எட்டாந்திருவாய்மொழி-‘மாயா’
முன்னுரை
ஈடு : 1மேல் திருவாய்மொழி, உருவு வெளிப்பாடாய்ச் சென்றது. 2கைக்கு எட்டாமையாலே உருவு வெளிப்பாடு என்று அறிவர் அன்றோ? 3இனி. சர்வேஸ்வரன் தான் நினைத்த காரியம் செய்து தலைக்கட்டிக்கொள்ளுமளவும் நம்மை இங்கே வைத்திருப்பான் என்னும் இடமும் அறிவரன்றோ? ஆகிலும், அவனை ஒழியத் தரிக்க மாட்டாதவர் ஆகையாலே, இதனை நினைத்து ஆறி இருக்கவுதம் மாட்டாரே! 4‘விரோதியைப் போக்கித் தரவேணும்’ என்று இவர் விரும்பினாலும், அவனும் இவரைக்கொண்டு தான் நினைத்த பிரபந்தங்களைத் தலைக்கட்டிக்கொள்ளாமளவும் இவர் விரும்பியதைச் செய்யானே!5இவர் விரும்பியதைச் செய்யாதிருக்கச்செய்தேயும், இவரை இங்கே வைத்து வாழ்விக்கும் உபாயங்களும் அறிந்திருக்குமே! 6ஆகையாலே, சில பொருள்களை உயிர் போகாதபடிஒன்றிலே கோத்திட்டு வைக்குமாறு போலே, முடியவும் ஒட்டாதே வாழவும் ஒட்டாதே நடுவே இருத்தி நலிகிறபடி நினைத்து, ‘எனக்கு இதில் பொருந்தாமை உண்டாய் இருக்கச் செய்தேயும் இச்சம்சாரத்திலே வைத்து என்னை நடத்திக்கொடு போருகிற இவ்வாச்சரியத்தை எனக்கு அருளிச்செய்ய வேண்டும்,’ என்ன ஒன்றைக் கேட்க, வேறே சிலவற்றைச் சொல்லுவாரைப் போலே, ‘இது ஒன்று கண்டோ நீர் ஆச்சரியப்படுகிறது? இவ்வளவு அல்லாத நம்முடைய விசித்திர உலக உருவமாய் இருக்குந் தன்மையைப் பாரீர்!’ என்று தன்னுடைய ஆச்சரியமான உலக உருவமாய் இருக்குந் தன்மையைக் காட்டிக்கொடுத்தான். அங்ஙனம் காட்டிக்கொடுத்த 1அதுதானும் இவர் நினைத்தது அன்றேயாகிலும், அவன் காட்டிக்கொடுத்தது ஆகையாலே. அதுவும் இவருடைய பிரீதிக்குக் காரணமாக இருக்கும் அன்றோ? ஆக, இவர் ஒன்றைக் கேட்க, அவன் பல ஆச்சரியங்களைக் காட்டிப் பரிகரித்தான்.
2அக்குரூரன், யமுனையிலே புக்கு முழுகினவாறே பிள்ளைகளை நீருக்குள்ளே கண்டு அஞ்சிக் கரையிலே பார்த்தான்: அங்கேயும் கண்டான்; கண்டு,
நீரிற் புகுங்கண்டு தேரினைப் பார்க்கும் நிறுத்தியபொன்
தேரில் தொழும்பின்னை நீரினில் காணும் சிறந்தபச்சைக்
காரில் திறம்மெய் யரங்கனும் சேடனும் கஞ்சவஞ்சன்
ஊரிற் செலஉடன் போம்அக்கு ரூரன்தன் உண்மகிழ்ந்தே.’-என்ற திருவரங்கத்துமாலைச் செய்யுள் நினைத்தல் தகும்.
3‘ஓ கிருஷ்ணனே! இந்த உலகமானது, மஹாத்துமாவான எவனுடைய மிகப்பெரிய ஆச்சரிய சொரூபமாயிருக்கிறதோ, அப்படிப்பட்ட மிகப்பெரிய ஆச்சரியச் செயலையுடைய உன்னோடு சேர்ந்தேன்,’ என்று கொண்டு
ஜகத் ஏதத் மஹாஸ்சர்யம் ரூபம் யஸ்ய மஹாத்மந:
தேந ஆஸ்சர்யவரேண அஹம் பவதா க்ருஷ்ண ஸங்கத:’-என்பது, ஸ்ரீவிஷ்ணு புரா. 5. 19 : 7.
அவன் ஆச்சரியப்பட்டாற்போலே, இவரும் அவனுடைய விசித்திரமான உலக உருவமாய் இருக்குந்தன்மையை அருளிச்செய்து ஆச்சரியமடைந்தவராகிறார்.
புகழும்நல் ஒருவன்’ என்ற திருவாய்மொழியும், ‘நல்குரவும் செல்வும்’ என்ற
திருவாய்மொழியும், இத்திருவாய்மொழியும் பொதுவாக நோக்க ஒன்றாக
இருந்தனவேயாகிலும் ஒவ்வொன்றற்கும் வேறுபாடு சிறிது உண்டு என்க. ‘புகழும் நல்
ஒருவன்’ என்ற திருவாய்மொழி ஐயத்திலேநோக்கு. ‘நல்குரவும், செல்வும்’ என்ற திருவாய்மொழி மாறுபட்ட
ஐஸ்வர்யத்திலே நோக்கு. இத்திருவாய்மொழி ஆச்சரியமாக உலக உருவமாய்
இருக்குந்தன்மையிலே நோக்கு.
மாயா! வாமன னே!மது சூதா! நீ அருளாய்
தீயாய் நீராய் நிலனாய் விசும்பாய்க் காலாய்த்
தாயாய்த் தந்தையாய் மக்களாய் மற்றுமாய் முற்றுமாய்
நீயாய் நீநின்ற வாறுஇவை என்ன நியாயங்களே!
பொ-ரை : மாயவனே! வாமனனே! மதுசூதனனே! தீயாகி நீராகி நிலனாகி ஆகாசமாகிக் காற்றாகித் தாயாகித் தந்தையாகி மக்களாகி மற்றைய உறவினர்களாகி மேலும் சொல்லப்படாத பொருள்களுமாகி உனது உருவுமாகி நீ நின்றபடிகள் தாம் இவை என்ன படிகள்?
இத்திருவாய்மொழி, கலைநிலைத்துறை.
ஈடு : முதற்பாட்டு. 1விசித்திரமான காரிய காரணங்களை எல்லாம் விபூதியாகவுடையனாய் இருக்கிற இருப்பை அநுசந்தித்து, ‘இவை என்ன படிகள்!’ என்று ஆச்சரியப்படுகிறார்.
மாயா – ‘மாயா!’ என்கிற இது, இத்திருவாய்மொழிக்காகச் சுருக்கமாய் இருக்கிறது. வாமனனே – 2‘மாயன் என்கிற பதத்திற் சொல்லுகிற ஆச்சரியத்தினை அறிகிற இடமாய் இருக்கிறது. என்றது, 3அன்றே பிறந்து அன்றே வளர்ந்து –பெரியதிருவந்தாதி.-மஹாபலி பக்கலிலே சென்று. அவன் முன்னே நின்று, தான் சொன்னவை எல்லாம் செய்யவேண்டும்படி வார்த்தை அருளிச்செய்து, சிற்றடியைக் காட்டிப் பெரிய அடியாலே அளந்துகொண்டு, இப்படிச்செயதசெயல்கள் அனைத்தையும் முன்னோட்டுக்கொண்ட வாமனனே!’ என்கிறார் என்றபடி. மதுசூதா – ஆச்சரியமான செயல்களுக்கு எல்லாம் ஸ்ரீ வாமனனைப் போலேயாயிற்று, பகைவர்களை அழிப்பதற்கு மதுசூதனன் என்கிறது. மதுசூதா நீ அருளாய் – 1மது என்னும் அசுரனை அழித்தாற்போலே, எனக்கு ஓடுகிற ஐயத்தையும் நீயே போக்கித்தந்தருள வேணும். தீயாய் நீராய் நிலனாய் விசும்பாய்க் காலாய் – 2காரியத்தைப்பற்றி இருக்கிற விசித்திரத் தன்மை காரணத்திலேயும் உண்டாய் இருக்கும் அன்றோ? 3மேலும், ஒன்றின் படியாய் இராதே அன்றோ மற்றையது? இப்படி வேறுபட்ட பிரகாரங்களையுடையனவான ஐம்பெரும்பூதங்களுக்கும் நிர்வாஹகனாய். தாயாய்த் தந்தையாய் மக்களாய் மற்றுமாய் –4காரியவர்க்கத்திலும் தாய் செய்தது தமப்பன் செய்யமாட்டான்; தமப்பன் செய்யும் உபகாரங்கள் மக்கள் செய்யமாட்டார்கள்; மக்கள் செய்யும் உபகாரம் உறவினர்கள் செய்யமாட்டார்கள்; இப்படி எல்லாவிதமான உறவினர்களுமாய். முற்றுமாய் – சொல்லப்படாத தொடர்பு பெற்றவைகளாயுள்ள சேதன அசேதனங்கள் எல்லாவற்றிற்கும் நிர்வாஹகன் ஆனவனே!
நீயாய் – 5உலக உருவமாய் இருக்கும் அளவு அன்றே தனக்கே உரியதான விக்கிரகத்தோடு கூடி இருக்கும் இருப்பு?
இவர்க்குப் பரமபதத்திலே நித்தியசூரிகளுக்கு இனியனாய் இருக்கும் இருப்போடு, உலக உருவமாக நிற்கும் நிலையோடு வாசி அறப்போக்கியமாம்படி அன்றோ இவர்க்குப் பிறந்த ஞானத்தின் தெளிவு இருக்கிறபடி? நீ நின்றவாறு-இப்படி இவை எல்லாமாய்க்கொண்டு நீ நின்ற பிரகாரம். இவை என்ன நியாயங்கள்-இவை என்ன படிகள்தாம்? 2முதல் திருவாய்மொழியிலே இவனுடைய இறைமைத் தன்மையை அனுபவித்திருக்கச்செய்தேயும், இதற்கு முன்பு கண்டறியாதாரைப் போலே புதியராய் அனுபவிக்கிறாராயிற்று. 3குணானுபவத்தில் கணந்தோறும் புதுமை பிறந்து அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆராவமுதமாய் –திருவாய் 2. 5 : 4.-அனுபவிக்குமாறு போலேயாயிற்று, விபூதி அனுபவத்திலும் புதியராய் அனுபவிக்க வல்ல படி. இவை என்ன நியாயங்கள் நீ அருளாய்-இதனை அருளிச்செய்யவேணும். 4‘ஏ கிருஷ்ணனே! என் சந்தேகத்தை அடியோடு போக்குதற்கு நீதான் தக்கவன்; இந்த சந்தேகத்தை நீக்குகின்றவன் உன்னை ஒழிய வேறு ஒருவன் இலன்,’ என்கிறபடியே, அருச்சுனனுடைய சந்தேகத்தைத் தீர்த்தாற்போலே, என்னுடைய ஐயத்தையும் தீர்த்தருள வேணும்.
‘ஏதம் மே ஸம்ஸயம் க்ருஷ்ண சேத்தும் அர்ஹஸி அஸேஷத;
த்வத் அந்ய: ஸம்ஸயஸ்ய அஸ்ய சேத்தா ந்ஹ்யுபப்த்யதே’-என்பது, ஸ்ரீ கீதை, 6 : 39.
ஆச்சர்ய சக்தி விசித்திர சக்தி அனுபவம் இதில் –
கைக்கு எட்டாமையால் உரு வெளிப்பாடு கீழில்-
சர்வ சக்தன் -ஏதோ கார்யதுக்காக வைத்து உள்ளான் -மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர் -தானே –
நடிவிலே சம்சாரம் பொருந்தாமல் உள்ள என்னை வைத்து தான் செய்ய வேண்டுமா கேட்பார் –
அவனை ஒழிய தரிக்க மாட்டார்
ஆறி இருக்க முடியாமல் துடிக்க –
1984 வைஷ்ணவ dept ஆரம்பம் –
விவேகானந்தா கல்லூரியில் வேலை –
ஜூலை 18 செலக்ட் செய்து
துடிக்க –
1986 ஜூலை order வேற
இரண்டு வருஷம் பட்ட பாடு –
விரோதியைப் போக்கி தர அர்தித்தாலும் இனி இனி கதற –
பிரபந்தம் தலைக்கட்ட வேண்டுமே
சம்சாரம் உஜ்ஜீவிப்பிக்க
அபெஷிதம் செய்யான்
இவரை இங்கே வைத்து ஜீவிக்க வைக்க குணா அனுபவம் காட்டுவான்
குழந்தைக்கு போக்கு காட்டுவது போலே –
பதார்த்தங்களை உயிர் போகாதபடி கோத்து வைக்குமா போலே
மீன்கள் -ஊசியில் கோத்து நீர் தெளிப்பது போலே நீர் பசை வேண்டுமே உயிர் தரிக்க –
ஆழ்வாரை முடியவும் ஒட்டாதே ஜீவிக்கவும் விடாதே நடுவில் இருத்தி
ஆச்சர்யம் -பொருந்தாத என்னை இப்படி வைத்து இருப்பது –
ஒன்றைக் கேட்க வேற ஒன்றை சொல்வதை போலே –
விசித்திர ஜகதாகாரம் காணீர் -என்று காட்ட
ஜகத் வைசித்ரியம் -காட்டிக் கொடுக்க
அவன் காட்டிக் கொடுக்க ப்ரீதிகரமாய் இருக்க –
தான் கேட்டது கிடைக்கா விடிலும்
தான் கேட்டதை மறந்து இத்தை அனுபவிக்க
அக்ரூரர் -யமுனையில் முழுக பிள்ளைகளை எங்கும் கண்டு
ஜகத் -தேன ஆச்சர்ய -பவதா கிருஷ்ண சங்கத
போலே இவரும் விஸ்மிதர் ஆகிறார் –
ஸ்ரீ விஷ்ணு புராணம்
புகழும் நல ஒருவன் -சம்சயம் உண்டே ஆழ்வாருக்கு –
நல குரவும் செல்வம் -பொருந்தாத சம்சாரத்தில் உள்ளவரை சமாதான படுத்த காட்டி
வெல்லும் விருத்த விபூதிகன் -எதிரிடையான வஸ்து
இதில் ஆச்சர்ய ஜகதாராயத்தை காட்டி
இவை என்ன படிகள் என்று ஆச்சர்யப் படுகிறார்
தீயாய் நீராய் -நிலனே காரணம் கார்யங்கள் சேர்ந்த விபூதி மான்
இவை என்ன நியாயங்கள்
மாயா -வாமனனே மது சூதா நீ அருளாய்
இவை என்ன நியாயங்கள் என்று
பஞ்ச பூதங்கள்
எல்லாம் நீயாய்
மாயா -திருவாய்மொழிக்கு சன்க்ரகம்
மாயனை -ஆண்டாள் போலே
ஒவ் ஒன்றும் ஆச்சர்யம்
மன்னு வட மதுரை மாயனை
தாயை குடல் விளக்கம் செய்த மாயனை ‘
தூசாக்கும் மாயனை
பல்லவி போலே காட்டி அர்த்தம்
அன்றே பிறந்து அன்றே வளர்ந்து -பிறந்த அன்றே ஏழு வயசே அன்றே யாசகம் அது ஒரு மாயம்
சொன்னவை எல்லாம் செய்ய வேண்டும்படி நிலம் மாவலி மூவடி
வினை சொல் இன்றி
சிற்றடி காட்டி
மாயா இப்படி
மது சூதா -விரோதி நிரசனதுக்கு மாயம்
ஓடுகிற சம்சயம் நீயே போக்கித் தர வேண்டும்
தொடைக்கு நடுவில் இறுக்கி கொன்றாய் ஆச்சர்யம்
தீயார் நீராய் நிலனாய்
கார்யம் விசித்ரம் காரணத்தில் இருப்பதால் வருமே
ஒன்றின்படி யை இராமல் மற்றது –
பின்னமான பிரகாரங்கள் பஞ்ச பூதம் நிர்வாஹகன்
தாயாய் தந்தையாய் இதுவும் தானேயாய் விசித்ரம்
மற்றுமாய் சர்வ வித சம்பந்தி
முற்றுமாய் சொல்லப் படாதவை
நீயாய் -ஜகதாகாரணம் சொல்லி தனிப்பட்ட அசாதாராண விக்ரகம்
நீயாய் சூரி போக்யமான இருப்பு
வாசி அற அனைத்தும் போக்கியம் இவருக்கு
ஆழ்வாருக்கு கயிறு ப்ரஹ்மம் போலே தெரிய
ஞான வைச்யம்யம்
இவை என்ன படிகள்
ஐஸ்வர்யம் முதல் திருவாய்மொழி
அனுபவம் செய்தாலும்
இவருக்கு முன்பு கண்டு அறியாதபடி புதிதாக அனுபவம்
ஷணம் தோறும் அப்பொழுதைக்கு அப்பொழுது ஆரா அமுதம்
விபூதி துவ்யத்தையும் புதியராய் அனுபவிக்க
நீ அருள செய்ய வேணும் இவை என்ன நியாயங்கள் என்று
அர்ஜுனன் 6 அத்யாயம் சங்கை தீர்க்க கேட்டது போலே
உன்னை தவிர வேறு ஒருவர் சம்சயம் போக்குவார் இல்லையே
என்னுடைய சம்சயம் நீ அருளி தீர்க்க வேணும் என்கிறார்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply