அங்கண் மலர்த்தண் துழாய்முடி அச்சுத னே!அருளாய்
திங்களும் ஞாயிறு மாய்ச் செழும் பல்சுட ராய்இருளாய்ப்
பொங்கு பொழிமழை யாய்ப்புக ழாய்ப்பழி யாய்ப்பின்னும் நீ
வெங்கண்1வெங் கூற்றமு மாம்இவை என்ன விசித்திரமே!
பொ – ரை : அழகிய தேனோடு கூடிய மலர்களையுடைய குளிர்ந்த திருத்துழாயை முடியிலேயுடைய அச்சுதனே! சந்திரனும் சூரியனுமாகி அழகிய பல வகையான நக்ஷத்திரங்களாகி இருளாகியும், மிகுதியாகப் பெய்கின்ற மழையாகிப் புகழாகிப் பழியாகி. அதற்கு மேலே தறுகண்மையும் கொடுமையுமுடைய யமனுமாய் இருக்கின்ற இவை என்ன ஆச்சரியம்! அருளிச்செய்வாய்.
ஈடு : இரண்டாம் பாட்டு. 2சந்திரன் சூரியன் முதலான பொருள்கள் முழுதும் தனக்கு விபூதியாகவுடையனாய் இருக்கிற படியை அருளிச்செய்கிறார்.
அம் கள் மலர்த் தண் துழாய் முடி அச்சுதனே – அழகிதாய்த் தேனோடு கூடின மலரையுடைத்தாய்க் குளிர்ந்திருந்துள்ள திருத்துழாயைத் திருமுடியிலேயுடையையாய், 3அந்த ஒப்பனையால் வந்த அழகுக்கு ஒரு நாளும் ஒரு வேறுபாடும் இன்றிக்கே என்றும் ஒக்க நித்தியாம்படி இருக்கிறவனே! 4வைத்த வளையத்தைப் போன்றும் போக்கியமாகிறதாயிற்று விபூதி அனுபவம் இவர்க்கு. 5‘மேல் திருவாய்மொழியிலே ‘விள்கின்ற பூந்தண் துழாய் விரை நாற வந்து’ என்று சொன்னதை நினைக்கிறார்’ என்று. பிள்ளான்
பணிப்பர். 1மாயன் குழல் விள்கின்ற பூந்தண் துழாய் உருவு வெளிப்பாடாய்த் துன்புறுத்தல் தவிர்ந்து, நேரே கண்டு அனுபவிக்கிறார் அன்றோ? திங்களும் ஞாயிறுமாய் – 2‘சூரியகிரணங்களால் உண்டான தாபத்தைச் சந்திரன் நீக்கினான்,’ என்கிறபடியே,
‘ஸூர்யாம்ஸூ ஜநிதம் தாபம் நிந்யே தாராபதி: ஸமம்
அஹம் மாநோத்பவம் துக்கம் விவேக: ஸூமஹாந் இவ’-என்பது ஸ்ரீ விஷ்ணு புரா. 5. 10 ; 13.
சூரியனுடைய கிரணங்களாற்பிறந்த வெப்பம் எல்லாம் போம்படி குளிர்ச்சியைச் செய்யக்கூடியதான சந்திரனும் அவனால் வந்த குளிர்ச்சியை அறுத்துக்கொடுக்கும் சூரியனுமாய். 3செழும் பல் சுடராய்-சேதநர்க்கு வரும் லாபாலாபங்களை அறிதற்குத் தகுதியான சஞ்சாரத்தையுடைய நக்ஷத்திரங்ளுமாய்.
இருளாய் – சேதநர்கட்கு இன்ப நுகர்ச்சிக்கு உரியதான இருளாய். பொங்கு பொழி மழையாய் – எல்லாப் பிராணிகளும் உயிர்வாழலாம்படி பயிர்களை உண்டாக்கும் மழையுமாய். புகழாய் – எல்லாரும் ஆசைப்படும் கீர்த்தியாய். பழியாய்-எல்லாரும் வருந்தியும் நீக்கக் கூடியதான பழியாய். பின்னும்-அதற்கு மேலே. வெங்கண் வெங் கூற்றமுமாம் – 4‘முன்னே இளகின மனத்தையுடையவரும் புலன்களை அடக்கியவரும் எல்லாப் பிராணிகளுக்கும் நலத்தைச் செய்வதில் விருப்பமுடையவருமாய் இருந்துவிட்டு இப்போது சீற்றத்தை அடைந்து இயல்பான தன்மையை விடத் தக்கவர் அல்லர்’ என்கிறபடியே,
‘புரா பூத்வா ம்ருது: தாந்த: ஸர்வபூத ஹிதேரத:
ந க்ரோதவஸம் ஆபந்ந: ப்ரக்ருதிம் ஹாதும் அர்ஹஸி’-என்பது, ஸ்ரீராமா. ஆரண். 65 : 4.
இவை மிகுதியுற்றவாறே குளிர நோக்குமது தவிர்ந்து, வெவ்விதான நோக்கினையுடையையாய். அன்றிக்கே,வெங்கூற்றம்-அந்தகன் ‘தண்ணீர்’ என்னும்படி வெவ்விய கூற்றமுமாம். என்றது, அழித்தல் தொழிலில் 2உருத்திரனுக்கு அந்தர்யாமியாய் இருக்கும் தன்மையைச் சொன்னபடி. இவை என்ன விசித்திரமே-இவை என்ன ஆச்சிரயந்தான்! அருளாய்.
தேஜஸ் பதார்த்தங்கள் எல்லாம் அவன் விபூதி என்கிறார் –
இவை என்ன விசித்திரமே
அழகிய குளிர்ந்த திருத் துழாய் அணிந்த -திரு முடி
வெம் கூற்றமுமாய் இருக்கிறாயே –
நித்யமாக உள்ளவனே -அச்சுதனே பெருமையை நழுவ விடாமல்
வைத்த வளையதோ பாதி விபூதியும் இனிமை
கீழே திருத் துழாய் முடி -பாதகமாக -பின்னாடுகிறது பிள்ளான்
நம்பிள்ளை -அங்கே உரு வெளிப்பாடு -துக்கம் ஹேது
இங்கே சாஷாத்கரித்து அனுபவித்து ஹர்ஷக்கிறார்
சூர்யன் கிரணங்களால் உண்டான தாபம் நஷத்ரங்கள் வந்ததும் குளிர்ந்து
ஆறுதல் பண்ணும் சந்தரன் –
நீர் கடுப்பை அறுத்து கொடுக்கும் ஆதித்யன் -உலர்த்த சூர்யன் டுமே
செதனருக்கு வரும் லாப அலாபங்களை அறிய சஞ்சரிக்கும் நஷத்ரங்கள்
போக யோக்யமான இருள்
ஜீவிக்க தான்யம் உண்டாக்கும் மழை
யசஸ்
பழி பின்னும் குரூரமான கூற்றமுமாய் -வெம் கூற்றம்
இளைய பெருமாள் வார்த்தை -மென்மை சாந்தி சர்வ பூத ஹிதம் செய்யும்
ந குரோதம் வசப்பட்டு
கோபம் ஏறிட்டு கொள்ள வேண்டுமே அசுரர்களை கொல்ல
அந்தகன் தண்ணீர் என்னும் படி வெம் கூற்றம்
யமனே தேவலை என்று சொல்லும்படி
சம்ஹாரத்தில் ருத்ரனுக்கு அந்தர்யாமியாக சொன்ன படி
இவை என்ன விசித்ரமே
விருத்த விபூதிகத்வம் இல்லை இது
விசித்திர ஜகதாகாரம் அனுபவம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply