றமும் உருவு வெளிப்பாட்டிலே தோற்றுகிறதாயிற்று இவளுக்கு. 1அப்போதை முடைநாற்றம் தோற்றும்படியாயிற்று உருவு வெளிப்பாட்டில் மெய். ‘நீ காண்பதாகச் சொல்லுகிற இது எங்களுக்குத் தெரிகிறது இல்லையே!’ என, எனது ஆவியுள்ளே – என் மனதிற்குள்ளே. மாட்டிய – ‘சுடர்வெட்டிய’ என்னுதல்: ‘ஏற்றிய’ என்னுதல், வல் விளக்கின் சுடராய்-விரக தாபத்தாலே அவியாத விளாக்காயிற்று. 2‘‘ஏற்றிய பெருவிளக்கு’ என்று ஒருதமிழ்புலவன் இட்டு வைத்தான்’ என்று அருளிச்செய்வர். நிற்கும் வாலியதே – வலிதாய் நின்று நலியாநிற்கும்.3‘விளக்காகிறது தான் சிறிது நேரம் இருப்பதுமாய் ஓர் இடத்திலே இருப்பதுமாய் அன்றோ இருப்பது? இது அங்ஙன் அன்றிக்கே, எப்போதுமாய் எங்கும் உண்டாய் இராநின்றது: பாதகத்துவத்தில் உறைப்பை நினைத்துச் சொல்லுகிற வார்த்தை அன்றோ இது?

திரு மூக்கின் அழகில்
இரண்டுக்கும் நடுவே நாம் இருக்க
மூக்கு வலி பலம் அர்த்தம்
வாளியது கொடியது
ஹிம்சை செய்தும் வைத்தும் என்ன பயன்
மாட்டுயர்
மாடு பக்கம்
உயர்ந்த கல்ப மரத்தில் வல்லியோ கொழுந்தோ
வெண்ணெய் உண்டவன் திரு மூக்கு
தான் பழி நேராக சொல்வது ஆட்டுகை தூற்றுகை வெளியில் வைத்து -பிறர் அறிய
அச்சம் உறுத்தி மீட்க -அங்கன் இன்றிக்கே
விடாதே -நின்றும் -தொடர்ந்து வைத்து
நலிந்து என்ன பலன்
தாய் பிரியம்
தமப்பன் ஹிதம்
உகப்பே பேறாக கொள்ள வேண்டிய தாயார் நலிவதால் என்ன பயன்
அவனுடைய மூக்கு வலி அறிந்தும்
பலம் அறிந்தும்
ஹிதம் பிரயோஜனம் இல்லை
சம்சயம் அறுத்து
கற்பகத்தின் கொடியா கொழுந்தா சொல்லும்
மாடு பக்கம்
கண்ணுக்கு அருகில்
கடல் அருகில் கடல் முத்தே தாரகமாக உள்ள கொடி போலே
உன்மதம் -ஆளவந்தார் ஸ்தோத்ரம்
கோமள கண்டம் உன்மதம் எடுப்பான மூக்கு உயர்
ஒழுகு நீட்சியால் கொடி
செவ்வை மாறாமல் கொழுந்து
அறியேன்
உட் புகா நின்ற நீயே சொல்லு என்ன
ஈட்டிய வெண்ணெய்
அனுகூலர் கர ஸ்பர்சம் பட்ட வெண்ணெய் உத்தேச்யம்
ஈட்டிய திரட்டிய
கர ஸ்பர்சம் வெண்ணெய் க்கு தானே உண்டு
கையாலே தான் எடுக்க வேண்டும்
அகன்று எடுத்து நீர குறைய
சந்தனம் வச்த்ரத்தால் புழிந்து போலே வெண்ணெய் பண்ண முடியாதே
கையை ஆட்டி -ஈரப் பதம் குறைந்து
தரிக்க மாட்டாமல் களவு காண புக்கு
கையும் களவாக பிட் பட்டு
இல்லை செய்கைக்காக முகத்தில் தடவிக் கொண்டான்
முகம் தனக்கு தெரியாதே
எனக்கே தெரியாமல் காவலுக்கு தெரியுமா
வெண்ணெய் உண்டான் திரு மூக்கு
உரு வெளிப்பாட்டில் வாசனையும் பாவனா பிரகர்ஷம் முடை நாற்றம் இடை பேச்சு போலே
முடை நாற்றமும் கிடைத்தது இவளுக்கு
உரு வெளிப்பாட்டில் மெய்மை
எனது ஆவி உள்ளே -ஹிருதயதுக்கு
மாட்டிய -ஏற்றிய
விரகத்தாலும் அணையா விளக்கு திரு மூக்கு
ஏற்றிய பெரு விளக்கு மாட்டிய பெரு விளக்கு போலே
வலிதாய் நின்று நலியா நிற்கும்
தீபம் ஷணிகமாய்-பௌததன் -சுடர் புதியதாக திரி தீர சுடர் போகுமே
தொடர்ச்சியாக எரிவதால் ஒரே சுடர் ஆக தெரியும்
ப்ராதேசிகம் -ஒரே இடத்தில் இருக்கும் தீபம்
திரு மூக்கோ -எப்போதுமே எங்கும் உண்டாய் இரா நின்றது
பாதகத்தின் உறைப்பை உறுதி பட சொல்லுகிறாள்
மாட்டிய -சுடர் வெட்டிய வலிய வன்மை பெருமை சுடர் போலே இருக்கும்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -7-7-1-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

September 26, 2013

ஏழாந்திருவாய்மொழி-‘ஏழையர்’

முன்னுரை

    ஈடு : 1மேல் திருவாய்மொழியிலே ‘மல்கு நீலச் சுடர் தழைப்பச் செஞ்சுடர்ச் சோதிகள் பூத்து ஒரு மாணிக்கம் சேர்வது போல், அந்தரமேல் செம்பட்டோடு அடி உந்தி கை மார்பு கண் வாய், செஞ்சுடர்ச்சோதி விட உறை என் திருமார்பனையே’ என்று அவன் வடிவழகினைச் சொன்னார்; அவ்வடிவழகுதானே நெஞ்சிலே ஊற்றிருக்க, அதனையே பாவித்த காரணத்தாலே, அந்த பாவனையின் மிகுதியாலே கண் கூடாகக் காண்பதே போன்றதாய், பின்பு கண் கூடாகப் பார்ப்பதாகவே நினைத்து அணைக்கக் கணிசித்துக் கையை நீட்டி. அப்போதே பெறாமையாலே தமக்கப் பிறந்த ஆற்றாமையை, எம்பெருமானோடேகலந்து பிரிந்து உருவு வெளிப்பாட்டாலே நோவுபடுகிறாள். ஒரு பிராட்டி பாசுரத்தாலே அருளிச்செய்கிறார்.

3சர்வேஸ்வரனோடே கலந்த பிரிந்து தளர்ந்து உருவு வெளிப்பாட்டாலே நோவுபடுகிறாள் ஒரு பிராட்டி. 3ஒருவர் ஒருவரோடு கலக்கும் போது 4காட்சி முன்னாகப் பின்பே அன்றோ மற்றைப் பரிமாற்றங்களை ஆசைப்படுவது? ஆகையாலே, திருக்கண்களின் அழகைக் கூறி, அவ்வழியாலே திருமுகத்தில் அழகைக் கூறி பின்பு அவ்வருகே சில பரிமாற்றலகளை ஆசைப்பட்டு அப்போதேஅது கைவாராமையாலே நோவுபட; இவள் நிலையைக் கண்ட தோழிமாரும் தாய்மாரும், ‘உனக்கு ஓடுகிறது என்?ய என்று கேட்க, 1ஆற்றாமை பிரசித்தமாயினபடியால் சிலர்க்குச் சொல்லிச் சிலர்க்கு மறைக்கும்படியான நிலை இல்லையே! ஆகையாலே, அவர்களைக் குறித்து, ‘அவனுடைய திருமுகத்தில் அழகானது தனித்தனியும் 2திரளவும் வந்து நலியாநின்றது’ என்ன, ‘நீ இங்ஙனே சொல்லுமது 3உன்னுடைய பெண்மைக்குப் போராது; அவனுடைய தலைமைக்கும் போராது; 4நீதான் எங்களை நோக்கக் கடவதாய் இருப்பது ஒரு தன்மை உண்டே அதுக்கும் போராது; ஆன பின்பு, இதனைத் தவிர்,’ என்று ஹிதம் சொல்லுவாரும் பொடிவாருமாக; ‘நீங்கள் பொடிகிற இதனைக் கேட்டு மீளும் அளவு அன்று அது என்னை நலிகிறபடி; 5இனித்தான் ஏதேனுமாக உறைத்ததிலே ஊன்றி நிற்குமத்தனை அன்றோ? 6ஆன பின்பு, நீங்கள் என்னை விட்டுப் பிடிக்க அமையும்,’ என்று அவர்களுக்குத் தன் பக்கல் நசை அற வேண்டும்படி தனக்குப் பிறந்த ஆற்றாமையை அறிவிக்கறாளாய் இருக்கிறது.

7
‘இவர்க்குத் திருவாய்மொழி எங்கும் ஓடுகிற தன்மைகள் சர்வேஸ்வரனுடைய குணங்களை ஆசைப்படுகையும், அதுதான்

மானஸ அனுபவமாய் இருக்கையும், அனுபவித்த குணங்கள் ஒழிய மற்றைய குணங்களிலே விருப்பம் செலுத்துதலும்.1அதுதன்னில் கிரமப் பிராப்தி பற்றாமையும், அதுதான் மேல் நின்ற நிலையை மறக்கும்படி செய்கையும் ஆகிற இவையே அன்றோ? அவற்றைக் காட்டிலும், உருவு வெளிப்பாடாகச் சொல்லுகிற இதில் ஏறின அமிசம் என்?’ என்னில், ‘முன்பு பிறந்த தெளிவும் கிடக்கச் செய்தே மேலே விருப்பத்தை உண்டாக்குமது அன்றோ உருவு வெளிப்பாடாகிறது? 2மற்றைய இடத்தில், முன் பிறந்த தெளிவை அழித்தே அன்றோ மேலில் விருப்பம் பிறப்பது? ‘எங்ஙனேயோ?’ என்ற திருவாய்மொழியிலும் 3பெரும்பாலும் இதுவே அன்றோ ஓடுகிறது? அதில் இதற்கு வாசி என்?’ என்னில், அதில் பிரீதியும் பிரீநி இன்மையும் சமமாக இருக்கும்; இங்குப் பிரீதி இன்மை மிக்கிருக்கும். 4திருக்கண்களில் அழகை ‘இணைக்கூற்றங்கொலோ!’ என்னும்படியாயிற்று இங்குத் தீங்கு செய்வதில் உறைப்பு இருக்கும்படி.

                 729   

        ஏழையர் ஆவிஉண்ணும்
இணைக்கூற்றங்கொ லோஅறியேன்
ஆழியங் கண்ணபிரான்
திருக்கண்கள்கொ லோஅறியேன்
சூழவும் தாமரைநாண்
மலர்போல்வந்து தோன்றுங்கண்டீர்
தோழியர் காள்!அன்னைமீர்!
என்செய்கேன்துய ராட்டியேனே.

பொ-ரை : தோழிமீர்காள்! அன்னைமீர்காள்! கடல் போன்ற நிறத்தையுடைய அழகிய கண்ணபிரானுடைய திருக்கண்கள், பெண்களினுடைய உயிர்களை உண்ணும்படியான இரண்டு கூற்றங்கள் தாமோ? அறியேன்! அல்லது, திருக்கண்கள்தாமோ? அறியேன்! அத்திருகண்கள் நான்கு புறங்களிலும் அன்று மலர்ந்த மலர்கள் போன்று வந்து தோன்றாநின்றன; வருத்தத்தையுடைய யான் என்ன செய்வேன்?

வி – கு :
 கூற்றம் – உயிரையும் உடலையும் கூறுபடுபடுத்துமவன்; யமன். கண்டீர் – முன்னிலையசை.

இத்திருவாய்மொழி கலிநிலைத்துறை.

ஈடு : முதற்பாட்டு. 1‘இம்முகத்துக்குக் கண்ணாக இருப்பவர் நாம் அன்றோ?’ என்று முற்படத் திருக்கண்களின் அழகு வந்து தம்மை நலிகிறபடியை அருளிச்செய்கிறார்.

ஏழையர் ஆவி உண்ணும் இணைக்கூற்றங்கொலோ அறியேன்- 2ஒவ்வொரு விஷயத்திலே விருப்பத்தைச் செய்து, அவை பெறாவிடில் தரிக்கமாட்டாத பலம் இல்லாத பெண்களுடைய பிராணன்களை முடிக்கிற கூற்றுகள் இரண்டோ?3பிரிந்து ஆற்றாமையை விளைத்தவனுக்கும் அன்றிக்கே, ‘இது ஆகாது’ என்று ஹிதம் சொல்லி மீட்கப் பார்க்கும் பருவம் கழிந்த தாய்மார்க்கும் அன்றிக்கே, அபலைகளையே முடிப்பன இரண்டு கூற்றமோ! 4தன் கண் அழகு தான் அறிகின்றிலனே! தன்னையும் நலிந்ததாகில் வாரானோ? 5கண்ணாடிப் புறத்திலும் கண்டு அறியானோ? இராமபாணம்போலே, ஒப்பனை குறி அழியாதே இருக்க உயிரை முடியாநின்றது ஆதலின், ‘ஆவிஉண்ணும்’  என்கிறது. 1கூற்றுவர் இருவர் தங்களிலே கிருத சங்கேதராய் வந்தாற்போலேகாணும் திருக்கண்களில் அழகு பாதகமாகின்றன என்பாள், ‘இணைக் கூற்றங்கொலோ’ என்கிறாள். ‘‘அறியேன்’ என்பான் என்? ‘கூற்றம்’ என்று அறுதியிட்டாலோ?’ என்னில், கூற்றுவர் இருவர் கிருத சங்கேதராய் வந்தாலும் அபலைகளையே நலியவேண்டும் நிர்ப்பந்தமில்லையே! ‘ஆடவர்களுடைய கண்ணையும் மனத்தினையும் கவர்கின்றவர்’ அன்றோ? அதனாலே ‘அறியேன்’என்று சொல்லுகிறது.

ஆழி அம் கண்ணபிரான் திருக்கண்கள்கொலோ அறியேன் – 2அன்றிக்கே, பெண் பிறந்தாரையே நலிக்கூடியவைகள் தாமேயோ? 3அற்பம் அண்ணியாரே பாதகராம் அன்று தப்ப விரகு இல்லை; இப்படி முதலுறவு பண்ணிப் பொருந்தவிட்ட இத்திருக்கண்கள் தாமேயோ? .-4உபகாரம் செய்தலையே சுபாவமாகவுடைய கிருஷ்ணனுடைய கடல் போலே திருக்கண்கள் என்னுதல்; அன்றிக்கே, ‘கடல் போன்ற சிரமஹரமான வடிவையுடைய உபகாரசீலனான கிருஷ்ணனுடைய திருக்கண்கள்’ என்னுதல். அறியேன் – 5இதற்கு முன்பு பிரிந்து அறியாமையாலே திருக்கண்கள் பாதகமாம் என்றுஅறியக் காரணம் இல்லை. 1‘உயிர்க்கு எல்லாம் தாயாய் அளிக்கின்ற தண் தாமரைக்கண்’-பெரிய திருமொழி, 7. 1 : 9- என்றே அன்றோ கேட்டிருப்பது? இக்கடாக்ஷமே தாரகமாக அன்றோ உலகம் அடைய ஜீவிப்பது? நாம் கேட்டிருந்தபடி அன்றிக்கே இராநின்றது, இப்போது காண்கிறபடி. ‘ஆனால், தப்பினாலோ?’ என்னில்,

சூழவும் தாமரை நாண்மலர் போல் வந்து தோன்றும் கண்டீர் – 2மூலபலத்தின் அன்று பார்த்த இடமெல்லாம் பெருமாளே ஆனாற் போலே ஆயிற்று; 3இராம பாணத்துக்கு இராக்கதர்கள் தப்பலாம் அன்றாயிற்று, இக்கண்களின் அழகின்கீழ் அபலைகளாய் இருப்பார்க்குத் தப்பலாவது? 4‘புண்டரீக நெடுந்தடங்கள் போலப் பொலிந்து எமக்கு எல்லா இடத்தவும்’ –திருவிருத்தம், 39.-என்னக் கடவது அன்றோ?பாம்பைக் கண்ட அச்சம் போலே இருக்கை. 6இறாய்க்க நினைத்த இடம் எங்கும் தானேயாய் இராநின்றது. 7‘இப்போது ‘தாமரை நாண்மலர் போல்’ என்பான் என்?’ என்னில், 8‘பூஜிக்கத்தக்கபிராட்டியே! அந்தப் பெருமாள் தேவரீரைப் பார்க்காத காரணத்தால் மிகப்பெரியதாயும் எரிந்துகொண்டு இருக்கிற நெருப்பினாலே சூழப்பட்ட நெருப்புமாலை போன்று பரிதபிக்கிறார்,’ என்றும், 1‘நைவதம் ஸாந் ந மஸகாந் –

‘ஸ தவ அதர்ஸநாத் ஆர்யே ராகவ: பரிதப்யதே
மஹாத ஜ்வலதா நித்யம் அந்நிநேவாக்நிபர்வத:’-
என்பது, ஸ்ரீராமா. சுந். 35 : 44.

நைவ தம்ஸாந் நமஸகாந் ந கீடாந் ந ஸரீஸ்ருபாந்
ராகவோபநயேத் காத்ராத் த்வத் கதேநாந்தராத்மநா’-என்பது, ஸ்ரீராமா, சுந். 36 : 42.

அதற்கு-துடைக்க அறியாமல் இருந்ததற்கு. ‘என்றான்’ என்றது, ஸ்ரீ வால்மீகியை.

‘கன்மத்தை ஞாலத் தவர்ஆர் உளரே கடப்பார்?
பொன்மொய்த்த தோளான் மயல்கொண்டு புலன்கள் வேறாய்
நன்மத்தை நாகத் தயல்சூ டியநம்ப னேபோல்
உன்மத்த னானான் தனைஒன்றும் உணர்ந்தி லாதான்.’-என்பது, கம்பராமா. உருக்காட்டுப்பட. 84.

பெருமாள் ஊர்ந்ததும் கடித்ததும் துடைக்க அறியார்’ என்றும் சொல்லப்படும் நிலை அன்றோ அவருடை நிலை? ‘நன்று; அதற்கு அடி என்?’ என்ன, ‘த்வத்கதேநாந்தராத்மநா-உன்னிடத்தில் வைத்த மனத்தையுடையவராதலாலே’ பெருமாள் இங்கே குடி போர, அங்கு இவை யார்தான் அறிவார் என்றான் அன்றோ? பிரிவில் இவ்வளவு அன்று அன்றோ அத்தலைக்கு2ஆற்றாமை? 3அதனை அறிகிலலே இவள். 4தன்னோடே வந்து கலந்த விளைநீர் அடைத்துக்கொண்டு பிரிகிற போதைச் செவ்வி அன்றோ இவள் அறிவது? அதுவே அன்றோ இவள் நெஞ்சில் பட்டுக் கிடப்பது? 5பின்பு அவன் பட்டது அறியாளே; ஆகையாலே, 6தாமரை நாண்மலர் போல்’ என்று சொல்லுகிறாள். வந்து தோன்றும் – 1பிரித்தியக்ஷத்திலே அத்தலையாலே வரவு ஆனாற்போலே உருவு வெளிப்பாட்டிலும் அத்தலையாலே வந்து தோன்ற ஆயிற்றுத் தான் அறிகிறது. கண்டீர் – உங்களுக்கு இது தோற்றுகிறது இல்லையோ? தோழியர்காள் அன்னைமீர் – 2சிலர்க்குச் சொல்லிச் சிலர்க்கு மறைக்கும்படியன்றே இவள் நிலை? என்றது,3‘தோழிமார்க்குச் சொன்ன இதனைத் தாய்மார்க்குச் சொல்லுவோம் அல்லோம்,’ என்று மறைக்கும் அளவு அன்று ஆயிற்று, இவளுக்குப் பிறந்த நிலை விசேடம்,’ என்றபடி. என்செய்கேன் – 4இதனைத் தப்பப் பார்ப்பதோ, அனுபவிக்கப் பார்ப்பதோ? எதனைச் செய்கேன்? துயராட்டியேனே – 5‘இறைவனுடைய ஆனந்தத்தை அறிந்தவன் எப்பொருளினின்றும் அஞ்சான்,’ என்று இருக்க வேண்டி இருக்க, அங்ஙன் அன்றிக்கே, ‘அவசியம் அனுபவிக்கத் தக்கது’ என்கறிபடியே,6பழைய கிலேசமே அனுபவிக்கும்படி ஆயிற்றே.

‘ஆநந்தம் ப்ரஹ்மணோ வித்வாந் நபிபேதி குதஸ்சந’-என்பது, தைத்திரீ.

‘இடராக வந்தென்னைப் புன்சிறு தெய்வங்கள் என்செயுமான்
இடராக வன்பிணி மாநாக மென்செயும் யான்வெருவி
இடராக வன்னி புனல்இடி கோள்மற்றும் என்செயும்வில்
இடராக வன்அரங் கன்திருத் தாள்என் இதயத்ததே.’-என்ற திருவரங்கத்தந்தாதிச்செய்யுள், மேற்சுலோகப்பொருளோடு ஒப்பு நோக்கல் தகும்.

திவ்ய அவயவங்களை வர்ணிக்கிறார்
மானச அனுபவம் மாத்ரமே கொண்டு
பிரத்யஷம் புத்தி பண்ணி –
அணைக்க கை நீட்ட பெறாமையால் ஆற்றாமை மிக்கு
பிராட்டி தசையில் அருளும் திருவாய்மொழி –

அவயவங்கள் ஒவ் ஒன்றையும் அனுபவிக்கிறார்
திருமுக மண்டலம் மட்டும் பத்து பாட்டாலும் அனுபவிக்கிறார்
அழகு வெள்ளம் பாதகம் ஆனபடி
உபகரிக்க வில்லையே
நாயகி பாவத்தால் –
கீழே -நெஞ்சிலே உஊடு இருந்து
மல்கு நீள் சுடர் –மாணிக்கம் பூத்தாப் போலே இருக்க –
செம் பாட்டோடு
அடி உந்தி –வாய்
செஞ்சுடர் -என்னுடைய திரு மார்பனை அனுபவம்
பாவனா பிரகர்ஷத்தால் நினைவின் முதிர்ச்சி
பிரயஷா சமானாகாரமாய்
அணைக்க கணிசித்து –கை நீட்ட -கிட்டப் பெறாமையால்
மோதரம் பார்த்து -பர்த்தாவை -சீதை பிராட்டி அணைத்தாப் போலே –
பிறந்த ஆற்றாமையை விண்ணப்பிக்கிறார்
கலந்து பிரிந்த பிராட்டி வார்த்தையாக -உரு வெளிப்பாட்டால் -பிரத்யஷ சமானாகாரம்
உருவம் மானசமாக வெளிப்பட்டு
நோவு படுகிறாள் ஒரு பிராட்டி –
திருஷ்டி தானே முதலில் -சேதனர் சேதனர் கலக்கும் பொழுது
திருக் கண்களின் அழகாய் அனுசந்தித்து
அவ வழியாலே திரு முகம் அவயவங்களை அனுசந்தித்து
துக்கப் பட
தோழி தாய் இவள் தசை பற்றி கேட்க
இருவரையும் குறித்து சொல்லும் பாசுரம் –
திரு முக அழகு தனித் தனியேவும் சேர்ந்தும் நலிய
திரளவும்
அமலனாதி பிரான் -பாத கமலம் நல்லாடை உந்தி –
கண்கள் -மேனி -ஐயோ நிறை கொண்டது என் நெஞ்சினையே
தனித் தனி -லாவண்யம் அவயவ சோபை
சௌந்தர்யம் சமுதாய சோபை -திரளாக வந்து நலிய –
எழில் லாவண்யம்
அழகு -சௌந்தர்யம்
கேட்ட தாய் தோழி -இங்கனே சொல்லுவது ஸ்த்ரீத்வத்துக்கு தகாதே
அவனுடைய தலைமைக்கும் போராது
நீ தான் எங்களை பார்க்க வேண்டிய ஸ்வா பாவத்துக்கும் சேராது
பொடிகிற ஹிதம் சொல்லும் இருவரும் சொல்ல
உறைதத்திலே ஊன்றி நிற்கும்
விட்டு விட அமையும் -தம் பக்கல் நசை அறும்படி
சொல்லும் வார்த்தை இந்த திருவாய்மொழி
குணங்கள் -அனுபவித்து -புத்தி பண்ணி -க்ரம பிராப்தி பற்றாமை
துடிக்க பண்ணி கீழ் நின்ற நிலை மறக்க பண்ணும்
கதிர் பொறுக்குவது போலே
இதுவே ஆழ்வார் ஸ்வபாவம் எல்லா திருவாய் மொழியிலும்

எல்லா வற்றிலும் இந்த திருவாய் மொழி
கீழ் பிறந்த -மேன் மேலும் அபெஷை
கீழ் நின்ற நிலை அழியாமல்
எங்கனே -அன்னைமீர்காள் -இதுவே ஓட
அங்கே ப்ரீதியும் அப்ரீதியும் கலந்து விசேஷம்
அதில் இதுக்கு வாசி என்ன
இங்கே அப்ரீதியே முக்கியம் –
சப்தங்கள் -திருக் கண்கள் -இணைக் கூற்றம் -கொலோ –

இந்த முகத்துக்கு நேத்ரபூதர் -பார்வைக்கு இலக்காவது
திருக் கண்கள் தானே
முற்பட வந்து நலிய –
பிரதான பூதர் -நேத்ரபூதர் –

துயராட்டியேன் என் செய்கேன்
ஏழையர்-ஸ்திரீகள் அர்த்தம் –
இல்லாதவர் -ஞானத்தால் ஏழை -சபல புத்தி நைப்பாசை உள்ளவர் –
ஆவி உண்ணும் இணைக் கூற்றங்கள்
இரட்டையாக வந்த
சூழவும் –
தாமரை நாள் மலர் போலே -அன்றே அலர்ந்த பூ -சுற்று சிதறி வந்து தோன்றி நலிய –
ஏழையர் -சாபலத்தை பண்ணி பெற மாட்டாமல் தரிக்க மாட்டாத அபலைகள்
பிராணனை முடிக்கும் மிருத்யுகள் இரண்டும்
அபலைகளையே முடிக்கும்
அவனுக்கும் தோழிக்கும் அன்னைக்கும் பாதகம் இல்லை –
இருந்து ஆற்றாமை விளத்தவனுக்கும்
பருவம் நிரந்த தாய் மாறுக்கும் இல்லை
தன கண் அழகு தான் அறிந்தவன் இல்லையே
பிரிந்து இருக்க மாட்டாள் அறியாதவன்
தன்னையும் நலிந்ததாகில் வாரானோ
கண்ணாடிப் புரத்திலும் கண்டு அறியானோ
ராம சரம் போலே
ஏழையர் இல்லை ஏழையர் ஆவி
ஒப்பனை குறி அழியாமல் உயிர் முடிக்கும்
வஸ்தாசுரன் -இரண்டு பேரும் வந்தாப் போலே
அறியேன் –
மிருத்யு -அபலைகளையே நலிய வேண்டுமா
பும்ஸாம் திருஷ்டி சிந்தா அபஹரினாம்
ஆழி அம கண்ண பிரான்
பெண் பிறந்தார் மட்டும் நலிய கடவவான் உடைய
முதல் உறவு பண்ண பொருந்த விட்ட திருக் கண்கள்
கடாஷித்து ஆக்கியவை
அண்ணியாரே பாதகமாம் படி -நெருங்கியவை முன்பு
கண்ணபிரான் நெருங்கியவன் அர்த்தத்தால்
கடல் போன்ற கண்கள் ஆழி அம கண்ணபிரான்
கண்ணன் -அழகிய கண்ணை உடையவன்
கண்ணாவான் -தலைவன்
கிருஷ்ணன் கறுப்பாக உள்ளவன்
பிள்ளைக்கு தாய் வழியாகாதோ-பிள்ளை உறங்கா வல்லி தாசர் கண் ஏரார் கண்ணி யசோதை –
இச்சைக்கு உண்டான அபிமத உரு தேக யசோதை கண் நந்தகோபன் உடம்பு
இதுக்கு முன்பு அறியாமல்
தாயாய் அளிக்கிற தண் தாமரைக் கண்
கடாஷமே தாரகமாக லோகம் ஜீவிக்க
பாதகம் ஆனதே
தப்பினால் என்ன –
எங்கே பார்த்தாலும் கண்கள் தெரிய சூழவும் வந்து தோன்றும்
பார்த்த பார்த்த இடம் எல்லாம் பெருமாள் ஆனாப் போலே
மூல பலம் இந்த்ரஜித் யாகம் செய்ய
அழிக்க
ஒருவர் இருவர் ஓர் மூவர் என நின்று –உள்ளும் தோறும் தித்திப்பா
மூல பலத்தில் -அம்பை பொழிந்த சகரவர்த்தி திருமகன் வாளி பொழிய -அங்கும் இதே வியாக்யானம் –
விரோதிகளுக்கு பெருமாள் தொற்றினாப் போலே
ராம சரத்து ராஷசர் தப்பினாலும்
கண் அழகுக்கு தப்ப முடியாதே
புண்டரீக -தாமரை நாள் மலர் -திரு விருத்தம்
சர்ப்ப பயம் போலே இருக்கை-
பாதகம் -இருந்தாலும் நாள் மலர் அன்றே அலர்ந்த பூ என்பான் என்னில்
நாட்பூ –
நாட்கள் தப்பு நாள்கள் தான் சரியான வார்த்தை –
வாள்களாக நாள்கள் செல்ல -போலே
நாள்களோ நால் ஐந்து திங்கள் அளவிலே –
புண்டரீக –பொலிந்து எல்லா இடத்தவும் -திரு விருத்தம் –
சம்ச்லேஷ தசையில் செவ்வியை சொல்லுகிறாள் –
பெருமாள் ஊர்ந்ததும் கடித்ததும் அறியாமல் இருந்தது போலே –
அப்பொழுது அலர்ந்த செந்தாமரைக் கண்
பிரிந்த வாட்டம் அவனுக்கும் உண்டே
கண் வாடுமே
இவளுக்கு தெரியாதே
அதனால் நால் மலர் என்கிறாள்
திருவடி -பிராட்டி இடம் –
நித்யம் நெருப்பாக அக்னி பர்வதம் போலே கொதித்து இருக்க
எறும்பு கடித்தது கூட அறியாமல் -துடைக்கவும் அறியாமல் –
பிராட்டி இடம் மனச் செல்ல
அதுக்கடி -தேவரீர் இடம் வைக்கப் பட்ட ஆத்மா
பெருமாள் இங்கே குடி புக அங்கே உள்ளதை யார் துடைப்பார் –
சீதா பிராட்டி நெஞ்சில் இருக்க மால்யவானில் அப்படி
பிரிவில் அத்தலைக்கும் ஆற்றாமை
அறியவில்லை இவள் –
தன் உடன் கலந்து -விளை நீர் அடைத்துக் கொண்டு -ஆனந்தம் தேகி வைத்து
தாமரை நால் மலர் போலே இருக்க
அதுவே இவள் நெஞ்சில் பட்டு கிடக்கிறது –

வந்து தோன்றும்
பிரத்யஷத்தில் அவனே வந்து தோன்ற வேண்டும்
உரு வெளிப்பாட்டிலும் அவனே வந்து தோன்றும்
கண்டீர் -நீயும் பார் -அனுபவத்தில் ஈடுபாடு
சிலருக்கு சொல்லி சிலருக்கு மறைக்கும் படி அன்றி
தோழி அன்னை இருவருக்கும்
சொல்லும் தசா விசேஷம்
தப்ப பார்க்கவோ அனுபவிக்கவோ
துயராட்டயேன்-கிலேசமே
ஆனந்தம் ப்ரஹ்மனொ வித்வான் ந பிபதி பயப்பட மாட்டான்
அப்படி இருக்க வேண்டிய நான்
அவசியம் அனுபவோக்தம்
மயர்வற மதி நலம் அருளின ஆழ்வார் பழைய நிலைக்கு போனோமோ
ஞான லாபம் பெற்றாலும் துக்கம் பார்த்தால் கர்மம் தொடர
பேறு கிட்ட வில்லையே

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ பெரிய திருமொழி-3-1–ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

September 26, 2013

ராக்ஷசர் -அரசன் பணிந்த –2-9
உபாயாந்தர உபாசகர் ஆஸ்ரயிக்க –2-10-
அநன்ய உபாயாந்தர அநன்ய ப்ரயோஜனர் இதில்
தேவதாந்த்ர அந்தர்யாமியாக இல்லாமல் தன்னையே நேராகப் பற்றுமவர்கள் இதில்

பிரவேசம் –

அவ்வோ நிலங்களுக்கு சிறப்பானவற்றை இட்டுச் சொல்ல கடவர்கள் ஆயிற்று கவிகள் ஆனவர்கள் –
அப்படி அன்றிக்கே
யதாபூதவாதிகளான ஆழ்வார்கள் உகந்து அருளின நிலங்கள் விஷயமாகச் சொல்லுமவற்றில்
நாம் கண்டு காணாதவை கொள்ளும்படி எங்கனே என்றால்
அவர்கள் உடைய பிரேமத்துக்கு அவதி இல்லாமையைக் கொள்ளும் இத்தனை –
தன் புத்திரன் விரூபமாய் இருக்கச் செய்தேயும் அல்லாதவர்கள் உடைய புத்ராதிகளில் காட்டிலும்
ரூபவானாய் தோற்றும் இறே பிரேமத்தால் –
அப்படியே இவர்கள் உகப்புக்கு அவதி இல்லாமையாலும்
சொன்ன ஏற்றம் எல்லாம் பொறுக்கும்படி சர்வேஸ்வரன் விஷயமாக சொல்லுகையாலும்
இப்படி ஆகையில் ஒரு தட்டில்லை –
காரணமான பிரேமத்துக்கு ஒரு அவதி இல்லாமையாலே அதின் கார்யமாய் வருமவை
எல்லாம் உண்டாகைக்கு ஒரு குறை இல்லை இறே –

ரஜோ குண பிரசுரனான பல்லவனும் கூட பரமேச்சுவர விண்ணகரிலே ஆஸ்ரயிக்கலாம்படி
சந்நிஹிதனான படியை அனுசந்தித்தார் -2-9-

அங்கன் அன்றிக்கே
சத்வ நிஷ்டராய் சர்வ சாஸ்திரம் உசிதமானவர்களை பகவத் சமாராதான புத்த்யா மாறாதே அனுஷ்டிக்கும்
பிராமணர்க்கு உபாச்யனாய்க் கொண்டு திருக் கோவலூரிலே வந்து சந்நிஹிதனாபடியை அனுசந்தித்தார் -2-10-

தேவர்களுக்கு அந்தர்யாமி என்கிற புத்தி விசேஷத்தைப் பண்ணி அவ்வோ முகங்களாலே ஆஸ்ரயிக்கை அன்றிக்கே
அவன் தன்னையே ஆஸ்ரயிக்கும் அனுகூலர்களுக்காக
லோகத்துக்கு காதாசித்தமாக உண்டாகும் பிரளயத்தை போக்கி நோக்குமா போலேயும்
நித்ய ஸூரிகளுக்கு சதா தர்சனம் பண்ணுகைக்கு தன்னைக் கொடுத்து கொண்டு இருக்குமா போலேயும்
அபரிச்சின்னனான தன்னை இவன் இவ்வளவில் உள்ளான் என்று இவர்களுக்கு பரிச்சேதித்து பிரதிபத்தி பண்ணலாம் படி
தனக்கு உள்ளது அடைய இவர்களுக்கு காட்டிக் கொடுத்து கொடு நிற்கிற இடம் ஆகையாலே
அவ்விடத்தை பிராப்யம் என்று புத்தி பண்ணி அத்தை பேசி அனுபவிக்கிறார்.

இத் திரு மொழிக்கு உயிர் பாட்டு –வையம் ஏழும் உண்டு -பாசுரம் என்பர்
அடியவர்க்கு மெய்யனான தெய்வ நாயகன்-தாச சத்யன் –

(திருப்பதிகளுக்கு சிறப்பான குணங்களை அருளிச் செய்வதற்கு காரணம்
ப்ரேமத்தால் அருளிச் செய்வது
அனுகூலருக்கு முகம் கொடுக்கும் பொழுது இவர்களுடன் சேர்ந்து அனுபவிக்க அவனும் த்வரிக்கிறான்
வண்டுகள் சோலைகள் குரங்குகள் இவை எல்லாம் ஸ்வாபதேசத்தில்
பாகவதர்கள் என்று திரு உள்ளம் பற்றி அருளிச் செய்கிறார் )

– ——————————————————-

இரும் தண் மாநிலம் ஏனமதாய் வளை மருப்பினில் அகத்தொடுக்கி
கருந்தண் மா கடல் கண் துயின்றவன் இடம் கமல நன் மலர்த் தேறல்
அருந்த இன்னிசை முரன்று எழும் அளி குலம் பொதுளி அம் பொழிலூடே
செருந்தி நாண் மலர் சென்று அணைந்து உழி தரு திருவயிந்திரபுரமே–3-1-1-

இரும் தண் மாநிலம்
மா நிலம் என்று பூமிப் பரப்பைச் சொல்லுகையாலே –
தட்பத்தாலே போக்ய போக உபகரண போக ஸ்தான பிரசுரமாய் இருக்கும்படியாய்
இருமையால் –அதில் பெருமையாய் கிடக்கிறது –
இத்தை பிரளயம் கொண்ட இடத்தில் சேதனருக்கு உறுப்பாகாத ஆகாரமே ஆயிற்று திரு உள்ளத்தில் பட்டுக் கிடக்கிறது

ஏனமதாய் -வளை மருப்பினில் அகத்தொடுக்கி –
கார்யம் தெரிந்தவாறே தன்னை அழிய மாறினான்
நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத வராஹ விக்ரஹத்தைப் பரிகரித்தான்
வளைந்த கொம்பில் அகவாயில் ஏக தேசத்திலே அடக்கினான் –
இத்தால் ரஷ்யத்தின் அளவில்லாத ரஷகனுடைய பாரிப்பைச் சொன்னபடி

இது ஸூரஷிதம் என்று திரு உள்ளத்தில் பட்டவாறே-
கருந்தண் மா கடல் கண் துயின்றவன் இடம் –
கடல்கள் தோறும் கண் வளர்ந்து அருளும் என்ற பிரசித்தி உண்டு –
அத்தாலே –
உவர்க்கும் கருங்கடல் நீருள்ளான் -என்கிறபடியே சொல்லிற்றாகவுமாம்
அன்றிக்கே
திருப் பாற் கடல் தான் மகா வராஹத்தின் உடைய குளம்பிலே துகளாய்க் குழம்பி தன்னிறம் போயிற்று என்னவுமாம் –
அன்றிக்கே-
நஞ்சீயர் கருமை =பெருமை என்று கொண்டு பாற்கடலையே சொன்னவாறு

கமல நன் மலர்த் தேறல் அருந்தி இன்னிசை முரன்று எழும் அளி குலம்
தாமரையினுடைய செவ்வி பெறாத அலர்ந்த வில்ஷணமான புஷ்பங்களிலே
வண்டுகளானவை புக்கு மதுபானத்தைப் பண்ணும்
கழுத்தே கட்டளையாக மது பானத்தைப் பண்ணுகையால் உண்டான ப்ரீதி பிரகர்ஷத்தாலே இனிய இசையை முரலா நிற்கும்
செவிப்பாடு உடைத்தாக ஆளத்தி வையா நிற்கும்
உள்ளுப் புக்க த்ரவ்யம் இருந்த இடத்தில் இருக்க ஒட்டாமையாலே கொண்டு கிளர்ந்து எழுகிற வண்டுகளின் உடைய
சமூஹமானது தாமரையில் மதுபானம் பண்ணச் செய்தே
பின்னையும் சாபல அதிசயத்தாலே செருந்தியிலே-சுர புன்னையிலே – போய் மதுபானம் பண்ணுவதாக நினைத்து
அதின் தேன் வெள்ளத்தை அனுசந்தித்து கிண்ணகத்தில் இழிவார் கை கோத்து கொண்டு இழிய
ஆள் திரள் பார்த்து இருப்பாரைப் போலே-

பொதுளி அம் பொழிலூடே செருந்தி நாண் மலர் சென்று அணைந்து உழி தரு திருவயிந்திரபுரமே –
பொதுளி -திரண்டு இருந்து உழி தரா நிற்கும்
தாமரைப் பூவில் மது ஆசையால் இழிந்து மதுபானம் பண்ணின வண்டினம்
செருந்தியில் மது வெள்ளத்தை அனுசந்தித்து
விசாரியாதே இழிந்து அகப்பட்டு கொடு நிற்குமது கார்யம் அல்ல என்று பார்த்து
கிண்ணகத்தில் இழிய அஞ்சி கரையிலே உலாவுவாரைப் போலே
செருந்திப் பூவைச் சென்று கிட்டி அதில் இழிய அஞ்சி கரையிலே நின்று
இதஸ்தயா சஞ்சரியா நிற்கும் ஆயிற்று

பொதுளி -செறிவு -பொழிலுக்கு விசேஷணம் ஆகவுமாம்-
செருந்தி நாட் பூ-சுர புன்னை பூ-

ஷட் பத-ஸ்ரீ த்வயம் – ஏக நிஷ்டரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் தெய்வ நாயகன் திருவடி தாமரைகளில்
தேனைக் குறைவற உண்டு-ஆசையாலே-
ஆகையாலே நித்யஸூரி பரிஷத் கதனான வாஸூதேவ தருவின் பாத மலரில் தேனை புஜிக்க கோலி
சஞ்சரித்து கொண்டு இருப்பார்கள் என்று ஸ்வாபதேசம்

——————————————————–

ஆபந் நிவாகரனே ப்ராப்யம் என்றார் கீழே
சர்வ ஸ்மாத் பரன் – ஆகவே இவனே ப்ராப்யம் என்கிறார் இதில்
சர்வாதிக ஸூ ஸகத்வம் –திரு ஆழியைக் கையிலே சலியாதே பிடித்தல்
ஸ்ரீ லஷ்மீ பதியாதல் வேதைக சமைதிகன் ஆதல்-மூன்றும்
அணைவது அரவணை பூம்பாவை இருவர் அவர் முதல்வனாம் மூன்றும் நம்மாழ்வார்

மின்னும் ஆழி அம் கையவன் செய்யவள் உறை தரு திரு மார்பன்
பன்னு நான்மறைப் பல் பொருளாகிய பரனிடம் வரைச் சாரல்
பின்னும் மாதவிப் பந்தலில் பேடை வரப்பிணியவிழ் கமலத்து
தென்ன வென்று வண்டு இன்னிசை முரல் தரு திருவயிந்தபுரமே–3-1-2-

மின்னும் ஆழி இத்யாதி –
சர்வேஸ்வர லஷணம் ஆகிறது –
திரு ஆழியைக் கையிலே சலியாதே பிடித்தல்
ஸ்ரீ லஷ்மீ பதியாதல்
வேதைக சமைதிகன் ஆதல்
இவை ஆயிற்று இவை மூன்றும் இங்கே உண்டு

மின்னும் ஆழி அம் கையவன்-
மேகத்திலே மின்னினால் போலே இருக்கிற திரு ஆழியைக் கையிலே உடையவன் –

செய்யவள் உறை தரு திரு மார்பன் –
அந்த மின் கொடி தான் பிரதேசாந்தரத்திலே தழுவினால் போலே ஆயிற்று
பெரிய பிராட்டியாரை திருமார்பில் உடையவனாய் இருக்கும்படி
தரு–உறைவதை தருகிறாள் என்றது -பிரணய கலஹம் மாறாதே செல்லுமா போலே ஆயிற்று

பன்னு நான்மறைப் பல் பொருளாகிய பரனிடம்-
பரந்து நாலுவகைப்பட்ட வேதத்தில் அவ்வோ இடங்கள் தோறும் சொல்லப்பட்ட பதார்த்தங்கள் அடங்க
தனக்கு சரீரதயா பிரகாரமாய் தான் ஒருவனே பிரகாரியாய் இருக்கையாலே சர்வ ஸ்மாத் பரனானவன்
வேதைச சர்வைஸ் ரஹமேவ வேத்யே-என்றான் இறே

ஹரீஸ் சதே அச்யேசாநா- வரை இத்யாதி –
பிராட்டியும் தானுமான சேர்த்தியிலே பிரணய கலஹம் மாறாதே செல்லுமா போலே ஆயிற்று
அங்குத்தை திர்யக்குகள் உடைய யாத்ரையும் –
மலையின் பர்யந்தத்தில் நெருங்கப் பட்டு இருந்துள்ள மாதவிப் பந்தலிலே மது பானம் பண்ண இழிந்த
வண்டுகளானவை-தன்னில் தானே பிரணய ரோஷத்தால் நீ நான் என்ன
அவ்வளவிலே பேடையானது இனி நீ ஜீவிக்கும் படி எல்லாம் நான் காண்கிறேன் என்று பிரதிஞ்ஞை பண்ணி
மாதவியிலே-குருக்கத்தி பூவில் – செறியப் பூத்த பூவிலே புக்கு ஒழித்தது –

அத்தை ஒழிய அரை ஷணம் ஜீவிக்க மாட்டாமையாலே
ந ஜீவேயம் – என்றும்
ந தம்சான் – என்று படும் இறே-சேவல் ஆண் வண்டு
அப்படி நோவு பட்டு எல்லா சாதனங்களையும் அனுஷ்டித்து-(தூது விடுதல் போல்வனவும் செய்து )
பல் பன்னிரண்டும் காட்டின இடத்திலும்
அதுக்குக் கேட்டதில்லை யாயிற்று
பதினாறும் என்று சொல்லாதது மந்த ஸ்மிதம் செய்தது என்று தோற்ற –
இனி செய்வது என் -என்று பார்த்து -கை கழிய போக மாட்டாது
நாம் படும் துயரம் மறைந்த இத்தனை நம் மிடற்றோசையாலே முகம் காட்டுவித்துக் கொள்வோம் என்று பார்த்து பின்னும்

மாதவிப் பந்தலில் பேடை வரப்பிணியவிழ் கமலத்து தென்ன வென்று வண்டு இன்னிசை முரல்-
அதிலே புக்க பேடையானது ஊடல் தீர்ந்து வந்து முகம் காட்டும்படி
அப்போது அலர்ந்த செவ்வித் தாமரையிலே போய் புக்கு
தென்ன தென்ன என்ற ஆளத்தி வைக்கத் துடங்கிற்று ஆயிற்று –
நக்குண்டார் நா வெழார் இறே -கிஞ்சித்காரம் பெற்றார்கள் குற்றம் சொல்ல மாட்டார்கள்
பாடப் பகை தீரும் -எனபது இறே
பேதை நெஞ்சறவற பாடும் பாட்டால் -திருவாய் மொழி -9-9-9-பகை தீர்ந்ததே –

(நைவளமும் ஆராயா நம்மை நோக்கா -நட்டப்பாடை பாடி நாணினார் போல் இறையே
நயங்கள் -பல் பன்னிரண்டும் காட்டியது )

——————————————————–

தாச சத்யன்-அடியவர்க்கு மெய்யன்
ஹயக்ரீவர் -ஒளஷதாதி மலை மேல்
லஷ்மி ஹயக்ரீவர் –74 படிக்கட்டுகள்
வேணு கோபாலன் கருடன் ஹயக்ரீவர் சேர்ந்து சேவை மலைக்கு மேல்
தலை எழுத்து மாற்றும் திருவடித் தாமரை துகள்கள்
மூவராகிய மூர்த்தி -தெய்வ நாயகன்
அஹீ -திருவானந்தாழ்வான் சேஷ தீர்த்தம் கருட தீர்த்தம் கடில நதி
புரட்டாசி சரவணம்
அச்யுத சதகம் -பிராக பாஷையிலும் உண்டே -கோபால விம்சதி ரகுவீர கத்யம் எல்லாம் இங்கே
சந்த்ர விமானம்
மாடத்தெருவில் மா முனிகள் -அழகிய சந்நிதி -உத்சவங்கள் பிரசித்தம் –

திவ்ய தேச பெருமாள் திரு நாமம் -அடியவர்க்குமெய்யனாகிய தெய்வ நாயகன் -சேஷத்வ ஞானம் கொண்டு
கைங்கர்யம் செய்பவர்களுக்கு தன்னை உள்ளபடி காட்டி அருளும் அமரர்கள் அதிபதி
கீழே மேன்மை -அகடி கடநா சாமர்த்தியம் இதில்

வையம் ஏழும் உண்டு ஆலிலை வைகிய மாயவன் அடியவர்க்கு
மெய்யனாகிய தெய்வ நாயகனிடம் மெய் தகு வரைச் சாரல்
மொய்கொள் மாதவி செண்பகம் முயங்கிய முல்லை யம் கொடி யாட
செய்ய தாமரைச் செழும் பணை திகழ் தரு திருவயிந்திரபுரமே–3-1-3-

வையம் ஏழும் உண்டு ஆலிலை வைகிய மாயவன்
பூமிப் பரப்பு அடங்கலும் வயிற்றிலே எடுத்து வைத்து ஒரு பவனான ஆலம் தளிரிலே
கண் வளர்ந்து அருளின ஆச்சர்ய சக்தி உக்தன் –
அகடிதகடங்களைச் செய்தும் ஆஸ்ரித ரஷணம் பண்ணுமவன்-

அடியவர்க்கு மெய்யனாகிய –
காதாசித்கமாக லோகத்துக்கு வந்த பிரளயத்தை பரிஹரித்தாப் போலே அன்றிக்கே
தன்னை நித்ய அனுபவம் பண்ண வேணும் என்று இருப்பார்க்கு
அதுக்கு ஒரு ஷணம் விச்சேதம் வருகையாவது நித்ய பிரளயம் இறே
தனக்கு அசாதாரணமாய் இருப்பார்க்கு தன் படிகளை எல்லாம் இவனுக்கு உள்ளது இவ்வளவு என்று பரிசேதித்து
அனுபவிக்கலாம் படி வெளி இட்டுக் கொண்டு நிற்கிற-
இதுவும் அகடிதகடநா சாமர்த்தியம்-

தெய்வ நாயகனிடம்-
நித்ய ஸூரிகளுக்கு தன் படிகள் எல்லாம் அனுபவிக்கலாம் படி கொடுத்துக் கொண்டு இருக்குமா போலே
இங்கு உள்ள ஆஸ்ரிதர்க்கும் தன்னை அனுபவிக்கலாம் படி கொடுத்துக் கொண்டு நிற்கிற விடம் –

அஹம் ஏவம் வித-ஞானம் த்ரஷ்ட்டும் இத்யாதி -ஸ்ரீ கீதை –11- என்றான் இறே
நான் பக்த்யைகலப்யன் -என்று அருளிச் செய்தார் இறே-
பரம் ப்ரஹ்ம பரம் தாம சாஸ்வதம் திவ்யம் ஆதி தேவன் விபு -ஸ்ரீ கீதை –10-12-என்று கேட்டு இருந்தபடியாலே
நீ ஒருவன் பக்திக்கு எளியவன் ஆவது என் என்ன
அஹம் மேம் வித – நாட்டில் பரிமாறுகிற படி கண்டு சொல்ல ஒண்ணாது காண்-
அவ்வோ வ்யக்திகளில் கண்டபடி சொல்ல வேணும் காண்
எனக்கு இதுவே பிரகாரம் என்றான் இறே–
(பத்ரம் புஷ்பம் பலம் தோயம் –எளிய பக்தியால் அடையலாம் -இது என்னுடைய ஸ்வபாவம்
பெருமை சொல்லி எளிமை ஸ்ரீ கீதையில்
இங்கேயோ எளிமை சொல்லி பரத்வம்
மாம் -அஹம் போலவே –
தெய்வ நாயகன் இடு சிகப்பு-அடியவர்க்கு மெய்யன் ஸ்வ பாவம் –
நெருப்பு சுடுவது போலவும் தண்ணீர் குளிர்வதாய் இருப்பது போலவும்)

மெய் தகு வரைச் சாரல்
மெய்க்கு தக்கதாய் இருக்கை –
மென்மை உடைத்தாய் இருக்கை –
இதர விசாஜாதீயமாய் இருந்துள்ள மலையில் -பர்யந்தத்திலே

மொய் கொள் மாதவி செண்பகம் முயங்கிய முல்லை யமகொடி யாட
மொய் என்று பலத்துக்கும் செறிவுக்கும் –பெயர்
இங்கு செறிவாய் நெருங்கி உள்ள குருக்கத்தியானது செண்பகத்தைச் சென்று கட்டிக் கொண்டது –
முல்லை நிலத்திலே அந்த கொடியானது காற்றாலே அசைய மருத நிலத்தில் உண்டான தாமரைகளில்
அலருமளவாய் நின்ற பூக்களானவை இக்கொடி அசைகிற காற்று பட்டு அலரா நிற்கும் ஆயிற்று –

செய்ய தாமரைச் செழும் பணை திகழ் தரு
சிவந்த தாமரையை உடைத்தான நீர் நிலங்களிலே உஜ்ஜ்வலமாக நின்றுள்ள திருவயிந்திரபுரமே –

அகடிகடதங்களை கடிப்பித்தும் அவன் ஆஸ்ரித ரஷணம் பண்ணுமா போலே
விருத்தமான தேசத்தில் அவை இரண்டையும் சம காலத்தில் கிட்டி அனுபவிக்கலாம் தேசம் ஆயிற்று
குறிஞ்சி நிலமான மலை சாரலிலே முல்லை நிலமும் மருத நிலமும் இருந்தது போலே-

(மெய்த்து திருமேனி மார்த்வம்
முல்லை நிலம் -நிர்ஜலப் பிரதேசம் -முல்லைக்கொடி ஆட
செழும் பணை -நீர் நிலத்தில் தாமரை மலர -மருத நிலம்
மலைச்சாரல் குறிஞ்சி நிலம்
இப்படி அனைத்தும் சேர இருக்கும் தேசம் )

– —————————————————————–

அடியவர்க்கு மெய்யன் என்றார் கீழே
எப்படி நம்மையும் அடியவர்களாக ஆக்கி அருளுகிறார் என்பதை இதில்

மாறு கொண்டு உடன்று எதிர்ந்த வல்லவுணன் தன் மார்பகம் இரு பிளவா
கூறு கொண்டு அவன் குல மகற்கு இன்னருள் கொடுத்தவனிடம் மிடைந்து
சாறு கொண்ட மென் கரும்பு இளங்கழை தகை விசும்புற மணி நீழல்
சேறு கொண்ட தண் பழனமது எழில் திகழ திருவயிந்தபுரமே–3-1-4-

இன்னருள்-சீற்றத்துடன் அருள் அன்றோ –

மாறு கொண்டு –
ஸூஹ்ருதம் சர்வ பூதானாம் – என்று இருக்குமவனோடே
நான் மாறு -என்று வந்தான் ஆயிற்று -நான் சத்ரு -என்று கொண்டு –

உடன்று எதிர்ந்த-
நான் சத்ரு என்று சொல்லா நிற்கச் செய்தேயும் அகவாயில் இன்றிக்கே இருக்கவுமாம் இறே –
அங்கன் இன்றிக்கே
அகவாயில் த்வேஷத்தோடே எதிரிட்டு முன்னே வந்த

வல்லவுணன் –
ஹிரண்யன் உடைய சத்ரு என்று வாயாலே சொல்லுகையும் –
அதுக்கு அடியான நெஞ்சில் த்வேஷமும் –
அதின் கார்யமான முன்னே வந்து நிற்கையும்
மூன்றையும் சொன்ன படி-
(வாசிகம் மாநசம் காயிகம்–மூன்றாலும் எதிர்த்தால் தான் கை விடுவார்
கைக் கொள்ள ஒன்றே போதுமே சிரமம் இதை வாசோ ஏவ)

தேவர்கள் உடைய வரத்தை ஊட்டியாக இட்டு வளர்த்த மிக்க பலத்தை உடையனான ஆசூர பிரகிருதி உடைய-
தன் மார்பகம் இரு பிளவா –
பரந்த மார்பானது இரண்டு பிளவாகும்படி கூறு செய்தவன் –
சீற்றத்தோடே நரசிம்ஹம் வந்து தோற்றின தோற்றம் கண்டவாறே மெல்கினான்-
பின்னை இரண்டு கூறாக்கி பொகட்டான் ஆயிற்று –

கூறு கொண்டு அவன் குல மகற்கு இன்னருள் கொடுத்தவனிடம்
குல விரோதியான ஹிரண்யனைப் போக்கி அவன் குல புத்ரனுக்கு தன் பேறான அருளைப் பண்ணினான்
சர்வேஸ்வரன் தானே இறே
பிதாவுக்கு பிரஜை பக்கலில் வாத்சல்யம் உறைத்து அவனை நோக்கும்படி பண்ணுகிறான் –
அதில் அந்த வாத்சல்யம் போய் தானே தானாம்படி தோற்றி நின்ற வாறே
தான் தகப்பனில் அண்ணிய உறவாய் வந்து உதவினான் ஆயிற்று —

மிடைந்து இத்யாதி —
பெற்ற தமப்பன் பகையா அவனில் அண்ணிய உறவாய் உதவினவன் தனக்கு தன்னில்
அண்ணிய உறவு இல்லை இறே -புறம்பு –
இப்படி இருக்கிற தானும் -ஆத்மைவ ரிபுர் ஆத்மான -என்கிறபடி
தனக்குத் தானே பகையாய் தன்னை முடிக்கப் பார்த்த வன்று –
உன்னை உன் கையில் காட்டித் தாரேன் -என்று நோக்குகைக்காக வந்து நிற்கிற விடம் –

சாறு கொண்ட மென் கரும்பு இளங்கழை தகை விசும்புற மணி நீழல் –
பரஸ்பரம் நெருங்கி -அன் நெருக்கம் பொறாமையாலே சாரமானது பிரவஹியா நின்றுள்ள
மெல்லிய கரும்பின் உடைய இளங்கழை-உண்டு –
நுனியானது ஆகாசத்திலே சென்று வளர இனி அவ்வருகு போக ஒட்டோம் என்று தடுக்கும் ஆயிற்று ஆகாசம் –
இப்படி வளர்ந்த கரும்பின் உடைய அழகிய நிழலை உடைத்தாய்

சேறு கொண்ட தண் பழனமது எழில் திகழ திருவயிந்தபுரமே –
கருப்பஞ்சாற்றாலே வெள்ளம் இட்ட சேறுகளை உடைத்தாய் இருந்துள்ள நீர் நிலங்களின் அழகு
உஜ்ஜ்வலமாய் நின்றுள்ள திருவயிந்தபுரமே –

தழீஇக் கொண்டு போரவுணன் தன்னை சுழித்து எங்கும் தாழ் விடங்கள் பற்றிப் புலால் வெள்ளம் தானுகள -பெரிய திருவந்தாதி -57
வ்யாபாரித்த போது ஹிரண்யன் உடைய ருதிர வெள்ளத்தாலே பார்த்த பார்த்த இடம் எங்கும் சேறு செய்தாற் போலே
கரும்புகள் ஒன்றோடு ஓன்று நெருங்கி பிரவஹித்த சாற்று வெள்ளத்தாலே பூமி எல்லாம் சேறாய்க் கிடக்கும் ஆயிற்று-

————————————————————-

கீழே அத்தாலே அனன்ய ப்ரயோஜனர் ஆக்குவார் என்றார்
அடியவர்க்கு மெய்யன் கேட்க வேண்டுமோ
ப்ரயோஜனாந்தர பரனுக்கும் அருள் செய்தவன்
நப்பின்னைக்கு செய்தவற்றையும் சேர்த்து அருளுகிறார் இதில்

ஆங்கு மாவலி வேள்வியில் இரந்து சென்று அகலிடம் அளந்து
ஆயர் பூங்கொடிக்கு இனவிடை பொருதவனிடம் பொன் மலர் திகழ் வேங்கை
கொங்கு செண்பகக் கொம்பினில் குதி கொடு குரக்கினம் இரைத்தோடி
தேன் கலந்த தண் பலங்கனி நுகர் தரு திருவயிந்திரபுரமே–3-1-5

மகா பலி தானம் பண்ணா நின்றான் என்று கேட்டவாறே அவனுடைய யஞ்ஞவாடத்திலே
தன்னை அர்த்தியாக்கிச் சென்று அவன் கையில் நீர் தன் கையில் விழுந்த அநந்தரம்
அவ்விடம் தன்னிலே நின்றே பூமிப் பரப்பு அடைய அளந்து கொண்டு –

இடையர் பூத்த கொடி போலே இருக்கிற நப்பின்னை பிராட்டிக்காக
உபக்னம் தேட்டமான பருவம் ஆயிற்று
பதிசம்யோக சுலபம் வய -என்கிறபடியே
(சீதாபிராட்டி அனசூயை இடம் ஜனகர் கவலைக்கடலில் ஆழ்ந்ததை –கோல் தேடி ஓடும் கொழுந்து போல் )
ஒரு கொள் கொம்பிலே கூட்டில் கிடக்குமவளாய்- இல்லையாகில் தர்மி லோபம் பிறக்குமவளாய் இருக்கை
இனம் இனமான ருஷபங்களோடே பொருதவன் உடைய ஸ்தானம் –

பொன் இத்யாதி – குரக்கினம் ஆனது பொன் போலே இருக்கிற மலர் விளங்கா நின்றுள்ள
வேங்கை கொங்கு செண்பகக் கொம்பினிலே
இவற்றில் தாவி பெரிய வேகத்தோடே வந்து அவ்வருகு போக்கின்றிக்கே
தேன் கலந்த தேன் மிக்கு இருந்துள்ள பலாப் பழத்தை புஜியா நிற்கும் ஆயிற்று-
( திரு வெள்ளறை பதிகம் இதே வர்ணனை உண்டு )

————————————————————

பிரயோஜனாந்தர பரர்களுக்கு உதவியதை அருளிச் செய்ய
கூனி சொல்வதையும் செய்து அருளினவன் இவன் என்கிறார் –

கூனுலாவிய மடந்தை தன் கொடும் சொலின் திறத்து இளங் கொடியோடும்
கானுலாவிய கருமுகில் திரு நிறத்தவன் இடம் கவினாரும்
வானுலாவிய மதி தவழ் மால் வரை மா மதிள் புடை சூழ
தேனுலாவிய செழும் பொழில் தழுவிய திருவயிந்திரபுரமே–3-1-6-

கவினாரும்– கவின் ஆரும் –அழகு மிக்கு இருந்துள்ள –

கூனுலாவிய மடந்தை தன் கொடும் சொலின் திறத்து
சர்வாத்மந அந்தக-என்று கண்ணிலே குருடே அன்றிக்கே நெஞ்சம் குருடு பட்டு இருக்கும் என்றாப் போலே
முதுகிலே கூனே அன்றிக்கே நெஞ்சம் க்ரூரமாய் ஆயிற்று இருப்பது –
(கூன் தொழுத்தை சிதைகுலைப்ப கொடியவள் வாய் கடிய சொல் கேட்டு பெரியாழ்வார் )

கூனியின் உடைய கொடும் சொல் உண்டு –
ராமோ வா பரதே வா அஹம் விசேஷம் நோபலஷயே -என்ற கைகேயி –
ஏஷமே ஜீவிதச்யாந்தோ ராமோயத்யபி ஷிச்யதே -என்று சொல்லும்படி பண்ணின கொடிய சொல் ஆயிற்று –
(இது தான் கலக்கிய மனம் -)

இளங் கொடியோடும்-
கொள் கொம்பு தேட்டமாய் இருப்பது அதில் தானே சென்று பற்ற மாட்டாதே இருப்பதான பருவம் ஆயிற்று –

கானுலாவிய-
ஒரு சர்க்கமாக பெருமாள் தாமே உனக்குக் காட்டில் வெம்மை பொறாது-என்று அருளிச் செய்தார் இறே –

கருமுகில் –
மின்கொடி தழுவிய ஒரு மேகம் சஞ்சரிக்குமா போலே காட்டிலே இருவருமாய் உலாவின படி –

கவின் -என்று அழகு அழகு மிக்கு இருந்துள்ள ஆகாசத்தில் சஞ்சரிக்கிற சந்த்ரனுக்கு
குழவிகள் சுரம் ஏறுமா போலே தாழ்ந்து ஏற வேண்டும்படியான ஒக்கத்தை உடைய
பெரிய மலைகளையும் பெரிய மதிள்களையும் சுற்றிலே உடைத்தாய்
வண்டுகள் சஞ்சரியா நின்றுள்ள அழகிய பொழிலாலே சூழப்பட்ட திருவயிந்திரபுரமே

முன்பு -சக்கரவர்த்தி திருமகனுக்கு சித்ர கூடத்தையும் தண்ட காரண்யத்தையும் விஸ்மரித்து
வர்திக்கலாம் தேசம் ஆயிற்று

———————————————————

ஸ்ரீ ராமாவதாரம் பிரஸ்த்துமானதும் இதில் ஸ்ரீ ராமாவதாரம் விரித்து அருளுகிறார்
அவன் மிடுக்கை அனுபவிக்கிறார்
ஸ்ரீ சீதை காரணம் இல்லாமல் அவளின் அழகே காரணம் என்கிறார் இதில்

மின்னின் நுண் இடை மடக்கொடி காரணம் விலங்கலின் மிசை இலங்கை
மன்னன் நீள் முடி பொடி செய்த மைந்தன் இடம் மணி வரை நீழல்
அன்ன மா மலர் அரவிந்தத் தமளியில் பெடையொடும் இனிதமர
செந்நெலார் கவரிக்குலை வீசு தண் திருவயிந்திரபுரமே–3-1-7-

மணி வரை -ஒவ்ஷதாத்ரி
செந்நெலார் கவரிக்குலை வீசு -செந்நெலார் குலை கவரி வீசு-சீரார் செந்நெல் கவரி வீசும் திருக்குடந்தை -நம்மாழ்வார்

மின்னொடு ஒத்த நுண்ணிய இடையை உடையளாய்
ஆத்ம குணங்களுக்கு எல்லாம் தானே ஆஸ்ரயமாய்
ஒரு உபக்னத்தோடே சேர்க்க வேண்டும்படியான பருவத்தை உடைய
ஸ்ரீ ஜனகராஜன் திருமகள் ஹேதுவாக –
பிரிவில் ரஷகனை இவ்வார்த்தை சொல்லுவிக்கும்படியான அழகு இறே

புரேவ மே சாரு ததீம் –
மாயா மிருகத்தின் பின்னே போவதுக்கு முன்பே
இம் மானைப் பிடித்துத் தர வேணும் என்ற முறுவலோடு
கொடு வந்து காட்டிற்று இலர்கள் ஆகில்

அநிந்திதாம்-
அவளைப் பெறாமையால் ஜகத் உபசம்ஹாரம் பண்ணினார் என்றால்
அவளுக்காக இது செய்த விடம் தப்பச் செய்தார் -என்ன வல்லார் உண்டோ –

யுக்த மித்யேவ மே மதி –( திருவடி வார்த்தை-முதல் தடவை பிராட்டியைப் பார்த்ததும் )
என்னும் இத்தனை யாகாதே
பிராட்டியை உள்ளபடி எல்லாம் அறியாத எனக்கும் இருந்த படி இது –
இனி இவளை உள்ளபடி அறிவார் என் நினைந்து இருப்பார்களோ –

சதவேத்யாதி –
இத்தை வகுக்கைக்கு-(சதேவ –ஸ்ருஷ்டிக்க ) நெஞ்சால் பட்ட இடர் பட வேணுமே அழிக்கைக்கு
(ஸ்ருஷ்டிக்க சங்கல்பித்து போல் சம்ஹரிக்கவும் சங்கல்பம் செய்யலாமே )

விலங்கல் இத்யாதி –
ஸூ வேல சைலமாய் -அதின் மேலே த்ரி கூடமாய் -அதின் மேலே
படைவீடாய் இறே இருப்பது
இப்படி ஒருவரால் அழிக்க ஒண்ணாத படை வீட்டுக்கு நான் ராஜா அல்லனோ
என்று அபிமானித்து இருக்கிற பையலுடைய-
தேவதைகள் உடைய வரங்களால் பூண் கட்டி இருக்கிற முடிகள் பத்தும்
துகளாம்படி பண்ணின மிடுக்கனானவான் வர்த்திக்கிற ஸ்தானம் –

மணி வரை நீழல் –
ரத்ன பர்வத சாயலிலே –

அன்னம் இத்யாதி –
அன்னமானது பெரிய தாமரை மலரான படுக்கையிலே
அதாகிறது
குளித்தல் உண்ணுதல் மது பானம் பண்ணுதல்
ஊடினால் ஒருத்தருக்கு ஒருத்தர் அணித்தாகாத படி
கடக்க கிடைக்கைக்கு வேண்டும் இடம் போரும் படி
பரப்புடைத்தான படுக்கையிலே
ஜாத்ய சண்டாளரைப் பொறுத்தாலும்
பிரணய அபராத சண்டாளரை பொறுப்பார் இல்லை இறே
பள்ளிக் கமலத்து இடைப்பட்ட பகுவாய் அலவன் முகம் நோக்கி –நள்ளி ஊடும் நறையூர் –என்னுமா போலே-

செந்நெலார் -இத்யாதி
அப் படுக்கையிலே பேடையோடே இனிது அமரும்படியாக
அவ் வனுபவத்துக்கு தண்ணீர் துரும்பாகை அன்றிக்கே
இனிது அமர வீசும் ஆயிற்று செந்நெல்

ஒரு சேதனன் என்று துணுக் என்ன வேண்டாதே
நிறைந்த கவரிக் கொத்தை வீசா நிற்கும் ஆயிற்று-

——————————————————

வில்லை எடுத்ததும்
மலை எடுத்ததும்
ராம கிருஷ்ணர் இன்று நாமும் சேவிக்க ப்ராப்யமான திவ்ய தேசம்

விரை கமழ்ந்த மென் கரும் குழல் காரணம் வில் இறுத்த அடல் மழைக்கு
நிரை கலங்கிட வரை குடை எடுத்தவன் நிலவிய இடம் தடமார்
வரை வளம் திகழ மதகரி மருப்பொடு மலைவளர் அகில் உந்தித்
திரை கொணர்ந்து அணை செழு நதி வயல் புகு திருவயிந்திரபுரமே–3-1-8-

செழு நதி-கருட நதி

விரை கமழ்ந்த மென் கரும் குழல் காரணம் வில் இறுத்த-
நறு நாற்றம் கமழா நிற்பதுமாய்
மிருதுவான கரும் குழலை உடைய
ஸ்ரீ ஜனக ராஜன் திரு மகள் ஹேதுவாக வில்லை முறித்து –

சர்வ கந்த -என்கிற வஸ்து முடியும் முடியாதே என்றும் பாராதே
மேல் விழுந்து வில்லை முறிக்கும்படியாக யாயிற்று குழலின் பரிமளம் –
அதாகிறது அவ்வருகு பெற இருக்கிறது இவளை யாகில்
நடுவு உண்டான பிரதிபந்தகங்கள் கொடு கார்யம் என்று இருந்தார்-

அடல் மழைக்கு
அவள் அழகிலே துவக்குண்டு செய்த செயலே அன்றிக்கே
ஸ்வ ரஷணத்தில் அந்வயம் இல்லாத பசுக்களுக்கும்
இடையருக்குமாக மலையை எடுத்து
மழையை பரிகரித்தான் ஆயிற்று –

இந்த்ரனாலே ஏவப்பட்ட மேகங்கள் வர்ஷிக்க
அதிலே பசுக்களும் இடையரும் நோவு பட புக –
கோவர்த்தன கிரியை தரித்து ரஷித்தான் ஆயிற்று –

அடல் மழைக்கு-
போர் களத்து என்னுமா போலே
யுத்த உன்முகமான வர்ஷத்துக்கு

நிரை கலங்கிட –
அதீவார்த்தம் -என்கிறபடியே நோவுபட
நிரை கலங்கிட -அடல் மழைக்கு—-வரை குடை எடுத்தவன் –
விஸ்வாமித்ரராதிகளோடு ஆதல் -சனகாதிகளோடு ஆதல் –
கூட்டிச் செய்யும் ஜன்மம் அன்றே
தோற்றிற்று ஒரு மலையை எடுத்து பரிகரித்தான் ஆயிற்று

நிலவிய இடம் –
இந்த்ரன் வர்ஷிப்பிக்க பிற பாடராய் நோவு பட விட்டால்
போலே ஆக ஒண்ணாது என்று ஏற்கவே
நோவு படாமே நோக்குகைக்காக வந்து
நித்யவாசம் பண்ணுகிற இடம் ஆயிற்று –

தடமார் வரை வளம் திகழ மதகரி மருப்பொடு
தடம் என்று தாழ் வரையாய்-தான் வளரா நின்றுள்ள வரை போல்
அழகு விளங்கா நின்றுள்ள மத்தகத்தின் உடைய மருப்போடு கூட-என்னுதல் –
அன்றிக்கே
தடம் என்று தடாகமாய்
தடங்கள் மிக்கு இருந்த வரைக்கு அழகாய் கொண்டு விளங்கா நின்றுள்ள மத்தகத்தின் உடைய
மருப்போடு கூட என்னுதல் –
மலைக்கு சிறப்பாக ஆனைகளைச் சொல்லக் கடவது இறே

மலை வளர் அகில் உந்தித் –
மலையில் மனுஷ்யாதிகளால் வரும் சங்கோசம் எல்லாம்
இல்லாமையாலே ஆகாச அவகாசம்
இடம் அடைத்துக் கொண்டு தான் கண்டபடி வளருகிற அகிலை
வேரோடே பறித்துத் தள்ளிக் கொண்டு-

திரை கொணர்ந்து அணை செழு நதி வயல் புகு திருவயிந்திரபுரமே
வர்ஷித்தவாறே மலை அருவிகள் ஆனவை
ஆனைக் கொம்பையும் அகில் மரத்தையும் முறித்து
தன் திரைகள் ஆகிய கைகளாலே
ஏத்திக் கொண்டு வயலிலே வந்து புகுரும் ஆயிற்று –

அளவுபட்ட வாய்த்தலைகளே யாதல்
வாய்க்காலே யாதல்
புகுருகை அன்றிக்கே
விளைவில்லாக் கடலிலே போய் புகுகையும் அன்றிக்கே
ஆறு தானே வயலிலே வந்து புகுரும் ஆயிற்று

—————————————————————-

ஆஸ்ரித பக்ஷபாதி என்கிறார் இதில்
கொல்லா மா கோல்
பற்றலர் வீய கோல் கையில் கொண்டவன்

வேல் கொள் கைத் தலத்து அரசர் வெம் போரினில் விசயனுக்காய் மணித்தேர்
கோல் கொள் கைத்தலத்து எந்தை பெம்மான் இடம் குலவு தண் வரைச் சாரல்
கால் கொள் கண் கொடிக் கை எழக் கமுகு இளம் பாளைகள் கமழ சாரல்
சேலைகள் பாய் தரு செழு நதி வயல் புகு திருவயிந்திரபுரமே–3-1-9-

வேல் கொள் கைத் தலத்து-
பகதத்தனில் குறைந்தார் இல்லை இறே
அங்கேறி போரில்
பார்த்தம் சஞ்சாத்ய பண்ண வேண்டும்படி இறே

அரசர் –
பரிகரம் தூசி ஏற ராஜாக்கள் கடக்க நிற்கை அன்றிக்கே
ராஜாக்களே தூசி ஏறின போர் ஆயிற்று

வெம் போரினில்-
பாரத சமரம் என்றால் கேட்டவர்களும் மயிர் எழ வேண்டும்படியான யுத்தத்திலே
காண வந்த சோழர்க்கும் தங்களை நோக்குகைக்காக கையிலே
ஓர் ஆயுதம் பிடித்துக் கொண்டு நிற்கும் வேண்டும் படி
பயாவஹம் இறே

விசயனுக்காய் –
அர்ஜுனனுக்காக தன்னை அழிவுக்கு இட்டு –
ரதியைச் சீறினவன் சாரதியை இறே அழியச் செய்வது –
உடம்புக்கு ஈடு இடாதே தன்னை அழிவுக்கு இட்டு நின்றான் ஆயிற்று –
(ஈடு -கவசம் என்றபொருளும் உண்டே -ஈடு திருவாய் மொழிக்கு கவசம் போல் என்றும் )
தான் கொண்ட விஜயமும் அர்ஜுனன் தலையிலே கிடக்கும்படி –
தன்னைத் தாழ விட்டு வைத்தான் ஆயிற்று –

மலை புரை தோள் இத்யாதி –
மணித் தேர் கோல் கொள் கைத்தலத்து எந்தை பெம்மான் இடம்
ஸ்லாக்கியமான தேரிலே
கையிலே உழவு கோலைக் கொண்டு நின்ற
என் குல நாதன் உடைய ஸ்தானம் –

குலவு தண் வரைச் சாரல் –
கொண்டாடப் பார்த்தால் தன்னையே கொண்டாடும்படியாய்
இருக்கிற
குளிர்ந்த மலைச் சாரல் பர்யந்தத்தில்

கால் கொள் கண் கொடிக் கை எழக் கமுகு இளம் பாளைகள் கமழ சாரல்
கால் உண்டு வெற்றிலைக் கால்
அது மறையும்படியாக கண் தோறும்
பல்லி பற்றும் ஆயிற்று வெற்றிலைக் கொடி–பல்லி பற்றுகை கிளருகை –
அக்கொடிகள் கமுகளினுடைய இளம் பாளைகள் விரிந்த
பரிமளத்தாலே எரு இட்டாப் போலே இருக்க
கை எழா நிற்கும்
கை என்று வெற்றிலைக் கிளைகள் இறே
இப்படிப் பட்ட சோலையை உடைத்தாய்
இச் சோலைக்கு அணித்தாய் இறே ஆறும் இருப்பது –

சேலைகள் பாய் தரு செழு நதி வயல் புகு திருவயிந்திரபுரமே –
அப்பரிமளத்திலே மது பானம் பண்ணினாப் போலே
களித்து சேல்கள் பாயா நிற்கும் ஆயிற்று –
இப்படி இருக்கிற அழகிய நதியானது வயலிலே புகும் ஆயிற்று
அதாவது இவ் வயல் அளவுமாயிற்று ஆறாய் வருவது —
இங்கே வந்தவாறே வயலிலே புகுந்து ஆயிற்று போவது –

ஆக தாரகம் தார்யத்துக்கு உள்ளே
மறைந்து இருக்கும் தேசம் ஆயிற்று –
தான் வெல்லச் செய்தேயும் -அர்ஜுனன் வென்றான் என்று சொல்லலாம்படி
கிருஷ்ணன் அவனுக்கு பரிகரமாய்
அந்தர்பவித்து நிற்குமா போலே
தான் விளைவிக்கச் செய்தே -வயல் விளைந்தது -என்று
சொல்லலாம்படி யாயிற்று இருப்பது

————————————————

மூவராகிய ஒருவனை மூ வுலகு உண்டு உமிழ்ந்து அளந்தானை
தேவர் தானவர் சென்று சென்று இறைஞ்சத் தண் திருவயிந்திரபுரத்து
மேவு சோதியை வேல் வலவன் கலி கன்றி விரித்து உரைத்த
பாவு தண் தமிழ் பத்திவை பாடிடப் பாவங்கள் பயிலாவே–3-1-10-

மூவராகிய மூர்த்தி -முதல்வன் தன்னை -நம்மாழ்வார் –

ப்ரஹ்ம ருத்ராதிகள் உடைய சரீரத்துக்கும்
ஆத்மாவுக்கும் அந்தராத்மதயா நின்று
சிருஷ்டி சம்ஹாரங்களைப் பண்ணுகையாலும் –
ஸ்வேன ரூபேண நின்று பாலனத்தைப் பண்ணுகையாலும்
மூவராகிய ஒருவனை
ப்ரஹ்ம விஷ்ணு சிவாத் மிகாம் ஏக ஏவ ஜனார்த்தனன் -ஸ்ரீ விஷ்ணு புராணம் –
ஆக
சர்வ நியந்தாவாய் ஆயிற்று –

மூ வுலகு உண்டு உமிழ்ந்து அளந்தானை-
ஆபத் சகனும் ஆயிற்று

தேவர் தானவர்-சென்று சென்று இறைஞ்சத் தண் திருவயிந்திரபுரத்து மேவு சோதியை
தேவானாம் தனவாநாஞ்ச–ஜிதந்தா ஸ்லோகம் -என்கிறபடியே
தன்னாலே ஸ்ருஜ்யரான இவர்கள் இரண்டு திறத்தாருக்கும்
ஒத்து இருக்கையாலே
தம்தாமுடைய அபேஷித சித்திக்காக
தேவர்களும் அசுரர்களும் அடைய சென்று ஆஸ்ரயிக்கலாம் படி
திருவயிந்திரபுரத்தில் நித்ய வாசம் பண்ணி
அத்தாலே
மேவு சோதியை
பரம பதத்தில் காட்டிலும் உஜ்ஜ்வலனாய் இருக்கிறவனை
எல்லாம் இல்லை இறே பரமபதத்தில்
இவர்களுக்கு அபேஷிதம் விதானம் பண்ணுகையால் வந்த
ஏற்றம் உண்டு இறே இங்கு

வேல் வலவன் –
அரணாம் நமக்கு என்றும் ஆழி வலவன் என்னுமா போலே

கலி கன்றி விரித்து உரைத்த –
சொல்லுகிற லஷணங்கள் உண்டாம்படி சொன்ன
விரித்து உரைத்த என்றும்
தொகுத்து உரைத்த என்றும் உண்டு இறே
சிவிட்கு என்று நெஞ்சிலே படும்படி பண்ணுகையும்
இவர்களுக்கு பரக்கச் சொல்லுகையும்
இவை எல்லாம் வேணும் இறே

பாவு தண் தமிழ் பத்திவை பாடிடப்
பாவு -பரந்து சபாத லஷமாய்  இருக்கை அன்றிக்கே-(மஹா பாரதம் 125000) பத்தாயிற்று –

பாவங்கள் பயிலாவே –
பாப அனுபவம் பண்ணுகைக்காக இறே சம்சாரத்தில் பிறக்கிறது
அத்தை அனுபவிக்க வந்த இத் தேசத்தில் இத்தை அதிகரிக்கில்
அவை தாம் நமக்கு இருப்பிடம் இல்லை என்று விட்டு ஓடிப் போம் –

————

ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.

இரு நிலம் இடந்து இரும் துன்பம் தொண்டர் அண்டர்க்கு
உருத்து ஆல்மேல் சேர் அடியார் மெய்யன் -பொருந்தும்
அயிந்தை சீர் உட்பொருள் உடன் சொல் கலியன்
செயரில் பா நாம் உண்னும் ஊண்–21-

உருத்து -கோபித்து -அதனால் அழித்து-/செயிர் -குற்றம் /செயரில் -குற்றம் அற்ற /
கமல நன் மலர்த் தேறல் அருந்தி இன்னிசை முயன்று எழும் அளிகுலம் பொதுளி அம் பொழில் சூடி
செருந்தி நாண் மலர் சென்று அணைந்து உழி தரு —
தேனேமலரும் திருப்பாதத்தை தேறல் அருந்தி அவன் புகழ் பாடி பின்னர்
பரமபத நாதனின் -பத்தே பரமே மத்வ உத்ஸா -பாத மலர் நறவு அருந்தச் செல்வர்
அளிகுலம் -வண்டு–ஸ்ரீ வைஷ்ணவர்கள் என்றவாறு–

————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -7-6-11-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

September 25, 2013

  புக்க அரிஉருவாய் அவுணன்உடல் கீண்டுஉகந்த
சக்கரச் செல்வன்தன்னைக் குருகூர்ச்சட கோபன்சொன்ன
மிக்கஒர் ஆயிரத்துள் இவைபத்தும்வல் லார்அவரைத்
தொக்குப்பல் லாண்டிசைத்துக் கவரிசெய்வர் ஏழையரே.

பொ-ரை : அந்த நரசிங்கத்தின் உருவமாகிப் புக்கு அவுணனாகிய இரணியனுடைய சரீரத்தைப் பிளந்து மகிழ்ந்த சக்கரத்தையுடைய சர்வேசுவரனை, திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீசடகோபர் அருளிச்செய்த மேம்பட்ட ஒப்பற்ற ஆயிரம் திருப்பாசுரங்களுள் இத்திருப்பாசுரங்கள் பத்தையும் கற்று வல்லவர்களாகிய அவர்களைப் பெண்கள் சூழ்ந்துகொண்டு பல்லாண்டு பாடிச் சாமரை வீசுவார்கள்.

ஈடு : முடிவில், 3‘இத்திருவாய்மொழி கற்றாரை மதிமுக மடந்தையர் விரும்பித் திருப்பல்லாண்டு பாடிச் சிறப்பிப்பர்கள்,’ என்கிறார்.

புக்கு அ அரி உருவாய் – அந்த அரி உருவாய்ப் புக்கு. 1அவ்வரியுரு என்னுமித்தனையாயிற்றுச் சொல்லலாவது.2நரசிங்கமான வேடத்தைக்கொண்டு பகைவன் அண்மையிலே கிட்டி. அன்றிக்கே, இரணியன் உடலைப் பிளந்துகொடு புறப்பட்ட போதைக்கடுமை, புறம்பு இட்டு ஒருவன் வந்து செய்தானாகை அன்றிக்கே, உள்ளுநின்றும் ஒரு சிங்கம் பிளந்துகொண்டு புறப்பட்டாற்போலேயாயிற்று அதனைச் சொல்லுதல். அவுணன் உடல் கீண்டு உகந்த – இரணியன் உடலைப் பிளந்து போகட்டு, ‘சிறுக்கன் விரோதி போகப்பெற்றோம்!’ என்று உகந்தனாயிற்று. சக்கரச் செல்வன்தன்னை –3இரணியனுடைய உடலுங்கூடத் திரு உகிருக்கு அரை வயிறாகப் போகையாலே, பின்னை அழகுக்குப் பத்திரங்கட்டின இத்தனையாயிற்று.

குருகூர்ச் சடகோபன் சொன்ன – ஆழ்வார் அருளிச்செய்த. 4மிக்க ஓர் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார்-பகவத் விஷயத்தை உள்ள அளவும் சொன்ன ஆயிரத்திலும் வைத்துக்கொண்டு இப்பத்தையும் கற்றவர்களை. தொக்குப் பல்லாண்டு இசைத்துக் கவரி செய்வர் ஏழையர் – 5கிண்ணகத்தில் இழிவாரைப்போலே தனி இழிய ஒண்ணாமை திரண்டு கொண்டு, ‘பொலிக! பொலிக!’ என்று மங்களாசாசனம் செய்து, சர்வேஸ்வரன் பக்கல் செய்யக்கூடிய 6அசாதாரண கைங்கரியங்களையடைய இப்பத்தைக் கற்றவர்கள்

பக்கலிலே செய்யாநிற்பார்கள் மதிமுகமடந்தையர். நெடுநாள் சம்சாரத்தில் பட்ட இழவெல்லாம் தீரும்படி அவர்களாலே கொண்டாடப்பெறுவர்கள்.

 

             திருவாய்மொழி நூற்றந்தாதி 

        பாமரு வேதம் பகர்மால் குணங்களுடன்
ஆமழகு வேண்டற்பா டாமவற்றைத்-தூமனத்தால்
நாண்ணியவ னைக்காண நன்குருகிக் கூப்பிட்ட
அண்ணலைநண் ணார்ஏ ழையர்

நிகமத்தில்
மதி முக மடந்தையர் பல்லாண்டு இசைத்து கவரி செய்வார்
அரி உருவாய் அவுணன் கொன்று
பல்லாண்டு பாடி சாமரம்
அரி உரு -அவ் ஒன்றே சொல்ல முடியும்
கடுமை -உள் நின்றும் சிம்ஹம் புறப்பட்டு வந்தது போலே
உடல் கீண்டு உகந்த
சிருக்கன் விரோதி போக்கிய உகப்பு
சக்கர செல்வன் தன்னை
திரு உகிர் அரை உடலாக போவதால்
அழகுக்கு மற்ற ஆயுதங்கள்
மிக்க -உள்ள அளவும் சொன்ன ஆயிரம்
தொக்கு பல்லாண்டு இசைத்து திரண்டு பொலிக பொலிக
கின்னகத்தில் இழிவாரைப் போலே
சர்வேஸ்வரன் பக்கல் பண்ண கடவ அசாதாராண
இந்த பத்தும் அப்யசிப்பார் பக்கல்
ஏழையர்-பாகவத கிஞ்சித்கார
சபல புத்தி நப்பாசை இதில் உள்ளவர்கள்-

சாரம் பாசுரம்
வேதம் பகரும் மாறன்
வேண்டப்பாடு பெருமை
தூ மனத்தால் நண்ணி
காண ஆசைப்பட்டு உருகி கூப்பிட்ட
அண்ணலை நண்ணா ஏழையர்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -7-6-10-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

September 25, 2013

  ஏற்றரும் வைகுந்தத்தை அருளும்
நமக்கு ஆயர்குலத்து
ஈற்றிளம் பிள்ளை ஒன்றாய்ப்புக்கு
மாயங்களே இயற்றிக்
கூற்றியல் கஞ்சனைக் கொன்று ஐவர்க்காய்க்
கொடுஞ்சேனை தடிந்து
ஆற்றல் மிக்கான் பெரிய பரஞ்சோதி
புக்க அரியே.

பொ – ரை : ‘பிறந்த ஓர் இளம்பிள்ளையாய் ஆயர் குலத்திலே புகுந்து ஆச்சரியமான காரியங்களையே செய்து, யமனப் போன்ற தன்மையனான கம்ஸனைக் கொன்று, பாண்டவர்களுக்காக் கொடியசேனைகள் எல்லாவற்றையும் கொன்று, ஆற்றலின் மிக்கானாய், பெரிய பரமபதத்திலே சென்று சேர்ந்த கிருஷ்ணனானவன், ஒருவர் தம்முயற்சியால் ஏறுதற்கு அரிய பரமபதத்தை நமக்குக் கொடுப்பான்’ என்றவாறு.

வி – கு : ஏற அரு என்பது, ‘ஏற்றாது’ என்றாயிற்று. ‘அரி நமக்கு வைகுந்தத்தை அருளும்,’ என்க. அரி – சிங்கம்; உவம ஆகு பெயர். ‘ஈன்ற இளம்’ என்பது, ‘ஈற்றிளம்’ என்றாயிற்று. ‘ஆயர்குலத்திலே புக்கு இயற்றிக் கொன்று தடிந்து ஆற்றிலின் மிக்கான்’ என்க. ஆற்றல் – பொறை. வலியுமாம்.

ஈடு : பத்தாம் பாட்டு. 2பிராப்பியன் அவனே என்னும் இடத்தைச் சொல்லி, தன்னைப் பெறுவதற்குச் சாதனம் தானே என்னும் இடத்தையும் சொல்லி, விரோதிகளை அழிப்பானே அவனே என்னும் இடத்தையும் சொல்லி, இப்படி நம் பேற்றுக்குக் கண்ணழிவுஇன்றிக்கே இருந்த பின்பு அவன் தன்னை நமக்குத் தரும் என்று அறுதியிடுகிறார்.

ஏறஅரு வைகுந்தத்தை அருளும் நமக்கு – ஒருவராலும் தம்முயற்சியால் அடைய ஒண்ணாதிருக்கிற ஸ்ரீவைகுண்டத்தை அவன் தானே தரப் பெற இருக்கிற நமக்குத் தரும். 1‘எல்லா வழியாலும் அவன் தன்மையை அறிந்து, ‘அதனைத் தரும்’ என்று இருந்தீரேயாகிலும், பெற இருக்கிற நம் படியைப் பாரானோ?’ என்னில், ஆயர்குலத்து ஈற்றிளம்பிள்ளை – நம்படி பார்க்க அறியாத இளைஞன். 2‘இளைஞனே! (சிசுபாலனுக்கு) நித்தியசூரிகளோடு ஒத்த இன்பத்தை அளித்தவன் ஆனாய்’ என்னக்கடவதன்றோ? முக்த ஸாயுஜ்யதோபூ:’ என்பது, ஸ்தோத்ர ரத்நம், 63.
ஈற்றிளம்பிள்ளை – 3‘ஈறான இளம்பிள்ளை’ என்றாய், மிக்க இளைஞன் என்றபடி. ஈறு -முடிவு. அன்றிக்கே, ஈன்றிளம்பிள்ளை என்றாய், ‘கற்றிளம்பிள்ளை’ என்றபடி. இரண்டாலும் அதி இளைஞன் என்றபடி. ஒன்றாய்ப் புக்கு – 4கம்ஸனும் பொய்யே அம்மானாய் ‘வில் விழவுக்கு’ என்று அழைத்து விட, இவனும் பொய்யே மருகனாய் அவற்றிற்கெல்லாம் தானே கடவனாக விருமகிப் போய்ப் புக்கானாயிற்று. அன்றிக்கே, ‘வில்விழவு’ என்று கொண்டு ஒரு வியாஜத்தை இட்டுப் போய்ப் புக்கு என்னுதல்.

மாயங்களே இயற்றி – ஆயுதச்சாலையிலே புக்கு ஆயுதங்களை முரிப்பது, 5ஈரங்கொல்லியைக் கொன்று பரிவட்டம் சாத்துவது, குவலயாபீடத்தின் கொம்பை முரிப்பது, மல்லரைக் கொல்லுவது ஆன ஆச்சரிய காரியங்களையே செய்து. இயற்றுதல் – செய்யத்தொடங்குதல். இவன் இப்படிச் செய்யப் புக்கவாறே அவற்றைக் கேட்டுப் பொறுக்கமாட்டாமல் கூற்றுவனைப் போலே கிளர்ந்தான் ஆயிற்றுக் கம்ஸன். கூற்று இயல் கஞ்சனைக் கொன்று-மஞ்சத்திலே இருந்த கம்ஸனை முகம் கீழ்ப்பட விழ விட்டுக் கொன்று போகட்டானாயிற்று. இயல்பு-தன்மை. 1‘அந்தக் கண்ணபிரான், கிரீடம் கீழே விழும்படி மயிரைப் பிடித்து இழுத்துப் பூமியிலே தள்ளினார்’ என்றதற்குக் கருத்து என்னையோ?’ எனின்,‘

கேஸேஷூ ஆக்ருஷ்ய விகளத் கிரீடம் அவநீதலே
ஸ கம்ஸம் பாதயாமாஸ தஸ்ய உபரி பபாத ச’-என்பது, ஸ்ரீவிஷ்ணு புரா. 5. 20 : 84.

‘இராஜத் துரோகிகளைக் கொல்லும்போது இராஜ சிந்நங்களை வாங்கிக் கொல்லுவாரைப் போலேகாண்’ என்று அம்மாள் பணிப்பர். 2தான் கொடுத்த தரம் ஆகையாலே மற்று ஒருவர்க்குத் தோற்றத்துக்குக் காரணமாக வேண்டும் அன்றோ? ஆக, தன்னைத்தான் அறிவதற்கு முன்பு, கம்ஸன் வரவிட்டவர்களையும் அவனையும் தப்புகைக்குப் பணி போந்தது; பருவம் நிரம்பித் தன்னைத்தான் அறிந்த பின்பு, பாண்டவர்கள் காரியம் செய்து இத்தனை என்கிறார்.

ஐவர்க்காய்க் கொடுஞ்சேனை தடிந்து – பாண்டவர்களைச் சீறினவர்கள் அடைய ‘சாரதி, சாரதி’ என்று வாய் பாறிக்கொண்டு வர, அவர்களை அடையத் தேர்காலாலே உழக்கிப் போகாட்டானாயிற்று. ஆற்றல் மிக்கான் –3பகைவர்கள்யும் வேரோடே வாங்கிப் போகட்டு, தருமபுத்திரன் தலையிலே முடியையும் வைத்து, இவள் குலைந்த சூழலையும் முடிப்பித்த இடத்திலும், 4‘நிலைபெறாத மனத்தையுடையவனாய் இருக்கிறேன்’ என்றே அன்றே எழுந்தருளினான்?‘நாதிஸ்வஸ்த மநா:’ என்பது, பாரதம், உத்யோக.ஆற்றல் என்று பொறையாய், ‘பொறை மிக்கவன்’ என்னுதல். அன்றிக்கே, வலியாய், ‘வலி மிக்கவன்’ என்னுதல். இவற்றை அடைய அழியச் செய்கைக்கு அடியாற வலியைச் சொன்னபடி. பெரிய பரஞ்சோதி புக்க அரியே – 2கம்ஸனும் துரியோதனனும் இல்லாத இடத்தில் பரமபதத்திலே போய்ப் புக்க பின்பும், ‘நித்திய சூரிகள் நடுவே இருந்தோம் அன்றோ?’ என்று பாராதே, கம்ஸன் துரியோதனன், கர்ணன் என்று, ஆசிலே வைத்த கையுந்தானுமாய்ப் பகைவர்கள் மேலே சீறன சீற்றத்தின் வாசனை அங்கேயும் தொடர்ந்தபடி.

பிராப்யன் அவனே என்னும் இடம் சொல்லி
சாதனம் தானே
விரோதி நிரசனம் செய்வானே அவனே
தன்னை தரும்
வைகுந்தம் அருளும் ஆயர் குலம் புக்கு
ஒரு பாட்டில் பாகவதம் இதில்
மாயங்களே இயற்றி
காஞ்சனை கொன்று
ஐவர்க்காய் பாரதம்
தன்னுடை சோதி புக்கு
எல்லா வழியாலும் அவன் ஸ்வா பாவத்தை அறிந்து
நம் படி பாராமல்
ஆயர் குலத்தில்-நம் படி பார்க்க அறியாத முக்தன்
ஈற்று இளம் பிள்ளை
முடிவான
அதி முக்தன்
இடையர் மடையர்
கடை கேட்ட
ஈன்று கற்று இளம் பிள்ளை
இப்பொழுது பிறந்த பிள்ளை
ஒன்றாய் புக்கு சமமாக
பொய்யே மருமகனாய்
வியாஜ்யம் -வில் விழ
ஆயுதம்
ஈரம் கொல்லி வண்ணன் கொன்று பரிவட்டம் சாத்துவது
மிருத்யு போலே கூற்று இயல் கம்சன்
மஞ்சத்தில் உள்ளவனை முகம் கீழ்பட வைத்து
அம்மங்கி அம்மாள்
ராஜ சின்னங்களை பிடுங்கி ராஜாவை கொல்லுவது போலே
அவன் சின்னம் இருக்க அவனாலும் கொல்ல முடியாதே
இவை சிறு வயசு வியாபாரம்
தன்னை தான் அறிந்த பின்பும் பாண்டவர் கார்யம் செய்து
சாரதி சாரதி விரோதிகள் வாய் பாரித்து வர
அவர்களை தேர் கால் -கொண்டு நசுக்கி
ஆற்றல் மிக்கான்
தர்ம புத்திரன் முடி
த்ரௌபதி குழல் முடித்து
திருப்தி இன்றி -பரம் ஜோதி புக்க
வலிமை பொறுமை மிக்க –
நித்யர் நடுவில்
கையும் தானுமாய் வாசனை அங்கேயும் வர்த்திக்கும் படி
அபசாரம் சீற்றம் தணியாமல்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -7-6-9-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

September 25, 2013

காண்டுங்கொ லோநெஞ்ச மே!கடிய வினையே முயலும்
ஆண்திறல் மீளிமொய்ம்பில் அரக்கன் குலத்தைத் தடிந்து
மீண்டுமவன் தம்பிக்கே விரிநீர் இலங்கை அருளி
ஆண்டுதன் சோதி புக்க அமரர்அரி ஏற்றினையே?

பொ – ரை : கொடுந்தொழிலையே செய்கின்ற ஆண் தன்மையினையும் திறலையும் மிக்க வலியினையுமுடைய அரக்கனான இராவணனுடைய குலத்தைக் கொன்று, மீண்டும், அவனுடைய தம்பியாகிய விபீஷணனுக்கே கடல் சூழ்ந்த இலங்கையைக் கொடுத்து, திரு அயோத்தியில் வீற்றிருந்து பதினோராயிரம் ஆண்டுகள் அரசாட்சியைச் செலுத்தித் தன்னுடைச் சோதியை அடைந்த நித்தியசூரிகளுக்கு ஆண் சிங்கத்தைப் போன்றவனான சர்வேஸ்வரனை நெஞ்சம்! காண்போமோ?

வி – கு : ‘குலத்தைத் தடிந்து தம்பிக்கு அருளி ஆண்டு புக்க அரியேறு’ என்க.

ஈடு : ஒன்பதாம் பாட்டு. 1‘இராவணன் முதலியோரை அழித்த சக்கரவர்த்தி திருமகனை, நெஞ்சே! காண வல்லோமோ?’ என்கிறார்.

காண்டுங்கொலோ நெஞ்சமே – 2இழவாலே கட்டிக்கொண்டு கதறுகைக்குக் கூட்டான நீ, இப்பேற்றாலே இன்பமடைந்தவர் அனுபவிக்கும் அனுபவத்துக்கும் கூட்டாய் நாம் அவனைக் காணவல்லோமோ? கடிய வினையே முயலும் – 3தாயையும் தமப்பனையும் இரண்டு இடங்களிலே ஆக்குவாரைப் போலே அன்றோ, பெருமாளையும் பிராட்டியையும் இரண்டு இடங்களிலே ஆக்கிற்று? இதில்தாழ்ந்திருப்பது ஒரு செயல் இல்லையாயிற்று, இவன் செய்யுமவற்றில். 1‘கிரமத்திலே பலம் கொடுக்கிறோம்’ என்று சர்வேஸ்வரனுக்கு ஆறியிருக்க ஒண்ணாதபடியாயிற்றுக் கொடிய செயல்கள் செய்யும்படி. 2‘மிகக்கொடியனவான பாவங்கள், மிக உயர்ந்தனவான புண்ணியங்கள் ஆகிய இவற்றால் உண்டான பலன்களை இப்பிறப்பிலேயே மூன்று வருடங்களில் மூன்று மாதங்களில் மூன்று பக்ஷகளில் மூன்று நாள்களில் அனுபவிக்கிறான்’ என்னும்படியே.

‘அத்யுத்கடை: புண்யாபாபை: இஹைவபலம் அஸ்நுதே
த்ரிபி: வர்ஷை: த்ரிபி: மாஸை: த்ரிபி: பக்ஷை: த்ரிபி: திநை:’-என்பது, தர்ம சாஸ்திரம்.

கடிய வினையே என்ற ஏகாரத்தால் இவன் நல்வினைத் தொடர்பு இல்லாதவன் என்பது பெறப்படும்.

ஆண் திறல் மீளி மொய்ம்பில் அரக்கன் – ஆண்பிள்ளைத் தனத்தில் வந்தால், 3திறலையுடைய சிங்கம் போன்ற மிடுக்கையுடைய அரக்கன். மீளி-சிங்கம். அன்றிக்கே, ‘திறலையுடையனாய், பிறரை அடக்குதற்குரிய ஆற்றலையுடையனாய், யமனைப் போன்ற மிடுக்கையுடையனான இராவணனுடைய’ என்னுதல். குலத்தைத் தடிந்து-4‘ஜனகராஜன் திருமகள் காரணமாகப் பிசாச ஜாதி அற்றதாயும் அரக்கர் குலம் அற்றதாயும் செய்வேன்’ என்கிறபடியே, கரிஷ்யே மைதிலீஹேதோ: அபிஸாசம் அராக்ஷஸம்’-என்பது, ஸ்ரீராமா. ஆரண். 64 : 66.

எந்தையே! இராகவ! சரணம் என்ற சொல்
தந்தவர் எனைவரோ சாற்று மின்என’

குலமாக அழித்து.அவன் தம்பிக்கே விரிநீர் இலங்கை அருளி – 1‘இராவணன் தானேயாகிலும்’ என்கிறபடியே, ‘சரணம்’ என்ற சொல் அழகியதாய் இருந்தது, விபீஷணோ வா ஸூக்ரீவ யதிவா ராவண: ஸ்வயம்’-என்பது, ஸ்ரீராமா. யுத். 18 : 34.

‘அவனோடு சம்பந்தமுடையான் ஒருவன் வந்தானாகை அன்றிக்கே, அவன்தானே வரப்பெறுவதுகாண்’ என்று செவி சீப்பாய்ந்து இருந்தார் அன்றோ? 2‘அங்குநின்றும் வந்தான் ஒருவனைக் கைக்கொண்டாராக அமையாதோ? இந்நிர்பந்தம் என்?’ என்னில், அவனோடு சம்பந்தமுடையான் ஒருவனைக் கைக்கொண்டால், அவன் தானும் நான்கு பேருமாகப்போம்; அவன்தானே வரப்பெற்றதாகில் துருப்புக்கூடாக நோக்கிற்று ஆகலாம் அன்றோ? 3மேலும், பகைமையில் முதிர நின்றானும் அவனே ஆகையாலே, ‘காப்பாற்றுமவனாக வேண்டும்’ என்ற விருப்பம் உள்ளதும் அவனிடத்திலே அன்றோ? 4இப்படி அவனை அங்கீகரிப்பதற்குக் கோலிப் பெறாத இழவு தீர்ந்தது இவனைக் கைக்கொண்ட பின்பாயிற்று.

‘அநுஜ; ரநவணஸ்ய அஹம் தேநச அஸ்மி அவமாநித:
பவந்தம் ஸர்வபூதாநாம் ஸரண்யம் ஸரணம் கத:’-என்பது, ஸ்ரீராமா யுத் 19 : 4.

5‘நான் இராவணனுக்குப் பின்பிறந்தவன்’ என்று அவன் வர, இவரும் 1‘அவன் தம்பியே’ என்றாயிற்று அவனைக் கைக்கொண்டது.

‘பஞ்செனச் சிவக்கும் மென்கால் தேவியைப் பிரித்த பாவி
வஞ்சனுக்கு இளைய என்னை வருகஎன் றருள்செய் தானோ?’-என்றார் கம்பரும்.

விரிநீர் இலங்கை அருளி – கடல் சூழ்ந்த இலங்கையைக் கொடுத்தருளி.

மீண்டும் ஆண்டு – இராவணனைக் கொன்ற பின்பு, பிரமன் முதலான தேவர்கள், ‘தேவரை அம்புக்கு இலக்கு ஆக்கி, நாங்கள் எங்கள் காரியத்தைத் தலைக்கட்டிக்கொண்டோம்; இனி தன்னுடைச் சோதி ஏற எழுந்தருள அமையும்,’ என்ன, அவ்வளவிலே சிவன், ‘தேவர் அங்ஙன் செய்தருள ஒண்ணாது, திருவடி சூடுதற்குத் தடை உண்டாகையாலே திருத்தாய்மாரும் இழிவுபட்டிருந்தார்கள்; நாடும் அடைய நொந்திருந்தது: ஸ்ரீபரதாழ்வானும் ஆர்த்தனாய் இருந்தான்: ஆன பின்பு, 2‘வருந்தியிருக்கிற ஸ்ரீபரதாழ்வானையும் பெருமை பொருந்திய ஸ்ரீகௌஸல்யையாரையும் சமாதானம் செய்து’ என்கிறபடியே’ ‘ஆஸ்வாஸ்ய பரதம் தீநம் கௌஸல்யாம்ச யஸஸ்விநீம்’-என்பது, ஸ்ரீராமா. யுத். 122 : 4.

ஸ்ரீபரதாழ்வான் தொடக்கமானவர் ‘இழவுகள் எல்லாம் தீரும்படி மீண்டு எழுந்தருளி, திருமுடி சூடி, நாட்டை வாழ்விக்க வேணும்’ என்ன, அது திருவுள்ளத்துக்குப் பொருந்தும் செயலாகையாலே பதினோராயிரம் ஆண்டு ஒரு படிப்பட இருந்து நாட்டினை வாழ்வித்தருளி.

தன் சோதி புக்க – அம்புக்கு இலக்கு ஆக்குவார் இருந்த இடத்தை விட்டுத் தனக்கே சிறப்பாய் எல்லை அற்ற பேரொளிப் பிழம்பு வடிவமாய் இருக்கிற பரமபதத்திலே போய்ப்புக்க. அமரர் அரி ஏற்றினையே- 3அம்பு இட்டு எய்வார் இன்றிக்கே ஆநுகூல்யமே தன்மையாய்த் தொண்டிலேயே நிலை பெற்றவர்களான நித்தியசூரிகள் நடுவே அவன் இருக்கும் இருப்பைக் காண வல்லோமே? 4பசுக்களின் கூட்டத்தின் நடுவே ஓர் இடபம் செருக்கித் திரியுமாறு போலே, நித்தியசூரிகள் கொண்டாட, அவர்கள் நடுவே அதனாலேசெருக்கி மேனாணித்திருக்கும் இருப்பைச் சொல்லுகிறது. 1நித்தியசூரிகள் திரளிலே அந்த ஓலக்கத்தின் நடுவே இருக்கும் இருப்பைக் காண்கை அன்றோ பிராப்பியமாகிறது?

ராவணனை முடித்து –
அரக்கன் குலத்தை தடிந்து
அவன் தம்பிக்கே விரி நீர் இலங்கை அளித்து
அமரர் அரி ஏற்றினை காண்டும் கொலோ
கடிய வினை -பிராட்டி பிரித்து –
ஒரே பாசுரம் ஸ்ரீ ராமாயணம் அருளி
நெஞ்சமே -கூட்டாய்
காண வல்லமேயோ
கட்டி அளவும் நீ
சந்தோசம் கொண்டாடவும் நீயே நெஞ்சே
தாயையும் தகப்பனாரையும் இரண்டு இடத்தில் வைத்த அபசாரம்
தாழ்ந்த செயல் இதை விட இல்லையே
கொடிய செயல்கள் –
புண்ய பாப பலன்கள் -அதிகம் செய்து உடனே பலன் –
சதாச்சாரம் சம்பந்தம் இல்லாதவன் -வினையே -யேவகாரம்
சிம்கம் போலே மிடுக்கை
மிருத்யு கல்பம் ஆண் திறல் மீளி யமன் போல
மைதிலி ஹேதோ லோகத்தை ராஷச குலம் இன்றி
அவன் தம்பிக்கே -யதிவா ராவணச்ய-
அவனே வந்தால் விசேஷம் -செவி சீப்பாய்ந்து இருக்க
அவனும் நான்கு பெரும்
துருப்பு கூடாக நோக்க அவனே வந்து இருந்தால் -இருக்குமே
அதிகமாக ரஷிக்க வேண்டியது பிரதி கூலிம் மிக்கவன்
வாளேறு காண தேளேறு மாயுமா போலே
விஷயீ கரிக்க கோலி-பெறாத இழவு தீர்ந்தது இவனைக் கை கொண்ட பின்பு
ராவணன் தம்பி -கொள்வாரோ இருக்க
அதுவே பெருமாள் திரு உள்ளத்துக்கு இசைந்ததாக இருக்க
விரி நீர் கடல் சூழ்ந்த இலங்கை கொடுத்த பின்பு –
மீண்டும் -ஆண்டு –
ருத்ரன் -ஸ்ரீமான் -பிரார்த்திதபடியால் –
ஆச்வாச்ய பரதன் தினம் இழவு தீரும் படி திரு முடி சூட
ருத்ரன் -சம்ஹாரம்
பெருமாள் ஆண்டாள் ஒய்வு கிடைக்குமே அதனால் பிரார்த்தித்தானாம்
11000 ஆண்டு ஒருபடிபடி இருந்து ஆண்டு
தன் சோதி புக்க
அன்புக்கு இலக்காக்குவார் இருந்த இடம் விட்டு
ஆனுகூல்யமே ஸ்வாபாவமாய்
கைங்கர்யமே யாத்ரை நித்யர் நடுவில் ‘கோ வது-பெண்கள் பசுக்கள்
நடுவில் ஒரு ரிஷபம் போலே
நித்யர் நடுவில் செறுக்கி மேனானிப்பு தோன்ற ஓலக்கம் இருப்ப -காண ஆசைப் படுகிறார்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -7-6-8-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

September 25, 2013

ஆளியைக் காண்பரி யாய்அரி
காண்நரி யாய் அரக்கர்
ஊளைஇட்டு அன்றுஇலங் கைகடந்து
பிலம்புக்கு ஒளிப்ப
மீளியம் புள்ளைக் கடாய்விறன்
மாலியைக் கொன்று பின்னும்
ஆளுயர் குன்றங்கள் செய்து அடர்த்
தானையும் காண்டுங்கொலோ?

பொ – ரை : ‘யாளியைக் கண்ட குதிரை போலவும், சிங்கத்தைக் கண்ட நரி போலவுமாகி அரக்கர்கள் கதறிக்கொண்டு அக்காலத்தில் இலங்கையை விட்டுப் பிலத்திலே சென்று மறைய, வலிய அழகிய கருடப் பறவையை நடத்திய வலிய மாலி என்றவனைக் கொன்று, பின்னும் உயர்ந்த பிண மலைகளாக வீரர்களைக் கொன்று குவித்து சர்வேஸ்வரனையும் காணக்கூடுமோ?’ என்கிறார்.

வி – கு : ஆளி வேறு: அரி வேறு. ‘ஒளிப்பக் கடாய் மாலியைக் கொன்று குன்றங்கள் செய்து அடர்த்தவன்’ என்க. அடர்த்தவன் – பெயர்.

 ஈடு : எட்டாம் பாட்டு. 1‘மாலி தொடக்கமான பகைவர்கள் கூட்டத்தைக் கொன்றருளின சர்வேஸ்வரனைக் காண வல்லோமே?’ என்கிறார். 2முதல் இரண்டு பாசுரங்களாலே பிராப்பியன் அவனே என்னும் இடம் சொல்லி, மேல் ஐந்து பாசுரங்களாலே, பிராபகன் அவனே தன்னைப் பெறுகைக்கு என்னும் இடம் சொல்லி.  இப்பாசுரத்தாலும் அடுத்த பாசுரத்தாலும் பகைவர்களை அழிக்கின்ற அவனது தன்மையைச் சொல்லி, தடைகளைப் போக்குவான் அவனே என்னும் இடத்தைச் சொல்லுகிறார்.

ஆளியைக் காண் பரியாய் – யாளியைக் கண்ட குதிரை போலவும். அரி காண் நரியாய் – சிங்கத்தைக் கண்ட நரியைப் போலவும். 3ஸ்ரீராமாயணத்தே, அந்த அரக்கர்கள் அஞ்சினபடியாகப் பல உதாரணங்களை இட்டுச் சொல்லிப் போரக்கடவதன்றோ? இங்கே இரண்டு வகையாலே அதனைச் சூசிப்பிக்கிறார். பரி-குதிரை. அரக்கர். ஊளை இட்டு -மேலே ‘நரி’ என்கையாலே அதற்குத் தகுதியாகச் சொல்லுகிறார். அன்று இலங்கை கடந்து பிலம் புக்கு ஒளிப்ப – தூசித்தலையில் நேர் நின்று போர் புரிய ஆற்றல் இல்லாமையாலே இலங்கையை விட்டுப் போய்ப் பாதாளத்திலே புக்கு ஒளிப்ப. என்றது, ‘புற்றுகள் எப்போதும் ஒக்கப் பாம்பு பற்று அறாதவாறு போலே என்றும் ஒக்கு அரக்கர்கள் மாறாதே, ‘மாலி, சுமாலி, மால்யவான்’ என்றாற்போலே சொல்லப்படுகிறவர்கள் வாழ்ந்து போந்தவர்களாய், பெரிய திருவடி முதுகிலே வந்து தோன்றி, அவர்களை அழித்தானாகச் சொல்லக்கடவது அன்றோ? அதனை இங்கே அருளிச்செய்கிறார்’ என்றபடி. 4கையில் ஆயுதம் போகட்டாரையும், முதுகு காட்டினாரையும் கொல்லக் கூடாதே அன்றோ? ஆகையாலே, தப்பி ஓடிப் போய் ஒளிப்பாரும் உள்ளே பட்டுப் போனாருமாய்ப் போனார்களாதலின், ‘பிலம் புக்கு ஒளிப்ப’ என்கிறார்.

மீளி அம் புள்ளைக் கடாய்-வலியையுடைய பெரியதிருவடியை நடத்தி. மீளியம்; ஒருசொல்; வலி என்பது பொருள். அன்றிக்கே, ‘மீளி அம் புள்’ என்று பிரித்து, 1‘கறையணி மூக்குடைப் புள்ளைக் கடாவி’ திருவாய், 3. 10 : 2.-என்கிறபடியே, பகைவர்களுக்கு யமன் போலே இருப்பானாய், 2‘தூவாய புள்ளூர்ந்து’பெரியதிருமொழி, 6. 8 : 3.
-என்கிறபடியே, அநுகூலர்க்குக் காண்பதற்கு இனியதான வேடத்தையுடையவனான பெரிய திருவடியை நடத்தி என்னுதல். 3பெரிய திருவடி முதுகிலே வந்து தோற்றும் போதை அழகையே அன்றோ இவர் பாவித்துக் கிடப்பது?‘பண்கொண்ட புள்ளின்
சிறகு ஒலி பாவித்து’ (திருவாய். 3. 8 : 5) என்றதனைத் திருவுள்ளம் பற்றி, ‘இவர்   பாவித்துக் கிடப்பது’ என்கிறார்.

4மீளி என்று வலிக்கும், யமனுக்கும், பாலை நிறத் தலைமகனுக்கும் பேராகச் சொல்லுவர்கள். விறல் மாலியைக் கொன்று – 5ஆக, பிரசித்தர்களிலே ஒருவனைச் சொல்லிற்று. பின்னும் ஆள் உயர் குன்றங்கள் செய்து-பின்னும் ஆண் பிள்ளைகளாய் இருப்பார் பலரை அழியச் செய்து, அவர்களாலே பிணமலையாம்படி செய்து. ஆண்களாலே உயர்ந்த மலைகளாம்படி செய்து. அடர்த்தானையும் காண்டுங்கொலோ-6அவன் அரக்கர் கூட்டத்தை அழியச் செய்தாற்போலே, நம் விரோதிகளைப் போக்கி நமக்குக் காட்சியிலே தொடர்புண்டாய் நாம் கண்டோமாய்த் தலைக்கட்ட வல்லோமோ?

மாலி துடக்கமான அசுரர்கள்
விரோதி நிரசன குணங்கள் இதிலும் மேலில் பாட்டாலும்
முதல் இரண்டு பாசுரம் -பிராப்யம்
மேல் ஐந்து பிராபகமும் அவனே சொல்லி
பிரதிபந்தகம் போக்குமவன் அவனே என்கிறார் –
யாளியைப் பார்த்த குதிரை போலே அசுரர் ஓட
சிங்கம் கண்ட நரி போலே
அரக்கர் ஊளை இட்டு -நரி சமாதியால் சொல்லுகிறார்
புள்ளைக் கடாவி விறல் மாலியைக் கொன்று அடர்த்தானை சேவிக்க முடியுமா –
இலங்கை கடந்து
மாலி மால்யவான் சுமாலி
தூசி தலையில் நேராக நின்று வியாபாரிக்க முடியாமல்
பாதாளத்தில் புக
பாம்பு புற்றில் எப்பொழுதும் இருப்பது போலே வர்த்திக்கும் அசுரர்கள் –
பிழம்புக்கு ஒலிப்ப
கையில் ஆயுதம் இல்லாதவரையும் முதுகு காட்டி ஒடுவாரையும் கொல்ல கூடாதே
வலிமை உள்ள கருடன்
மீளி மிருத்யு போலே பிரதிகூலருக்கு
அனுகூலருக்கு தர்சநீயம்
அருளாழி புள் கடாவி
மீளி -பாலைவனத்தில் தலைவன்
பின்னும் -ஆண் பிள்ளைகள் அநேகர் அழித்து பிணங்கள் குன்றம் போலே
விரோதிகளைப் போக்குவான்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -7-6-7-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

September 25, 2013

  என்திரு மார்பன் தன்னை என்மலைமகள் கூறன்தன்னை
என்றும்என் நாமகளை அகம்பாற் கொண்ட நான்முகனை
நின்ற சசிபதியை நிலங்கீண்டு எயில்மூன்று எரித்த
வென்று புலன்துரந்த விசும்பா ளியைக்கா ணேனோ?

பொ-ரை : ‘என்னுடைய திருமகளை மார்பிலே கொண்ட திருமாலை, என்னுடைய பார்வதியை ஒரு பக்கத்திலேயுடைய சிவபெருமானுக்கு உள்ளுயிராய் இருப்பவனை, என்னுடைய சரஸ்வதியை எப்பொழுதும் தன்னிடத்திலே கொண்டவனான பிரமனுக்கு உள்ளுயிராய் இருப்பவனை, நின்ற இந்திரனுக்கு உள்ளுயிராய் இருப்பவனை, நிலத்தைக் கேட்டாலே குத்தி மேலே கொண்டு வந்து, முப்புரங்களை எரித்த, ஐம்புலன்களையும் வென்று ஓட்டிய சுவர்க்கலோகத்தை ஆளுகின்றவனைக் காணேனோ?’ என்கிறார்.

வி – கு : நிலங்கீண்டல், எயில் மூன்று எரித்தல், வென்று புலன் துரத்தல், விசும்பு ஆளுதல் என்னும் நான்கனையும், மேலே கூறிய நால்வர்க்கும் முறை நிரல் நிறையாகக் கொள்க. ‘என் திருமார்பனாய் நிலங்கீண்டவன், என் மலைமகள் கூறனாய் எயில் மூன்று எரித்தவன், நாமகளை அகம்பாற்கொண்ட நான்முகனாய் வென்று புலன் துரந்தவன், சசிபதியாய் விசும்பு ஆண்டவன்’ என்க. சசி-இந்திராணி.

ஈடு : ஏழாம் பாட்டு. 2உத்தேசிய லாபம் அவனாலேயாயிருந்தது. இத்தலையாலே முயற்சி செய்வதற்குத் தகுதி இல்லாதபடியானபாரதந்திரியும் உண்டாய் இருந்தது; 1அத்தலையாலே பெறுமிடத்தில் ஒரு கண்ணழிவு இன்றிக்கே இருந்தது; 2இப்படி இருக்கச்செய்தேயும் இழந்து இருக்கக் காண்கையாலே ‘நான் இழவோடே கிடந்து முடிந்து போமித்தனையேயன்றோ?’ என்கிறார்.

என் திரு மார்பன்தன்னை – இவ்விடத்திலே ‘என்’ என்கிற சொல், விசேடண அமிசத்திற்கு அடைமொழி; 3‘என் திருமகள் சேர் மார்பன்’ என்ற இடத்திலே கொண்டது போன்று கொள்க. என் சுவாமினியான பெரிய பிராட்டியாரைத் திருமார்விலேயுடையவனை. 4‘என் மலைமகள் கூறன்’ என்பது முதலான இடங்களில் உள்ள ‘என்’ என்பது, விசேடிய அமிசத்திலே ஊற்றம். ‘என்றது, என் சொல்லியவாறோ?’ எனின், 5‘அவனுடைய விபூதி யோகத்துக்கு உறுப்பாகச் சொல்லுகிறார் இத்தனை அன்றி, ‘மறந்தும் புறம்தொழா மாந்தர்’ நான்முகன் திருவந். 68.-ஆக இருக்குமவர் ஆதலின், இவர்களோடே தமக்கு ஒரு சம்பந்தம் உண்டு என்கிறார் அல்லரே?’ என்றபடி, என் மலைமகள் கூறன் தன்னை -இமயமலையின் பெண்பிள்ளையைத் தன்னுடம்பிலே ஒரு பக்கத்திலேயுடையனாய் இருக்கிற சிவனைத் தான் இட்ட வழக்காகவுடையனாய் இருக்கிறவனை.என்றும் என் நாமகளை அகம்பால் கொண்ட நான்முகனை – சரஸ்வதியை என்றுமொக்கத் தன் பக்கலிலேயுடையனாய் இருக்கிற பிரமனுக்கு அந்தராத்துமாவாயுள்ளவனை. நின்ற சசிபதியை – இவர்களை எண்ணினால் தன்னை எண்ணலாம்படி ஐஸ்வரியத்தால் குறைவற்றிருக்கிற இந்திரனுக்கு அந்தராத்துமாவாய் உள்ளவனை. 1‘அவன் பிரமன், அவன் சிவன்’ என்றால், ‘அவன் இந்திரன் என்று ஒக்கச் சொல்லலாம்படி முட்டுப்பொறுத்துநின்ற இந்திரனுக்கு அந்தர்யாமியாயுள்ளவனை.ஸப்ரஹ்மா ஸஸிவ: ஸேந்த்ர;’ என்பது, தைத். நாரா.

2‘இப்போது இவை சொல்லுகிறதற்குக் கருத்து என்?’ என்னில், ‘சொரூபமும் உயர்வும் அவன் அதீனம்’ என்றார்; இங்கே, ‘தக்க வயதினை அடைந்த புத்திரர்களுக்கு ஒத்த இடங்களிலே திருமணம் செய்விக்கும் தமப்பன்மார்களைப் போலே, இவர்கள் தாம் மனைவிகள் அடைந்ததும் தந்தாமால் அன்று; சர்வேஸ்வரனாலேயாம்’ என்பதனைத் தெரிவித்தபடி.

‘இவர்களுடைய செயல்கள் எல்லாம் அவனுடைய அதீனம்’ என்கிறது மேல்: நிலம் கீண்டு. . .விசும்பாளியை – 3‘பிரளய சமுத்திரத்திலே மூழ்கினதாய் அண்டப்பித்தியிலே புக்கு ஒட்டி பூமியை மஹா வராஹமாய்ப் புக்கு எடுத்துக்கொண்டு ஏறின போதைய செயல் தன்னுடைய அதீனம் ஆனாற்போலே, அவர்களுடைய செயல்களும் அவனுடைய அதீனம்’ என்கிறது. எயில் மூன்று எரித்த – மதிள் மூன்றை எரித்த. 4‘விஷ்ணு அந்தராத்துமாவாய் நின்றான்’ என்னக்கடவது அன்றோ?

‘விஷ்ணு: ஆத்மா பகவத: பவஸ்ய அமிததேஜஸ;
தஸ்மாத் தநுர்ஜ்யா ஸமஸ்பர்ஸம் சவிஷேஹே மஹேஸ்வர;’-என்பது, பாரதம், கர்ணபர்வம்.

அதுவும் அவன் இட்ட வழக்கு. வென்றுபுலன் துரந்த-படைப்புக்கு உறுப்பாக ஐம்பொறிகளை அடக்கியவனை புலன்களை வென்று ஓட்டின விசும்பாளியை – சுவர்க்கத்தை வன்னியம் அறுத்து ஆளுகின்றவனை. காணேனோ – காணப்பெறேனோ?

1ஆகச் சொல்லிற்றாயிற்றது: உத்தேசிய லாபம் அவனாலேயாய் இருந்தது. அதற்கு உறுப்பான முயற்சியில் ஈடுபடுதற்குத் தகுதி இல்லாதபடி அதுவும் அவன் இட்ட வழக்காய் இருந்தது. 2இனி. இத்தலையாலே பேறு ஆம் அன்று விளம்பத்திற்குக் காரணம் உண்டாய் இருந்தது; அவனாலே பேறு ஆம் அன்று விளம்பத்திற்குக் காரணம் இன்றிக்கே இருந்தது. இப்படி இருக்கச்செய்தேயும் தம்மை இழந்து இருக்கக்கண்டார் ஆகையாலே, ‘இனி, இந்த இழவோடே இங்ஙனே முடிந்துபோமித்தனையே அன்றோ?’ என்று வருந்துகிறார்.

இத்தலையால் பிரவர்த்தனம் செய்ய ஒன்றும் இல்லாத பாரதந்த்ர்யம் இருக்க
உத்தேச்யம் அவனேயாய் இருக்க
அத்தலையால் பெற கண் அழிவு இன்றி இருக்க
இழவுக்கு காரணம் –
விசும்பாளியைக் காண்பேனோ
என் திரு –புருஷகாரம் செய்ய -மார்பிலே கொண்டவன்
மலைமகள் கூறன் -ருத்ரனை -பார்வதியை பாகத்தில் கொண்டவன்
நா மகளை சரஸ்வதி அகம்பால் கொண்ட நான்முகன்
சசிபதி -இந்த்ராணி -சசி
நிலன் கீண்டு -வராஹம்
மூன்று எரித்து –
வென்று புலன் துரந்த –
விசும்பு ஆளியை
என் திரு மகள் சேர் மார்பனை போலே என் திரு –
என் திருமகள் அனந்தாழ்வான் திருக் குமாரத்திக்கு பெயர்
ஆஸ்ரையான தசை புருஷகார
பிராப்ய தசை
போக தசை –
என் மலைமகள் கூறன் -இங்கு எல்லாம் -என் -விசேஷ்யத்தில் கொள்ள வேண்டும் நாராயணன் இடம்
விபூதி யோகதுக்காக உறுப்பாக சொல்லி
மறந்தும் புறம் தொழா மாந்தர் –
ருத்ரனை தான் இட்ட வழக்காக உடையவன் –
அவாவறச் சூழ் அரியை -சேர்த்து சொல்ல கூடாது –
அயனை அரனை அலற்றி -கை விட்டு –
பேச நின்ற -நாயகன் அவனே –
முனியே நான் முகனே முக்கண்ணப்பா -போலே
பரிவார தேவதை -சமம் இல்லை
ஹிமவான் பெண் பிள்ளை பார்வதி
நா மகளை அகம்பால் கொண்ட சதுர முகனை -நிர்வகிக்கும் என் எம்பெருமான்
ச ப்ரஹ்ம ச சிவா செந்த்ரா
இந்த்ரன்
முட்டு பொருத்து நின்ற –
இப்போது இவை சொல்ல கருத்து என் என்னில் –
ஸ்வரூபமும் உத்கர்ஷம் கீழே சொல்லி
பிராப்த யவன மகிஷி லாபமும் அவனால் என்கிறார் –
தசரதர் பார்த்து திருக் கல்யாணம் செய்வித சீதை பிராட்டி போலே

அண்ணலும் நோக்கி அவனும் நோக்கி -கம்பன் தான் அருளி –
வால்மீகி முன்பு பார்த்ததே சொல்ல வில்லை –
மகிஷி லாபம் இவனால் -என்கிறார் –
தகுதியான இடத்தில்
பிரவர்திகள் எல்லாம் அவன் ஆதீனம் என்கிறார் மேலே –
நிலம் கீண்டு –
தானே செய்து அருளியது போலே –
திரிபுர தகனம் எயில் மூன்று எரித்த இதுவும் இவன் இட்ட வழக்கு
ருத்ரனுக்கு அந்தர்யாமி
வென்று புலன் துரந்த ஸ்ர்ஷ்டிக்கு உறுப்பாக புலன் அடக்கி
விசும்பு ஸ்வர்க்கம்
என்னுடைய அபேஷித்த சித்திக்கு அவனே என்கிறார்
காணேனோ –
உத்தேச்ய லாபம் அவனது
அதுக்கு உண்டான பிரவ்ருதியும் அவன் இட்ட வழக்கு
இத்தலையால் பேறு என்றால் விளம்பம் இருக்கலாம்
அவனால் பேறு என்கிற பொழுது
இழவுடன் முடிய வேண்டியதா கிலேசிக்கிறார்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -7-6-6-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

September 25, 2013

வந்துஎய்து மாறுஅறியேன் மல்கு
நீலச் சுடர்தழைப்பச்
செஞ்சுடர்ச் சோதிகள் பூத்துஒரு
மாணிக்கம் சேர்வதுபோல்
அந்தரமேற் செம்பட்டோடு அடிஉந்தி
கைமார்பு கண்வாய்
செஞ்சுடர்ச் சோதி விடஉறை
என்திரு மார்பனையே.

பொ-ரை : ‘செறிந்த நீலச் சுடரானது பரவச் சிவந்த சுடர்ச் சோதிகள் மலர்ந்து ஒரு நீல இரத்தினம் சேர்வது போன்று, திருவரையின் மேலே அணிந்திருக்கிற செம்பட்டோடு திருவடிகளும் திருவுந்தியும் திருக்கைகளும் திருமார்பும் திருக்கண்களும் திருவாயும் சிவந்த சுடர்ச் சோதியைப் பரப்ப எழுந்தருளியிருக்கின்ற என் திருமார்பனை நான் சென்று கிட்டும் வழியை அறியேன்,’ என்றவாறே.

வி-கு : வந்து-இடவழுவமைதி. ‘செலவினும் வரவினும்’ (தொல்சொல்.) என்னும் பொதுச் சூத்திரத்தாற்கொள்க. ‘மார்பனை வந்து எய்துமாறு அறியேன்’ என்க. ‘தழைப்பப் பூத்து ஒரு மாணிக்கம் சேர்வது போல் சோதி விட உறை திருமார்பன்’ என்க.

ஈடு : ஆறாம் பாட்டு. 1ஆனாலும், ‘ஏதேனும் ஒருபடி நீரும் சிறிது செய்து வந்து கிட்ட வேண்டாவோ?’ என்ன, ‘உன்னை வந்து கிட்டும் உபாயம் அறியேன்,’ என்கிறார்.

வந்து எய்துமாறு அறியேன் – வந்து கிட்டும் உபாயத்தை அறியேன். என்றது, 2‘நீதானே மேல் விழுந்து உன் வடிவழகைக் காட்டாநின்றால் அதனை விலக்காமைக்கு வேண்டுவது உண்டு; என்னால் உன்னை ஒரு சாதனத்தைச் செய்து வந்து கிட்டப் போகாது,’ என்றபடி. 3‘ஆனால், இழந்தாலோ?’ என்ன, ‘இழக்கலாம்படியோ உன் படி இருக்கிறது?’ என்கிறார். மல்கு நீலம் சுடர் தழைப்ப – 4வடிவழகு இல்லை என்று விடவோ, பெறுவிக்கைக்குப் புருஷகாரம் இல்லை என்று விடவோ, எனக்கு ஆசை இல்லையாய் விடவோ குறைவு அற்ற நீலப் புகரானது தழைப்ப? 5கர்மம் காரணமாக வந்தது அல்லாமையாலே மேன்மேலென மிக்கு வருதலின், ‘தழைப்ப’ என்கிறார். என்றது, ‘இவ்வளவு என்ன ஒண்ணாதபடி மேன்மேலென வளராநிற்கின்றது’ என்றபடி. நெஞ்சுடர்ச் சோதிகள் பூத்து-சிவந்த சுடரையுடைத்தான ஒளியானது காலப்பூ அலர்ந்தாற் போலே பூத்து. ஒரு மாணிக்கம் சேர்வதுபோல் – அனுபவத்திற்குத் தகுதியாம்படி ஒரு மாணிக்கமானது சாய்ந்தாற்போலே. ‘மல்கு நீலம் சுடர் தழைப்ப’ என்கையாலே, நிறம் இருந்தபடி சொல்லிற்று; ‘நெஞ்சுடர்ச் சோதிகள் பூத்து’ என்கையாலே, திவ்விய அவயங்கள் இருந்தபடி சொல்லிற்று; ‘ஒரு மாணிக்கம் சேர்வதுபோல்’ என்கையாலே, இரண்டும் பற்றுக்கோடான திருமேனியைச் சொல்லுகிறது. ‘செஞ்சுடர்ச் சோதிகள் பூத்து’ என்கிற இடத்தில் தெரியாதபடி 1மறைத்துச் சொல்லிற்று ஒன்று உண்டே அன்றோ? அதனை விளக்கமாக அருளிச்செய்கிறார் மேல்:

அந்தரம் மேல் செம்பட்டோடு அடி உந்தி கை மார்பு கண் வாய் செஞ்சுடர்ச் சோதி விட – அந்தரம் – நடுவு. உடம்புக்கு நடுவு, அரை. திருவரையில் திருப்பீதாம்பரத்தோடே, திருவடிகள், திருநாபிகமலம், திருக்கைகள், 2பெரிய பிராட்டியார் எழுந்தருளியிருக்கையாலே மேலே கூறியவற்றோடு ஒக்கச் சொல்லலாம்படி சிவந்திருக்கிற திருமார்பு, திருக்கண்கள், திருப்பவளம் இவை, சிவந்த சுடரையுடைத்தான ஒளியை வீச. உறை என் திருமார்பனை – 3இதுவும் ஓர் ஆபரணம் போலே: என் தலைவியான பெரிய பிராட்டியாரைத் திருமார்பிலே உடையவனை. 4திருப்பாற்கடலிலே நீர் உறுத்தாதபடி திருவனந்தாழ்வானைப் படுக்கையாகக்கொண்டு, அதிலே பலப்பல வர்ணங்களாய் இருப்பது ஒரு மேல் விரியை விரித்தாற்போலே அவன் சாய்ந்தருள, மேல் எழுந்தருளி இருக்கமாயிற்றுப் பிராட்டி. 1‘நானும் மிக்க ஆயாசனத்தினால் பெருமாள் மடியில் தூங்கிக்கொண்டிருந்தேன்’ என்னக் கடவதன்றோ?

‘மலரான் தனத்துள்ளான்’ (மூன்றாந்திருவந். 3.) என்ன வேண்டியிருக்க,
அவன் மார்விலே இருக்கிறான் எனக்கூடுமோ?’ என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார், ‘நானும்’ என்று தொடங்கி.

‘பரிஸ்ரமாத் பர்ஸூப்தா ச ராகவாங்கே அஸ்மிஅஹம் சிரம்
பர்யாயேண ப்ரஸூப்தஸ்ச மமஅங்கே பரதாக்ரஜ;’-என்பது, ஸ்ரீராமா, சுந். 38 : 20.

ஏதேனும் ஒருபடி நீரும் செய்து கிட்ட வேண்டாவோ
உன்னை வந்து கிட்டும் உபாயம் நான் அறியேன் என்கிறார்
என் திரு மார்பனை வந்து எய்துமாறு அறியேன்
தேஜஸ்
சிவந்த அங்கங்கள்
மாணிக்கம் சேர்வது போலே
மேல் விழும் போழ்து விலக்காமை ஒன்றே வேண்டும்
வடிவு அழகு இல்லை என்று விடவோ
புருஷகாரம் இல்லை என்று விடவோ
ஆசை இல்லை என்று விடவோ
மல்கு நீல சுடர் தலைப்ப கர்ம நிபந்தம் இன்றி
காலப்பூ போலே அலர்ந்து
மாணிக்கம் சேர்வது போலே சாய்ந்து
தேஜஸ் -மாணிக்கம்
நிறம் இருந்த படி -மலிகு நீல சுடர் தலைப்ப
திவ்ய அவயவங்கள் -செஞ்சுடர் சோதி பூத்து
இரண்டுக்கும் ஆஸ்ரயமான திரு மேனி
அவயவம் பூ போலே
மாணிக்கம் பூத்தது போலே -திருமேனி பூக்க
இல் போல் உவமை
குன்று என்ன நடந்தான்
மலை நடக்காதே
செஞ்சுடர் பூத்து -மறைந்து இருக்க
விவரிக்கிறார் மேலே
நடுவில் திரு பீதாம்பரம்
அடி உந்தி கைகள்
ஒக்க சொல்லலாம் படி திருமார்பு -அவள் இருப்பதால்
தேஜஸ் பிரவசிக்க –
உரை என் திரு மார்பனையே
இதுவும் ஒரு ஆபரணம்
ச்வாமியாரை
என் திரு மார்பில் உடையவன்
திருப் பாற் கடலில் சயனித்து -நீர் உறுத்தாது இருக்க திரு அநந்த ஆழ்வான் –
படுக்கையில் விரித்து பிராட்டி எழுந்து அருளி இருக்க –
மேல் விரியாக எம்பெருமான் –
நானா வர்ணமான மேல் விரி -அவன்
அதன் மேலே பிராட்டி

பர்யாயேன சுக்தக – மாற்றி மாற்றி சயனிக்க ஸ்ரீ ராமாயணம்
காகாசுர –
இது பூர்வ அர்த்தத்தில் நோக்கி அரும் பொருள்
ராகவன் மடியில் நான் படுத்து இருந்தேன் –
என் திரு -சயனித்து இருக்க
வந்து எய்துமாறு அறியேன்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -7-6-5-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

September 25, 2013

 என்னுடைக் கோவலனே! என்பொல்
லாக்கரு மாணிக்கமே!
உன்னுடைய உந்திமலர் உலக
மவைமூன் றும்பரந்து
உன்னுடைச் சோதிவெள்ளத்து அகம்பால்
உன்னைக் கண்டுகொண்டிட்டு
என்னுடை ஆர்உயிரார் எங்ஙனே
கொல்வந்து எய்துவரே?

பொ-ரை : ‘என்னுடைய கோபாலனே! என்னுடைய பொல்லாக் கருமாணிக்கமே! உன்னுடைய திருவுந்தித்தாமரையில் பிறந்த உலகங்களிலே சத்துவம் இராஜசம் தாமதம் என்னும் முக்குணங்களைப் பற்றி வருகின்ற விஷயங்களிலே பரந்து அனுபவிக்கின்ற என் அரிய உயிரானவர், உன்னுடைய சோதி வெள்ளமான ஸ்ரீவைகுண்டத்திலே எழுந்தருளியிருக்கிற உன்னைக் கண்டுகொண்டு வந்து அடைவது எங்ஙனே கொல்?’ என்கிறார்.

வி-கு : ‘மூன்று’ என்பது, முக்குணங்களைக் குறிக்கின்றது ‘பரந்து’ என்ற  சொல்லுக்குப் பின் ‘அனுபவிக்கின்ற’ என்ற சொல்லைக் கொணர்ந்து கூட்டுக. ‘பரந்து அனுபவிக்கின்ற என் ஆர் உயிரார்’ என்க. உயிரார் – இகழ்ச்சிக்குறிப்பு.

ஈடு : ஐந்தாம் பாட்டு. 1‘எல்லாம் செய்தாலும் ‘சாஸ்திர பரம் பிரயோக்தரி’ அன்றோ? பலம் உம்மதான பின்பு நீரும் சிறிது முயற்சி செய்யவேணுங்காணும்,’ என்ன, நீ படைத்த உலகங்களிலே விஷயங்கள்தோறும் அகப்பட்டுக் கிடக்கிற நான் உன்னைப் பெறுகைக்கு ஒரு சாதனத்தைச் செய்து வந்து பெறுகை என்று ஒன்று உண்டோ?’ என்கிறார்.

என்னுடையக் கோவலனே – 2பாண்டவர்களுடைய கோவலன் ஆனாற்போலே ஆயிற்று: இது சீலம் இருந்தபடி. என் பொல்லாக்கருமாணிக்கமே-இது வடிவழகு இருந்தபடி. 1 ‘அழகிது’ என்னில், உலகத்தோடு ஒப்பாம் என்று பார்த்து, வேறு சொல்லாலே சொல்லுகிறாராதல்; அன்றியே ‘தொளையா மணி’ என்கிறாராதல். பொல்லல்-தொளைத்தல். 2‘அனுபவிக்கப்படாத இரத்தினம் போலே’ என்றபடி. ‘உன்னுடை உந்தி மலர் உலகமவை மூன்றும் பரந்து – 3உன்படி இதுவாய் இருக்க, உன்னை ஒழிந்த விஷயங்களினுடைய வடிவழகிலும் குணங்களிலும் கால் தாழ்ந்து போந்தவனாய் இருந்தேன் நான். 4உன்னடைய உந்தியிலே மலராநின்றுள்ள உலகங்கள் மூன்றிலும் உண்டான விஷயங்கள்தோறும்,5தனித்தனியே அற்றுக் கால் தாழ்ந்து போந்தவனாய் இருந்தேன் நான். நீ ஸர்வசத்தி யோகத்தாலே பரந்திருக்கும் இடம் முழுதும் நான் என்னுடைய ஆசையாலே கால் தாழ்ந்து திரிந்தேன். 6இது என் நிலை இருந்தபடி. அதற்கு மேலே நீ எட்டா நிலத்தை இருப்பிடமாகவுடையையாய் இருந்தாய்.

உன்னுடைச் சோதி வெள்ளத்து அகம்பால் உன்னைக் கண்டு கொண்டிட்டு-உனக்கே சிறப்பாய் எல்லை அற்ற ஒளி உருவமாய், 7அத்யர்க்காநல தீப்தம் தத் ஸ்தாநம் விஷ்ணோ: மஹாத்மந:
ஸ்வயைவ ப்ரபயா ராஜந் துஷ்ப்ரேக்ஷம் தேவதாநவை;’-என்பது, பாரதம், ஆரண்ய பர். 163.

சூரியன் அக்கினி ஆகிய இவர்களின் ஒளியைக்காட்டிலும்அதிகமாக விளங்குகிற, மஹாத்துமாவான நாராயணனுடைய வைகுண்டம்’ என்று சொல்லப்படுகிற ஸ்ரீவைகுண்டத்தை இருப்பிடமாகவுடையையாய் இருக்கிற உன்னை, சரீரத்திலும் சரீரத்தோடு சம்பந்தப்பட்ட பொருள்களிலும் உண்டான சம்பந்தம் அற்று நெடுந்தூரம் வழி வந்து அதற்குத் தக்கதாய் இருப்பது ஒரு சரீரத்தை மேற்கொண்டு பரமபதத்தை அடைந்தால் அனுபவிக்க வேண்டி இருந்தது; 1ஆக, என் நிலை இருந்தபடி இது; உன் நிலை இருந்தபடி அது; 2என் நெஞ்சில் ஈடுபாடு இருந்தபடி இது; ஆன பின்பு இந்த முதலியார் கடுக வந்து உன்னைக் கிட்டாரோ? 3ஆக., சொரூபம் உன் அதீனமாய் இருந்தது, அவர் அவர்களுடைய உயர்வுகளும் உன் அதீனமாய் இருந்தன; என் நிலை இது, உன் நிலை அது; என் நெஞ்சில் ஈடுபாடு இது; ஆன பின்பு, நான் ஒரு சாதனத்தைச் செய்து வந்து கிட்டுகை என்று ஒரு பொருள் உண்டோ?’ என்கிறார்.

சாஸ்திர பலன் பிரயோக்தாவுக்கு –
பிரயத்னம் செய்ய வேண்டாவோ பலம் உம்மது என்பதால்
பூர்வ பஷம்
உம்மை பெருகைக்கு ஏதேனும் சாதனம் உண்டோ -என்கிறார் –
என்னுடை கோவலன்
பொல்லாக் கரு மாணிக்கம் -நல்ல -துளையாத –
உன்னுடை உந்தி மலரில் இருந்து
உன்னுடைய சோதி வெள்ளம்
என்னுடைய ஆத்மா எங்கனே எய்துவர்
என்னுடை கோவலன் பாண்டவர் கிருஷ்ணன் போலே
பாண்டவர் தூதன் பார்த்த சாரதி போலே இவருக்கும்
சீலம் -தாழ விட்டு கலந்து பரிமாறும் குணம் இருந்த படி
ஆத்மகுணம்
பொல்லாக் கரு மாணிக்கம் தேக குணம்
நாட்டார் -விசாஜாதீயமான சப்தம்
விபரீத லஷனை நல்ல
துளை இல்லாத -அனுபோக்தமான மாணிக்கம் ஆகுமே துளை இருந்தால்
உன்னுடை உந்தி மலர்
உனது படி இப்படி இருக்க
உன்னை ஒழிந்த விஷயங்களின் அழகிலும் குணங்களிலும் கால் தாழ்ந்து இருந்தேன்
உலகமாவை முற்றும் பறந்து புத்தி
சர்வ சக்தியால் நீ வியாபிக்க
என்னுடைய சாபாலத்தால் வ்யாபித்தான்
இது என்னுடைய நிலைமை
எட்டா நிலம் உன்னுடைய சோதி வெள்ளத்தில்
நிரவதிக -சூர்யன் காட்டிலும் பிரகாசமான ஸ்ரீ வைகுண்டம்
உன்னை
பிரகிருதி பிராக்ருத சம்பந்தம் கழித்து
நெடு தூரம் அர்ச்சிராதி கதி சென்று
அனுரூபமான சரீரம் பரிகரித்து
பரம பதம் பிராப்தி அடைந்து பெற வேண்டும் படி இருக்க –
உன்னை எப்படி கிட்ட முடியும் –
என்னுடைய ஆர் உயிரார் கௌரவ சப்தம்
இந்த முதலியார் கடுக்க வந்து கிட்டுவாரோ
ஏளனமாக சொல்கிறார்
ஆரார புகுவார் ஐயர் இவர் அல்லால் -போலே –

சப்தாதிகளில் பிரவணமாய் இருந்து –
ஸ்வரூபம் உனது ஆதீனம் -உத்கர்ஷம் உனது ஆதீனம்
என் நிலை இது
உன் நிலை அது
ஆனபின்பு சாதனா அனுஷ்டானம் செய்து அடைய முடியுமா –

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.