திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -7-7-10-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

 நிற்றிமுற் றத்துள்என்று நெரித்த
கையராய் என்னைநீர்
சுற்றியும் சூழ்ந்தும் வைதிர்
சுடர்ச்சோதி மணிநிறமாய்
முற்றஇம் மூவுல கும்விரி
கின்ற சுடர்முடிக்கே
ஒற்றுமை கொண்டதுஉள் ளம்அன்னை
மீர்!நசை என்நுங்கட்கே?

பொ-ரை : ‘முற்றத்திலே நிற்கின்றாய்’ என்று நெரித்த கையினையுடையவர்களாய்ச் சுற்றிலும் நின்றுகொண்டும், உங்களிலே விசாரித்துக்கொண்டும் என்னை நீங்கள் வைகின்றீர்கள்; மூன்று உலகங்கள் முழுதும் சுடர்ச்சோதி மணி நிறமாய் விரிகின்ற சுடர் முடிக்கே என் உள்ளம் ஒருப்பட்டது; ‘அதுவாயிற்று’ என்றபடி. தாய்மார்களே! உங்களுக்கு என் பக்கல் விருப்பம் எதற்கு?

வி – கு : ‘அன்னைமீர்! நீர் நெரித்த கையராய் என்னை வைதிர்; மூவுலகும் மணி நிறமாய் விரிகின்ற சுடர் முடிக்கே என் உள்ளம் ஒற்றுமை கொண்டது; நுங்கட்கு நசை என்?’ என்க.

ஈடு : பத்தாம் பாட்டு. 1‘திருமகள் கேள்வனுங்கூட நம்மைத் தலைமேல் கொண்டு போருகிறது இவ்வவஸ்தைக்கு அன்றோ?’ என்று திருமுடியில் அழகு வந்து நலிகிறபடியைச் சொல்லுகிறாள்.

நிற்றி முற்றத்துள் என்று. . . . . . . . . .நுங்கட்கு நசை என் – 2இத்தனையும் நசை அறச் சொல்லாவிடில் அவர்கள் விடார்கள் போலே. நிற்றி முற்றுத்துள் என்று – ‘முற்றத்துள் நிற்றி’ என்பர்கள். 3படுக்கையினின்றும் எழுந்திருந்து எல்லாரும் காணும்படி முற்றத்திலே நிற்கைக்கு மேற்படப் பழி இல்லையாக நினைத்திராநின்றார்கள். 4‘எவள் முன்பு ஆகாசசாரிகளான பிராணிகளாலும் பார்க்கப்படாதவளாய் இருந்தாளோ, அத்தகைய சீதையைப் பெருந்தெருவில் செல்லும் மக்களும் கண்டார்கள்,’

 ‘யாந ஸக்யா புரா த்ரஷ்டும் பூதை: ஆகாஸகைரபி
தாமத்ய ஸீதாம் பஸ்யந்தி ராஜமார்க்ககதா ஜநா:’-என்பது, ஸ்ரீ ராமா. அயோத். 33 : 7.

என்றதைப் போன்று நினைத்திரா நின்றார்களாயிற்று இதனை. முற்றித்திலே புறப்பட்டு நிற்கும்படிபிறந்த ஸாஹஸத்துக்கு நெரித்த கையராய். என்னை நீர் – 1உருவு வெளிப்பாடு புறப்பட விடுவித்து நிறுத்த நிற்கிற என்னை, இதனால் நலிவு வாராதபடி புண்ணியம் செய்த நீங்கள். என்றது. ‘அவன் புறப்பட விடுவித்து நிறுத்த நிற்கிற என்னை, இதுகொண்டு காரியம் இல்லாத நீங்கள்’ என்றபடி. 2சுற்றியும் சூழ்ந்தும் வைதிர்-‘இவளைத் தப்புவித்தோமாம் விரகு என்?’ என்று நெஞ்சிலே விசாரிக்கையும், கால்வாங்கிப் பேர நிற்கவும் ஒண்ணாதபடி சூழநின்றும் பொடியா நின்றீர்கோள். அன்றிக்கே, ‘போயும் வந்தும் பொடியாநின்றீர்கோள்’ என்னுதல்.

சுடர்ச்சோதி மணி நிறமாய் இம்மூவுலகும் முற்ற விரிகின்ற சுடர் முடிக்கே என் உள்ளம் 3ஒற்றுமை கொண்டது – மிக்க புகரையுடைத்தான இரத்தினத்தினுடைய ஒளியையுடைத்தாய்க்கொண்டு கண்ட இடம் எங்கும் பரம்பாநின்றுள்ள ஒளியையுடைய திருமுடியிலே ஒருமைப்பட்டது என்னுடைய உள்ளம். அன்றிக்கே, ‘அங்கே விலை செய்து கொடுத்தது’ என்னுதல். என்றது, ‘தப்புவிக்கைக்கு வார்த்தை சொல்லுகிற இவர்களைப் போலே ஓர் இடத்தில் அன்று அன்றே, அகப்படுத்தி நலியக் கோலுகிற அது நிற்கும்படி?’ என்பதனைத் தெரிவித்தபடி. அன்னைமீர் நசை என் நுங்கட்கே-தாய்மாரான நீங்கள் என் பக்கல் நசை அற அமையும், 4தாய்மாராவார், பெற்று வளர்த்தப் போகத்திற்குத் தக்க பருவம் பிறந்தவாறே கைப்பிடித்தவன் கையிலே காட்டிக்கொடுத்துக் கடக்க நிற்குமத்தனைபோக்கி, பொடியக் கடவர்களோ? 1தக்க வந்து வந்தவர்களையும் பெற்ற சம்பந்தம் கொண்டு ஹிதம் சொல்லி மீட்கப் பார்க்கக் கடவதோ?

எம்பெருமானே தலையாலே தாங்கும்
ஸ்ரீ ய பதியே சிரசா வஹிக்கும் திரு அபேஷகம் நலிகிற படியை
நிற்றி முற்றத்துள் என்று -வைய அன்னைமீர்காள் –
நெறித்த கையராய் சுற்று சூழ்ந்து வைய –
சுடர் முடிக்கே என்னுடைய உள்ளம் ஒற்றுமை கொண்டதே
நசை விட்டு இரும்
சுடர் சோதி மணி நிறமாய்
மூ உலகும் பரந்த தேஜஸ் உடன் -இருக்க –
நசை அற சொல்லா விடில் விடார்கள்
முற்றத்தில் நிற்பது மேல் பழி இல்லை –
uniform கல்லூரியில் -இல்லையே
முற்றம் வாசலுக்கு முன் உள்ள இடம் –
சீதை வனத்தில் போக தேரில் போக வால்மீகி துக்கப்பட்டு வார்த்தை
யா -அவள் -புறா -முன்பு -பூதைகி ஆகாச பஞ்ச பூதங்களும் பார்க்க முடியாத
அத்ய இன்று -ராஜ மார்க்க கதா தெருவில் போனவர்களும் பார்க்கும்படி நிற்கும் படி
அன்ன நடை நடந்து பெரிய திரு மடல்
ஊரார் தாயார் அரசன் கூட்டி வைக்க
மடலூரர்மாதரார் மற்றையார் மேல் -அன்புக்கு வரம்பு இடுவார் யார் -பெரியவாச்சான் பிள்ளை
தென் உரையில் கேட்டு அறிவது உண்டு
மன்னு வட நெறியே வேண்டுவோம் –
அதிபிரவர்த்தி மடல்
சீதை வனம் பெருமாள் பின் போனதும் மடல் எடுக்க சமானம்
வாசவதத்தை -பர்தா மீட்க யமன் பின்னால் போக –
இதுவும் அதிபிரவர்த்தி –
லோகத்தார் கொண்டாட
இகழ்ந்திடப் பட வில்லை
எல்லாம் வடக்கே நடந்தவை –
முற்றத்தில் நிற்பது அதிபிரவர்த்தி
உரு வெளிப்பாடு புறப்பட -விடுவித்து -நிற்கிற என்னை முற்றம் வந்தேன் –
தப்புவிக்க
சூழ்ந்து –
போயும் வந்தும் வைத்து கொண்டே இருக்க
சுற்றியும் சூழ்ந்தும் வைத்து –
முன் காலத்தில் தாயார் தலை பின்னி விட
வசவை அப்பொழுது குடுமி கையில்
பார்த்து இருக்கிறாராம் ஸ்வாமி
வசவை கேட்ட பின்பும் சேவித்து போக வேண்டும்
வையும் போது இல்லை சொல்லி தலையை ஆட்ட கூட முடியாதே
சிஷிப்பது நன்மைக்காக
அகப்படுத்து நலிய அது நிற்கும் எங்கும் பரவி -திரு அபிஷேகம்
இவர்கள் ஒரு பிரதேசத்தில் தான்
அது நிற்கும் படி
புகரை உடைத்தான ரத்னம் தேஜஸ் போலே
சுடர் ஜோதி மணி நிறமாய்
கண்ட இடம் எங்கும் பரந்து மூ வுலகும் விரிகின்ற
ஒருமை பட்டது என்னுடிய ஹிருதயம்
தொப்பாரம் -கருட வாகனம் சாத்தி
கொண்டை
பாண்டியன் கொண்டை தொப்பாரம்போலே
சௌரி கொண்டை
சிகத்தாடை
கிரீடம் –
மகுடம்-
சூடாவதம்சம் –
பாரளந்த பேரரசே விசும்பரசே எம்மை நீத்த வஞ்சித்த ஓரரசே
அங்கே விலை செய்து கொடுத்தது என்னை
நசை யற அமையும்
பெற்று வளர்த்து போக
கைப் பிடித்தவன் கையிலே காட்டிக் கொடுத்து கடக்க கடவ தாய்
அற்று தீர்ந்தவள்
பிராப்த யவனையை மீட்க முடியாதே

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: