திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -7-7-8-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

   கோளிழைத் தாமரையும் கொடியும்
பவளமும் வில்லும்
கோளிழைத் தண்முத்த மும்தளி
ரும்குளிர் வான்பிறையும்
கோளிழை யாவுடைய கொழுஞ்சோதி
வட்டங்கொல்? கண்ணன்
கோளிழை வாண்முக மாய்க்கொடி
யேன்உயிர் கொள்கின்றதே.

பொ – ரை : தன் ஒளியையே தனக்கு ஆபரணமாகவுடைய தாமரையும் கொடியும் பவளமும் வில்லும் தன் ஒளியையே தனக்கு ஆபரணமாகவுடைய குளிரந்த முத்தமும் தளிரும் குளிர்ந்த பெரிய எட்டாம் பிறையுமாகிய இவற்றையெல்லாம் தன்னகத்தேயுடைய, கொள்ளப்பட்ட ஆபரணத்தையுடைய சோதி மண்டலமோ? கண்ணபிரானுடைய, தன்னழகே தனக்கு ஆபரணமாய் ஒளியையுடைத்தான முகமாய்க்கொண்டு கொடியேனுடைய உயிரைக் கொள்ளை கொள்ளுகின்றது.

வி – கு : ‘கண்ணன் கோள் இழை வாள்முகம், தாமரையும் கொடியும் பவளமும் வில்லும் தண்முத்தமும் தளிரும் பிறையும் ஆகிய இவற்றைத் தன்னகத்தேயுடைய கொழுஞ்சோதி வட்டங்கொல்? அத்தகைய சோதி வட்டமானது, வாண்முகமாய்க் கொடியேன் உயிர் கொள்கின்றது?’ என்று சொற்களைக் கொணர்ந்து கூட்டி முடித்து கொள்க.

ஈடு : எட்டாம் பாட்டு. 1‘தலையான பேரை நெற்றிக்கையிலே விட்டுக் காட்டிக்கொடுக்க ஒண்ணாது’ என்று, மேலே நலிந்தவை எல்லாம் சேர ஒருமுகமாய் வந்து நலிகிறபடி சொல்லுகிறது. அங்கும் இங்கும் சிதறிக் கிடந்த படையைப் பகைவர்கள் வந்து முடுகினவாறே ஒன்றாகத் திரட்டி ஒரு காலே தள்ளுவாரைப் போலே, தனித்தனியே நலிந்த அழகுகள் எல்லாம் திரள வந்து நலிகிறபடியைச் சொல்லுகிறாள்.

கோள் இழைத் தாமரையும்-சாதி ஒன்றாய் இருக்கச்செய்தேயும், ‘பொற்கால் தாமரை, நூற்கால் தாமரை’ என்பனவாகத் தாமரையில் சில பேதங்கள் உள அன்றோ? அதில் நூற்கால் தாமரை என்னுதல்;

அன்றிக்கே, ‘கொள்கையிலே துணிந்திருக்கிற தாமரை’ என்னுதல்; அன்றிக்கே, ‘தன்னழகே தனக்கு ஆபரணமாகவுடைய தாமரை என்னுதல்; அன்றிக்கே, ‘ஒளியே ஆபரணமான தாமரை’ என்னுதல். திருக்கண்ணும்-திருக்கண்களும், கொடியும் -திருமூக்கும். பவளமும்-திரு அதரமும், வில்லும் – திருப்புருவமும். கோள் இழைத் தண்முத்தமும்-தன் ஒளியே ஆபரணமாகவுடைய குளிர்ந்த பற்களின் நிரையும். அன்றிக்கே, ‘இழையிலே கோப்புண்ட முத்துப்போலே இருக்கிற குளிர்ந்த பற்கள்’ என்னுதல், ‘தளிரும் – திருக்காதும். குளிர் வான் பிறையும்-திருநெற்றியும். 1‘ஆக, நேத்திரமானவரும் ‘மூக்கு வலியோம்’ என்றவரும், வாய்சொல்லிப் போனவரும், ‘கீழ் மேல் ஆயிற்றோ’ என்று வளைத்துக்கொடுபோனவரும், வாய்க்கரையிலே இருந்தவரும். தாம் செவிப்பட்டவாறே போனவரும், ‘இவற்றுக்கு நெற்றி நாம்’ என்று போனவரும் எல்லாம் ஒருமுகமாய்த் திரண்டு வந்து’ என்றபடி.

கோள் இழையாவுடைய கொழுஞ்சோதி வட்டம்கொல்-கொள்ளப்ட்ட ஆபரணத்தையுடைத்தான ஜோதி மண்டலமோ உருவகம் இருக்கிறபடி? அன்றிக்கே, ‘தன்னழகே தனக்கு ஆபரணமாய் இருக்கது ஒரு ஜோதி மண்டலமோ?’ என்னுதல். கண்ண் கோள் இழை வாண்முகமாய்-கண்ணனுடைய, தன்னழகே தனக்கு ஆபரணமாய் ஒளியையுடைத்தான முகம் என்று ஒரு வியாஜத்தை இட்டு. கொடியேன் உயிர் கொள்கின்றதே-வாழுங்காலத்தில் கெடும்படியான பாவத்தைச் செய்த என்னுடைய உயிரைக் கொள்கின்றது, கோள் இழையாவுடைய கொழுஞ்சோதி வட்டங்கொல்? ‘உயிர் பெறுங்காலத்திலே உயிர் இழக்கும்படியான பாபத்தைச் செய்தேன்’ என்பாள், ‘கொடியேன்’ என்கிறாள்.

கீழ் சொன்னவை எல்லாம் ஒரு முகமாய் வந்து நலிய
தலையான பேரை நெற்றியில் காட்டி கொள்ள கூடாதே
சிதறிக் கிடைந்த படையை ஒன்றாக திரட்டி நலிய
திரள வந்து நலிகிற படியை சொல்லுகிறார் இதில் –
தாமரை -கண்
கொடி மூக்கும்
பவளம் -அதரம்
வில்லும் -புருவம்
முத்தமும் -முறுவல்
தளிரும் -காதுகள்
வான் பிறை -அஷ்டமி சந்தரன் நெற்றி
ஏழையும் தொகுத்து கொடி சோதி வட்டம்
வான் முகமாய் இருந்து உயிர் கொள்கின்றதே
குழல் அடுத்து–
நால் கால் தாமரை -போர் கால் தாமரை-நூற் கால் தாமரை
நூல் கால் தண்டு
கோள் இலை தாமரை
கொள்கையிலே துணிந்த தாமரை
கொடியும் பவளமும் வில்லும்
கோள் இலை தண் முத்தமும் –
தளிரும்
நெற்றியும் நேத்ர பூதர் ஆனவரும்
ஒரு முகமாய்
ஓன்று சேர்ந்து
ஜோதிர் மண்டலம் கொழும் சோதி வட்டம்
அழகே தனது ஆபரணம்
பார்த்தால் பிராணன் வரணும் அனுபவிக்க வேண்டுமே
உயிர் இழக்கும் பாபம் பண்ணினேன்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: