கள்ளவிழ் தாமரைக் கண்கண்ண
னே!எனக்கு ஒன்று அருளாய்
உள்ள தும் இல்லது மாய்உலப்
பில்லன வாய்வியவாய்
வெள்ளத் தடங்கட லுள்விட
நாகணை மேன்மருவி
உள்ளப் பல்யோகு செய்தி
இவைஎன்ன உபாயங்களே!
பொ – ரை : ‘தேனோடு மலர்கின்ற தாமரை போன்ற திருக்கண்களையுடைய கண்ணனே! அழிதல் இல்லாததாய் இருக்கின்ற சித்து ஆகியும், அதினின்றும் வேறுபட்டதாய் இருக்கின்ற அழிந்துபோகின்ற அசித்தாகியும், திருப்பாற்கடலில் விஷம் பொருந்திய ஆதிசேஷ சயனத்தின்மேல் பொருந்தித் திருவுள்ளத்தில் பல விதமான காக்கும் உபாயங்களைச் சிந்தனை செய்கிறாய்; இவை என்ன விரகுகள் தாம்! எனக்கு ஒன்று அருளிச்செய்யவேண்டும்,’ என்கிறார்.
வி-கு : ‘உலப்பு இல்லன உள்ளதுமாய், வியவாய் இல்லதுமாய்’ என்க. உள்ளது-ஆத்துமா. இல்லது – அசித்து.
ஈடு : நான்காம் பாட்டு. 1உலகத்தில் நித்திய அநித்தியமான பொருள்களை விபூதியாகவுடையனாய் இருக்கிறபடியை அருளிச்செய்கிறார்.
கள் அவிழ் தாமரைக்கண் கண்ணனே – அப்போது அலர்ந்த தாமரைப்பூப்போலே இருக்கின்ற திருக்கண்களையுடையவனாய்ப் பவ்யனாய் இருக்கிறவனே! 2அவனுடைய திருக்கண்கள் போலே ஆயிற்று, இவர்க்கு விபூதியும் கவர்ச்சியாய் இருக்கிறபடி. அன்றிக்கே, ‘திருக்கண்களைப் போன்று துன்பத்தைச் செய்வதாகா நின்றது ஆயிற்று விபூதி அனுபவமும் இவர்க்கு,’ என்னுதல். 3‘துன்பத்தைச் செய்வதாவது என்?’ என்னில், ‘இன்னது’ என்று நிச்சயிக்கமாட்டாதே ஐயுற்றுப் பட்டது ஒரு துக்கம் உண்டே அன்றோ? அதுவும் துன்பத்தைச் செய்வதாக இருக்குமே? அதனைச் சொல்லுகிறது. அன்றிக்கே, ‘மேல் திருவாய்மொழியிலே, ‘சூழவும் தாமரை நாண்மலர்போல் வந்து தோன்றும்’ என்றதனை நினைக்கிறார,்’ என்று பிள்ளான் பணிக்கும். 4அதனைச் சீயர் கேட்டருளி, ‘மேலே ஓடுகிறரீதியின்படியே இதுவும் ஆகப்பெற்றதாகிர் அழகிது!அங்ஙன் அன்றிக்கே, இது வேறு ரசமாய் அறிவுண்டான பின்பு இவ்விடத்தோடு பொருந்தமாட்டாது’ என்று அருளிச்செய்தாராம். உள்ளதும் இல்லதுமாய் உலப்பு இல்லனவாய் வியவாய் – 1உலப்பு இல்லனவாய்க் கொண்டு உள்ளதுமாய், வியவாய்க்கொண்டு இல்லதுமாய் இருக்கின்ற சேதந அசேதநங்களுக்கு நிர்வாஹகனாய். ‘அரசனே! எது எந்தக் காலத்திலும் வளர்தல் குறைதல் முதலிய வேறுபாடுகளை அடைவது இல்லையோ, அதுதான் வஸ்து; ‘அது எது?’ என்று ஆராயந்து பார்,’ என்கிறபடியே,
‘யத்து காலாந்தரேணாபி ந அந்ய ஸம்ஜ்ஞாம் உபைதி வை
பரிணாமாதி ஸம்பூதாம் தத்வஸ்து ந்ருப தச்ச கிம்’-என்பது, ஸ்ரீ விஷ்ணு புரா. 2. 13 : 96.
அசித்து அழிந்து போவதாய் இருக்கையாலே ‘இல்லது’ என்று சொல்லலாய் இருக்கும்; ஆத்துமவஸ்து ஒரே தன்மையாக இருக்கையாலே ‘உள்ளது’ என்கிறது.
வெள்ளம் தடம் கடலுள் விடம் நாகணைமேல் மருவி – திருப்பாற்கடலில், பிரதிகூலர்க்குக் கிட்ட ஒண்ணாதபடி விஷத்தை உமிழா நின்றுள்ள திருவனந்தாழ்வான்மேலே பொருந்தி. 2‘ஆங்கு ஆரவாரமது கேட்டு அழல் உமிழும். பூங்கார் அரவணையான்’ நான்முகன் திருவந். 10.-என்கிறபடியே, இடம் அல்லாத இடத்திலும் அச்சத்தாலே சங்கைகொண்டு அழல் உமிழுமவன் அன்றோ? உள்ளப்பல் யோகு செய்தி -திருவுள்ளத்திலே இரட்சணசிந்தை பல செய்யாநிற்றி. ஆத்துமாக்கள் பல்வேறு வகைப்பட்டிருத்லைப்போலும் போருமாயிற்று, அவன் செய்யும் இரட்சண சிந்தையில் பரப்பு. 3இப்போது இது முன்னும்பின்னும் சேருமாறு யாங்ஙனம்?’ எனின், அசித்தாவது, அழிவதாய்க் கொண்டு விடக்கூடியதாக இருக்கும்; ஆத்துமவஸ்து ஒரே தன்மையதாய்க்கொண்டு கொள்ளக்கூடியதாக இருக்கும்; இவை இரண்டையும் நியமிப்பவனாய் இருப்பான் ஈஸ்வரன்: ‘இச்சேதனன்தானும், தான் செய்தது ஒரு கர்மமும் தனக்கு என ஒரு ருசியுமாய் இருக்கையாலே, இவன், தனக்கு என்ன ஓர் இச்சை பிறக்கில் அல்லது நம்மைப் பெற விரகு அற்று இருந்தது; இவனுக்கோ, அது இல்லையாய் இருந்தது; இனிச் செய்யும்படி என்?’ என்று, இவன், ‘இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை’ என்றால் செய்யுமதனை, இவன் தலையிலே இசைவு இன்றிக்கே இருக்கச் செய்தே, ‘இவன் நம்மைக் கிட்டினானாம் விரகு ஏதோ?’ என்று அதற்கு உறுப்பாக உபாய சிந்தை செய்து திருக்கண்வளர்ந்தருளுகிறபடி’ என்க. இவை என்ன உபாயங்களே – 1சேதநர் பலரானால் அவ்வவருடைய இரட்சணங்களும் பலவாயே அன்றோ இருப்பன? அதற்குத் தகுதியாக உபாயங்களையும் அறியுமே முற்றறிவினன் ஆகையாலே. இவை என்ன விரகுகளே!
நித்ய அநித்திய பதார்த்தங்களை விபூதியாக கொண்டவன்
இவை என்ன உபாயங்களே
தேன் பெருகும் தாமரை போன்ற கண்களை உடைய கண்ணனே
நீ சொல்லி
உள்ளதுமாய் இல்லதுமாய் எண்ணிக்கையில் இல்லாமல் வேறு பட்ட வஸ்துகளையும்
யோகு செய்து திருப் பாற் கடலில்
அப்போது அலர்ந்த தாமரை
கண்ணன் பவ்யன்
அவன் திருக் கண் போன்ற இனிமை விபூதி பார்த்தாலும் ஆழ்வாருக்கு
சிருஷ்டி விசித்ரம்
தேஜஸ் மூலம் உண்டானதே
திரு உடை மன்னரை காணில் திருமாலை
விஷ்ணு அம்சத்தால் தான் மன்னன் ஆகிறான் –
நீதிபதி -தெய்வம் சமம் ஸ்தானம் -விளக்கு வெள்ளி தடி பிடித்து போவார்கள் –
கர்ம பலம் புஜிக்கும்படி செய்வதால் –
விபூதியும் ஆகர்ஷகம் திருக் கண்கள் போலே
பிள்ளான் -பாதகமாக இவையும் திருக் கண்கள் போலே
என்று பணிக்கும்
இன்னது என்று நிச்சயிக்க பட முடியாத கிலேசம் உண்டே
விபூதியும் அப்படியே –
சூழவும் நாளாவும் தாமரை போலே கீழே சொன்னதை ஸ்மரிக்க -என்று
ஜீயர் இத்தை கேட்டு அருளி –
கீழே துக்கம் -உரு வெளிப்பாடு நலிய
இங்கே அப்படி இல்லை
விருத்த விபூதிகத்வம் காட்டிக் கொடுக்க ஆச்சர்யம்
ரசாந்தமாய் அறிவு கொண்டு
பிரகரணம் பொருந்த வேண்டுமே
உள்ளதும் இல்லதுமாய் -உலப்பில் அளவாய் கொண்டு
சேதன அசேதனங்கள் –
ஜீவாத்மா ஒரே மாதிரி
அசேதனம் பரிமாணம் அடையும்
உள்ளதும் அல்லதும் அல்லது அவன் உரு
நித்யமாக இருந்தாலும் ஒருப்படிப்பட நில்லாதே
ஆத்மா அணு ஸ்வரூபம் -ஏக ரூபம் தானே
கர்ம கிருதமான தேகம் –
எண்ணிக்கையில் அடங்காதவை
திருப் பாற் கடலில் விட நாகணை
பிரதி கூலர் கிட்ட முடியாமல்
ஆங்கு ஆராவாரம் அது கேட்டு
திசை வாழி எழ சப்தம்
சாம கானம் -என்னவுமாம் பூவார் அடி நிமிர்த்த போது என்பதால்
அஸ்தானே பய சங்கை
யோகு செய்து
உபாயங்கள் சிந்தனை
தனி தனி ரஷணம்-ஒவ் ஒருவருக்கும் –
இஷ்டம் அநிஷ்டம் மாறுமே
சேதன பேதம் போலே ரஷணம் மாறுமே
அசித் த்யாஜ்யம்
ஆத்மா உபாதேயம்
இரண்டுக்கும் நியந்தா ஈஸ்வரன்
அஸ்திரம் அசித் கை விட
அல்பம் ஆத்மானுபவம் கை விட வேண்டும் கைவல்யம்
தனக்கு ருசி உண்டாக்கி -யோகு செய்து
இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை
உபாய சிந்தை பண்ணிக் கொண்டு கண் வளர்ந்து இருக்கிறான்
இவை என்ன உபாயங்களே
ஆச்சர்யம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply