திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -7-8-5-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

பாசங்கள் நீக்கிஎன் னைஉனக் கேஅறக் கொண்டிட்டுநீ
வாச மலர்த்தண் துழாய்முடி மாயவ னே!அருளாய்
காயமும் சீவனு மாய்க்கழி வாய்ப்பிறப் பாய்பின்னும் நீ
மாயங்கள் செய்துவைத் தி;இவை என்ன மயக்குகளே.

பொ – ரை : ‘சரீரமும் ஆத்துமாவுமாகியும். இறப்பாகிப் பிறப்பாகியும் இருக்கின்ற வாசனை பொருந்திய மலர்களையுடைய குளிர்ந்த திருத்துழாயினைத் தரித்த திருமுடியையுடைய மாயவனே! நீ என்னுடைய பாசங்களை எல்லாம் நீக்கி என்னை உனக்கே அடிமையாகக் கொண்டும், அதற்கு மேலே நீ இச்சரீரத்தோடே பொருத்தி வைத்திருக்கின்றாய்; இவை என்ன மயக்கங்கள்? அருளிச்செய்ய வேண்டும்’ என்கிறார்.

வி – கு : ‘கழிவாய்ப் பிறப்பாய் இருக்கின்ற முடி மாயவனே!’ எனக் கூட்டுக. ‘நீக்க அறக்கொண்டிட்டும் பின்னும் வைத்தி,’ என்க.

ஈடு : ஐந்தாம் பாட்டு. இத்திருவாய்மொழிக்கு 1நிதானமான பாட்டாயிற்று இது. அதாவது, ‘மயர்வற மதிநலம் அருளி, பின்னையும் எனக்குப் பொருந்தாததான சம்சாரத்திலே என்னை வைத்து வாழ்வித்துக்கொடு போகிற இவ்வாச்சரியம் இருந்தபடியை எனக்கு அருளிச்செய்ய வேணும்,’ என்கிறார்.

பாசங்கள் நீக்கி – மயர்வை அறுத்து; என்றது, ‘அவித்தியை முதலானவைகளைப் போக்கி’ என்றபடி. 2பல செய்வினை வன்கயிற்றால் சூழ்த்துக்கொண்டதனை நீக்கி. –திருவாய். 5. 1 : 5.-என்னை-வேறு விஷயங்களிலே கார் தாழ்ந்திருக்கிற என்னை. உனக்கே அறக்கொண்டிட்டு-துயர் அறு சுடர் அடி தொழும்படியாகச் செய்து. ‘பாசங்கள் நீக்கிற்றும் தனக்கே அறக்கொண்டதும் எதனைக்காட்டி?’ என்னில், வாசம் மலர்த் தண்துழாய் முடி மாயவனே – வைத்த வளையத்தில் அழகைக் காட்டியாயிற்று,3புறம்பு உண்டான பற்று அறுத்ததும், தனக்கேயாம்படியாகச் செய்ததும். அருளாய் – இவ்வளவு புகுரநின்ற என்னை இங்கே இட்டுவைத்து நலியவோ? காயமும் சீவனுமாய்க் கழிவாய்ப் பிறப்பாய் -சரீரமும் ஆத்துமாவுமாய், பிறப்பு, இறப்புகளுமாய். பின்னும் நீ மாயங்கள் செய்து வைத்தி-உன் பக்கலிலே அறிவைப் பிறப்பித்து, பின்னையும் இதிலே பொருந்தாதபடியான என்னைச் சம்சாரத்திலே வையாநின்றாய். இவை என்ன மயக்குகளே-இவை என்ன தெரியாத செயல்கள்தாம்! புறம்பு உண்டான பற்றை அறுத்து உன் பக்கலிலே அன்பைப் பிறப்பிக்கையாலே நீ அங்கீகரித்தாயோ என்று இராநின்றேன்; பின்னையும் இச்சம்சாரத்திலே வைக்கையாலே கைவிட நினைத்தாயோ என்று இராநின்றேன்; இது என்ன மயக்கம்!

நிதானமான சாரம் பாசுரம் இது -இந்த திருவாய் மொழிக்கு
சம்சாரத்தில் இருத்தி -மயர்வற மதி நலம் அருளின பின்பு இது என்ன ஆச்சர்யம்
பொருந்தாவனை வைத்து பாசுரம்
பாசங்களை நீக்கி –
உனக்கே அறக் கொண்டு இட்டு
வாச மலர் தன துழாய் முடி மாயவன்
இவை என்ன மயக்குகள்
காயம்
சீவம்
கழிவாய்
பிறப்பாய் –
அவித்யாதிகளைப் போக்கி -பல கர்மங்களை நீக்கி
போர வைத்தாய் புறமே
விஷயாந்தரங்களில் கால் தாழ்ந்து இருந்த என்னை
உனக்கே -துயர் அரு சுடர் அடி தொழப் பண்ணி
எத்தை கொண்டு
துழாய் முடி
வைத்த வளையத்தின் அழகைக் கொண்டு இப்படி
தாயார் சந்நிதி பூ கடை
அரங்கனுக்கு இல்லையே திருவரங்கம்
கிழவர்
வெந்நீரில் குளிக்க
கோதா -ஸ்லோகம் இப்படி உண்டே
அர்ச்சனை இல்லை
சமர்ப்பிக்கும் வளையம் தாயாருக்கு
வாச மலர்ப் தண் துழாய் முடி ஸ்ரமஹரமான
ஹிம்சை பண்ணி நலியவா இவ்வளவு புகுர நிறுத்தி
அற்று தீர்ந்தவனாக செய்த பின்பு
காயம் சரீரம்
சீவன் ஆத்மா
உத்பத்தி விநாசம்
பின்னும்
பொருந்தாத என்னை வைத்து
இவை என்ன மயக்குகள்
நீ அங்கீ கருத்தாய் என்று இருந்தேன் ஞானம் கொடுத்து அருளியதால்
சம்சாரத்தில் வைத்தாய் கை விட நினைத்தாயோ
இது என்ன பிரமம் விசித்ரம் –

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: