ஸ்ரீ பெரிய திருமொழி-3-5–ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் —

திருக்குறையலூர் –மங்கை மேடம் -திரு மணக் கொல்லை -திருவாலி -திரு நகரி –
அழகு பொலிந்த அர்ச்சா திரு உருவம்

கீழே பர உபதேசம்
இதில் தனது குறையை விண்ணப்பம் -தன்னுடைய பிரதேசம்
(ஸ்ரீ முஷ்ணம் சித்ர கூடம் -வேளுக்குடி ஸ்வாமி தாயார் பிறந்த தேசம்
சீர்காழி ஸ்வாமி ஆச்சார்யர் தொட்டாச்சார்யார் அதீனம் )
ப்ராப்ய த்வரையால்

வந்து உனது அடியேன் -பிரவேசம்

எல்லாரும் தம்தாமுக்கு நன்மை வேண்டி இருக்கில் சர்வேஸ்வரன் பக்கலில் ந்யஸ்த பரராய் கொண்டு
சீராம விண்ணகரம் ஆஸ்ரயியுங்கோள் -என்றார்
அங்கன் இன்றிக்கே
தம்மளவில் வந்தவாறே திருவாலியை இருப்பிடமாகக் கொண்டு அங்கே எழுந்து அருளி நிற்கிற சர்வேஸ்வரன்
தானே ஸ்வயம் பாரித்துக் கொண்டு -ஸ்வயம் வரித்துக் கொண்டு -வந்து இருக்கிறபடியை அனுசந்தித்து –

பரம ப்ராப்யனாய் இருக்கிற நீ என் பக்கல் அர்த்தித்வம் இன்றிக்கே இருக்கச் செய்தே –
என் ஹிருதயத்தில் வந்து புகுந்தாய் –
எனக்கு உன்னை ஒழிய செல்லாமையைப் பிறப்பித்தாய்
உன் வ்யதிரேகத்திலே நான் பிழையாதபடியை பண்ணினாய் -(என் ஆர் உயிரே )

இங்கனே இருந்த பின்பு இனித் தான் நீ போகில் நான் பிழையேன்
போகல் ஒட்டேன்
உனக்கு எந்தனை தயநீயர் இல்லை
ஆன பின்பு என்னை நித்ய கைங்கர்யத்தை கொண்டு அருள வேணும்
( கை தொழுது எழும் புந்தியை-புத்தியை ) -என்று
பிராப்யனான அவன் திருவடிகளில் கைங்கர்யத்தை அபேஷித்து அப்போதே கிடையாமையாலே
அதில் க்ரம பிராப்தி பற்றாமையால் உண்டான தம்முடைய த்வரையை ஆவிஷ்கரித்தாராய் தலை கட்டுகிறார்-

——————————————————-

வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய் புகுந்ததற் பின் வணங்கும்
என் சிந்தனைக்கு இனியாய் திருவே என்னார் உயிரே
அந்தளி ரணியார சோகின் இளந்தளிர்கள் கலந்து அவை எங்கும்
செந்தழல் புரையும் திருவாலி யம்மானே–3-5-1-

அந்தளிரணியாரசோகின் — அம் தளிர் அணி ஆர் அசோகின்
திருக்கமல பாதம் வந்து -முதலில் அவனது ப்ரவ்ருத்தி அங்கும் இங்கும்
வந்த பின்பு -சென்றதாம் எனது சிந்தனையே –
குழந்தைக்கு பால் குடிக்க தாய் சொல்லிக் கொடுப்பது போல்
திருவே என்னார் உயிரே-செல்வமும் -சம்பத்தும் -தாரகமும் நீயே

1-வந்தார்
2-மனம் புகுந்தார்
3-வணங்கினார் ஆழ்வார் அதன் பின்பு
4-சிந்தனைக்கு இனியான் ஆனான் -இவரே ஆழ்வார் உடைய திரு வாராதன பெருமாள்
சிந்தை தன்னுள் நீங்காது இருந்தாய் மேலும் சொல்வார்

வந்து-
நிரதிசய போக்யமான திருவாலியை இருப்பிடமாக உடையையாய் நீ
இருந்த இடத்தில் நானே வந்து கிட்ட வேண்டி இருக்க
என் பக்கல் அபேஷா மாதரமும் இன்றிக்கே இருக்கச் செய்தே நான் இருந்த இடத்திலே நீயே வந்து –
த்வீபாந்தர சரக்குகள் இரண்டும் தன்னிலே சங்கதமாம் இடத்தில் இரண்டும் பாதி பாதி வழி வந்து கூடுதல்
ஒன்றே வருதல் செய்ய வேணும் இறே
அதில் இவருடைய பேற்றுக்கு இவ்வளவாக வழி வந்தான் இவனாயிற்று –

உனது அடியேன் -மனம் புகுந்தாய்
வருகிற போது புகுருகைக்கு அடியாக அவன் கையோடு கொடு வந்த பிரமாணம்
( அநந்யார்ஹ தாச பூதம் -திருமந்திரம் -நீ என் சொத்து )
அடியான் இவன் என்று எனக்கு ஆரருள் செய்யும்-9-4-`10- -என்னுமா போலே
நீயோ உன் கார்யத்துக்கு கடவாய் -நான் காண் -என்று
தானே சர்வ பரங்களையும் நிர்வஹிப்பான் ஆயிற்று –
ஏறிட்டு கொண்டு வந்து புகுந்தது
வந்து புகுரப் புக்கால் இசையாது -அல்லேன் -என்கைக்கு வாய்த் தலையான
நெஞ்சிலே வந்து புகுந்தான் ஆயிற்று –

அவன் புகுந்ததின் பின் இவர் செய்தது என் என்னில்
புகுந்ததற் பின் வணங்கும் –
(ஸ்வரூப ஞானத்துக்கு அனுரூபமான செயல் வணக்கம் )
சத்ரு க்ருஹமே யாகிலும் புகுந்தால் ஆசனம் இடுவார்கள் இறே
அவ்வோபாதி பின்னை வணங்கினார் ஆயிற்று
யதார்ஹம் கேசவே வ்ருத்திம் அவசா ப்ரதிபேதரே -சபா பர்வம் -என்னுமா போலே
(தங்கள் வசம் இழந்து -சிசுபாலன்
இதே போல் பாண்டவ தூதனாக வந்த பொழுதும் துரியோதனன் எழுந்தான் )

என் சிந்தனைக்கு இனியாய்-
இப்படி புகுந்தவன் தானே போவேன் என்றாலும் விட ஒண்ணாதபடி யாயிற்று நெஞ்சுக்கு இனிமையான படி –

(இனிமை நெஞ்சில் படும்படியும் தானே பண்ணினான்
வந்ததும் நீ
உள்ளம் புகுந்ததும் நீ
அடியேன் என்று உணர்த்தினதும் நீ
சிந்தனைக்கு இனியனாகவும் ஆக்கி என்னை உன்னை விடாத படி பண்ணினாய் )

திருவே –
திருவுக்கும் திரு -என்கிற படியே இவருடைய சம்பத் ஆயிற்று இவன் –

என்னார் உயிரே –
சம்பத்து தானாய் தாரகம் வேறு ஒன்றாய் இருக்கை அன்றிக்கே எனக்கு தாரகன் ஆனவனே –
வ்யதிரேகத்தில் பிழையாத படியாய் இரா நின்றான் ஆயிற்று-

அந்தளிரணியாரசோகின் இளந்தளிர்கள் கலந்து அவை எங்கும் செந்தழல் புரியும் திருவாலி யம்மானே
எனக்கு தாரகனுமாய்
நிரதிசய போக்யனுமான நீ
திருவாலியை இருப்பிடமாக உடையையாய் வைத்து
தனக்கு என ஓர் இடம் இல்லாதாரைப் போலே என்னுடைய ஹிருதயத்திலே வந்து புகுந்தாயே –

அழகிய தளிர்களாலே வந்த அழகு மிக்கு இருக்கிற அசோக வ்ருஷத்தின் உடைய இளம் தளிரானவை
எங்கும் ஒக்க பரப்பு மாறி அக்நி கல்பமாய் இரா நின்றது ஆயிற்று –
சிவந்த இளந்தளிர் எங்கும் ஒக்க பரப்பு மாறி தளிர்த்து நின்ற போது எங்கும் ஒக்க
நெருப்பு கொளித்தினாப் போலே தர்ச நீயமாய் இரா நின்றது
(வேடு பறி உத்சவம் இன்றும் தீப்பந்தங்கள் கொண்டு இதே காட்சி உண்டே )
இப்படி அந்யதா அஞ்ஞானமான தேசத்தை இருப்பிடமாக உடைய சர்வேஸ்வரனாய் இருந்து வைத்து
என் ஹிருதயத்திலே வந்து புகுந்தாயே- –

—————————————————————-

கீழே மனம் புகுந்தபடியை அருளிச் செய்கிறார்
விலகாமல் கெட்டியாக-ஸூ ஸ்திரமாக – நித்ய வாசம் பண்ணி அருளியதை இதில்

நீல தடவரை மா மணி நிகழக் கிடந்தது போல் அரவணை
வேலைத் தலைக் கிடந்தாய் அடியேன் மனத்து இருந்தாய்
சோலைத் தலைக் கணமா மயில் நடமாட மழை முகில் போன்று எழுந்து எங்கும்
ஆலைப் புகை கமழும் அணி யாலி யம்மானே–3-5-2-

(மயில் நடமாட மழை முகில் போன்று
வண்டினம் முரலும் சோலை மேகம் என்று நினைத்து மயில் இனம் ஆலும் சோலை –
இத்தைக் கண்டு -கொண்டல் மீது அணவும் சொல்லி
குயிலினம் கூவும் சோலை இது தான் அன்யதா ஞானம் இல்லாமல் )

(திருவநந்த ஆழ்வான் மலை என்றால் அவன் மாணிக்கம்
அவன் மலை என்றால் கௌஸ்துபம் மணி )

நீல தடவரை மா மணி நிகழக் கிடந்தது போல் அரவணை வேலைத் தலைக் கிடந்தாய் –
ஒரு நீல கிரியானது தன் மேலே பெரு விலையனாய் இருபத்தொரு ரத்னம் உஜ்ஜ்வலமாம்படி சாய்ந்தால் போலே
திரு வநந்த ஆழ்வான் மேலே திருப் பாற் கடலிலே அழகிய திரு மேனியிலே
ஸ்ரீ கௌஸ்துபம் விளங்கக் கண் வளர்ந்து அருளுகிற படி –

அடியேன் மனத்து இருந்தாய்
திருப் பாற் கடலிலே சாய்ந்து அருளிற்று இவர் நெஞ்சிலே புகுருகைக்கு விலக்காமைக்கு அவசரம் பெரும் அளவும் யாயிற்று –
விலக்காமை பெற்று – இவர் ஹிருதயத்தில் புகுந்த பின்பு க்ருத்யக்ருத்யனாய் இருந்தான் ஆயிற்று

சோலைத் தலைக் கணமா மயில் நடமாட மழை முகில் போன்று எழுந்து எங்கும் ஆலைப் புகை கமழும் அணி யாலி யம்மானே
சோலைத் தலையிலே பெரிய மயில் திரளானது நடமாடும்படியாக
வர்ஷூக கலா ஹகம் போலே தோன்றி எங்கும் ஒக்க ஆலைப் புகையைக் கண்டு
சோலைத் தலை கண மா மயில் நடமாடா நிற்கும் ஆயிற்று –

இப்படி விபரீத ஜ்ஞானம் ஜனகமான தேசத்தை இருப்பிடமாக உடையையாய் இருந்து வைத்து
என்னுடைய ஹிருதயத்தில் புகுந்து இருந்தாயே –

(கீழே அன்யதா ஞானம் -தன்மை மட்டும் மாறி
இதில் விபரீத ஞானம் -வஸ்துவே மாறி )

———————————————————————–

மனத்து இருந்தாய்-என்றார் கீழே
இதில் அவிச்சின்னமாய் -கால விசேஷம் நெஞ்சில் படாத படி நிரதிசய போக்யமாய்
கீழே விஸ்லேஷத்தால் க்ஷணம் கல்பமாக இருக்க
இப்பொழுது கல்பமும் க்ஷணம் போல் இருக்கும்

நென்னல் போய் வரும் என்று என்று எண்ணி யிராமை
என் மனத்தே புகுந்தது இம்மைக்கு என்று இருந்தேன் எறி நீர் வளம் செறுவில்
செந்நெல் கூழை வரம் பொரீஇ அரிவார் முகத்தெழு வாளை போய் கரும்பு
அந்நல் காடு அணையும் அணி யாலி யம்மானே–3-5-3-

கூழை -கதிர் மேல் பக்கம் என்றும் -பயிர் கீழ் பக்கம் என்றும் –
அந்நல்-அந்த நல்ல –

நென்னல் போய் வரும் என்று என்று எண்ணி யிராமை –
நேற்றுப் போனான் இன்று வரும் -என்று கொண்டு மாறாதே மநோ ரதித்துக் கொண்டு இராதபடியாக -என்னுதல்
நேற்றுப் போயிற்று இன்று வந்தது நாளையும் வரக் கடவது – என்று மநோ ரதித்து கொண்டு
காலம் செல்ல விட அரிதாம்படி இராமே என்னுதல் –

என் மனத்தே புகுந்தது இம்மைக்கு என்று இருந்தேன்
இப்படி மநோ ரத்தத்தாலே நான் கால ஷேபம் பண்ணாத படியாக என் ஹிருதயத்திலே வந்து புகுந்தது
இஹ லோகத்திலே எனக்கு விலக்காமைக்கு என்று இருந்தேன்
இம்மை -என்ற போது இஹ லோகத்திலே என்றது ஆகிறது
இன்மை -என்ற போது -இனிமை -என்கிறது ஆகிறது

எறி நீர் வளம் செறுவில்-
அலை எறியா நின்றுள்ள நீரை உடைத்தாய் அழகியதாய் இருந்துள்ள செறுக்கள் உண்டு -செய்கள் –
அவற்றில் உண்டான

செந்நெல் கூழை -வரம் பொரீ இ அரிவார்-
செந்நெல் கூழை என்று செந்நெல் தலையாய் அத்தை வரம்பிலே ஒருக்கி அரிகிறவர்கள் என்னுதல்
பைம் கூழ் என்கிறபடியே கூழை என்றது கூழ் என்றாய் செந்நெல் பயிராய் அத்தை அரிவார் -என்னுதல்

கூழை -கதிர் பயிர் இரண்டும்

வரம் பொரீ
நேர் கொடு நேர் சென்று இழிந்து அறுக்க ஒண்ணாத படி வயிரம் போலே இருக்கையாலே
வரம்புகளிலே தலைகளைக் கொடு போந்து ஒதுக்கி நுனியிலே அரிவார்கள் ஆயிற்று –

அவர்கள் சேரப் பிடித்த பிடியிலே அகப்பட்ட வாளைகள் ஆனவை
முகத்தெழு வாளை போய் கரும்பு அந்நல் காடு அணையும்
அவர்கள் முகத்திலே எழப் பாய்ந்து சாபாயமான நிலத்தை விட்டு நிரபாயமாக வர்த்திக்கைக்காக
அருகே உண்டான செடி மிக்க கரும்பு காட்டிலே சென்று அடையா நிற்கும் ஆயிற்று
போய் அரணைப் பற்றுமாயிற்று
அந்த அழகிய கரும்பு காட்டிலே யடையும்
அணி யாலி யம்மானே-

——————————————————————-

அர்த்தித்தவாதிகள் இல்லாமல்
தானே வந்து புகுந்து ஸ்தாவார பிரதிஷ்டையாக இருக்க
நிகர்ஷம் சொல்லிக் கொள்வது எதனால்
எனக்கு யார் நிகர் சொல்லாமல்
உபகார அதிசயம் என்னை இப்படி அழும் படி பண்ணுகிறது
போதரே என்று நெஞ்சுள் புகுந்து தன் பால் ஆதாரம் பெறுக வைத்த அழகன்

மின்னின் மன்னு நுடங்கிடை மடவார் தம் சிந்தை மறந்து வந்து நின்
மன்னு சேவடிக்கே மறவாமை வைத்தாயால்
புன்னை மன்னு செருந்தி வண் பொழில் வாய் அகன் பணைகள் கலந்து எங்கும்
அன்னம் மன்னு வயல் அணி யாலி யம்மானே–3-5-4-

பணைகள் -பொய்கைகளில் /-அகன் -அதுக்கு உள்ளே இருக்கிற -/ ஆல் -ஆச்சர்யம்

நீர் இங்கனே கிடந்தது நெஞ்சுளுக்குப் படா நிற்கிறது என் என்ன
ஸ்திரீகளை விஸ்மரித்து -உன் திருவடிகளை மறவாதபடி பண்ணினாயாகில் –
இனி நீ செய்தது என் என்கிறார்

மின்னின் மன்னு நுடங்கிடை மடவார் தம் –
மின்னொடு ஒத்து இருப்பதாய் நுடங்கா நின்றுள்ள இடையை உடையரான மடவார் உண்டு -ஸ்திரீகள் –
அவர்கள் விஷயமாக உண்டான –

சிந்தை மறந்து -வந்து நின் மன்னு சேவடிக்கே மறவாமை வைத்தாயால்
இவன் எப்போதும் ஒக்க அவர்களை போக்யைகளாக அனுசந்திக்கும் இத்தனை போக்கி –
அவை தன்னை இவன் தான் லபித்தானாகை- பெரும் பணி இறே –

அப்ராப்த விஷயங்களில் உண்டான வாஞ்சையை தவிர்த்து
பிராப்த விஷயத்தை ஆசைப்படப் பண்ணின இது தான் போரும் இறே உபகாரம்
அவற்றை நானே கை விட்டு உன் பக்கலிலே வந்து சதைகரூபமான உன் திருவடிகளிலே
எனக்கு மறவாமை யாகிற பேறு உண்டாம்படியாக –
நான் அபேஷிக்க அன்றிக்கே
தண்ணீர் பந்தல் வைப்பாரோபாதி நிர்ஹேதுகமாக செய்து அருளினாய் –

புன்னை மன்னு செருந்தி வண் பொழில்வாய் அகன் பணைகள்கலந்து எங்கும் அன்னம் மன்னு வயல் –
புன்னை செருந்தி இவை மன்னா நின்றுள்ள அழகிய பொழிலின் உள்ளே
பொய்கைகளிலே அன்னங்கள்  ஆனவை அன்யோன்யம் கலந்து நித்ய வாசம் பண்ணுகிற வயலை உடைத்தாய்

அணி யாலி யம்மானே
தர்ச நீயமான திரு வாலியிலே நிக்கிற சர்வேஸ்வரனே –

——————————————————————-

உபகாரங்களை சொல்லி
விஷயாந்தரங்களை மறவாமல் வாசனா பலம் உண்டே
மறுவாள் இதில் செய்தல் ஏன்
மனம் வாட நினையேல்
வாடினால் பிழை யேன் என்கிறார்
மா முனி -நீண்ட கால சிந்தனை

நீடு பல் மலரிட்டு நின் இணை அடி தொழுது ஏத்தும் என் மனம்
வாட நீ நினையேல் மரம் எய்த மா முனிவா
பாடலின் ஒலி சங்கினோசை பரந்து பல் பணையால் மலிந்து எங்கும்
ஆடலோசை யறா அணி யாலி யம்மானே–3-5-5-

பல் பணையால்  –  பல வகைப் பட்ட வாத்திய கோஷங்களால்

நீடு பல் மலரிட்டு நின் இணை அடி தொழுது ஏத்தும்
ஒழிவில் காலம் எல்லாம் – 3-3-1-
எண்டிசையும் உள்ள பூக்களைக் கொண்டு -4-7-8- என்கிறபடியே
பலவகைப்பட்ட மலரை உடைத்தான மாலைகளை இட்டு உன்னுடைய ஒன்றுக்கு ஓன்று ஒப்பாய்
இருக்கிற திருவடிகளை தொழுது ஏத்துகிற –

என் மனம் வாட நீ நினையேல் –
என்னுடைய மனஸானது தளிர் போலே வாடும்படியா நீ நினையாது ஒழிய வேணும்

மரம் எய்த மா முனிவா –
ஆஸ்ரிதர்க்கு விசுவாசத்தைப் பண்ணிக் கொடுக்குமவன் அன்றோ –

மா முனிவா
எங்களுடைய நினைவு போலே
தப்பிலும் தப்பி பலிக்கிலும் பலிக்கும் படி அன்று இறே
உன் நினைவு இருக்கும் படி –

பாடலின் ஒலி சங்கினோசை பரந்து பல் பணையால் மலிந்து எங்கும் ஆடலோசை யறா
பாட்டில் இனிய த்வனி மற்றும் உண்டான சங்க த்வனி பின்னையும் பலவகைப் பட்டு இருந்துள்ள
வாத்திய கோஷங்களும் மிக்கு
பார்த்தவிடம் எங்கும் ஆடுகிறவர்கள் உடைய த்வனி மாறாதே

பணை -முரசும் பல்லியமும் -வாத்திய விசேஷம் –

அணி யாலி யம்மானே –

—————————————————————

நம்மை விட்டு விஷயாந்தரங்களில் போகாமல் நீ நினைக்க வேணும் என்று சொன்னீர்
நாம் உம்மை பெற வந்த பின்பு இதுக்கு பிரசக்தி தான் உண்டோ
நீர் தானே வாசனா பலத்தால் நம்மனை விட்டு போனால் நாம் செய்வது ஏன்
அடியேன் தேவருக்கு ஆக்கிய பின்பு
வேறே ஒன்றுக்கு ஆகேன் திட விசுவாசம் பிறந்த பின்பு உன்னைப் போக விடுவேனோ –
புகுந்தாய்
பின்பு திட அத்யாவசியன் ஏற்படுத்து
நம்பிக்கை கொடுத்த பின்பு வாலியை முடித்தால் போல் உனது பேறாய் புகுந்த பின்பு விடுவேனோ

கந்த மா மலர் எட்டும் இட்டு நின் காமர் சேவடி கை தொழுது எழும்
புந்தியேன் மனத்தே புகுந்தாயைப் போகல் ஒட்டேன்
சந்தி வேள்வி சடங்கு நான்மறை ஓதி ஓதுவித்து ஆதியாய் வரும்
அந்தணாளரறா அணியாலியம்மானே –3-5-6-

அந்தணாளரறா–அந்தணாளர் அறா -ப்ராஹ்மணர் மாறாதே வர்த்திக்கிற-

கந்தம் இத்யாதி –
கந்த வத்தான விலஷண புஷ்பங்கள் எட்டையும் இட்டு –
அவை யாவன – கருமுகை -கற்பகம் -நாழல் -மந்தாரம் -சௌகந்தி -செங்கழுநீர் – தாமரை -கைதை –
ஸ்வாபதேசம் – பரம போக்யமான திரு மந்தரத்தால் பிரதிபாத்யமான வஸ்துவின் பக்கலில் தன்னை சமர்ப்பித்து –
சர்வ கந்த -என்கிற வஸ்து ஆகையாலே – உன்னுடைய ஸ்ப்ருஹணீயமான சிவந்த திருவடிகளை
கையாலே தொழுது உஜ்ஜீவிக்க வேணும் என்னும் அத்யவாசாயத்தை உடைய என்னுடைய ஹிருதயத்திலே –

புகுந்தாயைப் போகல் ஒட்டேன் –
நான் உன்னை அபேஷியாதே இருக்க நீயே வந்து புகுந்த பின்பு இனிப் போகல் ஒட்டேன் –
நினைவு இன்றிக்கே இருக்க வந்த சம்பத்தை தள்ளுவார் உண்டோ

சந்தி -இத்யாதி
நித்ய கர்மம் நைமித்திய கர்மம் சடங்கு காம்ய கர்மம்
நான்மறை
இவற்றின் உடைய அனுஷ்டானப் பிரகாரங்களை விதியா நின்றுள்ள நாலுவகைப் பட்ட வேதம் –
இவற்றை முன்பு உள்ளவர்களோடு தாங்கள் ஓதி பின்புள்ளாரை தாங்களே ஓதுவித்து
இப்படி பழையராயப் போருகிற பிராமணர் மாறாத திரு வாலியிலே அவர்களுக்காக
ஆஸ்ரயணீயனாய்க் கொண்டு நிற்கிற சர்வேஸ்வரனே அவர்களும் உண்டாய் இருக்க
நீயே வந்து என் ஹிருதயத்தில் புகுந்த பின்பு இனிப் போகல் ஒட்டேன்

– ———————————————————————-

போகல் விடேன் என்று
நானே போனால் என்ன செய்வீர்
நெஞ்சை சோதிக்க
என்னை பெற திருப் பாற் கடலிலே கிடந்தது அவகாசம் பார்த்து இருக்க
உம்முடைய வார்த்தை பலத்தால் போக விடேன் என்கிறார் இதில் –

உலவு திரைக் கடல் பள்ளி கொண்டு வந்து உன்னடியேன் மனம் புகுந்த அப்
புலவ புண்ணியனே புகுந்தாயைப் போகல் ஒட்டேன்
நிலவு மலர்ப் புன்னை நாழல் நீழல் தண் தாமரை மலரின் மிசை மலி
அலவன் கண் படுக்கும் அணியாலி யம்மானே–3-5-7-

உலவு இத்யாதி –
சஞ்சரியா நின்றுள்ள திரையை உடைத்தான திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளி அங்கு சாய்ந்து அருளிற்று –
என் பக்கலில் புகுருகைக்கு அவசரம் பெறும் அளவாய்
பிறகு என் பக்கலிலே விலக்காத தொரு அவசரம் பெற்றவாறே
உனக்கு புகுருகைக்கு யோக்யனாய் இருக்கிற என் ஹிருதயத்திலே புகுந்த

அப் புலவ –
விசேஜஞ்ஞன் அல்லையோ அவசரம் அறியாயோ புகுருகைக்கு

புண்ணியனே
உன்னைப் பெறுக்கைக்கு ஒரு முதல் இல்லாதபடி இருக்கிற எனக்கு ஸூஹ்ருதமானவனே
(அனந்தன் மேல் கிடந்த புண்ணியா -எங்களைத்தேடி வந்த புண்ணியம் யாம் உடையோம் )

புகுந்தாயைப் போகல் ஒட்டேன்
நீயே வந்து புகுந்த பின்பு உன்னை நான் இனி போகல் ஒட்டேன்

நிலவு மலர்ப் புன்னை நாழல் நீழல் தண் தாமரை மலரின் மிசை மலி –
நித்தியமான மலரை உடைத்தாய் இருக்கிற புன்னை நாழல் இவற்றின் உடைய நிழலிலே
பரந்த தாமரைகளின் மேலே அலவன் கண் படுக்கும் –
அப்பரப்புக்கு எல்லாம் போரும்படி பெரிய வடிவை உடைய ஆண் நண்டானது மற்று ஒரு நியமத்தை அறியாதே
படுக்கை வாய்ப்பாலே கிடந்தது உறங்கா நிற்கும் ஆயிற்று –

அணியாலி யம்மானே

வயலாலி மணாளன் உடைய வியாபாரத்தோடு
அங்கு உண்டான திர்யக்குகள் உடைய வியாபாரத்தோடு
வாசி அற்று இருக்கிறதாயிற்று இவர்க்கு அந்நிலத்தில் உள்ள ஆசையாலே –

——————————————————————–

போவது போல் நடத்தில் என்ன செய்வார் என்று பார்க்க
நெஞ்சில் அருளால் புகுந்தாய்
புண்டரீகருக்காக நிலத்தில் சயனித்தாய் –
போகிறோம் என்று போனால் நானே ஜெயித்தேன் ஆவேன்
நீயே திரும்பி வருவாயே

சங்கு தங்கு தடம் கடல் கடல் மல்லையுள் கிடந்தாய் அருள் புரிந்து
இங்கு என்னுள் புகுந்தாய் இனிப் போயினால் அறையோ
கொங்கு செண்பக மல்லிகை மலர் புல்கி இன்னிள வண்டு போய் இளம்
தெங்கின் தாதளையும் திருவாலி யம்மானே–3-5-8-

சங்கு தங்கு தடம் கடல் கடல் மல்லையுள் கிடந்தாய்
சங்கு மாறாதே இருப்பதாய் பரப்பை உடைத்தான திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளினாய்
அங்கு நின்றும் ஆஸ்ரிதனுக்காக திருக் கடல் மல்லையிலே கண் வளர்ந்து அருளினாய்
இவ்வோ இடங்கள் உனக்கு வாசஸ்தானமாய இருக்க

அருள் புரிந்து இங்கு என்னுள் புகுந்தாய்-
என் பக்கல் கிருபை பண்ணி வந்து புகுந்தாய் –

இனிப் போயினால் அறையோ-
உனக்கு வந்த கிருபை மாறாதபடி இருக்கையாலே இனி நீ போவாய் ஆனால் அறையோ அறை –
ஹேது மாறில் இறே அதன் கார்யம் மாறுவது
உன்னால் அல்லது செல்லாத என்னை விட்டு
நீ
இருக்கவுமாய் போகவுமாய் இருப்பார் நெஞ்சில்
இருக்க ஒண்ணாது –

(விதி வாய்க்கின்றது-அறையோ
என் நெஞ்சை விட்டு வன் நெஞ்சில் இருக்க ஒட்டுவேனோ )

கொங்கு செண்பக மல்லிகை மலர் புல்கி இன்னிள வண்டுபோய் இளம் தெங்கின் தாதளையும்-
பரிமளத்தை உடைத்தான செண்பகம் மல்லிகை மலர் இவற்றிலே மதுபான அர்த்தமாக இழிந்த வண்டுகள் ஆனவை –
அவற்றோடு தழுவி அவை கொதித்தவாறே அவ்வெம்மை ஆற்றுகைக்காக
கோடையிலே நோவு பட்டவர்கள் சந்தன பங்கத்திலே கை வைத்துக் கொண்டு கிடக்குமா போலே
இளம் தெங்கிலே போய் அதின் தாதை அளையும் –

திருவாலி யம்மானே –

– ————————————————————————-

வெற்றி தோற்ற சொன்னவர்
தன்னை விட்டு போகாமல் அவன் இருக்கவே செய்தேயும்
ப்ராப்ய த்வரையால்
உபாய விசேஷ ப்ரச்னம் பண்ணுகிறார்
இரக்கமே உபாயம் என்று அறிந்து வைத்தும்

ஓதி யாயிர நாமமும் பணிந்து ஏத்தி நின் அடைந்தேற்கு ஒரு பொருள்
வேதியா அரையா உரையாய் ஒரு மாற்றம் எந்தாய்
நீதியாகிய வேத மா முனியாளர் தோற்றம் உரைத்து மற்றவர்க்கு
ஆதியாய் இருந்தாய் அணி யாலி யம்மானே–3-5-9-

ஒரு பொருள்-அத்விதீய புருஷார்த்த சாதனம் –

ஓதி யாயிர நாமமும் பணிந்து ஏத்தி நின் அடைந்தேற்கு
திரு நாமங்கள் ஆயிரத்தையும் வாயாலே சொல்லி திருவடிகளிலே விழுந்து ஸ்தோத்ரத்தைப் பண்ணி
உன்னைக் கிட்டின எனக்கு -( இவை அதிகாரி ஸ்வரூபமே )

ஒரு பொருள் –
உன்னை பெறுகைக்கு சாதனம் இதுவே என்று ஓர் அர்த்தத்தைச் சொல்ல வேணும்

வேதியா –
வேதைக சமைதி கம்யனே

அரையா –
என்னை வன்னியமறுத்து ஆளுகிறவனே எனக்கு ஸ்வாமி ஆனவனே
(வன்னியம் குறும்பு -முக்குறும்புகளையும் அறுத்து )

உரையாய் ஒரு மாற்றம் எந்தாய்
ஒரு வார்த்தை அருளிச் செய்ய வேணும் மாஸூச -என்று நான் உஜ்ஜீவிக்கும்படி
ஒரு வார்த்தை அருளிச் செய்ய வேணும் –

நீதியாகிய வேத –
நாட்டார் அனுஷ்டிக்கும் படியை விதிக்கக் கடவ வேதம்
மா முனியாளர் தோற்றம் –
அதில் மந்திர ரூபமானவற்றைக்
காணக் கடவராய் இருக்கிற ருஷிகளுடைய உத்பத்தி
இவற்றைச் சொல்லி
எல்லாருக்கும் ஒக்க காரண பூதனாய் இருக்கிறவனே
அன்றிக்கே
வேத சப்தத்தின் படியே பூர்வ க்ரமத்திலே சிருஷ்டியா நிற்கிறவன் என்னுதல்
அதாவது பூ என்னா பூமியை சிருஷ்டித்து
இவ் வகைகளில் அத்தைச் சொல்லி சிருஷ்டிக்க –( யதா பூர்வம் கல்பம் யது )

——————————————————-

புல்லி வண்டு அறையும் பொழில் புடை சூழ் தென்னாலி யிருந்த மாயனை
கல்லின் மன்னு திண் தோள் கலியன் ஒலி செய்த
நல்ல இன்னிசை மாலை நாலும் ஓர் ஐந்தும் ஒன்றும் நவின்று தாம் உடனே
வல்லராய் யுரைப்பார்க்கு இடமாகும் வானுலகே–3-5-10–

(இங்கும் தென்னாலி -தென்னாலி மாயனே -பின்னும் வரும் )

வண்டுகளானவை தழுவி
மதுபான மத்தமாய்க் கொண்டு
அறையா நின்றுள்ள பொழிலைப் பர்யந்தத்திலே
உடைத்தான திருவாலியிலே எழுந்து அருளி இருக்கிற
ஆச்சர்ய பூதனைக் கவி பாடிற்று –

மலை போலே திண்ணியதாய் நித்தியமாய் இருந்துள்ள
தோளை உடைய ஆழ்வார் அருளிச் செய்த
நல்ல இன்னிசையான- தொடை

இதில் உண்டான ஆதராதி அதிசயத்தாலே
விட மாட்டாமை பிரித்து பிரித்து அருளிச் செய்கிறார்-

——

ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.

வந்து வுவந்து சிந்தை புகும் ஆலியம்மானைத் தன்னின்
சிந்தை நீங்க ஒட்டாது தொல்லடிமை -முந்துறக்
கொள்ள அறப் பதறிக் கோரும் கலியனை
உள்ளி ஏத்தும் மலர்த்தூய்–25-

தன்னின் சிந்தை -சிந்தைக்கு இனியான் அன்றோ
வந்து வந்து -சமயம் பார்த்து என்றுமாம்
உள்ளி ஏத்தும் மலர்த்தூய் -உள்ளுதல் நினைத்தல் மானஸ வியாபாரம் -ஏத்துதல் -வாக்கின் செயல் –
மலர்தூவுதல் காயிக வியாபாரம்-முக்கரணங்களும் ஒருப்பட நின்று கைங்கர்யம் –
பதற்றம் -தலைவி கார்யம் -பேற்றுக்கு த்வரிக்கையும் வேண்டுமே –

———————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: