திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -7-6-6-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

வந்துஎய்து மாறுஅறியேன் மல்கு
நீலச் சுடர்தழைப்பச்
செஞ்சுடர்ச் சோதிகள் பூத்துஒரு
மாணிக்கம் சேர்வதுபோல்
அந்தரமேற் செம்பட்டோடு அடிஉந்தி
கைமார்பு கண்வாய்
செஞ்சுடர்ச் சோதி விடஉறை
என்திரு மார்பனையே.

பொ-ரை : ‘செறிந்த நீலச் சுடரானது பரவச் சிவந்த சுடர்ச் சோதிகள் மலர்ந்து ஒரு நீல இரத்தினம் சேர்வது போன்று, திருவரையின் மேலே அணிந்திருக்கிற செம்பட்டோடு திருவடிகளும் திருவுந்தியும் திருக்கைகளும் திருமார்பும் திருக்கண்களும் திருவாயும் சிவந்த சுடர்ச் சோதியைப் பரப்ப எழுந்தருளியிருக்கின்ற என் திருமார்பனை நான் சென்று கிட்டும் வழியை அறியேன்,’ என்றவாறே.

வி-கு : வந்து-இடவழுவமைதி. ‘செலவினும் வரவினும்’ (தொல்சொல்.) என்னும் பொதுச் சூத்திரத்தாற்கொள்க. ‘மார்பனை வந்து எய்துமாறு அறியேன்’ என்க. ‘தழைப்பப் பூத்து ஒரு மாணிக்கம் சேர்வது போல் சோதி விட உறை திருமார்பன்’ என்க.

ஈடு : ஆறாம் பாட்டு. 1ஆனாலும், ‘ஏதேனும் ஒருபடி நீரும் சிறிது செய்து வந்து கிட்ட வேண்டாவோ?’ என்ன, ‘உன்னை வந்து கிட்டும் உபாயம் அறியேன்,’ என்கிறார்.

வந்து எய்துமாறு அறியேன் – வந்து கிட்டும் உபாயத்தை அறியேன். என்றது, 2‘நீதானே மேல் விழுந்து உன் வடிவழகைக் காட்டாநின்றால் அதனை விலக்காமைக்கு வேண்டுவது உண்டு; என்னால் உன்னை ஒரு சாதனத்தைச் செய்து வந்து கிட்டப் போகாது,’ என்றபடி. 3‘ஆனால், இழந்தாலோ?’ என்ன, ‘இழக்கலாம்படியோ உன் படி இருக்கிறது?’ என்கிறார். மல்கு நீலம் சுடர் தழைப்ப – 4வடிவழகு இல்லை என்று விடவோ, பெறுவிக்கைக்குப் புருஷகாரம் இல்லை என்று விடவோ, எனக்கு ஆசை இல்லையாய் விடவோ குறைவு அற்ற நீலப் புகரானது தழைப்ப? 5கர்மம் காரணமாக வந்தது அல்லாமையாலே மேன்மேலென மிக்கு வருதலின், ‘தழைப்ப’ என்கிறார். என்றது, ‘இவ்வளவு என்ன ஒண்ணாதபடி மேன்மேலென வளராநிற்கின்றது’ என்றபடி. நெஞ்சுடர்ச் சோதிகள் பூத்து-சிவந்த சுடரையுடைத்தான ஒளியானது காலப்பூ அலர்ந்தாற் போலே பூத்து. ஒரு மாணிக்கம் சேர்வதுபோல் – அனுபவத்திற்குத் தகுதியாம்படி ஒரு மாணிக்கமானது சாய்ந்தாற்போலே. ‘மல்கு நீலம் சுடர் தழைப்ப’ என்கையாலே, நிறம் இருந்தபடி சொல்லிற்று; ‘நெஞ்சுடர்ச் சோதிகள் பூத்து’ என்கையாலே, திவ்விய அவயங்கள் இருந்தபடி சொல்லிற்று; ‘ஒரு மாணிக்கம் சேர்வதுபோல்’ என்கையாலே, இரண்டும் பற்றுக்கோடான திருமேனியைச் சொல்லுகிறது. ‘செஞ்சுடர்ச் சோதிகள் பூத்து’ என்கிற இடத்தில் தெரியாதபடி 1மறைத்துச் சொல்லிற்று ஒன்று உண்டே அன்றோ? அதனை விளக்கமாக அருளிச்செய்கிறார் மேல்:

அந்தரம் மேல் செம்பட்டோடு அடி உந்தி கை மார்பு கண் வாய் செஞ்சுடர்ச் சோதி விட – அந்தரம் – நடுவு. உடம்புக்கு நடுவு, அரை. திருவரையில் திருப்பீதாம்பரத்தோடே, திருவடிகள், திருநாபிகமலம், திருக்கைகள், 2பெரிய பிராட்டியார் எழுந்தருளியிருக்கையாலே மேலே கூறியவற்றோடு ஒக்கச் சொல்லலாம்படி சிவந்திருக்கிற திருமார்பு, திருக்கண்கள், திருப்பவளம் இவை, சிவந்த சுடரையுடைத்தான ஒளியை வீச. உறை என் திருமார்பனை – 3இதுவும் ஓர் ஆபரணம் போலே: என் தலைவியான பெரிய பிராட்டியாரைத் திருமார்பிலே உடையவனை. 4திருப்பாற்கடலிலே நீர் உறுத்தாதபடி திருவனந்தாழ்வானைப் படுக்கையாகக்கொண்டு, அதிலே பலப்பல வர்ணங்களாய் இருப்பது ஒரு மேல் விரியை விரித்தாற்போலே அவன் சாய்ந்தருள, மேல் எழுந்தருளி இருக்கமாயிற்றுப் பிராட்டி. 1‘நானும் மிக்க ஆயாசனத்தினால் பெருமாள் மடியில் தூங்கிக்கொண்டிருந்தேன்’ என்னக் கடவதன்றோ?

‘மலரான் தனத்துள்ளான்’ (மூன்றாந்திருவந். 3.) என்ன வேண்டியிருக்க,
அவன் மார்விலே இருக்கிறான் எனக்கூடுமோ?’ என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார், ‘நானும்’ என்று தொடங்கி.

‘பரிஸ்ரமாத் பர்ஸூப்தா ச ராகவாங்கே அஸ்மிஅஹம் சிரம்
பர்யாயேண ப்ரஸூப்தஸ்ச மமஅங்கே பரதாக்ரஜ;’-என்பது, ஸ்ரீராமா, சுந். 38 : 20.

ஏதேனும் ஒருபடி நீரும் செய்து கிட்ட வேண்டாவோ
உன்னை வந்து கிட்டும் உபாயம் நான் அறியேன் என்கிறார்
என் திரு மார்பனை வந்து எய்துமாறு அறியேன்
தேஜஸ்
சிவந்த அங்கங்கள்
மாணிக்கம் சேர்வது போலே
மேல் விழும் போழ்து விலக்காமை ஒன்றே வேண்டும்
வடிவு அழகு இல்லை என்று விடவோ
புருஷகாரம் இல்லை என்று விடவோ
ஆசை இல்லை என்று விடவோ
மல்கு நீல சுடர் தலைப்ப கர்ம நிபந்தம் இன்றி
காலப்பூ போலே அலர்ந்து
மாணிக்கம் சேர்வது போலே சாய்ந்து
தேஜஸ் -மாணிக்கம்
நிறம் இருந்த படி -மலிகு நீல சுடர் தலைப்ப
திவ்ய அவயவங்கள் -செஞ்சுடர் சோதி பூத்து
இரண்டுக்கும் ஆஸ்ரயமான திரு மேனி
அவயவம் பூ போலே
மாணிக்கம் பூத்தது போலே -திருமேனி பூக்க
இல் போல் உவமை
குன்று என்ன நடந்தான்
மலை நடக்காதே
செஞ்சுடர் பூத்து -மறைந்து இருக்க
விவரிக்கிறார் மேலே
நடுவில் திரு பீதாம்பரம்
அடி உந்தி கைகள்
ஒக்க சொல்லலாம் படி திருமார்பு -அவள் இருப்பதால்
தேஜஸ் பிரவசிக்க –
உரை என் திரு மார்பனையே
இதுவும் ஒரு ஆபரணம்
ச்வாமியாரை
என் திரு மார்பில் உடையவன்
திருப் பாற் கடலில் சயனித்து -நீர் உறுத்தாது இருக்க திரு அநந்த ஆழ்வான் –
படுக்கையில் விரித்து பிராட்டி எழுந்து அருளி இருக்க –
மேல் விரியாக எம்பெருமான் –
நானா வர்ணமான மேல் விரி -அவன்
அதன் மேலே பிராட்டி

பர்யாயேன சுக்தக – மாற்றி மாற்றி சயனிக்க ஸ்ரீ ராமாயணம்
காகாசுர –
இது பூர்வ அர்த்தத்தில் நோக்கி அரும் பொருள்
ராகவன் மடியில் நான் படுத்து இருந்தேன் –
என் திரு -சயனித்து இருக்க
வந்து எய்துமாறு அறியேன்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: