திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -7-7-5-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

என்றுநின் றேதிக ழும்செய்ய
ஈன்சுடர் வெண்மின்னுக்கொல்?
அன்றிஎன் ஆவி அடும்அணி
முத்தங்கொ லோ? அறியேன்
குன்றம் எடுத்த பிரான்முறு
வல்எனது ஆவிஅடும்
ஒன்றும் அறிகின்றி லேன்அன்னை
மீர்!எனக்கு உய்விடமே.

பொ – ரை : ‘கோவர்த்தன மலையைத் தூக்கிக் குடையாகப் பிடித்த உபகாரகனான ஸ்ரீகிருஷ்ணனுடைய முறுவலானது, என்றும் நிலைபெற்று விளங்குகின்ற செம்மையை வீசுகின்ற சுடரையுடைய வெண்மையான மின்னல்தானோ? அன்றி, என் உயிரை வருத்துகின்ற அழகிய முத்துகள்தாமோ? அறியேன் எனது ஆவியை வருத்துகின்றது, அன்னைமீர்! நான் பிழைக்கும் இடத்தை ஒரு சிறிதும் அறிகின்றிலேன்,’ என்றபடி.

வி – கு :
 ‘முறுவல், மின்னுக்கொல்’ முத்தங்கொல்’ அறியேன்; உய்விடம் ஒன்றும் அறிகின்றிலேன்,’ என்க.

என்றும் நின்றே திகழும் செய்ய ஈன் சுடர் வெண் மின்னுக்கொல்-என்றும் ஒக்க மாறாதே விளங்காநிற்பதாய், செய்ய சுடரை ஈனாநின்றுள்ள வெண்மின்னோ? 1திருப்பவளத்திற் சிவப்பும் திருமுத்து நிரையில் வெளுப்புமாய்க் கலந்து தோற்றுகிற போது, திருப்பவளத்தின் சிவப்பை அது ஈன்றாற்போலே ஆயிற்று இருக்கிறது. 2இதனை ‘அசிராம்ஸூ;’ என்பர்களே. பிறரை நலிய என்றவாறே பல் இறுகிக்கொண்டு வருகிறதுகாணும். அன்றி என் ஆவி அடும் அணி முத்தங்கொலோ-அன்றிக்கே, என் உயிரை முடிக்கிற திருமுத்து நிரைதானேயோ? 3யானை அணி செய்து வந்து தோன்றினாற்போலே இருத்தலின், ‘அணிமுத்தம்’ என்கிற்று. அன்றிக்கே, ‘அழகிய முத்தம்’ என்னுதல் – 4மேலே ‘வெண்மின்னுக்கொல்’ என்ற இடத்தே திரு அதரத்தோடே கூடின சேர்க்கையாலே நலிந்தபடி சொல்லிற்று; இங்குத் தனியே நலிகிறபடி சொல்லுகிறது.

குன்றம் எடுத்த பிரான் முறுவல் எனது ஆவி அடும்-மலையை எடுத்து மழையிலே நோவுபடாதபடி பெண்களை நோக்கின உபகாரகனுடைய முறுவலானது, என் ஒருத்திக்கும் பாதகமாகாநின்றது. 5‘பசுக்களை அன்றோ தான் நோக்கிற்று?’ என்னில், 6‘கோ கோபீஜந ஸங்குலம், அதீவார்த்தம்’-என்பது, ஸ்ரீவிஷ்ணு. புரா. 5. 11. 13.

மிக்க வருத்தம் அடைந்த பசுக்களின் கோபிமார்களின் கூட்டத்தைப்பார்த்து’ என்னக்கடவது அன்றோ? 1மழையால் வந்த நலிவை மலையை எடுத்து நீக்கி, அவர்கள் துன்பம் எல்லாம் போம்படி புன்முறுவல் செய்துகொண்டாயிற்று நின்றது. ‘ஆனால், இது வாராதபடி இடம் தேடி உஜ்ஜீவிக்கப் பார்த்தலோ?’ என்ன, 2ஒன்றும் அறிகின்றிலேன் அன்னைமீர் எனக்கு உய்விடமே – ‘எனக்குச் சென்று உஜ்ஜீவிக்கலாவது ஓரிடம் உண்டோ?’ என்று நானும் தேடாநின்றேன்; ‘இங்கு ஒதுங்குவதற்கு ஓரிடம் காண்கின்றிலேன். அன்றிக்கே, மேலே சொன்ன அழகுகள் பாதகமாகிற இத்தனை அல்லது. ஒதுங்க நிழலாய் இருப்பது ஓரிடம் காண்கின்றிலேன்,’ என்னுதல்.

திரு முறுவல் எனது ஆவி அடும்
முகத்துக்கு வாய்க்கரையில் நாம் இருக்க
முன்னால் –
உய்விடம் அறிகின்றிலேன்
என்றும் நின்றே திகழும்
மறையாத மின்னல் ஸ்திரமான
செய்ய சுடர் ஈனா நின்றுள்ள வெண்மையான மின்னல்
முத்துகள் வெளுப்பும் பவள சிவப்பும்
குன்றம் எடுத்த பிரான் முறுவல்
வெண்மை -பிரகாசம் பவள சிவப்பை வாரி வர
பிறரை நலிய பல்லை இறுக்கிக் கொண்டு வர
பிராணனை முடிக்கும் திரு முத்து தந்தபத்திகள்
அணி முத்துக்கள் -அலங்காரம் இல்லையே பற்கள்
இயற்கையாக
அணி அணியாக வரும்
யானைப்படை போலே
தனியாக நலிய இங்கு
மலையை எடுத்து -முறுவல் எனக்கு மட்டும் பாதகம்
பசுக்களை நோக்கினான்
கோபிகளையும்
கோ கோபி ஜனம் காத்தான்
ஆர்த்தி போம் படி ஸ்மிதம் செய்து நின்றான்
கோலமும் அழிந்தில வாடிற்றல
திரு உகிர் கூட நோவாமல்
பூவை ஏந்தி நின்றான்
உஜ்ஜீவிக்க ஒதுங்க இடம் இல்லை
கோவர்த்தன மலை இந்த்ரன் வர்ஷித்த மழைக்கு இருக்க
இந்த அழகு மலைக்கு ஒதுங்க இடம் இல்லையே

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: