திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -7-6-5-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

 என்னுடைக் கோவலனே! என்பொல்
லாக்கரு மாணிக்கமே!
உன்னுடைய உந்திமலர் உலக
மவைமூன் றும்பரந்து
உன்னுடைச் சோதிவெள்ளத்து அகம்பால்
உன்னைக் கண்டுகொண்டிட்டு
என்னுடை ஆர்உயிரார் எங்ஙனே
கொல்வந்து எய்துவரே?

பொ-ரை : ‘என்னுடைய கோபாலனே! என்னுடைய பொல்லாக் கருமாணிக்கமே! உன்னுடைய திருவுந்தித்தாமரையில் பிறந்த உலகங்களிலே சத்துவம் இராஜசம் தாமதம் என்னும் முக்குணங்களைப் பற்றி வருகின்ற விஷயங்களிலே பரந்து அனுபவிக்கின்ற என் அரிய உயிரானவர், உன்னுடைய சோதி வெள்ளமான ஸ்ரீவைகுண்டத்திலே எழுந்தருளியிருக்கிற உன்னைக் கண்டுகொண்டு வந்து அடைவது எங்ஙனே கொல்?’ என்கிறார்.

வி-கு : ‘மூன்று’ என்பது, முக்குணங்களைக் குறிக்கின்றது ‘பரந்து’ என்ற  சொல்லுக்குப் பின் ‘அனுபவிக்கின்ற’ என்ற சொல்லைக் கொணர்ந்து கூட்டுக. ‘பரந்து அனுபவிக்கின்ற என் ஆர் உயிரார்’ என்க. உயிரார் – இகழ்ச்சிக்குறிப்பு.

ஈடு : ஐந்தாம் பாட்டு. 1‘எல்லாம் செய்தாலும் ‘சாஸ்திர பரம் பிரயோக்தரி’ அன்றோ? பலம் உம்மதான பின்பு நீரும் சிறிது முயற்சி செய்யவேணுங்காணும்,’ என்ன, நீ படைத்த உலகங்களிலே விஷயங்கள்தோறும் அகப்பட்டுக் கிடக்கிற நான் உன்னைப் பெறுகைக்கு ஒரு சாதனத்தைச் செய்து வந்து பெறுகை என்று ஒன்று உண்டோ?’ என்கிறார்.

என்னுடையக் கோவலனே – 2பாண்டவர்களுடைய கோவலன் ஆனாற்போலே ஆயிற்று: இது சீலம் இருந்தபடி. என் பொல்லாக்கருமாணிக்கமே-இது வடிவழகு இருந்தபடி. 1 ‘அழகிது’ என்னில், உலகத்தோடு ஒப்பாம் என்று பார்த்து, வேறு சொல்லாலே சொல்லுகிறாராதல்; அன்றியே ‘தொளையா மணி’ என்கிறாராதல். பொல்லல்-தொளைத்தல். 2‘அனுபவிக்கப்படாத இரத்தினம் போலே’ என்றபடி. ‘உன்னுடை உந்தி மலர் உலகமவை மூன்றும் பரந்து – 3உன்படி இதுவாய் இருக்க, உன்னை ஒழிந்த விஷயங்களினுடைய வடிவழகிலும் குணங்களிலும் கால் தாழ்ந்து போந்தவனாய் இருந்தேன் நான். 4உன்னடைய உந்தியிலே மலராநின்றுள்ள உலகங்கள் மூன்றிலும் உண்டான விஷயங்கள்தோறும்,5தனித்தனியே அற்றுக் கால் தாழ்ந்து போந்தவனாய் இருந்தேன் நான். நீ ஸர்வசத்தி யோகத்தாலே பரந்திருக்கும் இடம் முழுதும் நான் என்னுடைய ஆசையாலே கால் தாழ்ந்து திரிந்தேன். 6இது என் நிலை இருந்தபடி. அதற்கு மேலே நீ எட்டா நிலத்தை இருப்பிடமாகவுடையையாய் இருந்தாய்.

உன்னுடைச் சோதி வெள்ளத்து அகம்பால் உன்னைக் கண்டு கொண்டிட்டு-உனக்கே சிறப்பாய் எல்லை அற்ற ஒளி உருவமாய், 7அத்யர்க்காநல தீப்தம் தத் ஸ்தாநம் விஷ்ணோ: மஹாத்மந:
ஸ்வயைவ ப்ரபயா ராஜந் துஷ்ப்ரேக்ஷம் தேவதாநவை;’-என்பது, பாரதம், ஆரண்ய பர். 163.

சூரியன் அக்கினி ஆகிய இவர்களின் ஒளியைக்காட்டிலும்அதிகமாக விளங்குகிற, மஹாத்துமாவான நாராயணனுடைய வைகுண்டம்’ என்று சொல்லப்படுகிற ஸ்ரீவைகுண்டத்தை இருப்பிடமாகவுடையையாய் இருக்கிற உன்னை, சரீரத்திலும் சரீரத்தோடு சம்பந்தப்பட்ட பொருள்களிலும் உண்டான சம்பந்தம் அற்று நெடுந்தூரம் வழி வந்து அதற்குத் தக்கதாய் இருப்பது ஒரு சரீரத்தை மேற்கொண்டு பரமபதத்தை அடைந்தால் அனுபவிக்க வேண்டி இருந்தது; 1ஆக, என் நிலை இருந்தபடி இது; உன் நிலை இருந்தபடி அது; 2என் நெஞ்சில் ஈடுபாடு இருந்தபடி இது; ஆன பின்பு இந்த முதலியார் கடுக வந்து உன்னைக் கிட்டாரோ? 3ஆக., சொரூபம் உன் அதீனமாய் இருந்தது, அவர் அவர்களுடைய உயர்வுகளும் உன் அதீனமாய் இருந்தன; என் நிலை இது, உன் நிலை அது; என் நெஞ்சில் ஈடுபாடு இது; ஆன பின்பு, நான் ஒரு சாதனத்தைச் செய்து வந்து கிட்டுகை என்று ஒரு பொருள் உண்டோ?’ என்கிறார்.

சாஸ்திர பலன் பிரயோக்தாவுக்கு –
பிரயத்னம் செய்ய வேண்டாவோ பலம் உம்மது என்பதால்
பூர்வ பஷம்
உம்மை பெருகைக்கு ஏதேனும் சாதனம் உண்டோ -என்கிறார் –
என்னுடை கோவலன்
பொல்லாக் கரு மாணிக்கம் -நல்ல -துளையாத –
உன்னுடை உந்தி மலரில் இருந்து
உன்னுடைய சோதி வெள்ளம்
என்னுடைய ஆத்மா எங்கனே எய்துவர்
என்னுடை கோவலன் பாண்டவர் கிருஷ்ணன் போலே
பாண்டவர் தூதன் பார்த்த சாரதி போலே இவருக்கும்
சீலம் -தாழ விட்டு கலந்து பரிமாறும் குணம் இருந்த படி
ஆத்மகுணம்
பொல்லாக் கரு மாணிக்கம் தேக குணம்
நாட்டார் -விசாஜாதீயமான சப்தம்
விபரீத லஷனை நல்ல
துளை இல்லாத -அனுபோக்தமான மாணிக்கம் ஆகுமே துளை இருந்தால்
உன்னுடை உந்தி மலர்
உனது படி இப்படி இருக்க
உன்னை ஒழிந்த விஷயங்களின் அழகிலும் குணங்களிலும் கால் தாழ்ந்து இருந்தேன்
உலகமாவை முற்றும் பறந்து புத்தி
சர்வ சக்தியால் நீ வியாபிக்க
என்னுடைய சாபாலத்தால் வ்யாபித்தான்
இது என்னுடைய நிலைமை
எட்டா நிலம் உன்னுடைய சோதி வெள்ளத்தில்
நிரவதிக -சூர்யன் காட்டிலும் பிரகாசமான ஸ்ரீ வைகுண்டம்
உன்னை
பிரகிருதி பிராக்ருத சம்பந்தம் கழித்து
நெடு தூரம் அர்ச்சிராதி கதி சென்று
அனுரூபமான சரீரம் பரிகரித்து
பரம பதம் பிராப்தி அடைந்து பெற வேண்டும் படி இருக்க –
உன்னை எப்படி கிட்ட முடியும் –
என்னுடைய ஆர் உயிரார் கௌரவ சப்தம்
இந்த முதலியார் கடுக்க வந்து கிட்டுவாரோ
ஏளனமாக சொல்கிறார்
ஆரார புகுவார் ஐயர் இவர் அல்லால் -போலே –

சப்தாதிகளில் பிரவணமாய் இருந்து –
ஸ்வரூபம் உனது ஆதீனம் -உத்கர்ஷம் உனது ஆதீனம்
என் நிலை இது
உன் நிலை அது
ஆனபின்பு சாதனா அனுஷ்டானம் செய்து அடைய முடியுமா –

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: