திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -7-6-7-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

  என்திரு மார்பன் தன்னை என்மலைமகள் கூறன்தன்னை
என்றும்என் நாமகளை அகம்பாற் கொண்ட நான்முகனை
நின்ற சசிபதியை நிலங்கீண்டு எயில்மூன்று எரித்த
வென்று புலன்துரந்த விசும்பா ளியைக்கா ணேனோ?

பொ-ரை : ‘என்னுடைய திருமகளை மார்பிலே கொண்ட திருமாலை, என்னுடைய பார்வதியை ஒரு பக்கத்திலேயுடைய சிவபெருமானுக்கு உள்ளுயிராய் இருப்பவனை, என்னுடைய சரஸ்வதியை எப்பொழுதும் தன்னிடத்திலே கொண்டவனான பிரமனுக்கு உள்ளுயிராய் இருப்பவனை, நின்ற இந்திரனுக்கு உள்ளுயிராய் இருப்பவனை, நிலத்தைக் கேட்டாலே குத்தி மேலே கொண்டு வந்து, முப்புரங்களை எரித்த, ஐம்புலன்களையும் வென்று ஓட்டிய சுவர்க்கலோகத்தை ஆளுகின்றவனைக் காணேனோ?’ என்கிறார்.

வி – கு : நிலங்கீண்டல், எயில் மூன்று எரித்தல், வென்று புலன் துரத்தல், விசும்பு ஆளுதல் என்னும் நான்கனையும், மேலே கூறிய நால்வர்க்கும் முறை நிரல் நிறையாகக் கொள்க. ‘என் திருமார்பனாய் நிலங்கீண்டவன், என் மலைமகள் கூறனாய் எயில் மூன்று எரித்தவன், நாமகளை அகம்பாற்கொண்ட நான்முகனாய் வென்று புலன் துரந்தவன், சசிபதியாய் விசும்பு ஆண்டவன்’ என்க. சசி-இந்திராணி.

ஈடு : ஏழாம் பாட்டு. 2உத்தேசிய லாபம் அவனாலேயாயிருந்தது. இத்தலையாலே முயற்சி செய்வதற்குத் தகுதி இல்லாதபடியானபாரதந்திரியும் உண்டாய் இருந்தது; 1அத்தலையாலே பெறுமிடத்தில் ஒரு கண்ணழிவு இன்றிக்கே இருந்தது; 2இப்படி இருக்கச்செய்தேயும் இழந்து இருக்கக் காண்கையாலே ‘நான் இழவோடே கிடந்து முடிந்து போமித்தனையேயன்றோ?’ என்கிறார்.

என் திரு மார்பன்தன்னை – இவ்விடத்திலே ‘என்’ என்கிற சொல், விசேடண அமிசத்திற்கு அடைமொழி; 3‘என் திருமகள் சேர் மார்பன்’ என்ற இடத்திலே கொண்டது போன்று கொள்க. என் சுவாமினியான பெரிய பிராட்டியாரைத் திருமார்விலேயுடையவனை. 4‘என் மலைமகள் கூறன்’ என்பது முதலான இடங்களில் உள்ள ‘என்’ என்பது, விசேடிய அமிசத்திலே ஊற்றம். ‘என்றது, என் சொல்லியவாறோ?’ எனின், 5‘அவனுடைய விபூதி யோகத்துக்கு உறுப்பாகச் சொல்லுகிறார் இத்தனை அன்றி, ‘மறந்தும் புறம்தொழா மாந்தர்’ நான்முகன் திருவந். 68.-ஆக இருக்குமவர் ஆதலின், இவர்களோடே தமக்கு ஒரு சம்பந்தம் உண்டு என்கிறார் அல்லரே?’ என்றபடி, என் மலைமகள் கூறன் தன்னை -இமயமலையின் பெண்பிள்ளையைத் தன்னுடம்பிலே ஒரு பக்கத்திலேயுடையனாய் இருக்கிற சிவனைத் தான் இட்ட வழக்காகவுடையனாய் இருக்கிறவனை.என்றும் என் நாமகளை அகம்பால் கொண்ட நான்முகனை – சரஸ்வதியை என்றுமொக்கத் தன் பக்கலிலேயுடையனாய் இருக்கிற பிரமனுக்கு அந்தராத்துமாவாயுள்ளவனை. நின்ற சசிபதியை – இவர்களை எண்ணினால் தன்னை எண்ணலாம்படி ஐஸ்வரியத்தால் குறைவற்றிருக்கிற இந்திரனுக்கு அந்தராத்துமாவாய் உள்ளவனை. 1‘அவன் பிரமன், அவன் சிவன்’ என்றால், ‘அவன் இந்திரன் என்று ஒக்கச் சொல்லலாம்படி முட்டுப்பொறுத்துநின்ற இந்திரனுக்கு அந்தர்யாமியாயுள்ளவனை.ஸப்ரஹ்மா ஸஸிவ: ஸேந்த்ர;’ என்பது, தைத். நாரா.

2‘இப்போது இவை சொல்லுகிறதற்குக் கருத்து என்?’ என்னில், ‘சொரூபமும் உயர்வும் அவன் அதீனம்’ என்றார்; இங்கே, ‘தக்க வயதினை அடைந்த புத்திரர்களுக்கு ஒத்த இடங்களிலே திருமணம் செய்விக்கும் தமப்பன்மார்களைப் போலே, இவர்கள் தாம் மனைவிகள் அடைந்ததும் தந்தாமால் அன்று; சர்வேஸ்வரனாலேயாம்’ என்பதனைத் தெரிவித்தபடி.

‘இவர்களுடைய செயல்கள் எல்லாம் அவனுடைய அதீனம்’ என்கிறது மேல்: நிலம் கீண்டு. . .விசும்பாளியை – 3‘பிரளய சமுத்திரத்திலே மூழ்கினதாய் அண்டப்பித்தியிலே புக்கு ஒட்டி பூமியை மஹா வராஹமாய்ப் புக்கு எடுத்துக்கொண்டு ஏறின போதைய செயல் தன்னுடைய அதீனம் ஆனாற்போலே, அவர்களுடைய செயல்களும் அவனுடைய அதீனம்’ என்கிறது. எயில் மூன்று எரித்த – மதிள் மூன்றை எரித்த. 4‘விஷ்ணு அந்தராத்துமாவாய் நின்றான்’ என்னக்கடவது அன்றோ?

‘விஷ்ணு: ஆத்மா பகவத: பவஸ்ய அமிததேஜஸ;
தஸ்மாத் தநுர்ஜ்யா ஸமஸ்பர்ஸம் சவிஷேஹே மஹேஸ்வர;’-என்பது, பாரதம், கர்ணபர்வம்.

அதுவும் அவன் இட்ட வழக்கு. வென்றுபுலன் துரந்த-படைப்புக்கு உறுப்பாக ஐம்பொறிகளை அடக்கியவனை புலன்களை வென்று ஓட்டின விசும்பாளியை – சுவர்க்கத்தை வன்னியம் அறுத்து ஆளுகின்றவனை. காணேனோ – காணப்பெறேனோ?

1ஆகச் சொல்லிற்றாயிற்றது: உத்தேசிய லாபம் அவனாலேயாய் இருந்தது. அதற்கு உறுப்பான முயற்சியில் ஈடுபடுதற்குத் தகுதி இல்லாதபடி அதுவும் அவன் இட்ட வழக்காய் இருந்தது. 2இனி. இத்தலையாலே பேறு ஆம் அன்று விளம்பத்திற்குக் காரணம் உண்டாய் இருந்தது; அவனாலே பேறு ஆம் அன்று விளம்பத்திற்குக் காரணம் இன்றிக்கே இருந்தது. இப்படி இருக்கச்செய்தேயும் தம்மை இழந்து இருக்கக்கண்டார் ஆகையாலே, ‘இனி, இந்த இழவோடே இங்ஙனே முடிந்துபோமித்தனையே அன்றோ?’ என்று வருந்துகிறார்.

இத்தலையால் பிரவர்த்தனம் செய்ய ஒன்றும் இல்லாத பாரதந்த்ர்யம் இருக்க
உத்தேச்யம் அவனேயாய் இருக்க
அத்தலையால் பெற கண் அழிவு இன்றி இருக்க
இழவுக்கு காரணம் –
விசும்பாளியைக் காண்பேனோ
என் திரு –புருஷகாரம் செய்ய -மார்பிலே கொண்டவன்
மலைமகள் கூறன் -ருத்ரனை -பார்வதியை பாகத்தில் கொண்டவன்
நா மகளை சரஸ்வதி அகம்பால் கொண்ட நான்முகன்
சசிபதி -இந்த்ராணி -சசி
நிலன் கீண்டு -வராஹம்
மூன்று எரித்து –
வென்று புலன் துரந்த –
விசும்பு ஆளியை
என் திரு மகள் சேர் மார்பனை போலே என் திரு –
என் திருமகள் அனந்தாழ்வான் திருக் குமாரத்திக்கு பெயர்
ஆஸ்ரையான தசை புருஷகார
பிராப்ய தசை
போக தசை –
என் மலைமகள் கூறன் -இங்கு எல்லாம் -என் -விசேஷ்யத்தில் கொள்ள வேண்டும் நாராயணன் இடம்
விபூதி யோகதுக்காக உறுப்பாக சொல்லி
மறந்தும் புறம் தொழா மாந்தர் –
ருத்ரனை தான் இட்ட வழக்காக உடையவன் –
அவாவறச் சூழ் அரியை -சேர்த்து சொல்ல கூடாது –
அயனை அரனை அலற்றி -கை விட்டு –
பேச நின்ற -நாயகன் அவனே –
முனியே நான் முகனே முக்கண்ணப்பா -போலே
பரிவார தேவதை -சமம் இல்லை
ஹிமவான் பெண் பிள்ளை பார்வதி
நா மகளை அகம்பால் கொண்ட சதுர முகனை -நிர்வகிக்கும் என் எம்பெருமான்
ச ப்ரஹ்ம ச சிவா செந்த்ரா
இந்த்ரன்
முட்டு பொருத்து நின்ற –
இப்போது இவை சொல்ல கருத்து என் என்னில் –
ஸ்வரூபமும் உத்கர்ஷம் கீழே சொல்லி
பிராப்த யவன மகிஷி லாபமும் அவனால் என்கிறார் –
தசரதர் பார்த்து திருக் கல்யாணம் செய்வித சீதை பிராட்டி போலே

அண்ணலும் நோக்கி அவனும் நோக்கி -கம்பன் தான் அருளி –
வால்மீகி முன்பு பார்த்ததே சொல்ல வில்லை –
மகிஷி லாபம் இவனால் -என்கிறார் –
தகுதியான இடத்தில்
பிரவர்திகள் எல்லாம் அவன் ஆதீனம் என்கிறார் மேலே –
நிலம் கீண்டு –
தானே செய்து அருளியது போலே –
திரிபுர தகனம் எயில் மூன்று எரித்த இதுவும் இவன் இட்ட வழக்கு
ருத்ரனுக்கு அந்தர்யாமி
வென்று புலன் துரந்த ஸ்ர்ஷ்டிக்கு உறுப்பாக புலன் அடக்கி
விசும்பு ஸ்வர்க்கம்
என்னுடைய அபேஷித்த சித்திக்கு அவனே என்கிறார்
காணேனோ –
உத்தேச்ய லாபம் அவனது
அதுக்கு உண்டான பிரவ்ருதியும் அவன் இட்ட வழக்கு
இத்தலையால் பேறு என்றால் விளம்பம் இருக்கலாம்
அவனால் பேறு என்கிற பொழுது
இழவுடன் முடிய வேண்டியதா கிலேசிக்கிறார்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading