திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -7-6-10-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

  ஏற்றரும் வைகுந்தத்தை அருளும்
நமக்கு ஆயர்குலத்து
ஈற்றிளம் பிள்ளை ஒன்றாய்ப்புக்கு
மாயங்களே இயற்றிக்
கூற்றியல் கஞ்சனைக் கொன்று ஐவர்க்காய்க்
கொடுஞ்சேனை தடிந்து
ஆற்றல் மிக்கான் பெரிய பரஞ்சோதி
புக்க அரியே.

பொ – ரை : ‘பிறந்த ஓர் இளம்பிள்ளையாய் ஆயர் குலத்திலே புகுந்து ஆச்சரியமான காரியங்களையே செய்து, யமனப் போன்ற தன்மையனான கம்ஸனைக் கொன்று, பாண்டவர்களுக்காக் கொடியசேனைகள் எல்லாவற்றையும் கொன்று, ஆற்றலின் மிக்கானாய், பெரிய பரமபதத்திலே சென்று சேர்ந்த கிருஷ்ணனானவன், ஒருவர் தம்முயற்சியால் ஏறுதற்கு அரிய பரமபதத்தை நமக்குக் கொடுப்பான்’ என்றவாறு.

வி – கு : ஏற அரு என்பது, ‘ஏற்றாது’ என்றாயிற்று. ‘அரி நமக்கு வைகுந்தத்தை அருளும்,’ என்க. அரி – சிங்கம்; உவம ஆகு பெயர். ‘ஈன்ற இளம்’ என்பது, ‘ஈற்றிளம்’ என்றாயிற்று. ‘ஆயர்குலத்திலே புக்கு இயற்றிக் கொன்று தடிந்து ஆற்றிலின் மிக்கான்’ என்க. ஆற்றல் – பொறை. வலியுமாம்.

ஈடு : பத்தாம் பாட்டு. 2பிராப்பியன் அவனே என்னும் இடத்தைச் சொல்லி, தன்னைப் பெறுவதற்குச் சாதனம் தானே என்னும் இடத்தையும் சொல்லி, விரோதிகளை அழிப்பானே அவனே என்னும் இடத்தையும் சொல்லி, இப்படி நம் பேற்றுக்குக் கண்ணழிவுஇன்றிக்கே இருந்த பின்பு அவன் தன்னை நமக்குத் தரும் என்று அறுதியிடுகிறார்.

ஏறஅரு வைகுந்தத்தை அருளும் நமக்கு – ஒருவராலும் தம்முயற்சியால் அடைய ஒண்ணாதிருக்கிற ஸ்ரீவைகுண்டத்தை அவன் தானே தரப் பெற இருக்கிற நமக்குத் தரும். 1‘எல்லா வழியாலும் அவன் தன்மையை அறிந்து, ‘அதனைத் தரும்’ என்று இருந்தீரேயாகிலும், பெற இருக்கிற நம் படியைப் பாரானோ?’ என்னில், ஆயர்குலத்து ஈற்றிளம்பிள்ளை – நம்படி பார்க்க அறியாத இளைஞன். 2‘இளைஞனே! (சிசுபாலனுக்கு) நித்தியசூரிகளோடு ஒத்த இன்பத்தை அளித்தவன் ஆனாய்’ என்னக்கடவதன்றோ? முக்த ஸாயுஜ்யதோபூ:’ என்பது, ஸ்தோத்ர ரத்நம், 63.
ஈற்றிளம்பிள்ளை – 3‘ஈறான இளம்பிள்ளை’ என்றாய், மிக்க இளைஞன் என்றபடி. ஈறு -முடிவு. அன்றிக்கே, ஈன்றிளம்பிள்ளை என்றாய், ‘கற்றிளம்பிள்ளை’ என்றபடி. இரண்டாலும் அதி இளைஞன் என்றபடி. ஒன்றாய்ப் புக்கு – 4கம்ஸனும் பொய்யே அம்மானாய் ‘வில் விழவுக்கு’ என்று அழைத்து விட, இவனும் பொய்யே மருகனாய் அவற்றிற்கெல்லாம் தானே கடவனாக விருமகிப் போய்ப் புக்கானாயிற்று. அன்றிக்கே, ‘வில்விழவு’ என்று கொண்டு ஒரு வியாஜத்தை இட்டுப் போய்ப் புக்கு என்னுதல்.

மாயங்களே இயற்றி – ஆயுதச்சாலையிலே புக்கு ஆயுதங்களை முரிப்பது, 5ஈரங்கொல்லியைக் கொன்று பரிவட்டம் சாத்துவது, குவலயாபீடத்தின் கொம்பை முரிப்பது, மல்லரைக் கொல்லுவது ஆன ஆச்சரிய காரியங்களையே செய்து. இயற்றுதல் – செய்யத்தொடங்குதல். இவன் இப்படிச் செய்யப் புக்கவாறே அவற்றைக் கேட்டுப் பொறுக்கமாட்டாமல் கூற்றுவனைப் போலே கிளர்ந்தான் ஆயிற்றுக் கம்ஸன். கூற்று இயல் கஞ்சனைக் கொன்று-மஞ்சத்திலே இருந்த கம்ஸனை முகம் கீழ்ப்பட விழ விட்டுக் கொன்று போகட்டானாயிற்று. இயல்பு-தன்மை. 1‘அந்தக் கண்ணபிரான், கிரீடம் கீழே விழும்படி மயிரைப் பிடித்து இழுத்துப் பூமியிலே தள்ளினார்’ என்றதற்குக் கருத்து என்னையோ?’ எனின்,‘

கேஸேஷூ ஆக்ருஷ்ய விகளத் கிரீடம் அவநீதலே
ஸ கம்ஸம் பாதயாமாஸ தஸ்ய உபரி பபாத ச’-என்பது, ஸ்ரீவிஷ்ணு புரா. 5. 20 : 84.

‘இராஜத் துரோகிகளைக் கொல்லும்போது இராஜ சிந்நங்களை வாங்கிக் கொல்லுவாரைப் போலேகாண்’ என்று அம்மாள் பணிப்பர். 2தான் கொடுத்த தரம் ஆகையாலே மற்று ஒருவர்க்குத் தோற்றத்துக்குக் காரணமாக வேண்டும் அன்றோ? ஆக, தன்னைத்தான் அறிவதற்கு முன்பு, கம்ஸன் வரவிட்டவர்களையும் அவனையும் தப்புகைக்குப் பணி போந்தது; பருவம் நிரம்பித் தன்னைத்தான் அறிந்த பின்பு, பாண்டவர்கள் காரியம் செய்து இத்தனை என்கிறார்.

ஐவர்க்காய்க் கொடுஞ்சேனை தடிந்து – பாண்டவர்களைச் சீறினவர்கள் அடைய ‘சாரதி, சாரதி’ என்று வாய் பாறிக்கொண்டு வர, அவர்களை அடையத் தேர்காலாலே உழக்கிப் போகாட்டானாயிற்று. ஆற்றல் மிக்கான் –3பகைவர்கள்யும் வேரோடே வாங்கிப் போகட்டு, தருமபுத்திரன் தலையிலே முடியையும் வைத்து, இவள் குலைந்த சூழலையும் முடிப்பித்த இடத்திலும், 4‘நிலைபெறாத மனத்தையுடையவனாய் இருக்கிறேன்’ என்றே அன்றே எழுந்தருளினான்?‘நாதிஸ்வஸ்த மநா:’ என்பது, பாரதம், உத்யோக.ஆற்றல் என்று பொறையாய், ‘பொறை மிக்கவன்’ என்னுதல். அன்றிக்கே, வலியாய், ‘வலி மிக்கவன்’ என்னுதல். இவற்றை அடைய அழியச் செய்கைக்கு அடியாற வலியைச் சொன்னபடி. பெரிய பரஞ்சோதி புக்க அரியே – 2கம்ஸனும் துரியோதனனும் இல்லாத இடத்தில் பரமபதத்திலே போய்ப் புக்க பின்பும், ‘நித்திய சூரிகள் நடுவே இருந்தோம் அன்றோ?’ என்று பாராதே, கம்ஸன் துரியோதனன், கர்ணன் என்று, ஆசிலே வைத்த கையுந்தானுமாய்ப் பகைவர்கள் மேலே சீறன சீற்றத்தின் வாசனை அங்கேயும் தொடர்ந்தபடி.

பிராப்யன் அவனே என்னும் இடம் சொல்லி
சாதனம் தானே
விரோதி நிரசனம் செய்வானே அவனே
தன்னை தரும்
வைகுந்தம் அருளும் ஆயர் குலம் புக்கு
ஒரு பாட்டில் பாகவதம் இதில்
மாயங்களே இயற்றி
காஞ்சனை கொன்று
ஐவர்க்காய் பாரதம்
தன்னுடை சோதி புக்கு
எல்லா வழியாலும் அவன் ஸ்வா பாவத்தை அறிந்து
நம் படி பாராமல்
ஆயர் குலத்தில்-நம் படி பார்க்க அறியாத முக்தன்
ஈற்று இளம் பிள்ளை
முடிவான
அதி முக்தன்
இடையர் மடையர்
கடை கேட்ட
ஈன்று கற்று இளம் பிள்ளை
இப்பொழுது பிறந்த பிள்ளை
ஒன்றாய் புக்கு சமமாக
பொய்யே மருமகனாய்
வியாஜ்யம் -வில் விழ
ஆயுதம்
ஈரம் கொல்லி வண்ணன் கொன்று பரிவட்டம் சாத்துவது
மிருத்யு போலே கூற்று இயல் கம்சன்
மஞ்சத்தில் உள்ளவனை முகம் கீழ்பட வைத்து
அம்மங்கி அம்மாள்
ராஜ சின்னங்களை பிடுங்கி ராஜாவை கொல்லுவது போலே
அவன் சின்னம் இருக்க அவனாலும் கொல்ல முடியாதே
இவை சிறு வயசு வியாபாரம்
தன்னை தான் அறிந்த பின்பும் பாண்டவர் கார்யம் செய்து
சாரதி சாரதி விரோதிகள் வாய் பாரித்து வர
அவர்களை தேர் கால் -கொண்டு நசுக்கி
ஆற்றல் மிக்கான்
தர்ம புத்திரன் முடி
த்ரௌபதி குழல் முடித்து
திருப்தி இன்றி -பரம் ஜோதி புக்க
வலிமை பொறுமை மிக்க –
நித்யர் நடுவில்
கையும் தானுமாய் வாசனை அங்கேயும் வர்த்திக்கும் படி
அபசாரம் சீற்றம் தணியாமல்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: