திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -7-7-6-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

உய்விடம் ஏழையர்க் கும்அசு ரர்க்கும் அரக்கர்கட்கும்
எவ்விடம்? என்றிலங் கிமக ரம்தழைக் கும்தளிர்கொல்?
பைவிடப் பாம்பணை யான்திருக் குண்டலக் காதுகளே
கைவிடல் ஒன்றும்இன் றிஅடு கின்றன காண்மின்களே.

பொ – ரை : ‘பெண்களுக்கும் அசுரர்களுக்கும் அரக்கர்கட்கும் உய்விடம் எங்கே?’ என்றுகொண்டு விளங்கி மகரத்தின் வடிவாகத் தழைக்கின்ற தளிர்கள்தாமோ படத்தையுடைய விஷம் பொருந்திய பாம்பைப் படுக்கையாகவுடைய எம்பெருமானது குண்டலங்கள் தரித்த காதுகள்? சிறிதும் விட்டு நீங்குதல் இன்றி என்னை வருத்துகின்றன காண்மின்கள்,’ என்கிறாள்.

வி – கு : ‘குண்டலக் காதுகள், மகரம் தழைக்கும் தளிர்கொல்? ஒன்றும் கைவிடல் இன்றி அடுகின்றன காண்மின்கள்,’ என்க. மகரம்-மகரகுண்டலங்கள்.

ஈடு : ஆறாம்பாட்டு. 3‘நாம் செவிப்பட்டிருக்க இவற்றை முன்னே போகவிட்டிருந்தோம்’ என்று திருக்காதில் அழகுவந்து நலிகிறபடியைச் சொல்லுகிறது. 1காதாட்டிக்கொண்டு சொல்லுவரே.

வேறும் ஒரு வகையாக ரசோக்தியாக அவதாரிகை அருளிச்செய்கிறார்,
‘காதாட்டிக்கொண்டு சொல்லுவரே’ என்று. ‘அவனுடைய திருமகர
குண்டலங்களும் திருக்காதுகளும் நலிகிறபடி சொல்லுகிறாள்’ என்பது,
இருபத்து நாலாயிரப்படி.

ஏழையர்க்கும் அசுரர்க்கும் அரக்கர்கட்கும் உய்விடம் எவ்விடம் என்று இலங்கி மகரம் தழைக்கும் தளிர்கொல் – ‘அசுரர்கட்கும் அரக்கர்கட்கும் பெண்களுக்கும் தப்பிப்போய்ப் பிழைக்கும் இடம் எவ்விடம்?’ என்று விளங்குகின்றனவாய்க் கொண்டு மகரம் தழைக்கின்ற தளிரே? 2அசுரரும் அரக்கரும் அழகு கண்டால் பொறுக்கமாட்டாமல் முடிவர்கள்; பெண்கள் அடையப் பெறாமல் முடிவர்கள். ‘பெண்களை நலியுமாறு போலே அசுரர்கட்கும் அரக்கர்கட்கும் சினேகத்தை விளைத்துப் பாதகம் ஆகாநின்றன’ என்று ஒரு தமிழன் கூறிவைத்தான் என்று கூறியதனைச் சீயர் கேட்டருளி, 3‘இப்பொருள் அழகிது: ஆனாலும். அபக்ஷதர்மம்; அசுரர்களுக்கும் அரக்கர்களுக்கும் பாதகம் ஆகாநின்றது என்று இப்போது இது சொல்லுகை, தேட்டம் அன்றே? ஆன பின்பு அது வேண்டா,’ என்று அருளிச்செய்தாராம். பை விடம் பாம்பு அணையான் திருக்குண்டலம் காதுகள்-தன்னுடைய ஸ்பரிசத்தாலே விரிந்திருக்கிற படங்களையும், உகவாதார் முடியும்படியான விஷத்தையுமுடையனான திருவனந்தாழ்வானைப் படுக்கையாகவுடையவனுடைய திருக்குண்டலக் காதுகளே. 4‘திருக்காதுகளில் அழகு பாதகம் ஆமாறுபோலே ஆயிற்று, திருவனந்தாழ்வானுடைய சேர்த்தியும்பாதகம் ஆகிறபடி. அன்றிக்கே, 1‘பெறுகைக்கு அநந்த புருஷகாரமுண்டாய் இருக்கக்கண்டீர், நான் நோவுபடுகிறது!’ என்னுதல். 2மேலே பாதகமாகக் கூறுப்பட்டவையும் ‘நன்று’ என்னலாம்படி இவை நலிகின்றனவாதலின், ‘காதுகளே’என்கிறாள். என்றது, ‘அவை, தண்ணீர்ப்பந்தல் வைத்தது என்னும்படியாக ஆயின,’ என்றபடி, ‘மாலை. . . . . . . நல்கிற்றை எல்லாம்’திருவிருத்தம், 35.
-என்னுமாறுபோலே. கைவிடல் ஒன்றும் இன்றி – ஒருகாலும் கைவிடாதே; என்றது, ‘ஒருகால் விட்டுப் பற்றுமது அன்றிக்கே’ என்றபடி. அடுகின்றன-முடியாநின்றன. காண்மின்களே – அவர்களுக்கும் எல்லாம் உருவு வெளிப்பாடாய்த் தோற்றும் என்றிருக்கிறாள்; 3‘வாயுந் திரையுகளில்’ ஆழ்வார் அன்றோ?

நாம் செவிப்பட்டு இருக்க
காதாட்டிக் கொண்டு சொல்ல –
திருக் குண்டல காதுகள் –
கைவிடாமல் அடுகின்றன
உய்விடம் எவ்விடம்
அசுரர் அரக்கர் ஏழையர் மூவருக்கும்
தப்பி போய் பிழைக்கும் இடம் இல்லையே
அழகு கண்டால் பொறுக்க மாட்டாமல் அவர் முடிய
அபலைகள் கிடைக்க மாட்டாமையால் முடிய –
ஐதிகம்
சிநேகத்தை விளைவித்து அசுரர் அரக்கர் -வசப்படுத்தி -பின்பு பாதகம்
தமிழர் அர்த்தம் சொல்ல –
நஞ்சீயர் -இந்த பஷம் சேராது
பிரகரணம் இல்லை வேண்டா என்று அருளிச் செய்தாராம் –
9000 படியில் -ஒக்க ச்நேகத்தைவிளைத்து அழிக்கவுமாம்
நஞ்சீயர் 100 தடவை
முதலில் சொல்லி அப்புறம் தள்ளி இருக்கலாம் –
விசாரம் செய்து தள்ளி இருக்கலாமே
ஒத்து கொள்வதில் லஜ்ஜை வேண்டாமே

24000 படியிலும் இந்த அர்த்தம் காட்டி –
பை விடம் விகசிதமான
உவதார் முடியும்படி விடம்
திருக் காது அழகு பாதகம் போலே
திரு அநந்த ஆழ்வான் சேர்த்தியும் பாதகம்
அனந்தன் புருஷகாரம் இருக்க செய்தேயும் நோவு பட
காதுகளே -ஏவகாரம் -இன்னும் அதிகம் பாதகம் இவை
கீழ் சொன்னவை தண்ணீர் பந்தல் போலே
பனிவாடை -கங்குல் திரு விருத்தம் பாசுரம்
சாயம் காலம் பாதகம்
வாடை காற்று வேற சேர்ந்து நலிய –
பால்வாய் -பிறை பிள்ளை ஒக்கலைக் கொண்டு பகல் இழந்த
மேல் பால் திசை பெண் -புலம்புறும் மாலை
உலகு அளந்த மால் பால் -சோர்வான் புகுந்து பனிவாடை புகா நின்றதே
அஸ்தமித்த பொழுது பிறை சந்தரன் மட்டும் தெரிய
கணவன் இளந்த பெண் கையில் குழைந்தை போலே துக்கம்
மாலை நல்கிற்றது எல்லாம் வாடை கொண்டு போனது போலே
கை விட்டு போகாமல் அடுகின்றன
காண்மின்களே
அவர்களுக்கும் உரு வெளிப்பாடு என்று நினைத்து இருக்கிறார்
வாயும் திரை உகளும் உலகோர் எல்லாம் தம்மை போலே

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: