திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -7-7-11-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

  கட்குஅரிய பிரமன் சிவன்இந் திரன்என்ற இவர்க்கும்
கட்குஅரிய கண்ணனைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
உட்குஉடை ஆயிரத்துள் இவையும் ஒருபத்தும் வல்லார்
உட்குஉடை வானவ ரோடுஉட னாய்என்றும் மாயாரே.
 

    பொ – ரை : மக்கள் கண்களால் காண அரிய பிரமன் என்ன, சிவன் என்ன, இந்திரன் என்ன, ஆகிய இவர்கட்கும் காண அரிய கண்ணபிரானைத் திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீசடகோபர் அருளிச்செய்த மிடுக்கையுடைய ஆயிரம் திருப்பாசுரங்களுள் ஒப்பற்ற இந்தப் பத்துத் திருப்பாசுரங்களையும் வல்லவர்கள், ஆற்றலையுடையவாரன நித்தியசூரிகளோடு ஒரு கோவையாய் எப்பொழுதும் பேரின்பத்தை அனுபவிக்கப் பெறுவர்கள்.

    வி – கு : உட்கு – அச்சமுமாம். மாயார் – அழியார்; என்றது, ‘நித்தியானுபவத்தை அனுபவிக்கப்பெறுவர்’ என்றபடி.

ஈடு : முடிவில், 2‘இத்திருவாய்மொழியைக் கற்றவர்கள், பகவானுடைய பிரிவால் வருந்தாமல், நித்தியசூரிகளோடே கூடி நித்தியானுபவம் பண்ணப் பெறுவார்கள்,’ என்கிறார்.

கட்கு அரிய பிரமன் சிவன் இந்திரன் என்ற இவர்க்கும் கட்கு அரிய கண்ணனை – மக்களுடைய கண்களுக்குப் புலப்படாதபடி இருக்கிற பிரமன் சிவன் இந்திரன் என்னும் இவர்களுக்கும் கண்களுக்குப் புலப்படாதபடி இருக்கிற கிருஷ்ணனை. 3பிரமன் முதலானோர்களுடைய கண்களுக்குக் காண முடியாதவனாய் இருக்கிற கிருஷ்ணன், மறக்க ஒண்ணாதபடி உருவு வெளிப்பாடாய்த் தோன்ற, அதனாலே நலிவு பட்டு, போன போன இடம் எங்கும் சூழ்ந்துகொண்டது என்னும்படி ஆயிற்று இவர்க்குப் பிரகாசித்தபடி. 1அவர்கள் கண்களுக்கு அரியன் ஆனாற்போலே ஆயிற்று, இவர் கண்களுக்குச் ‘சூழவுந் தாமரை நாண்மலர் போல் வந்து தோன்றும்’ என்னும்படி பிரகாசித்தபடி. குருக்கூர்ச்சடகோபன் சொன்ன-ஆழ்வார் அருளிச்செய்தழ உட்கு உடை ஆயிரத்துள் இவையும் ஒருபத்தும் வல்லார் உட்கு உடை வானவரோடு உடனாய் என்றும் மாயாரே – 2சொல்லப்படுகின்ற பொருளை உள்ளபடி சொல்லவல்ல ஆற்றலையுடைத்தான ஆயிரத்திலும் வைத்திக்கொண்டு இப்பத்தையும் கற்க வல்லவர்கள், 3நித்தியானுபவம் பண்ணாநின்றாலும் மேன்மேலெனப் பகவத்குணங்களைப் பூர்ணமாக அனுபவிக்கைக்குத் தகுதியான யோக்கிதையயுடைய நித்தியசூரிகளோடு ஒரு கோவையாய் உருவு வெளிப்பாட்டாலே நோவுபடாமல் அடியார்கள் குழாங்களை உடன் கூடி நித்தியானுபவம் பண்ணப்பெறுவர். மாய்கையும் உருவு வெளிப்பாடும் பரியாயம் என்று இருக்கிறார்காணும்.

அன்றிக்கே, ‘மாயார்’ என்பதற்கு, ‘பிரியார்’ என்னுதல். 4பகவத் அபசாரம் பாகவத அபசாரம் உண்டானால் வருமது போல அன்றே, பகவானுடைய அங்கீகாரம் உண்டாய் அது நிலை நில்லாமையால் படும் கிலேசம்? 5பிரளயம் கோத்தாற்போலே, கண்ணைக்

கண் கோத்து அன்றோ கிடக்கிறது? சூழவும் – இவை எல்லாம் அவன் கழுத்துக்கு மேலே படுத்தின கிலேசம் அன்றோ?

 

             திருவாய்மொழி நூற்றந்தாதி

        ஏழையர்கள் நெஞ்சை இளகுவிக்கு மாலழகு
சூழவந்து தோன்றித் துயர்விளைக்க-ஆழுமனந்
தன்னுடனே அவ்வழகைத் தானுரைத்த மாறன்பால்
மன்னுமவர் தீவினைபோம் மாய்ந்து

நித்யர் உடன் சேர்ந்து அனுபவிக்க பெறுவார் பலன் சொல்லி தலைக் கட்டுகிறார்
கட்கரிய பிரமன் சிவன் இந்த்ரன் -மனுஷ்யரால் காண முடியாத
இவர்களாலும் காண அரிய-கண்ணுக்கு அவிஷயமாய் இருக்கும் கிரிஷ்ணனை
இவருக்கு உரு வெளிப்பாட்டால் தோன்றி
அத்தாலே நலவு
போன போன இடங்களிலும் பிரகாசித்து
தானே வந்து தோன்றி
பத்துடை அடியவர்க்கு எளியவன் பிறர்க்கு அரிய வித்தகன்
இவர் கண்ணுக்கு வந்து தோன்றி சூழவும் தாமரை நாள் மலர் போலே பிரகாசித்து
பார்த்த பார்த்த இடம் போலே
சரப பயம்
மாய சிரஸ் போலே
உட்கு பலம் தேஜஸ் மிடுக்கு உள்ள நித்யர்
உட்குடை ஆயிரம் அர்த்தம் உள்ளபடி தெளிவாக சொல்லி
விஷயம் சென்று சேருவது -முக்கியம் சம்பந்தம் இல்லாமல்
திருஷ்டாந்தம் -சதாபிஷேக ஸ்வாமி
திருத்தி பணி கொள்ளும் –
உப்புமா வாங்க சாமான் வாங்க சொல்லி அனுப்ப
எல்லாம் ஒன்றாக கொட்டி வாங்கி வந்து -காட்ட –
இப்படி இருந்தால் எப்படி செய்வது
நீ சொன்னது எல்லாம் சம்ப்ரதாய அர்த்தம் தான்
உட்குடை ஆயிரம் -அறிந்தது எல்லாம் பேச கூடாதே
தலைப்புக்கு சேர சொல்லி –
சபையில் கார்ப்பன்காடு ஸ்வாமி குறிப்பு மனசில் கொண்டு நோட்டம் பார்த்து –
சாரம் சொல்லி முடித்து -தரிக்கும் படி உபன்யாசம் –
உள்ள படி பிரதிபாதிக்கும் ஆயிரம்
இப்பத்தையும் அப்யசிக்க வல்லார்
நித்ய சூரிகள்
உட்குடை வானவர்
மேலே மேலே அனுபவிக்க சக்தி உள்ளவர்
நித்யானுபவம் பண்ணா நின்றாலும் பூர்ண அனுபவம் செய்ய யோக்யதை உள்ளவர்
மாயார் -மாயையும் உரு வெளிப்பாடும் பர்யாய சப்தம் ஆழ்வாருக்கு
நேரான சம்பந்தம் பெறுவார்
பிரியாமல்
பிரிந்தால் மாய்தல் தான்
அடியார் குழாம் சேர்ந்து அனுபவிக்க பெறுவார்
அபசாரம் இன்றி துடிக்காமல்
பகவத பாகவத அபசாரம் பிராயச்சித்தம் உண்டு
அவன் அனுக்ரகிக்கா விடில் ஒன்றும் செய்ய முடியாதே
உரு வெளிப்பாடு துன்பம் இல்லை இவர்களுக்கு
அவன் கழுத்துக்கு மேலே பண்ணும் கிலேசம் இ றே இவை
ஹிருதயம் இருந்து வர வில்லை -உண்மை இல்லை நெஞ்சிலே வந்த வார்த்தை இல்லை

சாரம்
இளகுவிக்கும் மால் அழகு
சூழ வந்து தோன்றி
துயர் விளைக்க
ஆழும் மனம் தன்னுடனே
மாறன் சொல்
பால் மன்னுமவர் பாபம் போம் மாய்ந்து
தீவினை போம்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: