திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -7-6-9-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

காண்டுங்கொ லோநெஞ்ச மே!கடிய வினையே முயலும்
ஆண்திறல் மீளிமொய்ம்பில் அரக்கன் குலத்தைத் தடிந்து
மீண்டுமவன் தம்பிக்கே விரிநீர் இலங்கை அருளி
ஆண்டுதன் சோதி புக்க அமரர்அரி ஏற்றினையே?

பொ – ரை : கொடுந்தொழிலையே செய்கின்ற ஆண் தன்மையினையும் திறலையும் மிக்க வலியினையுமுடைய அரக்கனான இராவணனுடைய குலத்தைக் கொன்று, மீண்டும், அவனுடைய தம்பியாகிய விபீஷணனுக்கே கடல் சூழ்ந்த இலங்கையைக் கொடுத்து, திரு அயோத்தியில் வீற்றிருந்து பதினோராயிரம் ஆண்டுகள் அரசாட்சியைச் செலுத்தித் தன்னுடைச் சோதியை அடைந்த நித்தியசூரிகளுக்கு ஆண் சிங்கத்தைப் போன்றவனான சர்வேஸ்வரனை நெஞ்சம்! காண்போமோ?

வி – கு : ‘குலத்தைத் தடிந்து தம்பிக்கு அருளி ஆண்டு புக்க அரியேறு’ என்க.

ஈடு : ஒன்பதாம் பாட்டு. 1‘இராவணன் முதலியோரை அழித்த சக்கரவர்த்தி திருமகனை, நெஞ்சே! காண வல்லோமோ?’ என்கிறார்.

காண்டுங்கொலோ நெஞ்சமே – 2இழவாலே கட்டிக்கொண்டு கதறுகைக்குக் கூட்டான நீ, இப்பேற்றாலே இன்பமடைந்தவர் அனுபவிக்கும் அனுபவத்துக்கும் கூட்டாய் நாம் அவனைக் காணவல்லோமோ? கடிய வினையே முயலும் – 3தாயையும் தமப்பனையும் இரண்டு இடங்களிலே ஆக்குவாரைப் போலே அன்றோ, பெருமாளையும் பிராட்டியையும் இரண்டு இடங்களிலே ஆக்கிற்று? இதில்தாழ்ந்திருப்பது ஒரு செயல் இல்லையாயிற்று, இவன் செய்யுமவற்றில். 1‘கிரமத்திலே பலம் கொடுக்கிறோம்’ என்று சர்வேஸ்வரனுக்கு ஆறியிருக்க ஒண்ணாதபடியாயிற்றுக் கொடிய செயல்கள் செய்யும்படி. 2‘மிகக்கொடியனவான பாவங்கள், மிக உயர்ந்தனவான புண்ணியங்கள் ஆகிய இவற்றால் உண்டான பலன்களை இப்பிறப்பிலேயே மூன்று வருடங்களில் மூன்று மாதங்களில் மூன்று பக்ஷகளில் மூன்று நாள்களில் அனுபவிக்கிறான்’ என்னும்படியே.

‘அத்யுத்கடை: புண்யாபாபை: இஹைவபலம் அஸ்நுதே
த்ரிபி: வர்ஷை: த்ரிபி: மாஸை: த்ரிபி: பக்ஷை: த்ரிபி: திநை:’-என்பது, தர்ம சாஸ்திரம்.

கடிய வினையே என்ற ஏகாரத்தால் இவன் நல்வினைத் தொடர்பு இல்லாதவன் என்பது பெறப்படும்.

ஆண் திறல் மீளி மொய்ம்பில் அரக்கன் – ஆண்பிள்ளைத் தனத்தில் வந்தால், 3திறலையுடைய சிங்கம் போன்ற மிடுக்கையுடைய அரக்கன். மீளி-சிங்கம். அன்றிக்கே, ‘திறலையுடையனாய், பிறரை அடக்குதற்குரிய ஆற்றலையுடையனாய், யமனைப் போன்ற மிடுக்கையுடையனான இராவணனுடைய’ என்னுதல். குலத்தைத் தடிந்து-4‘ஜனகராஜன் திருமகள் காரணமாகப் பிசாச ஜாதி அற்றதாயும் அரக்கர் குலம் அற்றதாயும் செய்வேன்’ என்கிறபடியே, கரிஷ்யே மைதிலீஹேதோ: அபிஸாசம் அராக்ஷஸம்’-என்பது, ஸ்ரீராமா. ஆரண். 64 : 66.

எந்தையே! இராகவ! சரணம் என்ற சொல்
தந்தவர் எனைவரோ சாற்று மின்என’

குலமாக அழித்து.அவன் தம்பிக்கே விரிநீர் இலங்கை அருளி – 1‘இராவணன் தானேயாகிலும்’ என்கிறபடியே, ‘சரணம்’ என்ற சொல் அழகியதாய் இருந்தது, விபீஷணோ வா ஸூக்ரீவ யதிவா ராவண: ஸ்வயம்’-என்பது, ஸ்ரீராமா. யுத். 18 : 34.

‘அவனோடு சம்பந்தமுடையான் ஒருவன் வந்தானாகை அன்றிக்கே, அவன்தானே வரப்பெறுவதுகாண்’ என்று செவி சீப்பாய்ந்து இருந்தார் அன்றோ? 2‘அங்குநின்றும் வந்தான் ஒருவனைக் கைக்கொண்டாராக அமையாதோ? இந்நிர்பந்தம் என்?’ என்னில், அவனோடு சம்பந்தமுடையான் ஒருவனைக் கைக்கொண்டால், அவன் தானும் நான்கு பேருமாகப்போம்; அவன்தானே வரப்பெற்றதாகில் துருப்புக்கூடாக நோக்கிற்று ஆகலாம் அன்றோ? 3மேலும், பகைமையில் முதிர நின்றானும் அவனே ஆகையாலே, ‘காப்பாற்றுமவனாக வேண்டும்’ என்ற விருப்பம் உள்ளதும் அவனிடத்திலே அன்றோ? 4இப்படி அவனை அங்கீகரிப்பதற்குக் கோலிப் பெறாத இழவு தீர்ந்தது இவனைக் கைக்கொண்ட பின்பாயிற்று.

‘அநுஜ; ரநவணஸ்ய அஹம் தேநச அஸ்மி அவமாநித:
பவந்தம் ஸர்வபூதாநாம் ஸரண்யம் ஸரணம் கத:’-என்பது, ஸ்ரீராமா யுத் 19 : 4.

5‘நான் இராவணனுக்குப் பின்பிறந்தவன்’ என்று அவன் வர, இவரும் 1‘அவன் தம்பியே’ என்றாயிற்று அவனைக் கைக்கொண்டது.

‘பஞ்செனச் சிவக்கும் மென்கால் தேவியைப் பிரித்த பாவி
வஞ்சனுக்கு இளைய என்னை வருகஎன் றருள்செய் தானோ?’-என்றார் கம்பரும்.

விரிநீர் இலங்கை அருளி – கடல் சூழ்ந்த இலங்கையைக் கொடுத்தருளி.

மீண்டும் ஆண்டு – இராவணனைக் கொன்ற பின்பு, பிரமன் முதலான தேவர்கள், ‘தேவரை அம்புக்கு இலக்கு ஆக்கி, நாங்கள் எங்கள் காரியத்தைத் தலைக்கட்டிக்கொண்டோம்; இனி தன்னுடைச் சோதி ஏற எழுந்தருள அமையும்,’ என்ன, அவ்வளவிலே சிவன், ‘தேவர் அங்ஙன் செய்தருள ஒண்ணாது, திருவடி சூடுதற்குத் தடை உண்டாகையாலே திருத்தாய்மாரும் இழிவுபட்டிருந்தார்கள்; நாடும் அடைய நொந்திருந்தது: ஸ்ரீபரதாழ்வானும் ஆர்த்தனாய் இருந்தான்: ஆன பின்பு, 2‘வருந்தியிருக்கிற ஸ்ரீபரதாழ்வானையும் பெருமை பொருந்திய ஸ்ரீகௌஸல்யையாரையும் சமாதானம் செய்து’ என்கிறபடியே’ ‘ஆஸ்வாஸ்ய பரதம் தீநம் கௌஸல்யாம்ச யஸஸ்விநீம்’-என்பது, ஸ்ரீராமா. யுத். 122 : 4.

ஸ்ரீபரதாழ்வான் தொடக்கமானவர் ‘இழவுகள் எல்லாம் தீரும்படி மீண்டு எழுந்தருளி, திருமுடி சூடி, நாட்டை வாழ்விக்க வேணும்’ என்ன, அது திருவுள்ளத்துக்குப் பொருந்தும் செயலாகையாலே பதினோராயிரம் ஆண்டு ஒரு படிப்பட இருந்து நாட்டினை வாழ்வித்தருளி.

தன் சோதி புக்க – அம்புக்கு இலக்கு ஆக்குவார் இருந்த இடத்தை விட்டுத் தனக்கே சிறப்பாய் எல்லை அற்ற பேரொளிப் பிழம்பு வடிவமாய் இருக்கிற பரமபதத்திலே போய்ப்புக்க. அமரர் அரி ஏற்றினையே- 3அம்பு இட்டு எய்வார் இன்றிக்கே ஆநுகூல்யமே தன்மையாய்த் தொண்டிலேயே நிலை பெற்றவர்களான நித்தியசூரிகள் நடுவே அவன் இருக்கும் இருப்பைக் காண வல்லோமே? 4பசுக்களின் கூட்டத்தின் நடுவே ஓர் இடபம் செருக்கித் திரியுமாறு போலே, நித்தியசூரிகள் கொண்டாட, அவர்கள் நடுவே அதனாலேசெருக்கி மேனாணித்திருக்கும் இருப்பைச் சொல்லுகிறது. 1நித்தியசூரிகள் திரளிலே அந்த ஓலக்கத்தின் நடுவே இருக்கும் இருப்பைக் காண்கை அன்றோ பிராப்பியமாகிறது?

ராவணனை முடித்து –
அரக்கன் குலத்தை தடிந்து
அவன் தம்பிக்கே விரி நீர் இலங்கை அளித்து
அமரர் அரி ஏற்றினை காண்டும் கொலோ
கடிய வினை -பிராட்டி பிரித்து –
ஒரே பாசுரம் ஸ்ரீ ராமாயணம் அருளி
நெஞ்சமே -கூட்டாய்
காண வல்லமேயோ
கட்டி அளவும் நீ
சந்தோசம் கொண்டாடவும் நீயே நெஞ்சே
தாயையும் தகப்பனாரையும் இரண்டு இடத்தில் வைத்த அபசாரம்
தாழ்ந்த செயல் இதை விட இல்லையே
கொடிய செயல்கள் –
புண்ய பாப பலன்கள் -அதிகம் செய்து உடனே பலன் –
சதாச்சாரம் சம்பந்தம் இல்லாதவன் -வினையே -யேவகாரம்
சிம்கம் போலே மிடுக்கை
மிருத்யு கல்பம் ஆண் திறல் மீளி யமன் போல
மைதிலி ஹேதோ லோகத்தை ராஷச குலம் இன்றி
அவன் தம்பிக்கே -யதிவா ராவணச்ய-
அவனே வந்தால் விசேஷம் -செவி சீப்பாய்ந்து இருக்க
அவனும் நான்கு பெரும்
துருப்பு கூடாக நோக்க அவனே வந்து இருந்தால் -இருக்குமே
அதிகமாக ரஷிக்க வேண்டியது பிரதி கூலிம் மிக்கவன்
வாளேறு காண தேளேறு மாயுமா போலே
விஷயீ கரிக்க கோலி-பெறாத இழவு தீர்ந்தது இவனைக் கை கொண்ட பின்பு
ராவணன் தம்பி -கொள்வாரோ இருக்க
அதுவே பெருமாள் திரு உள்ளத்துக்கு இசைந்ததாக இருக்க
விரி நீர் கடல் சூழ்ந்த இலங்கை கொடுத்த பின்பு –
மீண்டும் -ஆண்டு –
ருத்ரன் -ஸ்ரீமான் -பிரார்த்திதபடியால் –
ஆச்வாச்ய பரதன் தினம் இழவு தீரும் படி திரு முடி சூட
ருத்ரன் -சம்ஹாரம்
பெருமாள் ஆண்டாள் ஒய்வு கிடைக்குமே அதனால் பிரார்த்தித்தானாம்
11000 ஆண்டு ஒருபடிபடி இருந்து ஆண்டு
தன் சோதி புக்க
அன்புக்கு இலக்காக்குவார் இருந்த இடம் விட்டு
ஆனுகூல்யமே ஸ்வாபாவமாய்
கைங்கர்யமே யாத்ரை நித்யர் நடுவில் ‘கோ வது-பெண்கள் பசுக்கள்
நடுவில் ஒரு ரிஷபம் போலே
நித்யர் நடுவில் செறுக்கி மேனானிப்பு தோன்ற ஓலக்கம் இருப்ப -காண ஆசைப் படுகிறார்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: