திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -7-8-6-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

 மயக்கா! வாமனனே! மதியாம் வண்ணம் ஒன்றருளாய்
அயர்ப்பாய்த் தேற்றமுமாய் அழலாய்க் குளிராய் வியவாய்
வியப்பாய் வென்றிகளாய் வினையாய்ப் பயனாய்ப் பின்னுநீ
1துயக்கா நீநின்ற வாறுஇவை என்ன துயரங்களே.

    பொ – ரை : ‘மயக்குகின்றவனே! வாமனனே! நான் தெளியும்படி ஒன்று அருளிச்செய்ய வேண்டும்; மறப்பு ஆகித் தெளிவு ஆகி வெப்பமாகிக் குளிர்ச்சியாகி ஆச்சரியமாகி ஆச்சரியப்படத்தக்க பொருள்களுமாகி வெற்றிகளுமாகி இரு வினைகளாகி இருவினைப் பயன்களுமாகி அதற்கு மேலே உன்னை அடைந்த அடியவர்களும் மதி மயங்கும்படி நீ செய்துகொண்டு நின்ற விதம் எங்களுக்குத் துக்கத்தைத் தருகின்றனவாய் இராநின்றன, ‘என்றவாறு.

ஈடு : ஆறாம் பாட்டு. 2மறதி தொடக்கமான மாறுபட்ட பொருள்களை விபூதியாக உடையனாய் இருக்கிறபடியை அருளிச்செய்கிறார்.

மயக்கா-இன்னார் என்று இன்றிக்கே, யாரேனுமாகக் கிட்டினாரை மயங்கச் செய்யுமவனே! ‘அது எங்கே கண்டோம்?’ என்னில், வாமனனே – காரியம் செய்யப்போந்த நீ, அந்தத் தேவர்களை நெருக்கின மஹாபலி தானே நெஞ்சு நெகிழ்ந்து உன் கையிலே நீரை வார்த்துத் தானே இசைந்து தரும்படி மயங்கச் செய்தவனே! 3‘மன்னை மனங்கொள்ள வஞ்சித்து நெஞ்சுருக்கி’ பெரிய திருமடல், 109.-என்கிறபடியே. மதியாம் வண்ணம் ஒன்று அருளாய் – அநுகூலர் பிரதிகூலர் என்ற வேற்றுமை இல்லாமல் மயங்கச் செய்யாதே, நான் தெளிவையுடையேனாம்படி செய்தருளவேணும். அயர்ப்பாயத் தேற்றமுமாய் – 4‘நினைவும் ஞானமும் மறப்பும் என்னிடமிருந்து உண்டாயின’

ஸர்வஸ்யச அஹம் ஹ்ருதி ஸந்நி விஷ்ட:
மத்த: ஸ்மிருதி: ஜ்ஞாநம் அபோஹநம் ச’-
என்பது, ஸ்ரீகீதை, 15 : 15.

என்றான் அன்றோ தானே, மறதியும் தெளிவுமாய்? 1இவ்விடத்தில் மாறுபட்ட தன்மையைச் சொல்லுகிறது அன்று, விசித்திரமான தன்மையைச் சொல்லுகிறது. அழலாய்க் குளிராய்-சீத உஷ்ணங்களாய். வியவாய் வியப்பாய் – ஆச்சரியமும் ஆச்சரியப்படத்தக்க பொருள்களுமாகி. வென்றிகளாய் – வெற்றிகளாய். வினையாய்ப் பயனாய் – புண்ணிய பாப கர்மங்களாய் அவற்றினுடைய பலங்களுமாகி. பின்னும் நீ துயக்கா – அதற்கு மேலே, உன்னை அடைந்தவர்களும் மதி கலங்கும்படி, அந்யதா ஞானம் விபரீத ஞானம் இவற்றை உண்டாக்கி. நீ நின்றவாறு – நீ நின்ற பரிகாரம். இவை என்ன துயரங்களே – 2உனக்கு இவற்றில் அருமை இன்றியே விளையாட்டாய் இராநின்றது; எங்களுக்கு அவைதாம் துக்கத்தைக் கொடுக்கக் கூடியவையாய் இராநின்றன.

விஸ்மரணம்-மறதியும் அவனே
ஆரேனுமாக கிட்டினாரை மயக்கி
மம மாயா துரத்தயா
எங்கே கண்டோம்
வாமனனே
மகா பலி தானே நீரை வார்த்து
கொடிய ஹிருதய அசுரனையே மயக்கி
தானே நெஞ்சு நெகிழ்ந்து
சுக்ராசார்யார் தடுத்தும்
சப்தாதி விஷயங்களில் நாம் விழும்படி
போர் வேந்தன் -மன் அரசர் மனம் கொள்ள வஞ்சித்து –
பிரதி கூலனை மயக்கலாம்
அனுகூலனான என்னை யும் மயக்க வேண்டுமா
அசுரர் மோகினி வேஷம் போட்டு மயக்கி
ஸ்ம்ருதி நினைவு ஞானம் விச்மிருதியும் ஏன் இடமம்
விசித்திர ஆகாரம் விருத்த ஆகாரம் இல்லை
அளலலாய் குளிராய்
வியவாய் வியப்பாய் மேலே மேலே ஆசார்யம்
புண்ய பாப கர்மங்களும் பலன்களும்
ஆஸ்ரிதாரையும் மதி மயங்கும்படி
துயக்கம் மயக்கம்
பண்டிதன் -பரப்ரஹ்மம் யார் -நாராயணன் -உபநிஷத் விசித்ரம்
இடையன் -கண்ணன் தான் நாராயணனே நமக்கே பறை தருவான் –
சாஸ்திரம் வாசிதவனுக்கு மயக்கம்
திவ்ய பிரபந்தம் தெளியாத மறை நிலங்கள் தெளிய
அன்யதா விபரீத ஞானம் செய்து அருளி
லீலையாக இஷ்டத்துக்கு உனக்கு
எங்களுக்கு துக்கம் ஆக இருக்க

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: