திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -7-7-7-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

காண்மின்கள் அன்னையார் காள்!என்று
காட்டும் வகை அறியேன்!
நாண்மன்னு வெண்திங்கள் கொல்,நயந்
தார்கட்கு நச்சிலைகொல்
சேண்மன்னு நால்தடந் தோள்பெரு
மான்தன் திருநுதலே?
கோண்மன்னி ஆவி அடும்கொடி
யேன்உயிர் கோளிழைத்தே.

    பொ-ரை : ‘தாய்மார்களே! பாருங்கோள் என்று காட்டுகின்ற தன்மையை அறியேன்; நீட்சி பொருந்திய வலிய நான்கு திருத்தோள்களையுடைய கண்ணபிரானது அழகிய நெற்றியானது, எட்டாம் நாள் பிறைதானோ? அன்றி, விரும்பினவர்கட்கு நஞ்சு வடிவாக இருப்பது ஒரு இலைதானோ? அறியேன்; கொடியேனாகிய என்னுடைய உயிரைக் கொள்ளுவதற்கு நினைத்து வலியோடு என் உயிரை வருத்துகின்றது,’ என்கிறாள்.

வி-கு : நாள் மன்னு வெண்திங்கள் – எட்டாம்பிறை. நச்சு – பெயர்ச்சொல்; விஷம். ‘கொடியேன் உயிர் கோள் இழைத்துக் கோள் மன்னி ஆவி அடும்,’ என்க. கோள் – வலிமையும், கொள்ளதலும்.

  ஈடு : ஏழாம்பாட்டு. 1‘இவை அவள் முன்னே நிற்க வல்லனவோ? இவற்றுக்கெல்லாம் தாம் நெற்றிக்கை அன்றோ?’ என்று திருநுதலில் அழகு வந்து நலிகிறபடியை அருளிச்செய்கிறார்.

அன்னையர்காள்! ‘காண்மின்கள்’ என்று காட்டும் வகை அறியேன் – 2‘இது நலியாநின்றது என்று சொல்லாநின்றாய்; எங்களுக்கு இது தெரிகிறது இல்லை; எங்களுக்கும் தெரியும்படி சொல்லிக்காணாய்’ என்ன, ‘நீங்களும் இதனைக் காணுங்கோள்’ என்று, உங்களுக்குக் காட்டும் பிரகாரம் அறிகின்றிலேன். 3என் கைக்குப் பிடி தருதல், உங்களுக்கு உருவு வெளிப்பாடு உண்டாதல் செய்யில் அன்றோ என்றார் காட்டலாவது? 4ஆண்களுக்குக் காட்டில் அன்றோ பருவம் நிரம்பின உங்களுக்குக் காட்டலாவது?’ என்பாள், ‘அன்னையர்காள்’ என்கிறாள். நாள் மன்னு வெண்திங்கள் கொல்-சுக்கிலபக்கத்து எட்டாம் நாள் சந்திரனோ? 5இளகிப் பதித்திருக்கைக்கும், ‘காட்டு, காட்டு’ என்று வளருகைக்கும், காட்சிக்கு இனியதாய் இருக்கைக்கும். நயந்தார்கட்கு 6நச்சு இலை கொல்-ஆசைப்பட்டார்க்கு நச்சுப்பூண்டோ?’ என்னுதல்; அன்றிக்கே, ‘தன்னை ஆசைப்பட்டார்க்கு ஆசைப்பட வேண்டாதிருக்கிறதோ?’என்னுதல். 1‘நச்சு மா மருந்தம்’ திருவாய். 3. 4. : 5. -என்னுமவர் அன்றோ இப்போது கண்ணாஞ்சுழலை இட்டு இவ்வார்த்தை சொல்லுகிறார்? ‘இன்ன மலையிலே உண்டு’ என்று அங்கே சென்று தேடி வருந்தவேண்டாமல், ஆசைப்படுவதுமாய் மேல் காற்றிலே காட்டப் பரிகாரமுமாம் மருந்தாயிற்று இது. அபத்தியத்தையும் பொறுத்துக்கொள்ளும் மருந்தாதலின். ‘மாமருந்தம்’என்கிறது. இவன் தலையிலே பழி இட்டுக் கைவிடும் மருந்து அன்று; 2வானமாமலையில் தலையான மருந்து அன்றோ. இப்போது இவளுக்கு நச்சுப் பூண்டு ஆகிறது?

சேண் மன்னும் நால் தடம் தோள் பெருமான்தன் திருநுதலே-ஒக்கத்தையுடைத்தாய், கற்பகத்தரு பணைத்தாற்போலேயாய்ச் சுற்றுடைத்தாய் இருக்கிற திருத்தோள்களில் அழகாலே என்னைத் தனக்கே உரியவளாகும்படி ஆக்கினவனுடைய

  ‘ஆயதாஸ்ச ஸூவ்ருத்தாஸ்ச பாஹவ: பரிகோபமா:
ஸர்வபூஷண பூஷார்ஹா, கிமர்த்தம் ந விபூஷிதா:’-என்பது, ஸ்ரீராமா. கிஷ். 3 : 14.

திருநெற்றியே. ‘நீண்டு உருண்டு கணையங்கள் போன்ற அழகிய திருத்தோள்கள் அணிகளால் ஏன் மறைக்கப்படாமல் இருக்கின்றன? என்னும்படியே திருவடி அகப்பட்ட துறையிலேகாணும் இவளும் அகப்பட்டது. 3கொடியேன் உயிர் கோள் இழைத்துக் கோள் மன்னி ஆவி அடும்-என் உயிரினுடைய அழகை அழித்துக்கொள்கையிலே விருப்பத்தைச்செய்து முடியாநின்றது. அன்றிக்கே, ‘அழகு பாதகமாம்படி பாவத்தைச் செய்த என்னுடைய உயிரை முடிக்கையிலே துணிந்து, அதிலே விருப்பத்தை வைத்து, உயிரை முடியாநின்றது,’ என்றுமாம்.

நெற்றிக்கை பிரதானம்
திரு நுதல் அனுபவம்
காட்டும் வகை அறியேன்
நாள் மன்னு வெண் திங்கள் போலே
கிருஷ்ண பஷமி அஷ்டமி வளர் பிறை
அஷ்டமி சந்தரன் அமிர்த பிரவாகங்கள் போலே திரு நுதல்
நயந்தார்க்கு நச்சு இலை போலே
விஷம் தடவின இலை போலே
என் கைக்கு -உரு வெளிப்பாடு
யவன பருவம் உள்ளாருக்கு தான் தெரியம்
பூர்வ அஷ்டமி சந்தரன் போலே
இளகிப் பதித்து இருக்கும்
காட்டு காட்டு வளர்கைக்கும்
தர்சநீயமாய் இருக்கைக்கும்
ஆசை உடையாருக்கு நச்சு பூண்டு
நச்சு மா மருந்தம் -அபத்திய சகமான மருந்தகம் இவன்
கண்ணான் சுழலை இட்டு வார்த்தை சொல்கிறார்
ஆசைப் படுவதுமாய் –மேல் காற்றிலே காட்ட பரிகாரமாய் -எம்பெருமான்
பர்வதம் சஞ்சீவி சந்தான கரணி விசல்யா கரணி மூலிகை
இல்லாததும் வரும்
சம்சார வியாதிக்கு மருந்து
நச்சுக்கு மா மருந்து
பழி இட்டு கை விட வேண்டாம்
வான மா மலையில் தலையான ஔஷதம்
பரம பதம் அர்த்தம் அரும் பொருள் காட்டி
கைக்கு எட்டிய மா மருந்து அர்ச்சாவதாரம்
அனுபவம் கிடைக்காமல் பாதகம்
ஒக்கம்
கல்ப தரு
சுற்று உடுத்தாய்
நான்கு தோள்கள்
திருவடி அகப்பட்ட துறை
சதுர்புஜ தர்சம் -கண்டான் திருவடி சக்கரவர்த்தி திருமகனைக் கண்டதும்
காட்டவே கண்டதால் –
பகு வசனம் சொல்லி –
கொடியேன் உயிர் அழகை அழித்து முடிக்கும்
அழகு உத்தேச்யம் அபைவருக்கும் -எனக்கு பாதகம் -அதனால் கொடியேன் –

 

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: