திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -7-7-9-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

கொள்கின்ற கோள்இரு ளைச்சுகிர்ந்
திட்ட கொழுஞ்சுருளின்
உள்கொண்ட நீலநன் னூல்தழை
கொல்?அன்று மாயன்குழல்
விள்கின்ற பூந்தண் துழாய்விரை
நாறவந்து என்னுயிரைக்
கள்கின்ற வாறுஅறி யீர் அன்னை
மீர்!கழ றாநிற்றிரே.

பொ – ரை : உலகத்தை எல்லாம் கொள்ளக்கூடியதான வலிய இருளை எஃகிய செறிந்த இருளின் உள்ளே கொள்ளப்பட்ட நீல நிறத்தையுடைத்தான அழகிய நூலின் திரளோ? அன்று; மாயனுடைய திருக்குழல், மலர்கின்ற பூக்களையுடைய குளிர்ந்த திருத்துழாயினது வாசனையானது பரவும்படி என் உயிரைக் கொள்கின்றவாற்றை அறியீர்கோள்; தாய்மார்களே! இடித்துக் கூறுகின்றீர்கோள்.

வி – கு : ‘அன்னைமீர்! மாயன் குழல், உள் கொண்ட நீல நன்னூல் தழைகொல்? அன்று; மாயன் குழல் என் உயிரைக் கள்கின்றவாறு அறியீர்; கழறாநிற்றீர்.’ என்க.

ஈடு : ஒன்பதாம் பாட்டு. 1‘இச்சமயத்துக்கு அன்றோ நமக்குப் பூவும் புழுகும் இட்டுச் சிரஸாவஹித்துக்கொடு போந்தது?’ என்று ‘திருக்குழற்கற்றையில் அழகு வந்து நலியாநின்றது’ என்கிறாள்.

கொள்கின்ற கோள் இருளைச் சுகிர்ந்திட்ட கொழுஞ்சுருளின் உள் கொண்ட நீல நன்னூல் தழைகொல் – 2திருக்குழலின் அழகுக்கு ஓர் உவமானம் சொல்லப்புக்கு, அழகுக்கு அதுதான் நேர்கொடு நேர் உபமானமாகப் போராமையாலே அதனைக் கிடந்து சிக்ஷிக்கிறது. ‘பிரளயகாலத்தில் பகல் இரவு என்னும் வேறுபாடு அற எங்கும் ஒக்கத் தானேயாம்படி பரந்து நின்றுள்ள, கோட்பாட்டையுடைய இருள்’ என்னுதல். ‘கோள்’ என்று மிடுக்காய், ‘மிடுக்கையுடைய இருள்’ என்னுதல். அந்த இருட்டினைச் சுகிருவது -எஃகுவது: இப்படி எஃகி அதிலே கொழுவிதான அமிசத்தைத் திரட்டுவது, அது தன்னிலும் உண்டான புற இதழைக் கழிக்க, அகவாயில் வயிரமாய் நீலமான நிறத்தையுடையத்தாய் நன்றாய் இருந்துள்ள நூல் திரளோ? அன்று மாயன் குழல் – 3இவள் நெஞ்சிலே அழகிதாக மயிர்பட்டது.காணும். 1இத்தனை அடைமொழி கொடுத்துக் கூறினால் ஆயிற்று உபமானமாகப் போராது என்னலாவது. பின்னையும், ஆச்சரியத்தையுடையனான அவனுடைய திருக்குழல் என்னுமித்தனை. இத்தனை 2இடு சிவப்பானது அவனுடைய இயல்பிலே அமைந்ததான திருக்குழலுக்கு ஒப்பாகுமோ?

விள்கின்ற பூந்தண்துழாய் விரை நாற வந்து-அலராநிற்பதாய் அழகியதாய்க் குளிர்ந்திருந்துள்ள திருத்துழாயில் பரிமளமானது 3முகத்திலே அலை எறியவாயிற்று வந்து தோற்றுகிறது. 4திருக்குழலில் அழகுக்குத் திருத்துழாயில் பரிமளமானது தூசி ஏறி நடக்க ஆயிற்று வந்து பாதகம் ஆகிறது. என் உயிரைக்  கள்கின்றவாறு அறியீர் – 5நீங்கள் எல்லாரும் சுகமே இருக்கச்செய்தே, என் ஒருத்தியுடைய ஆத்துமாவை வந்து களவு காண்கிற பிரகாரத்தை அறிகின்றலீர்கோள். கள்கின்ற – களவு காண்கின்ற. 6‘களவு காண்கையாவது என்?’ என்னில், இத்தலையில் இசைவு இன்றிக்கே இருக்கக் கைக்கொள்ளுதல். 7‘அவன் அன்றோ களவு காண்கிறான்?’

பண்டேஉன் தொண்டாம் பழவுயிரை என்னதென்று
கொண்டேனைக் கள்வன்என்று கூறாதே-மண்டலத்தோர்
புள்வாய் பிளந்த புயலே! உனைக்‘கச்சிக்
கள்வா!’ என்று ஓதுவதுஎன் கண்டு?’-
என்பது, நூற்றெட்டுத் திருப்பதியந்தாதி.

இத்தலை அத்தலையானபடி. 2சம்பந்தம் இல்லாதவன் அபகரித்தால் அதனைப் போக்கலாம்; சம்பந்தமுள்ளவன் அபகரித்தால் பரிகாரம் இல்லை அன்றோ? 3

‘த்வம்மே ஹம்மே குதஸ்தத் ததபிகுத:
இதம் வேத மூல ப்ரமாணாத்
ஏதச்சாநாதி ஹித்தாத் அநுபவவிபவாத்
ஸோபி ஸாக்ரோஸ ஏவ
க்வாக்ரோஸ: கஸ்ய கீதாதிஷூ மமவிதித:
கோத்ர ஸாக்ஷீ ஸூதீ: ஸ்யாத்
ஹந்த த்வத் பக்ஷபாதீ ஸஇதி
ந்ருகலஹே ம்ருக்ய மத்யஸ்த் த்வத்வம்’-என்று பட்டர் அருளிச்செய்த சுலோகம் அநுசந்தேயம்.

இது கைப்பட்டவாறே ஒரு பிரமாணம் கொடு நின்று வழக்குப் பேசத் தொடங்கும் அன்றோ அவன்? அன்னைமீர் கழறாநிற்றிரே – நீங்கள் வருந்தி இக்களவுக்கு நானும் 4பெருநிலை நின்று கூட்டுப் பட்டேனாகப் பொடியாநின்றீர்கோள். 5இந்த உருவு வெளிப்பாட்டைத் தடை செய்தலும் வேண்டாவோ? ஒரு நியமித்தல் நியமிக்கப்படுதல் என்னும் தன்மையேயோ வேண்டுவது பொடி கைக்கு? கழறல் – நோவச்சொல்லுதல்.

திருக் குழலின் அழகை வர்ணிக்கிறார்

லாவண்யம் அனுபவித்து கொண்டு வர –
நாயகி பாவ திருவாய்மொழி
திருக்கண்கள் தொடக்கமாக -ஏழையும் சொல்லி ஏட்டில் மொத்தமாக நலிவதை சொல்லி
திருக் குழல் கற்றை அழகால் நலிவதை தெரிவிக்கிறார்
பூவும் புளுகும் இட்டு இவ்வஸ்தைக்கு தான் –
ஆழ்வாரை படுத்த -இப்படி சிரசா வஹித்து போந்து –
அன்னைமீர் –
கழறு கிறீர் வைகிறீர்கள்
கருப்புக்கு துருஷ்டாந்தம்
கொள்கின்ற கோள் இருள் கால ராத்திரி பிரளயம் -பஞ்சாக கொண்டு –
சுகிர்ந்திட்ட -உள் கொண்ட -நீல நன் நூல் -வெளி பக்கம் நீக்கி –
குலலா இதுவா சம்சயம் -அன்று மாயன் குழல்
ஒளி ஒவ்வாது சுட்டு உரைத்த நன் பொன் -உன் திரு மேனி ஒளி ஒவ்வாது ஒன்றே சொல்லலாம் –
உபமானம் நேர் கொடு நேர் சொல்லப் போகாமல் அத்தை சிஷிக்கிறது இத்தால் –
திரு வாசிரியம் செக்கர் மா -மலைக்கு விசெஷணம் மரகத குன்றம் -போலே
திவா ராத்திரி விபாகம் அற எல்லாம் தானாக உள்ள பிரளயத்தில் உள்ள இருள்
வியாபித்து இருக்கும் கோள் இருள்
கோட்பாட்டை மிடுக்கை உடைய இருள்
அதை சுகிர்வது –கொள்விதான அம்சத்தை திரட்டி
அது தன்னில்லும் புற இதழை கழித்து –
நீளமான நன்றான நூல் திரளோ
இவள் நெஞ்சிலே அழகிதாக மயிர் பட்டது காணும்
உபமானம் ஆகாது சொல்ல இப்படி சிருஷ்டி

அன்று மாயன் குழல்
பின்னையும் ஆச்சர்யபூதன் உடைய குழல் -என்றே சொல்லலாம் –
இடு சிகப்பு -make up -ஒப்பனை – இல்லாததை இருப்பது போலே காட்டுவது –
செம்பஞ்சி குழம்பு எடுத்து இடு சிகப்பு நலுங்கு இடுவது போலே –
அலரா நிற்கும் அழகியதாய் -குளிர்ந்து
பரிமளம் திரு துழாய் யுத்தம் -தூசி ஏறி -பாதகம்
கள்கின்ற -களவு காண்கின்ற
பிரகாரம் ஆறு –
இத்தலையில் இசைவு இன்றிக்கே இருக்க கை கொள்ளுகை களவு
இத்ததலை அததலையானதே
பிராப்தம் உள்ளவன் திருட -பரிகாரம் இல்லையே -கைக் கொண்டவாறே
வழக்கு பேசுவான் த்வம் மே அஹம் மே –
குதஸ்தது-இதம் வேதம் மூலம் பிரமாணாத்-
அனுபவ யோக்யதை உண்டே எனக்கு இது தான் வழக்கு
ஆஷேபித்து வந்தேன்
கீதையில்
சாஷி ஞானிகள்
பஷபாதிகள் என்போம்
சபதம் செய்து காட்டுவான் -ஈர வஸ்த்ரதுடன்
அன்னைமீர் –
களவுக்கு -நான் உடந்தை என்று நினைந்து வைகிறீர்கள்
உரு வெளிப்பாட்டை பரிகரிக்க வேண்டாவோ
நியந்திர நியாம்யை பாவம் வேண்டுவதோ வையா
தாயார் என்றால் வையதான் வேண்டுமோ
இதே கார்யம் –
அபிபவிது வார்த்தை அடக்கி வார்த்தை சொல்வது கழறுதல்

 

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: