திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -7-7-4-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

   இன்னுயிர்க்கு ஏழையர் மேல்வளை
யும்இணை நீலவிற்கொல்
மன்னிய சீர்மத னன்கருப்
புச்சிலை கொல்?மதனன்
தன்னுயிர்த் தாதைகண் ணப்பெரு
மான்புரு வம்மவையே
என்னுயிர் மேலன வாய்அடு
கின்றன என்றும்நின்றே.

    பொ – ரை : மன்மதனுக்கு உயிர் போன்ற தந்தையாகிய கண்ணபிரானுடைய புருவங்களானவை, இனிய உயிர்களைக் கவர்வதற்காகப் பெண்கள்மேல் வளைகின்ற நீல நிறம் பொருந்திய விற்கள்தாமோ? அன்றிக்கே, நிலைபெற்ற கீர்த்தியையுடைய மன்மதனுடைய கரும்பு வில்தாமோ என்னுடைய உயிர் மேலனவாய் எப்பொழுதும் நிலை பெற்று வருத்துகின்றன?

 வி – கு : ‘கண்ணப்பெருமான் புருவமவை நீல விற்கொல்? கருப்புச் சிலைகொல்? என் உயிர் மேலனவாய் என்றும் நின்று அடுகின்றன,’ என்க.

ஈடு : நான்காம் பாட்டு: 1‘என்தான்! இங்ஙனே கீழ் மேல் ஆயிற்றோ போய்?’ என்று திருப்புருவத்தில் அழகு வளைந்துகொடு வந்து நலிகிறபடியை அருளிச்செய்கிறார்.

இன் உயிர்க்கு – என்னுடைய நற்சீவனைக் கொள்ளுகைக்காக. ஏழையர்மேல் வளையும் – 2வளைப்பாரும் இன்றிக்கே வளைக்கைக்கு விஷயமுமின்றிக்கே, செயப்படுபொருள் இல்லாமலும் செய்பவன் இல்லாமலும் வளையாநின்றது. வளைப்பார் இல்லாமையாலே கர்த்தா இல்லை; விஷயம் இணை நீல வில்கொலோ – ஏழையர்மேல் வளைகிற 3நீலமான இரண்டு விற்களோ? என்றது, 4‘பகைவர்களை அழிக்கத் தக்க, இந்திரவில் போன்ற விற்களைப் பிடித்து’ என்னும் படியே என்றபடி.ஸக்ரசாப நிபே சாபே க்ருஹீத்வா ஸத்ருநாஸநே’–என்பது, ஸ்ரீ ராமா. கிஷ்கிந். 3 : 9.

 5இந்திர வில்லுக்கு அபலைகளையே நலியவேணும் என்னும் நிர்பந்தம் இல்லை அன்றோ? மன்னிய சீர் மதனன் கருப்புச் சிலைகொல் – 6பெண் பிறந்தாரையே நலியக் கூடியதான காமனுடைய வில்லுதானேயோ? 7அதுதன்னிலும் சிவனாலே வடிவுஇழப்பதற்கு முன்புத்தை அவன் கையில் வில்லாக வேணும் கருப்புச் சிலைகொல்- 1கண்ணுக்கு ஆபாசமாய்ப் பாதகம் உறைத்திருக்கிறபடி.

மதனன் தன் உயிர்த்தாதை கண்ணப்பெருமான் புருவம் அவையே-அவனுடைய சம்பந்தத்தால் வந்த இராசகுலங்கொண்டு திரிகிறவன் கையில் வில்லுக்கு இத்தனை உறைப்பு உண்டாக மாட்டாது, அவனுக்குங்கூடத் தந்தையான கிருஷ்ணனுடைய திருப்புருவங்கள்தாமே ஆகவேணும். 2தன் கைச்சார்ங்கமதுவே போல் புருவ வட்டம் அழகியவனுடைய புருவங்கள்தாமேயாக வேண்டும். ஆண்டாள் வார்த்தை இருக்கிறபடி அன்றோ? நாய்ச்சியார் திருமொழி. 14 : 6.-3‘தருமம் அறியாக் குறும்பனை – 4தருமம் அறியும் போது முடி சூடின க்ஷத்திரியன் வயிற்றிலே பிறந்தவனாக வேண்டாவோ? 5யாதவர்கள் நேரே முடி சூடுவது இல்லை அன்றோ? இரக்கம் 6இருக்கும்படி முதலிலே புதியது உண்டு அறியாதவனாயிற்று. ஸ்ரீநந்தகோபர், தம்முடைய இராச்சியத்திலே மூலையடியே நடந்தி திரிவான் ஒருபிள்ளையாயிற்றுப் பெற்றது. 1தன் கைச் சார்ங்கம் – கையிலே வில்லைக் கண்டால், ‘முகத்திலே இருக்கக்கூடிய அது கையிலே இருந்ததே! என்னாலாம்படியாய் இருக்கும்; முகத்திலே கண்டவாறே, ‘கையிலே இருக்கக்கூடிய இது முகத்திலே இருந்ததே!’ என்னலாய் இருக்கும். அதுவே போல என்கிறதாயிற்று, முற்றும் ஒத்திருக்கையாலே. 2‘புருவ வட்டமழகிய’ என்றதனால் ‘தருமமறியான்’ என்று இழக்க ஒண்ணாதபடியாயிற்று, வடிவழகு இருப்பது. பொருத்தம் இலியை-சில பொருள்கள் உளவே அன்றோ, நிறங்கள் அழகியனவாய்ப் பார்த்தாவாறே அனுபவிக்க யோக்கியம் அன்றிக்கே இருப்பன? அவை போலே, வடிவழகேயாய், ஆசைப்பட்டார் பக்கல் ரசம் தொங்கிலும் தொங்கானாயிற்று. கண்டீரே – 4அவனுக்குப் பொருத்தம் இல்லாவிட்டால், நமக்குப் பொருத்தம் இல்லையாகில் அன்றோ விட்டிருக்கலாவது? அவன் பொருந்தாமை தமக்குத் தொடர்ந்து திரியுமத்தனையாயிற்று.

புருவம் அவையே-5மேலே கூறிய அழகுகள்தாம் அநுகூலங்கள் என்னும்படியாகவாயிற்று, இவை பாதகமாகிறபடி. என் உயிர் மேலனவாய்-6இருப்பன அங்கேயாய் இருக்கச் செய்தேயும், நோக்குஎன்மேலேயாய் இராநின்றது. 1எங்கும் பக்கம் நோக்கு அறியாமல் அன்றோ இருப்பது?   திருவாய். 2. 6 : 2.
-அடுகின்றன – கொல்லாநின்றன. என்றும் நின்றே-பாதகமாக நிற்கச்செய்தேயும் அழிந்து போகக் கூடியனவாய் இருப்பன சில பொருள்கள் உள அன்றோ? இவை அங்ஙன் அன்றிக்கே என்றும் ஒக்க நின்று நலியாநின்றன. என்னை நலிகைக்காக நித்தியமாய் இருக்கும் தன்மையை ஏறிட்டுக்கொண்டன; 2‘நித்தியமாய் இருப்பதும் நித்தியமாய் இருக்கும் வடிவை ஏறிட்டுக் கொண்டதும்’ என்கிறதுதானே அன்றோ நலிகிறது?

திருப் புருவத்தின் அழகு நலிகிற படியை தெரிவிக்கிறார்

திருப் பவளம் புண்ய பாப்பம் காரணம் அன்பவித்தார்
திருப் புருவம் இதில்
வளைந்து கொண்டு வந்து நலிகிறது
அதரோதரமாக -தலை கீழாக இருக்கிறதே –
அதரம் கீழே திருப்புருவம் மேலே –
ஹிம்சிப்பதில் மேன்மை –
இடு சிவப்பு -அதரம் ஒப்பனை-புருவத்துக்கும் ஒப்பனை -இணை வளையும் -இணை நீல வில் கொல் –
மன்னிய சீர் மதனன் கரும்பு வில்லோ –
இஷூ தனுஸ்
அசோகம் நீலம் போன்ற புஷ்பங்கள் பானம்
மதனன் தன் உயர் தாதை -காமன் தாதை
பிரத்யுமனாக பிறந்தவன் -மன்மதன்
நின்றே எரிக்கின்றன -நிரந்தரமாக அழகு தோற்றி
இன் உயிர்க்கு நல்ல ஜீவனை கொள்ளுகைக்காக
ஏழையர் மேல் வளையும்

விஷயம் இல்லாமையாலே -கர்மம் இல்லை
ஏற்கனவே சபலம் பட்ட ஏழையர்
வளைக்க யாரும் இல்லை
அவன் செய்தான் அவனால் செய்யப் பட்டது
தானே வளைந்து இருக்க
அகர்மகம் -வளைத்து பிரயோஜனம் இல்லை
வளைக்க விஷயம் இல்லையே
சத்ரு நாசன் இந்திர தனுஸ் -சக்ர சாபம் -வானவில்
அபலைகளையே நலிய வேணும் நிர்பந்தம் இல்லையே –
பெருமாளுக்கும் துக்கம் கொடுத்ததே -பிரிவில் -இந்த தர்சனம் துக்கவாஹம் தானே
இங்கே புருவம் ஒருத்தியை மட்டுமே நலிய –
ஏழையர் மேல்
மன்னிய சீர் மதனன் பெண் பிறந்தாரை நலியும்
இழப்பதருக்கு முன்பு அவன் கையில்
ருத்ரன் தபஸ் -பார்வதி மேலே ஆசை உண்டாக்க –
தேவ சேனாபதி வேண்டும் –
ஹிமவான் புத்ரி பணிவிடை செய்து இருக்க –
கோபம் வந்து நெற்றி கண்ணால் பஸ்மம்
எரிந்தாலும் பார்வதி குலாவி குமார சம்பவம்
காமம் எரிக்க முடியவில்லையே
வடிவு இழப்புக்கு முன்பு
மன்னிய சீர் ஸ்திரமாக இருந்த மதனன்
கருப்பு சிலை
கண்ணுக்கு ஆபாசம் கரும்பு போலே தெரியும்
பாதகத்தில் வில்லை விட கொடிய
உறைப்பு –
அவனோட்டை சம்பந்தத்தால் -மன்மதன் பிள்ளை –
செல்வாக்கு கொண்டு திரிய
புருவம் சக்தி அதிகம் –
மன்மதன் வில் இல்லை –
இவனுக்கும் ஊற்று வாய் கண்ணன்
காமனை பயந்த காளை
பிரசவம் ஆனா பின்பும் காளை இவன்
மன்மதன் தகப்பன் சொல்லும்படி
அவன் தனக்கும் ஜனகன்
ருக்மிணி பிள்ளை வரம் -கேட்ட -கிர்த்ரிமம் -கலவா –
தானான தன்மையில் இன்றி மனுஷ்ய
கோபத்தால் ருத்ரன் எரிக்க
இவன் ரூபம் கொடுத்து சரிப்படுத்தி
வரம் கேட்ட சௌலப்யம்
பிரத்யும்னன்
காமனார் தாதை –
தன் கை சார்ங்கம் அதுவே போலே -ஆண்டாள் வார்த்தை இருக்கிறபடி
தர்மம் அறியா குறும்பனை -படு கொலை அடிக்கிறவன்
வசப்படுத்தி
மயக்கி
அபிஷித்த ஷத்ரியன் வயற்றில் பிறக்க வேண்டாவோ
ராமோ விக்ரகவான் தர்ம –
இவனோ அபிஷேகம் இல்லாத குலத்தில் பிறந்து
யாதவர்கள் நேரே முடி சூடுவது இல்லையே
வேறு ஒருவரை வைத்து ஆண்டு
உக்ரசெனர் வைத்து
ஆன்ருசம்சயம் கருணை அறியாதவன்
புதியது உண்டு அறியாத
நந்தகோபன் தனது ராஜ்யத்தில் மூலை அடியே நடந்து திரியும்
அகரமாக திரிகிறவன் அராஜகம்
குறும்பு செய்வான் ஒரு மகனைப் பெற்ற நந்த கோபாலன்
புருவ வட்டம் அழகிய
கையிலே உள்ளது நெற்றியிலே
முகத்தில் –
அதுவே போல் சர்வதா சாம்யம்
தர்மம் அறியா இழக்க ஒண்ணாத அழகு உள்ள புருவம்
பொருத்தம் இலி-
பொம்மை பழங்கள்-உண்ண முடியாதே
நிறம், அழகியதாய் உப யோக போக யோக்கியம் இன்றி இருக்கும்
ஆசைப் பட்டார் ரசம் தங்கினாலும் இவன் தங்க மாட்டான்
கண்டீரே
அவன் பொருந்தாமை இவளுக்கு மேலே விழ ஆசை பிறக்க

 

கீழ் சொன்ன வை அனுகூலம் போலே இவை பாதகம் பார்த்தால்
அவையே ஏவகாரம்
நோக்கு இங்கே இருப்பு அவன் இடம்
என் உயிர் மேலேயே இருக்கின்றன
அடுகின்றன கொல்லா நின்று
என்றும்
பாதகமாய் இருந்தாலும் சில அநித்தியம்
இவை நிரந்தரமாக -நித்யத்வம் ஏறிட்டு கொண்டு நலிய
எம்பெருமான் -திவ்ய மங்கள விக்ரஹ சௌந்தர்யம்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: